Monday 4 September 2017

ஸ்பாட் பைன் வசூலிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

முக்கிய அறிவிப்பு!!
ஸ்பாட் பைன் வசூலிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

👌👌👌👌👌👌👌👌👌👌👌
போக்குவரத்து காவலூழியர்கள் உள்ளிட்ட எந்தவொரு காவலூழியர்கள், போக்குவரத்துக் கழக பரிசோதகர்கள், இரயில்வே பரிசோதகர்கள் ஆகியோர் ஸ்பாட் பைன் விதிப்பது, அடிப்படை உரிமைக்கு எதிரானது.

சட்டப்படியான விசாரணை முடிந்து விதிக்கப்படும் அபராதத்தை நீதிமன்றத்தில் மட்டுமே செலுத்த வேண்டுமென்பது, போக்குவரத்து காவலூழியர்கள் உள்ளிட்ட வாகனங்களை மடக்கிப் பிடித்து பரிசோதிக்கும் எந்தவொரு காவலூழியர்கள் எழுதித்தரும் காவல்துறை அறிவிப்பு என்ற காகிதத்தின் பின் புறத்திலேயே அச்சடிக்கப்பட்டு இருக்கும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இப்படித்தான்
ஓர் உதவி ஆய்வுக் காவலூழியரை, வழக்கமாக மடக்கிப் படிக்கும் ஏரியாவாசிகளின் முன்னிலையில் படிக்க வைத்ததும், அவருக்கு மூஞ்சில் காரி உமிழ்ந்தது போல், அவமானம் ஆயிற்று.

இதற்கு முன்பாக, என்னிடம் இன்சுகிட்ட கேட்கிறேன்னார். இன்சு இல்ல; அரசுப் பொய்யர் அல்லது நிதிபதியிடம் வேண்டுமானாலும் கேட்டுக்கோ என்று சொல்லியும், போன் போட்டு பேசுவது போல இல்லாத பீலாவெல்லாம் காண்பித்தார்.

படிக்க வைத்ததும் சோதனையை முடித்துக் கொண்டு போய்விட்டார். அதன் பிறகு, அவ்விடத்தில் பரிசோதனையே செய்வது இல்லையென அந்த ஏரியாவில் வசிக்கும் நம் வாசகர் சொல்கிறார்.

எனவே, அதனை படிக்க வலியுறுத்த வேண்டும்.
ஒருவேளை அதில் அப்படி அச்சடிக்கப்பட வில்லை எனில், அது காவல்துறையால் கள்ளத்தனமாக அச்சடிக்கப்பட்டது என்றே பொருள். இதனை தைரியமாக அவர்களிடம் கேட்கலாம்.

இப்படி அரசு அச்சடித்த காவல்துறை அறிவிப்பு படிவம் எப்படி இருக்கும் என்பன உட்பட இதுதொடர்பான அனைத்து சட்ட விதி மற்றும் விதி மீறல்களையும் இந்த இணைப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

தேவைப்பட்டால், படிவங்களையும், கட்டுரையையும் தரவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு கொடுங்கள்.

வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்! http://www.neethiyaithedy.org/2014/01/6.html

ஆனாலுங்கூட, இது பற்றியெல்லாம் மக்களுக்கு அடிப்படை சட்ட அறிவு இல்லாததால், இவர்களைப் பின்பற்றி யார் வேண்டுமானாலும் வசூல் செய்யலாம் என்றாகி விட்டது என்பதுதான் இச்செய்தி!

நன்றி : சட்ட ஆராய்ச்சியாளர் திரு .வாரண்ட்பாலா
💥💥💥💥💥💥💥💥💥💥💥
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
திருப்பூர்
📞98655 90723

No comments:

Post a Comment