Monday 4 September 2017

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண கொள்ளையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி காவல் நிலையத்திற்கு மனு!

அனுப்புநர் :

நாஞ்சில்                                 கோ.கிருஷ்ணன் 
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு     மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு ,
பெரியார் காலனி 
திருப்பூர் -641-652.
உலாபேசி :98655 90723

பெறுநர் :

காவல் ஆய்வாளர் அவர்கள், 4,வேலம்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்.

கடிதம் எண் :LAACO /PL /008/TD/2017: நாள் :10-07-2017.

பொருள் : தனியர் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையை கண்டித்தும்,  சட்ட விரோதமாக செயல்படும் பள்ளிகளுக்கு துணை போகும் கடமை தவறிய மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களை கண்டித்தும் , அமைதியான வழியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போரட்டம் நடத்த திருப்பூர் அவிநாசி சாலை  அனுப்பர்பாளையம் புதூர் (கோவை டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் அருகில்) 30-07-2017 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரையில்  அனுமதி அளிக்க கோரி இந்திய அரசியலமைப்பு சாசனக் கோட்பாடு 19(1) அ. ஆ மற்றும் 51(A)ஒ -வின் கீழ் மனு,

உண்ணா விரதத்திற்
கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் :

கும்பகோணம் தனியார்  பள்ளி தீ விபத்து  தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் கமிஷன் 2661 பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்து அறிக்கை சம்ர்ப்பித்துள்ளது.
  
1. இதில் கட்டிட உறுதித்தன்மை இல்லாமல் 1557 பள்ளிகளும்,

கட்டிட உரிமம் இல்லாமல் 1670 பள்ளிகளும்,

முறையான மின் ஒயரிங் செய்யப்படாமல் 1281 பள்ளிகளும்,

தீயணைப்பு சாதனங்கள் இல்லாமல் 2386 பள்ளிகளும்

இயங்கி வருவதாக அதிர்ச்சி தரும் விசாரணை அறிக்கை  அளித்துள்ளார்கள்.

2- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பதினை முறை படுத்துதல் சட்டம் -2009 ன் படி கல்வி கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கல்வி கட்டணங்களை விட அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

3-  கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் -1992 -ன் படி நன்கொடை வசூலிக்க தடை இருந்தும் பல பள்ளிகளில் கட்டிட வளர்ச்சி நிதி என பல்வேறு விதமான  நன் கொடை வசூலித்து வருகிறார்கள்.

4- இலவச மற்றும்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி கல்வி பயிலும் 25 % மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணம் மற்றும் பலவிதமான கட்டணங்களை ரசீது இல்லாமல் முறை கேடாக வசூலித்து வருகிறார்கள்.

5 .மாணக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளை முழுவதும் நிறை வேற்றாமல் பொய்யான சான்றிதழ்களையும், உறுதி மொழிகளையும் அளித்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

6 . மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் Pre. KG வகுப்புகள் நடத்துவதற்கு அரசு அனுமதி இல்லை, ஆனால் பெரும்பாலான பள்ளிகளில்  Pre. KG வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.

7 . தீயணைப்பு துறை தடையின்மை சான்று, சுகாதார துறை சான்றிதழ், கட்டிட உறுதி தன்மை சான்றிதழ்கள் போன்ற அனைத்து சான்றிதழ்களையும்  லஞ்சம் கொடுத்து வாங்கி பள்ளிகளின் உரிமத்தினை புதுப்பித்து கொள்ளுகிறார்கள்.

8 .ஆண்டு தோறும் ஒவ்வொரு தனியார் பள்ளிகளையும் முழுமையாக ஆய்வு செய்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆய்வு  அறிக்கை அளிப்பதில்லை.

9 .அனைத்து பள்ளிகளும் சட்ட விதிமுறை படியும், அரசாணைகளின் படியும் சிறப்புடன் செயல் படுவதாக பொய்யான சான்று வழங்கி வரும் கடமை தவறிய மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களையும்,

சட்ட விரோதமாக செயல் படும் தனியார் பள்ளி நிர்வாகிகளை கண்டித்தும்,

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் முதன்மை கல்வி அலுவலர்களை கண்டித்தும்,

அனைத்து சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தங்களது கண்டணங்களை தெரிவிப்பதுடன்,

சட்ட விரோதமாக செயல்படும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து அந்த பள்ளிகளை அரசுடமையாக்கிட  கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்,

பெற்றோர்கள் மாணவ மாணவிகளின் கல்வி உரிமைக்காகவும்,  நலனிற்காகவும் மாபெரும்
உண்ணா விரத போராட்டத்தினை,

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு" சார்பில்  தலைமை ஏற்று   நடத்த தீர்மானித்துள்ளோம் .

