Thursday 7 September 2017

ஊழல் ஒழிப்பு செய்தி;0023 பேருந்து நிலைய விபத்து!!

ஊழல் ஒழிப்பு செய்தி :023/07.09.2017

குற்றம் நடந்தது என்ன?

நெஞ்சம் பதற வைக்கும் உண்மை சம்பவம்!

குற்றவாளிகள் யார்?

வருந்துகிறோம்!!

07.09.2017 இன்று  கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து கோர விபத்து!

JCB இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டது.

பேருந்துகளுக்காக காத்து நின்ற பயணிகளின் மீது மேற்கூரை  விழுந்த காரணத்தினால் இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலி!

படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!  இதில் ஒரு சிலர் கவலைக்கிடம்!

இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் இருபது வருடங்கள் தான் ஆகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கூரைகளில் விரிசல் காணப்பட்டதாக. தெரிய வருகிறது.

தரமற்ற கட்டுமானம் தான் இந்த கோர விபத்திற்கு காரணம் என பலரும் சொல்கின்றனர்.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலான கட்டிடங்கள் உறுதியுடன் இருக்கையில் கான்ங்கிரீட்டிலான மேற்கூரை இடிந்து விழ காரணம் என்ன?

கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? அவர் தற்பொழுது உயிருடன் இருக்கிறாரா?

ஒரு வேளை உயிருடன் இருந்தால் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடும்!

அந்த வழக்கு முடிவுக்கு வர  பல ஆண்டுகள் ஆகலாம்! 

வழக்கு தீர்ப்பு வரும் போது அவர் உயிருடன் இருக்க மாட்டார் . எனவே அந்த வழக்கு முடித்து வைக்கப்படலாம்!

அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்து உயிர் இழந்தவர் குடும்பங்களுக்கும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் வழக்கம் போல் உதவி தொகைகள் வழங்கப்படும் .

இந்த உதவி தொகையின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இழப்பீட்டினை சரி செய்ய முடியுமா?

இயற்கை சீற்றங்களின் காரணமாக இது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட  விபத்து அல்ல! 

இது உறுதி தன்மை இல்லாத கட்டுமானத்தின் காரணமாக நடைபெற்ற கொலையாக தான் இருக்க வேண்டும்.

# கோரிக்கை :

குற்றவாளிகள் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.!

1. கட்டிட ஒப்பந்ததாரர்

2 அரசு விதிமுறைகள் படியும் ஒப்பந்தத்தின் படியும் நல்ல முறையில் கட்டி முடிக்கப்பட்டது  என உறுதி மொழி வழங்கிய பொறியாளர்

3. கட்ட உறுதி தன்மைக்கு சான்று வழங்கிய பொறியாளர்.!

4. அதற்கு ஒப்புதல் வழங்கிய ஊழல்  அதிகாரிகள் அனைவர் மீதும் கடமை தவறிய குற்றத்திற்காகவும், அரசுக்கு இழப்பீடு மற்றும் கொலை குற்ற வழக்கு பதிவு செய்து பணி இடை நீக்கம் செய்ய வேண்டுகிறோம்

அன்று மவுலி வாக்கம்!  அது போல இன்றும்  பல கட்டிடங்கள் உறுதி தன்மை இல்லாமல்  இடிந்து விழுந்து மக்கள் மடிந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்து குற்ற செயல்களுக்கும் முக்கிய காரணம் லஞ்சம் வாங்கி தனது குடும்பத்தினருடன் சுகபோக வாழ்க்கை நடத்தும் கடமை தவறிய அரசூழியர்கள்
தான் என்பதினை பகிரங்கமாக பதிவு செய்கிறேன்,

கும்பகோணம் தனியார் பள்ளி தீவிபத்தில் 94 மழலை குழந்தைகளை பலி கொடுத்தோம். குற்றவாளிகள் இன்று சுதந்திராமாய்.  

நீதி அரசர் சம்பத் தலைமையிலான குழு 2661 தனியார் பள்ளிகளை மட்டும்  ஆய்வு செய்ததில் 1557 பள்ளிகள் கட்டிட உறுதி தன்மை இல்லாமலும், 1670 பள்ளிகள் கட்டிட உரிமம் பெறாமலும்,  தகுதியற்ற ஒயரிங் வேலைகள் உள்ளதாக  1281 பள்ளிகளும், முறையான தீ தடுப்பு சாதனங்கள் இல்லாமல் 2386 பள்ளிகள் இயங்கி வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கையினை அளித்தார்கள்!

ஆனால் அந்த பள்ளிகள் இன்றும் இயங்கி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்கு காரணம் யார்?  போலியான சான்றிதழ் வழங்கிய லஞ்ச அதிகாரிகள் தான்!

எத்தனை எத்தனை விபத்துகள் ஏற்பட்டாலும அனைத்தையும் மக்கள் மறக்கும் மன நிலையில்  இருப்பதால் தொடர் கதையாய் நடை பெற்று வருகிறது.

இதுவும் கடந்து போகும்!

இதற்கு முடிவே கிடையாதா? 

நண்பர்களே!  மாறுங்கள்! மாற்றுங்கள்!

ஆம். 
இந்திய அரசியலமைப்பு சாசனம் நமக்கு சில கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது.

அந்த கடமைகளை நாம் ஒவ்வொருவரும் சிறப்புடன் செய்தால் அனைத்தும் மாறும்!

அரசுத்துறை சார்ந்த  பணிகள் எங்கு நடைபெற்றாலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளுங்கள். 

தவறு நடந்தால் சுட்டி காட்டுங்கள்!  ஊழல் பேர்வழிகளையும் லஞ்சம் வாங்கும் கயவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தாருங்கள்! 

இந்த அரசூழியர்கள் கடமை தவறி செயல்பட முக்கிய காரணம் கேடு கெட்ட  ஆட்சியாளர்களே!

நேர்மையான நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்காத வரையில் இந்த லஞ்ச அதிகாரிகளும் அவர்களது கைப்பாவைகளாய் தான் செயல் படுவார்கள்! 

சிந்தியுங்கள்! செயல் படுங்கள்! 

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! 

நல்ல நேர்மையான சமுதாயம் மலர நாமும் துணை நிற்போம்!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!
ஊழலுக்கு விடை கொடுப்போம்!

சட்ட விழிப்பறிவுணர்வு பணியில்.,...

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி : 98655 90723

உண்மை சம்பவங்கள் தொடரும் ...!!

No comments:

Post a Comment