Monday 8 April 2019

ஊழல் ஒழிப்பு செய்தி;0051 இலவச ரேசன் அரிசி விற்பனை!!

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி; LAACO/0051/2019  ; நாள் ; 08.4.2019*

*குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன* ?

உண்மை சம்பவம் !

*அரசு நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் இலவச ரேசன் அரிசி பகிரங்க விற்பனை*!

*வீடு வீடாக வந்து குடும்ப அட்டை தாரர்களிடம் இலவச ரேசன் அரிசியை விலைக்கு வாங்கும் வியாபாரிகள்* !

*வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களாக மாறிப்போன குடும்ப அட்டைதாரர்கள்*!

தேடி வந்து வீட்டு வாசலிலேயே உடனுக்குடன் பணத்தைத் கொடுத்து இலவச அரிசியை குறைந்த விலைக்கு வாங்கும் மோசடி வியாபாரிகள்!

வீடு வீடாக வந்து விலைக்கு வாங்கும் அரிசியை சாக்கு மூட்டைகளில் கட்டி வீதிகளில் ஆங்காங்கே ஓரமாக வைத்து விட்டு மொத்தமாக எடுத்துச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை!

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக ஏழை எளிய  குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வருகிறது..

இதில் பெரும்பான்மையான அட்டைதாரர்கள் இலவச அரிசியை நியாய விலை கடைகளில் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள் .

*தற்போது அரிசி வியாபாரிகள் மாதாமாதம் வீதி வீதியாக ஒவ்வொரு  வீட்டிற்கும்  வந்து இலவச அரிசியை கிலோ 6.00 ரூபாய் வீதம் 20 × 6,=120  ,கொடுத்து  குடும்ப அட்டை தாரர்களிடமிருந்து விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்*

வட மாநிலத்தைச் சேர்ந்த பின்னலாடை கூலி  தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ 20 ரூபாய்க்கு இலவச அரிசியை விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக தகவல்.

நியாய விலைக் கடை விற்பனையாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த வியாபாரிகள் தற்பொழுது வீடு வீடாக வந்து குடும்ப அட்டைதாரர்கள் இடம் இலவச அரிசியை விலைக்கு வாங்கி  விற்பனை செய்து வருகிறார்கள்!

இந்த வியாபாரிகள் ஒரு பெரும் கூட்டமாக செயல் பட்டு வருவதாக தெரிய வருகிறது.

*குற்றம் நடந்தது என்ன*?

*08.04.2019 அன்று TN 48 V 6843 என்ற இருச்சக்கர வாகனத்தில் வந்த வியாபாரி ஒருவர் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு வட்டம் திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு புதுக்காலனி பகுதியில் சுமார் 500 கிலோ அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து விலைக்கு வாங்கும் காட்சியை நாம் நேரடியாக கண்டு அதிர்ச்சி அடைந்தோம்*......!!

ஒரு வீதியிலேயே சுமார் 500 கிலோ அரிசி விற்பனை செய்யப்படுகிறது
என்றால் நாடு முழுவதும் மாதாமாதம் எத்தனை கிலோ அரிசி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறதோ ?

மறைமுகமாக இலவச அரிசியை விற்பனை செய்து வந்த குடும்ப அட்டைதாரர்கள் தற்போது எந்த ஒரு பயமும் இல்லாமல் தங்கள் வீடுகளில் இருக்கும் அரிசிகளை பைகளில் கொண்டு வந்து வீட்டு வாசலில் வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வியாபாரி ஒவ்வொரு வீடாக வந்து அந்த அரிசிகளை சேகரித்து  சாக்கு மூட்டைகளில் நிரப்பி  மூட்டைகளை தைத்து ஆங்காங்கே மூட்டைகளை வைத்துக் கொண்டு அரிசிக்குண்டான பணத்தினை கொடுத்து  விட்டு மூட்டைகளை பின்னர் வந்து எடுத்து செல்வதை கண்டோம்.

*நியாய விலை கடைகள் மூலம் அரசு வழங்கும் இலவச அரிசியை விற்பனை செய்வது சட்டப்படி தவறு என்றும் விற்பனை செய்வது தெரிய வந்தால் உங்களது குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டு விடும் என்றும் நாம் குடும்ப அட்டைதாரர் ஒருவரிடம் தெரிவித்த போது ஊரே  விக்கிறாங்க அதனால் நான் நானும் விக்கிறேன் என்றார்*

இந்த இலவச  அரிசியை வாங்கி சமைத்து  சோறு சாப்பிட முடியாது என்றார்.

அப்படியானால் வாங்காமல் விட்டு விட வேண்டியது தானே ?

யாராவது ஒரு வேளை உணவுக்கு  கஷ்டப்படும் ஏழைகளுக்கு அந்த அரிசி கிடைக்குமே என்றேன்.

இலவசமாக கிடைக்கிறது வாங்காம இருக்க முடியாது .
வாங்காம விட்டா ரேஷன் கார்டு ரத்து ஆகிடும்னு  சொல்றாங்களே ?

மாதாமாதம் நியாயவிலை கடைகளில் நீண்ட வரிசையில் நின்று 20 கிலோ அரிசியை வாங்கி தூக்கி  சுமந்து கொண்டு வருகிறோம்.

அதை வாங்கி சும்மா வைத்து  நான் என்ன செய்ய முடியும் ?

விற்பனை செய்தாலாவது  காசு கிடைக்கிறது அதனால் தான்
விக்கிறோம் என்றார்.

அவர் சொன்னதிலும் அவருக்கு கொஞ்சம் நியாயம் இருப்பது போல் தெரிந்தாலும் அரசு இலவசமாக வழங்கும் அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்வது தவறு தான் !

*சட்ட விரோதம் என தெரிந்தே வீடு வீடாக வந்து பகிரங்கமாக இலவச அரிசியை விலைக்கு வாங்கும் வியாபாரிகளை தண்டிப்பது யார்*?

இந்த வியாபாரிகள் இலவச அரிசியை எங்கு கொண்டு செல்கிறார்கள் ?

யார் யாருக்கு விற்பனை செய்கிறார்கள்?

*இதனை தடுத்து நிறுத்த வேண்டிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தலைவராகிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் ? என பொறுத்திருந்து பார்ப்போம்*

இலவச அரிசி வழங்குவதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி  இழப்பு !

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மட்டும் அரசு இலவச அரிசியை கொடுத்தால் பயனுள்ளதாக அமையும் என்பதே நமது கோரிக்கை!!

இணைப்பு :காணொளி
💥💥💥💥💥💥💥💥💥
✍ *நாஞ்சில் கோ.கிருஷ்ணன்* செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்* திருப்பூர்
உலா பேசி :98 655 90 723
உண்மை சம்பவங்கள் தொடரும்.....🙏

No comments:

Post a Comment