Saturday 16 September 2017

பொது நல வழக்குகள் -ரிட் மனுக்கள் :

பொது நல வழக்குகள்! – ரிட் மனு 

PUBLIC INTEREST LITIGATION - WRIT PETTITION

★இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 INDIAN CONSTITUTION ACT - 1950 கோட்பாடு 226 (1)  ன் கீழ்  நீதிபேராணை வழக்குகளை தொடுக்கும் உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

★அரசாங்கம், மற்றும் அரசு துறை சார்ந்த,  நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டாலோ கடமை தவறிய அரசூழியர்களினால் பாதிக்கப்பட்டவர்கள்
இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு நீதி வேண்டி நீதி பேராணை வழக்குகளை பதிவு செய்யலாம்.

★அதென்ன ரிட்?

★‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, உயர்நீதிமன்றத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யும் மனு தான் ரிட்!

★எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

★பொது நலன் பாதிக்கப்படும் போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation)  தொடரலாம்.

★உதாரணமாக உங்கள் பகுதியில்  சாலை  மோசமாக இருந்தாலோ அல்லது புதிய சாலை அமைக்க கோரி  அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு சாலை அமைக்க உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

★தொழிற்சாலைகளிலிருந்து  வெளியேறும் கழிவு நீர், கழிவுகள்,  புகையினால் பொது மக்களுக்கும்  சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டால்  அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

★தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின்  21.09.2015. நாளிட்ட அரசாணை எண் :99 ன் படி முப்பது   நாட்களுக்குள் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது  அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்தந்த துறைகள் நடவடிக்கை எடுக்கச் உத்தரவிடச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

ஐந்து வகைகளில் ரிட் மனுக்களை  தாக்கல் செய்யலாம்.

1. ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’.  WRIT OF MANDAMUS
கீழ் நீதிமன்றங்களுக்கு ஆணையிடுதல்

★அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாமல்  விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

★சாலைகள் , நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

‘2. செர்ஷியோரரி (certiorari) ரிட் மனு
நெறிமுறை உணர்த்துதல்

★உயர்நீதிமன்றத்தின்  அதிகாரத்தில் உள்ள, ஒரு நீதிமன்றம் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவிட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான நெறி முறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பது தான் செர்ஷியோரரி ரிட் மனு .

★உதாரணமாக, ஒரு திரையரங்கம்  கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் "நோ அப்ஜக்ஷன் " ஒருவர் கேட்கிறார்.

★அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோவில், மதுபானக்கடை  இருக்கிறது.

★மருத்துவமனை நோயாளிகள், பள்ளி மாணவர்கள், கோவிலுக்கு வரும் பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

★அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷப ணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை மாவட்ட ஆட்சியர் தந் தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3. ‘கோவாரண்டோ’ (Quo warranto) ரிட் மனு
தகுதி முறை வினவுதல்

★எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித்தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ மனு  தாக்கல் செய்யலாம்.

4. பிரொகிபிஷன் (Prohibition) ரிட். மனு 
தடை விதித்தல்

★ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பை  மீறி செயல் படாதவாறு தடை விதிக்கக்கோரி இந்த ரிட் மனுவினை தாக்கல் செய்யலாம்.

5 .‘ஹெபியஸ் கார்பஸ்’ (Habeas corpus) ரிட் மனு
ஆட்கொணர்வித்தல்

★இதற்குத்  ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள்.

★நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி  அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம்.

★இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல் துறைக்கு அந்த நபரை கண்டு பிடித்து  நீதிமன்றத்தில்  நேரில் ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

★இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டுமானாலும்
தாக்கல் செய்யலாம்

★ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும் .

★இந்திய தண்டனைச்சட்டம் -1860 சட்டப்பிரிவு 2 (2)  ன் படி ஒரு குற்றத்தினை பணியில் உள்ள அரசூழியர் ஒருவர் தெரிந்து செய்தாலோ அல்லது தெரியாமல் செய்தாலோ குற்றம்  குற்றமே.

★கடமை தவறிய குற்றம் செய்யும் அரசூழியர்களுக்கு இந்தியத்தண்டனைச்சட்டப்பிரிவு -166 ன் கீழ் ஒரு வருடம் சிறை தண்டணை உண்டு. 

★ஆனால் நடைமுறையில் நீதிமன்றங்கள் அவ்வாறான தண்டனை வழங்காத காரணத்தினால்  பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றதை நாடி நீதிபேராணை வழக்குகள் தொடுத்து பரிகாரம் பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

★மக்கள் வரிப்பணத்தில் ஊதியங்களையும், சலுகைகளையும், பெறும்  அரசூழியர்களும், காவலூழியர் களும் கடமையை சரிவர செய்தால் நீதிமன்றங்களை பாதிக்கப்பட்ட மக்கள் நாடி செல்லும் நிலை ஏற்படாது.

சட்ட விழிப்பறிவுணர்வு பணியில்.,

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்திரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723

No comments:

Post a Comment