Monday 1 April 2019

தேர்தல் சம்பந்தமான செலவினங்களை வருமானவரித் துறையில் புகார் அளிப்பது எப்படி?

தேர்தல் புகார் முக்கிய அறிவிப்பு :

தேர்தல் வருமான வரித்துறையில் புகார் அளிப்பது எப்படி ?
ELECTION INCOM TAX OFFICE COMPLAINT!
மற்றும்

தேர்தல் ஆணையத்தில்
ELECTION COMMISSION புகார் அளிப்பது எப்படி?

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியினரின் செலவின விபரங்கள் குறித்து வருமான வரித்துறையில் புகார் அளிக்கலாம்.

Toll Free No :கட்டணமில்லா தொலைபேசி எண் :1800 425 6669

Fax No ;தொலை நகல் ;
044 28262357

Watts app No ; புலனம் : 94454 67707

E-mail
மின்னஞ்சல் ; itcontrol.chn@gov.in

நடை பெற இருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் நடை பெறும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம்.

தேர்தல் ஆணைய புகார் எண் :1950
செயலி : cVigil.

எந்தெந்ந புகார்கள் தெரிவிக்கலாம் .

1.வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணம் மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள்.

2.கட்சியினர் மற்றும் வார்டு கிளை கழக பொறுப்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் உதவியாளர்களால் வழங்கப்படும் பணம்.

3.வேட்பாளர்களுடனும்  கட்சியினருடனும் தினமும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் தொண்டர்களுக்கும் கூலி ஆட்களுக்கும்  வழங்கப்படும் பணம் .

4.பிரச்சாரம் செய்யும் வாகனங்கள் வாடகை  டீசல் பேச்சாளர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணம்.

5.பல் வேறு வண்ணங்களில் துண்டு பிரசுரங்கள் ,வால் போஸ்டர்கள் ,கொடிகள் தோரணங்கள் பிளக்ஸ் பேனர்கள் செய்தித்தாள்:விளம்பரங்கள்  மேளதாளங்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செலவுகளுக்கான பணம்.

6.முதல்வர் பிரதமர் மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவகள்  பிரமுகர்கள்  பிரச்சாரத்திற்கு வரும் போது தொண்டர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் பொதுக்கூட்ட மேடை குடிநீர் சாப்பாடு செலவுகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான செலவின விபரங்கள்.

7.கூட்டணி கட்சியினருக்கு வழங்கும் பிரச்சார வாகனங்கள் மற்றும் பணம்.

8.பிரச்சாரங்களின் போது வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும் போது தொண்டர்களுக்கு கொடுக்கும் பணம்

9.தேர்தல் பணிமணைகள் அமைத்தல் மற்றும் பொறுப்பாளர்களுக்கான செலவினங்கள்.

10. தேர்தல் கமிட்டி மற்றும் பூத் கமிட்டியினருக்கான செலவினங்கள்.

11.அனுமதி வழங்கபட்ட வாகனங்களை தவிர கூடுதலாக சட்ட விரோதமாக பயன் படுத்தப்படும் பிரச்சார வாகனங்கள்.

12.நட்சத்திர பேச்சாளர்கள் தலைமை கழக பேச்சாளர்கள் ஊதியம் மற்றும் பிரச்சார  வாகனங்கள் தங்கும் விடுதி செலவுகளுக்காக பணம் .

இவ்வாறாக பல் வேறு வகைகளில் பல இலட்சக்கணக்கான பணத்தினை செலவு செய்வார்கள்.

தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தங்களது அனைத்து சொத்து விபரங்களையும்  தாக்கல் செய்து விடுவார்கள்.

வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினை தான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் முடிந்த பின்னர் வேட்பாளர்கள் அனைவரும் செலவின விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.

இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் பொய்யான செலவின விபரங்களை தான் தெரிவிக்கின்றனர்.

நண்பர்களே!
சமூக ஆர்வலர்களே‌!
உங்கள் பகுதி வேட்பாளர்கள் கட்சியினரை காண்காணித்து முறைகேடான அனைத்து பரிவர்த்தனைகளையும் புகைப்படம் வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புங்கள்.

வேட்பாளர்கள் கொடுக்கும் செலவின விபரங்களையும் உங்களது விபரங்களையும் ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

உங்களது புகார்கள் இரகசியம் காக்கப்படும.

வாக்களிப்பது நமது உரிமை!

அதே போல் முறைகேடுகளை தடுப்பது நமது கடமை!

வாக்களிக்க பணம் வாங்காதீர்கள் .

உங்களது வாக்குகளை சில நூறு ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள்
என்றால் உங்கள் உரிமைகளை இழந்து விடுவீர்கள்.

வாக்காளர்கள் விழிப்புணர்வு பணியில்.........................

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைகளுக்கும்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி:98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி:98655 43303

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல்: nanjillaacot@gmail.com

No comments:

Post a Comment