Monday 4 September 2017

திருப்பூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியின் டுபாக்கூர் விளம்பரம்!?

📢 *சமூக சேவையில் கல்வி பணி*!

*நன்கொடை இல்லை*!!

*ஒரு சிறப்பு பார்வை*😎😎😎😎😎😎😎😎😎😎😎

*இப்படி ஒரு பள்ளி நம்ம திருப்பூர் மாவட்டத்தில் இருப்பது நமக்கு எல்லாம்  மிகவும் பெருமை தானுங்கோ*!

இந்திய வரலாற்றிலேயே
நன்கொடை வாங்காத ஒரே  பள்ளி! 👌

*கொங்கு வெள்ளாளர் அறக்கட்டளையின் கீழ் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் செயல் பட்டு வரும்*
*நம்ம  கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தானுங்கோ*!!👍

*அறக்கட்டளை என்றாலே நன்கொடை என்ற பெயரில் பிச்சை எடுப்பார்களே*!

*ஆனால் இவர்கள் அவ்வாறு பிச்சை எடுப்பதில்லை*!!

*ஏனென்றால் 62 க்கும் மேற்பட்ட திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளை சேர்ந்த கோடீஸ்வர  தொழில் அதிபர்கள் நிர்வாக குழுவில் இருப்பதினால் அவர்களிடம்  மட்டும் நன்கொடை வசூலித்து இன்று 4500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கல்வி கூடத்தினை சேவை மனப்பான்மையில்  நிறுவி அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை தவிர்த்து ஒரு சல்லிக்காசு கூட பெற்றோர்களிடம் இருந்து வசூலிப்பதில்லை*!

*நன் கொடை என்ற பேச்சுக்கே இடமில்லை*❌

*பள்ளி லெட்டர் பேடு, பள்ளி பேருந்து, பள்ளி வளாகம் முழுவதும் எங்கு நோக்கினும் நன்கொடை இல்லை!  நன்கொடை இல்லை*!

*சமூக சேவையில் கல்வி பணி!  என்ற வாசகம் காணப்படுவது நிதர்சனமான உண்மை*!

10.08.2017 அன்று கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான கல்வி குழு விசாரணையின் போது மேற்காண் பள்ளி நிர்வாகம் அளித்த பள்ளியின் இதர சிறப்பு  கட்டமைப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ள வரிசை எண் 21 ல் சொல்லப்பட்டுள்ள,

# அறக்கட்டளையின் நோக்கமான நன்கொடை இல்லா கல்விப்பணி என்பதினை இன்று வரை கடை பிடிப்பதுடன் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்விச்சேவை அளித்து வருகிறோம்  என்பதினை தெரிவித்து கொள்கிறோம். ✍ என உறுதி அளித்துள்ளார்கள்.

*என்ன ஆச்சரியமாக இருக்கிறதா*❓

*ஆச்சரியம் மட்டுமல்ல உலக மகா அதிசயம்*

*இந்த பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்து கல்வி பயில வைக்க  வேண்டும் என்ற ஆசை வந்திருக்குமே*?

*கொஞ்சம் பொறுங்கள்!*!👿

கீழே படியுங்கள்!! 👇

★2009 ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் அரசு கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட போது அடடா இனிமேல் நாம் நினைத்தபடி கல்வி கட்டணம் வசூலிக்க முடியாதே என நினைத்த மேற்காண் பள்ளி நிர்வாகம் ,

★2010 ஆம் ஆண்டு அனைத்து மாணவர்களிடம் இருந்து ₹ 1500 ரூபாய் வீதம் நன்கொடையாகவும்,

2011 ஆம் ஆண்டில் கட்டிட நிதி என ₹ 2000 ரூபாய் வீதம் நன்கொடையாகவும்  அனைத்து மாணவர்களிடம் இருந்தும் கட்டாய நன்கொடை வசூலித்துள்ளார்கள்.😇

*ஆக மொத்தம் ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் 2010 & 2011 கல்வி  ஆண்டுகளில்  ₹ 3500 ரூபாய்  கட்டாய  நன்கொடை வசூலித்திருக்கிறார்கள்*

*தோராயமாக 3000 மாணவர்கள் என வைத்து கொண்டாலும் 3000 × ₹ 3500 =₹ 1 கோடியே ஐந்து லட்ச ரூபாய் கட்டாய நன்கொடை வசூலித்திருப்பது தெரிய வருகிறது*

  🏛 *கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் -1992 ன்  படி இது சட்ட விரோதமான செயலாகும்*!

*இந்த சட்டப்பிரிவின் கீழ் கட்டாய நன்கொடை வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை காத்திருக்கிறது*!✅

★சமூக சேவையில் கல்வி பணி!

★நன்கொடை இல்லை!
என நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றி வரும் இவர்கள் *கல்வியாளர்களா*?
*கல்வி கொள்ளையர்களா*?

★ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்  கட்டாய நன்கொடை பெற்றதற்கான ரசீதுகள் வழங்கி உள்ள இவர்கள் யாரை ஏமாற்ற   இந்த கபட நாடகம் ஆடுகின்றனர்? 😭

★சகோதர, சகோதரிகளே!
நண்பர்களே!
பெற்றோர்களே!
உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

★இப்போது சொல்லுங்கள்
கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இந்த டுபாக்கூர் விளம்பரம் தேவையா?✅
💥💥💥💥💥💥💥💥💥💥💥
என்றென்றும் கல்வி விழிப்புணர்வு பணியில்,✅
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
உதவி ஆசிரியர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
உலா பேசி :98655 90723

குறிப்பு  :: நண்பர்களே!
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. நன்றி.🙏🏽

No comments:

Post a Comment