Friday 8 September 2017

அரசு அலுவலர்கள் கவனத்திற்கு

" அரசு அலுவலர்கள் கவனத்திற்கு "
என்ற வாட்ஸ் ஆப் குரூப் அரசு அலுவலகம்  சம்பந்தப்பட்டதல்ல!

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு (LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION)  சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின்  மூலை முடுக்கு எங்கும் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழித்து நமது இந்திய. தேசத்தை வளர்ச்சி மிகுந்த  வல்லரசு நாடாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடனும்  இந்திய அரசியலமைப்பு சாசனக் கோட்பாடு 51 (A) ஓ வின் கீழ் நமது கடமையாக கொண்டு சிறப்புடன் செயல் பட்டு வருகிறோம்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக பல்வேறு அரசு துறைகள் தனித்தனியாக  உருவாக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகளையும், பணியாளர்களையும் அரசு நியமித்துள்ளது .

ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கால அளவினையும் ஏற்படுத்தி உள்ளனர்.

ஆனால் பல அரசுத்துறைகளில் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்க லஞ்சம் பெறுகின்றனர் .

லஞ்சம்  பெற்று கொண்டு சட்ட விரோதமாக செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் படுகின்றனர்.

எந்த ஒரு மக்கள் நல பணிகள் செய்தாலும், அதில் பெருமளவு முறைகேடுகளும், ஊழல்களும் நடை பெற்று வருகிறது.

எந்த ஒரு அரசுத்துறையும் லஞ்சம் பெற சொல்ல வில்லை!

மாறாக லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என தான் சொல்கின்றனர்.

ஆனாலும் அரசு வழங்கும் ஊதியங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு லஞ்சம் பெற்று   கடமை தவறுகின்றனர்.

லஞ்சம் வாங்குபவர்களை கண்காணிக்கவும், ஊழலை தடுத்து நிறுத்திடவும் மத்திய  மற்றும் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகங்கள் செயல் படுகிறது.

இவர்களால் எந்த ஒரு ஊழலையும் தடுத்து நிறுத்த முடிய வில்லை.

லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் நமது அமைப்பினை நாடி வருகின்றனர்.

எந்தெந்த துறைகளில் எப்படி யார் யார்  மூலம் எவ்வளவு ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதினை ஆதாரங்களுடன் புகார் அளித்து வருகிறனர்.

இதில் சட்ட விதிமுறைகள் மீறி செயல்படுபவர்கள் தான் பெருமளவில் லஞ்சம் கொடுக்கிறார்கள்
இவர்கள் கடமை தவறிய அதிகாரிகளை காட்டி கொடுக்க தயங்குகின்றனர்.

லஞ்ச அதிகாரிகள் அதனை பயன்படுத்தி கொள்கின்றனர்.

ஒவ்வொரு அரசு துறைகள் தனித்தனியாக செயல் பட்டாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக தான் காணப்படுகிறது. 

ஆனால் மாவட்ட நிர்வாகம் என்பது அனைத்து துறைகளையும் உள்ளடக்கி செயல் படுகிறது.

இதன் செயல்துறை நடுவராக மாவட்ட ஆட்சியர் செயல் பட வேண்டும்.

எந்த ஒரு துறையில் ஊழல் நடைபெற்றாலும்  மாவட்ட ஆட்சியருக்கு முழு பொறுப்பு இருக்கிறது.

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல் படும்
அரசுத்துறைகளில் நடைபெற்று வரும், முறைகேடுகள், விதிமீறல்கள், ஆக்கிரமிப்புகள், இழப்பீடுகள், லஞ்சம் ஊழல், மற்றும் சட்ட விரோத, தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், குறித்த தகவல்களை நேர்மையான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தினை சிறப்பாக செயல்பட வைப்பதே  நமது முக்கிய நோக்கமாகும்.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும், விதிகளையும், அரசாணைகளையும், உத்தரவுகளையும்  நாடு முழுவதும் சென்று பொது மக்களுக்கு  இலவச சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அரசு துறையில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலர் மற்றும் மேல்நிலை அலுவலர்களுக்கு அரசு வழங்கி உள்ள தொடர்பு எண்களை இணைத்துள்ளோம்.

அலுவலர்கள்  பணி இடம் மாறலாம்! ஆனால் தொடர்பு எண்கள் மாறாதது.

காவலூழியர்கள் உள்பட ஒரு சில அரசூழியர்களின்  தனிப்பட்ட எண்களையும் இணைத்துள்ளோம்.

இதில் ஒரு சில பணி, ஓய்வு பெற்ற  அலுவலர்களின் தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தின் இணைய தளத்தில் இருப்பதும்  அறிய முடிகிறது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த குரூப்பில் இணைத்தது இடையூறு எனக்கருதும் அலுவலர்கள் வெளியேறி விடலாம்.  அனைத்து அலுவலர்களும் குரூப் அட்மின் ஆகையால் தங்களின் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் தொடர்பு எண்களை  இணைக்கலாம்.

தங்கள் துறைகளின் மூலம் பொது மக்களுக்கு வழங்கும்  சேவைகள், அறிவிப்புகள் குறித்த செய்திகளை தெரிய படுத்த வேண்டுகிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும்   அரசு அலுவலர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப் செயல் படுத்த முயற்சி எடுத்து வருகிறோம் .

வாழ்த்துக்களுடன் ...

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723
  

No comments:

Post a Comment