உண்ணா விரத அறப்போராட்டத்திற்கு  ஆதரவளித்து  கலந்து கொள்பவர்கள் விபரம் :

1 . R.சங்கர்
மாநில தலைவர், 
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
அரியலூர் .

2 . S. கிள்ளி வளவன் துணை பொதுச்செயலாளர் கல்விக்கான பெற்றோர்களின் அகில இந்திய அமைப்பு (AIPFE). சென்னை.

3 . C. செல்வராஜ், பொதுச்செயலாளர் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சென்னை .

4 . நாமக்கல் P. செல்லப்பன்,
அறங்காவலர்
FACT இந்தியா

5 .சிக்கல் .சிவ பாரதி
துணை பொதுச் செயலாளர்
லா - பவுண்டேசன்  கரூர்.

6.  விவேகானந்தன்
கலாம்  விஷன் 20-20 மாரல்  பவுண்டேசன், திருச்சி.

7 . இஸ்மாயில்
முக்கனி மனித நேய அறக்கட்டளை, கோவை.

8 .அபு .இக்பால்
'அ ' முதலுதவி இயக்கம்
பொள்ளாச்சி.

9. S. காதர் பாட்ஷா
நுகர்வோர் நலம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு
அவினாசி

10 .சுரேஷ் பாபு,
மாநில இளைஞர் அணி செயலாளர்,
காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர்.

11 . அண்ணாத்துரை
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
மதுரை.

12- சதீஷ் குமார்
களம் அறக்கட்டளை
அவினாசி.

13.V. பிரகாஷ்
வாலண்டர்ஸ் பார் ஹவுஸ், தருமபுரி

14 .S. சுந்தர பாண்டியன்
ஒருங்கிணைப்பாளர்
நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு

15 . A. S அருணாச்சலம்
தலைவர்
வரி செலுத்துவோர் நல உரிமை சமூக பாதுகாப்பு சங்கம், புளியங்குடி.

16 .சாய் குமரன் ஜீ,
மாநில செயலாளர்
அகில பாரத இந்து மகா சபை
திருப்பூர்

17 . ஷேக் அலாவுதீன்
M. P. M டிரஸ்ட் திருநெல்வேலி.

18. M.P. விஜயகாந்த்
துணை ஒருங்கிணைப்பாளர்
மக்கள் பாதை
வேலூர்.

19. மணிகண்டன்
இளந்தளிர் பசுமை இயக்கம்
சேலம்.

20. சித.சதிஸ்குமார்
பசுமை தேசம் உழவர், இளையோர் மேம்பாட்டு நிறுவனம்
புதுக்கோட்டை

21. R. முருகன்
ஆசிரியர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
பரமகுடி

22. இரா. பாலசந்தர்
சாமானிய மக்கள் குரல் அமைப்பு
சேலம்

23. P.V. கோபால்
பொதுச்செயலாளர்
தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் சங்கம்
கோவை

24. இரா. நடராஜன்
மாநில தலைவர்
லாஃ பவுண்டேசன் இந்தியா
கோவை

25. வா. செந்தில் குமார்
செயலாளர்
அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வுச்சங்கம்
திருவண்ணாமலை

26. M.A. ஜோசப்
சேர்மன்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
மாவட்ட கிளை கரூர்.

27. Adv. நெடுஞ்செழியன்
மல்டிபில் ஆக்சன் பார் சோசியல் சோலிடரிட்டி  (MASS)
தஞ்சாவூர்

மேலும் தனியார் பள்ளிகளினால்  பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொள்வார்கள் என ஏதிர்பார்க்கிறோம்.

உண்ணாவிரத போராட்ட ஒருங்கிணைப்பாளர்

A. பழனிக்குமார்
சமூக ஆர்வலர்
5/ 75 அங்கேரிபாளையம்,
திருப்பூர் - 641 603.
செல் :97910 50513.

நாள் :10.07.2017
இடம் : திருப்பூர்

மனுதாரர்


நகல் தகவலுக்காக :

காவல் ஆணையர் அவர்கள்
திருப்பூர் மாநகரம்.

No comments:

Post a Comment