Tuesday 23 May 2017

ஊழல் ஒழிப்பு செய்தி : 020/24.05.2017

ஊழல் ஒழிப்பு செய்தி :020 /24.05.2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெயந்தி அவர்களின் மேலான கவனத்திற்கு,

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

குற்றவாளி யார்?

சட்டத்திற்கு புறம்பாக செயல் படும் தனியாருக்கு சொந்தமான  கணேஷ் டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ்

குற்றம் நடைபெற காரணம் யார்?

திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அதிகாரிகள்!

குற்றம் என்ன?

★போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் , பயணிகளுக்கும் மிகுந்த பொது இடையூறு!!

★திருப்பூர் மாவட்டம், வடக்கு வட்டம் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்திற்குட்பட்ட. அவிநாசி சாலை பெரியார் காலனியில்  குற்றவாளியின் பல்பொருள் அங்காடி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

★இந்த கட்டிடம் பல்பொருள் அங்காடி நடத்துவதற்கான சட்டப்படியான உரிமம் பெறப்பட வில்லை!

★மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டிடம் கட்ட அனுமதி அளித்திருப்பதாக தெரிய வருகிறது.

★பல்பொருள் அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்  வாகனங்கள் நிறுத்துவதற்கான.  இடவசதி இல்லாத காரணத்தினால் பிரதான சாலையிலேயே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

★அங்காடியின் முன்புறம் பெரியார் காலனி பேருந்து நிறுத்தம் இருப்பதினால்  பல பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக  நிறுத்தப்படுகிறது .

★பேருந்துகளில் இருந்து இறங்கும் பயணிகளுக்கும்  பேருந்தில் ஏறும் பயணிகளுக்கும்  மிகுந்த இடையூறும் ஆபத்தும்  ஏற்படுகிறது.

★டி.டி.பி. மில் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்   பிரதான சாலையில் வந்து  கடந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது.

★அங்காடிக்கு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் பல மணி நேரம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்த படுவதினால்  போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

★இதனால் பல விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது.

★வாடகை கார், வேன், ஆட்டோ ஸ்டேன்ட் என சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள்  நிறுத்தப்படுகிறது.

★சிறப்பு விற்பனை என தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யும் நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்  வாடிக்கையாளர்கள்  கூட்டம் அலை மோதுகிறது .அவர்களின் வாகனங்களினால் மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.

★கட்டிட உரிமையாளருக்கு வாடகை ஒன்றே குறிக்கோள்!

★அங்காடி உரிமையாளருக்கு பணம் சம்பாதிப்பதில் குறிக்கோள்!

★மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் மட்டுமே குறிக்கோள்.

★வாடிக்கையாளருக்கு  எதைபற்றியும் கவலை இல்லை!

★நெடுஞ்சாலை துறையினரும் கண்டு கொள்வதில்லை!

★அனுப்பர்பாளையம் காவல்துறையினரும், திருப்பூர் மாநகர  போக்குவரத்து  காவல் துறையினரும் கண்டு கொள்வதில்லை.

★வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை.

★உள்ளுர் திட்ட குழும அதிகாரிகளும்  தொடர்பு இல்லாதவர்கள் போல் உள்ளனர்.

★தொழிற்சாலை ஆய்வாளர்களும் கண்டு கொள்வதில்லை!

★திருப்பூர் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் அக்கறை இல்லை.

★கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தினமலர் நாளிதழ் இது குறித்து செய்தி
வெளியிட்டது.

அரசு துறையில் பணியாற்றும் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் பொறுப்பு இல்லையா?

★இவர்கள் அனைவரும் கடமை தவறினாலும்  நாம் கடமை தவற மாட்டோம் .

கோரிக்கை : 01
*****************
பேருந்து பயணிகளுக்கும்,  சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் வாகனங்களில் செல்வோருக்கும்,   மிகுந்த இடையூறினையும், சொல்லொணா துயரத்தையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வரும்
கணேஷ் டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய கோருகிறோம்.

கோரிக்கை :02
*****************
கட்டிட உரிமையாளர்  மீது வழக்கு பதிவு செய்து கட்டிட உரிமத்தினை ரத்து செய்ய கோருகிறோம்.

கோரிக்கை :03 
*****************
சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளித்த மாநகராட்சி கடமை தவறிய இதற்கு பொறுப்பு வகிக்கும் லஞ்ச. அதிகாரிகளை பதவி நீக்கம்  செய்ய கோருகிறோம்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து பல ஆண்டுகளாக தொடரும்  போக்குவரத்து  இடையூறினை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் சார்பாக வேண்டுகிறோம்.

மாவட்ட ஆட்சியராகிய தாங்களும் கடமை தவறும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் முன்னறிவிப்பின்றி சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில், ,.

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
திருப்பூர்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
உதவி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
செய்தியாளர்
உலாபேசி : 98655 90723

.உண்மை சம்பவங்கள்  தொடரும் ..,!!

No comments:

Post a Comment