Monday 4 September 2017

சுதந்திர தினநாளில் திருப்பூரில் சட்ட விரோதமாக மது விற்பனை!!

📢 *அவசர செய்தி*!

*திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு*!!
😎😎😎😎😎😎😎😎😎😎😎
*இன்று சுதந்திர 🇬🇶 தினத்தினை முன்னிட்டு  🏛டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*!!

★தாங்களும் வழக்கம் போல் மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளீர்கள்.

★ஆனால் மாநகரத்தின் பெரும்பாலான மதுபான கடை பார்களில் சுதந்திரமாக மதுபான வகைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் காட்சிகளை காண முடிகிறது, (  காணொலி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது .)

★மாநகர காவல் துறையினர் ஏன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வில்லை ?

★காவலர் ஒருவரும் மது வாங்கி செல்லும் காட்சிகளையும் காண முடிந்தது.

*சட்டங்களும், அரசாணைகளும் அறிவிப்புகளும் வெறும் காகித வடிவில் தான் உள்ளது*!!

★நடவடிக்கை என்று பார்த்தால் வெறும் பூஜ்யம் தான்.

★இதற்கு காரணமானவர்கள் யார்?

★மதுவுக்கு அடிமையான குடிமகன்களா?

★கள்ளசந்தையில் திருட்டு தனமாக டாஸ்மாக் ஊழியர்களின் துணையுடன் விற்பனை செய்யும் பார் உரிமையாளர்களா?

★லஞ்சம்,  மாமூல் மட்டுமே குறிக்கோள் என தனது கடமைகளை செய்ய தவறிய அரசூழியர்களா?

★டாஸ்மாக் துணை மேலாளர் என ஒருவர் பணியில் இருக்கிறாரா என சந்தேகம் அளிக்கிறது.

*எது எவ்வாறு இருப்பினும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்*!

★சமூக அவலங்களை சுட்டி காட்டும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போடுவதில் அக்கறை காட்டும் காவல் துறையினர் சட்ட விரோதமாக செயல் படுபவர்களுக்கு துணை போவது எதனால்?

★சுதந்திர தின நாளில் குடிமகன்கள் சுதந்திரமாக குடித்து கும்மாளம் அடிக்கட்டும் என சுதந்திரமாக விட்டு விட்டார்களோ என்னவோ?

★குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 43 ன் கீழ் தனி நபராக இருந்தால் கைது செய்து காவல் நிவையத்தில் ஒப்படைக்கலாம்!

★ஆனால் ஒரு பெரும் கூட்டமாக சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்களை தனி நபராக சென்று  எவ்வாறு கைது செய்வது?

💥💥💥💥💥💥💥💥💥💥💥😭😭😭😭😭😭😭😭

✍மனவேதனையுடன்,
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
திருப்பூர்
உலாபேசி :98655 90723
15.08.2017
13.18 Pm

No comments:

Post a Comment