Monday 4 September 2017

பான்கார்டு பற்றிய தகவல்!

பான் கார்டு பற்றிய தகவல்கள்!

★பான் கார்டில் உள்ள எண்கள் மற்றும் எழுத்துகள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும்.

★உதாரணத்திற்கு பான் கார்ட் எண் ACHPL4565B என்று
வைத்துக்கொள்வோம்.

★இதில் முதல் மூன்று எழுத்துக்கள் வரிசைப் பதிவு ஆகும்.

★நான்காவது எழுத்து என்பது தனிப்பட்ட நபரையோ, ஒரு நிறுவனத்தையோ அல்லது கீழே கொடுக்கப்பட்ட துறைகளில் ஒன்றையோ குறிக்கும்.

C – Company (நிறுவனம்)
P – Person (தனி நபர்)
H – Hindu Undivided Family (இந்து கூட்டுக்குடும்பம்)
F – Firm (தொழில்)
A – Association of Persons (கூட்டிணைவு/கூட்டாளிகள்)
T – Trust (அறக்கட்டளை)
L – Local authority (உள்ளூர் அதிகாரத்துறை)
J – Juridical Person (நீதித்துறையை சேர்ந்தவர்கள்)
G – Government Personnel (அரசு பணியாளர்கள்/அதிகாரிகள்)

★ஐந்தாவது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவருடைய பெயரின் முதல் எழுத்தாக இருக்கும். உங்கள் பெயர் அருண்(ARUN) என்றால் ஐந்தாவது எழுத்து A என்று வரும்.

★அடுத்து வரும் எண்கள் வரிசை எண்கள் ஆகும். இவை 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையதே.

★எனவே உங்கள் பான் கார்டில் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்துக்கள்தான் முக்கியமானவை. இந்த எழுத்துக்களை உங்களால் எளிதாக சரிபார்க்க முடியும். இந்த பின் நம்பர் சரியாக இருந்தாலே உங்களது பான் கார்ட் உண்மையானது.

No comments:

Post a Comment