Sunday 3 September 2017

ஊழல் ஒழிப்பு செய்தி;0022 திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகளின் அராஜகம்! அத்து மீறல்கள்!

ஊழல் ஒழிப்பு செய்தி ; 022/03.09.2017

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

★குற்றவாளிகள் யார்?

ஆளும் கட்சி நிர்வாகிகளின் அராஜகம்!

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தில் அத்து மீறி தலையீடு!

★ஆளும் கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் செயல் படுகிறதா திருப்பூர் மாநகராட்சி?

★மாநகராட்சி அதிகாரிகள் செயல் இழந்து கிடக்க காரணம் என்ன?

திருப்பூர் அங்கேரிபாளையம் வழியாக செல்லும் நல்லாற்றினை மாசு படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.N.விஜயகுமார் அலுவலகத்தில் நான்காவது வார்டு இன்சார்ஜ் என வலம் வரும் சபாபதி மற்றும் மாநகராட்சி ஏழாவது வார்டு முன்னால் மாமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம்  மற்றும் அவர்களது சகாக்கள்!

# நல்லாறு!
*************
பெயர் தான் நல்லாறு!
ஆனால்,

இந்த நல்லாறு மாசு பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

#காரணம் யார்? 

திருப்பூர் சாயப்பட்டறை தொழிற்சாலை உரிமையாளர்கள்!

மாநகராட்சி  கழிவு நீர்கால்வாய்கள் மூலம் கலக்கப்படும் கழிவுநீர்!

மாநகராட்சி கழிவு நீர்அகற்றும் வாகனங்கள் மூலம் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து  சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீர், கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத பகுதிகளில் பொது மக்கள் தேக்கி வைக்கும் கழிவு நீர்களை  சேகரித்து  நல்லாற்றில் திறந்து விடுகின்றனர் .!

மாநகராட்சி  குப்பை அள்ளும் வாகனங்கள் மூலம்  சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றது.

தனியார் தொழிற்சாலை கழிவுகள், வர்த்தகர்கள் பயன் படுத்தும் மாமிச கழிவுகள்,  கட்டிட கழிவுகள், என அனைத்து கழிவுகளையும் கொட்டி நல்லாற்றினை சுகாதார கேடு ஏற்படுத்தி கெட்ட ஆறாக மாற்றி விட்டனர்.

ஆறு குளங்கள், ஏரிகள் நீர் நிலைகளை பாதுகாப்பதில் ஒவ்வொரு இந்திய குடிமகன்களும் இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51 (A)  எ. -இன் கீழ் கடமை ஆற்ற வேண்டும்.

ஆனால் இந்த கேடுகெட்டவர்கள் தமது கடமைகளை செய்யாமல் நீர்நிலைகளை தெரிந்தே மாசுபடுத்தி வருகின்றனர்.

★இவர்களுக்கு அரசுத்துறை அதிகாரிகள் துணை போவது தான் வேடிக்கையாக உள்ளது.

இந்த அவல நிலையை கண்ட நாங்கள் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்,  மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம்,  கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம்,  பொதுப்பணித்துறை அலுவலகம், காவல் துறை,  மாவட்ட ஆட்சியர் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆதாரத்துடன் புகார் அளித்து வருகிறோம்.

புகார் அளித்ததின் அடிப்படையில் மாநகராட்சி அலுவலகம் மூலம் குப்பை, கழிவுகள் கொட்டக்கூடாது! மீறி  கொட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெயரளவிற்கு எச்சரிக்கை பலகை வைத்தனர்.

மாநகராட்சி  கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து கழிவு  நீரினை நல்லாற்றில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

நாம் புகார் அளிக்கும் போதுநேரில் வரும் சுகாதார ஆய்வாளர்கள் இனி மேல் தவறு நடக்காது என கூறிச்செல்வது வழக்கம்.

இந்நிலையில் 01.09.2017 அன்று மாநகராட்சி கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த மாநகராட்சி   ஏழாவது வார்டு   முன்னால் மாமன்ற. உறுப்பினர் பாலசுப்பிரமணியம்,  திருப்பூர்  வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.N .விஜயகுமாரின் கைகூலியாக திகழும் சபாபதி , சேது மாதவன் மற்றும்  பல ஆளுங்கட்சி ஆதரவாளர்களுடன் வந்து கழிவு நீரினை திறந்து விட்டு கொண்டிருந்தனர்.

இதனை கண்டு  அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆ.பழனிக்குமார் இது குறித்து  மாநகராட்சி சுகாதார ஆய்வாளர், பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர், மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், காவல்துறையினர் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்ததின் பேரில் அனைத்து அதிகாரிகளும் நேரில் வந்துள்ளனர்.

ஆனால்,  அதிகாரிகள் முன்னிலையில் பழனிக்குமாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட. ஆளும் கட்சியை சேந்த நிர்வாகிகள் அப்படி தான் கழிவு நீரினை நல்லாற்றில் கலப்போம். !

எங்களை எவனும் எதுவும் செய்ய முடியாது.!

நல்லாற்றில் கழிவு நீர் வராமல் முதலில் தடுங்கள் பார்ப்போம்!

★கழிவு நீரினை நல்லாற்றில் விடக்கூடாது என தடுத்தால் 200 குடும்பங்களையும், ஆயிரம் பேரையும்  அழைத்து கொண்டு  வந்து சாலை மறியல் செய்வோம் என அரசு அலுவலர்கள் முன் மிரட்டிய செயல் அதிர்ச்சி அளிக்கிறது. (காண்க காணொலி காட்சிகள்)

200 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் தேங்கும் கழிவு நீர் என சொல்லி கொண்டு மாநகராட்சி வாகனத்தினை அதிரடியாக கைப்பற்றி ஐந்துக்கும் மேற்பட்ட லோடு கழிவு நீரினை கொண்டு வந்து நல்லாற்றில் கலந்துள்ளனர்.

★200 குடும்பங்கள் தினமும் பயன் படுத்தும் பாத்ரூம், செப்டிக் டேங் கழிவு நீரினை சேகரிக்க மட்டுமா மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் தினமும் பயன் படுத்தப்பட்டு வருகிறது?

★இதற்காக மாநகராட்சிக்கு ஏற்படும் செலவினங்கள் எவ்வளவு? 

★200 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் ஏன் மாநகராட்சி கழிவு நீர் கால்வாய் அமைக்க வில்லை?

★சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீரினை சேகரித்து கொண்டு வருகிறார்களா என்ற ஐயப்பாடு எழுகிறது!

★மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கார்த்திக் என்பவர் தடுத்தும் அதனை மீறி  செயல்பட்டுள்ளனர்.

மாநகராட்சி தான்  கழிவு நீர் கால்வாய் வசதிகள் பொது மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.  அதனை விட்டு கழிவு நீரினை நல்லாற்றில் கலப்பது முறையல்ல என மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர் முரளி  தெரிவித்துள்ளார்.

★சுகாதார அலுவலர் முருகன் கழிவு நீரினை வேறு எங்கு விடுவது?  என சட்ட விரோதமாக செயல் படும்  ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல் பட்டுள்ளார்.

★செட்டிபாளையம்  கிராம நிர்வாக பெண்  அலுவலர் இது மாநகராட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை நான் தலையிட முடியாது என தனது கடமைகளை மறந்து வேடிக்கை பார்த்து சென்றுள்ளார் 

★அனுப்பர் பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் விஸ்வநாதன் என்பவர் வந்து சாக்கடை நீரை ஆற்றில்   விடாமல் வேறு  எங்கு கொண்டு போய்  விடுவார்கள் ? நீ தேவையில்லாமல் பிரச்சனை செய்வதாக தெரிகிறது. வீடியோ எடுத்து பேஸ் புக்கில் போடுகிறாயா போடு!  நான் தான் கழிவு நீரினை விடச்சொன்னேன் என என் பெயரினையும் சேர்த்து போடு என கூறி சட்ட விரோதமாக நல்லாற்றினை திட்டமிட்டு மாசு படுத்தி வருபவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மிரட்டியதுடன்  வேடிக்கை மட்டும் பார்த்து சென்றுள்ளார்.

★உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்த பிறகும் பல மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சியின் அனைத்து நிர்வாகத்திலும் தலையிட்டு வருவது வேதனை அளிக்கிறது.

★மாநகராட்சி கழிவுநீர் சேகரிக்கும் வாகனங்களை கைப்பற்றி கழிவுநீரினை சேகரித்து நல்லாற்றினை மாசுபடுத்தும்  ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை மாநகராட்சி அதிகாரிகள்  கை கட்டி வேடிக்கை பார்ப்பது எதனால்?

★ஆளும் கட்சியினரின் அடாவடி தனத்தினை தட்டி கேட்டால் தங்களது பணிக்கு இடையூறு செய்வார்கள்  என்ற பயமா?

★இந்திய தண்டனைச்சட்டம் -1860 சட்டப்பிரிவு 2 (2)  ன் படி ஒரு குற்றத்தினை தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே!

# கோரிக்கை :
*****************
கழிவு நீரினையும், சாயப்பட்டறை கழிவு நீரினையும் , கட்டிட கழிவுகளையும், குப்பைகளையும், கழிவுகளையும்  நல்லாற்றில் கலப்பதினை அதற்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் இனி மேலாவது  தடுத்து நிறுத்தி சுகாதாரமற்று காணப்படும்  நல்லாற்றினை பாதுகாக்க வேண்டும்!

★நல்லாற்றினை மாசு படுத்தியதின் காரணமாக நாம் இன்று  பயன் படுத்த இயலாமல் இருக்கிறோம்.

★இப்போதே நாம் நல்லாற்றினை பாதுகாப்போமானால் வருகிற நமது தலைமுறையினராவது பாதுகாப்பாக வாழ்வார்கள் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டு மொத்த  குரலாக ஒலிக்கிறது.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723

குறிப்பு :மாசடையும் திருப்பூர் என்ற தலைப்பில் செய்தியினை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.

எது எவ்வாறு இருப்பினும் யார் கடமை தவறினாலும் நாம் கடமை தவறாமல் பணியாற்றுவோம்.

உண்மையை உரக்க சொல்வோம் உலகிற்கு!
உண்மை சம்பவங்கள் தொடரும் .,!!

No comments:

Post a Comment