Tuesday 9 April 2019

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

1.சமுதாயத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் லஞ்சம் மற்றும் ஊழலை அறவே ஒழிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊக்கமளித்து சாத்தியப்படுத்தி அதிகாரம் அளித்தல்.

2. இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 கோட்பாடுகளின்படி இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் ஒரே சட்டம் . சட்டத்தின்கீழ் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவுபடுத்தி இச்சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சட்டத்தின் முன்பாக சமத்துவத்தையும் அல்லது சட்டத்தின் மூலமாக சம பாதுகாப்பினையும் பெற்றுத்தர உதவிடுதல்.

3. இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 கோட்பாடு 24 படியும் குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு படுத்துதல்) சட்டம் 1986 1988 மற்றும் 1994 இன் படியும் தொழிற்சாலை அல்லது சுரங்கத்தில் அபாயகரமான வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 14 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம் வலிமையை கருத்தில் கொண்டு அவர்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட உதவி செய்தல்.

4.இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950 கோட்பாடு 45 படியும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 இன்படியும் 14 வயதிற்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு இலவச கட்டாய கல்வி பயில உதவி செய்தல்.

5. இந்தியாவில் அமலில் உள்ள மத்திய மாநில சட்டங்களில் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள சட்டங்களான இந்திய அரசியலமைப்பு சாசனம்- 1950 ,,இந்திய தண்டனைச் சட்டம்- 1860 ,இந்திய சாட்சிய சட்டம் -1872 ,குற்ற விசாரணை முறை சட்டம் -1973 ,உரிமையியல் விசாரணை முறை சட்டம்- 1988 ,நுகர்வோர்  பாதுகாப்புச் சட்டம் -1986 ,மனித உரிமைகள் சட்டம் -1993 ,ஊழல் தடுப்புச் சட்டம்- 1988 ,மோட்டார் வாகன சட்டம்- 1988 ,கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டம் -1992 ,தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதினை முறைப்படுத்தும் );சட்டம் -2009 ,தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ,கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 போன்ற இன்னும் பிற சட்டங்களையும் சட்டங்களின் நோக்கங்களையும் பயன்களையும் படிக்காத பாமர அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி அளித்து அவர்களின் பிறப்புரிமையை தயங்காமல் பெற்றிட வழிவகை செய்தல்.

6.படிப்பறிவில்லாத பாமரனும் சட்டம் பயின்று வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் அவரவர் வழக்கை வாதாடி வெற்றி பெற பயிற்சி அளித்தல்.

7. இந்திய அரசியலமைப்பு சாசனம்- 1950 கோட்பாடு 51 A இன் கீழ் இந்திய குடிமக்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவும் நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலைப்படுத்தவும் தேசத்தை பாதுகாக்கவும் தேசத்துக்கான சேவையை செய்ய முன் வரவும் ஜாதி மதம் இனம் மொழி பிராந்தியம் பாகுபாடின்றி சகோதரத்துவத்தை வளர்க்கவும் பெண்களை இழிவு படுத்தும் போக்கை தவிர்க்கவும் நமது தொன்மையான சிறந்த பண்பாடுகளை போற்றி பராமரிக்கவும் வனங்கள் ஏரிகள் வனவிலங்குகள் இயற்கை சூழலை மேம்படுத்தவும் அறிவியல் சார்ந்த அணுகுமுறை மனித நேயம் சீர்திருத்தம் இவற்றை பேணிக்காக்கவும் பொதுச் சொத்துக்களை பாதுகாக்கவும் வன்முறையை கண்டு விலகவும் அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதையில் செல்ல அனைத்து முயற்சிகளையும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் மேற்கொள்ள அனைத்து விதமான பயிற்சியும் ஊக்கமும் அளித்து உதவி செய்தல்.

8. முதியோர் உதவித்தொகை ஊனமுற்றோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை போன்ற சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் அரசு வழங்கும் அனைத்து உதவிகளையும் லஞ்சம் கொடுக்காமல் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பெற்றுத்தர உதவி செய்தல்.

9.பிறப்பு சான்று ,இறப்புச் சான்று ,இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, வாரிசுச் சான்று ,வயது சான்று, சாதி சான்று ,ஆதரவற்ற விதவை சான்று ,கல்வி சான்று ,மாற்றுத்திறனாளி சான்று ,பட்டதாரி இல்லை என்ற சான்று ,கலப்புத் திருமணச் சான்று, வீட்டுமனை இல்லை எனச் சான்று ,ஆண் வாரிசு இல்லை என சான்று ,வரியவர் சான்றிதழ் ,,செல்வநிலை சான்றிதழ் ,குடும்ப அட்டை இல்லை என சான்றிதழ், தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை என சான்று சுகாதார சான்று போன்ற இன்னும் பிற சான்றிதழ்களையும் சுகாதாரத் துறை ,வருவாய்த்துறை ,சமூகநலத்துறை ,வட்ட வழங்கல் துறை ,காவல் துறை போன்ற சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறை அலுவலகங்களில் "மக்கள் சாசனத்தில் " குறிப்பிட்டுள்ள கால அவகாசத்தில் லஞ்சம் கொடுக்காமல் தகுதியான பயனாளிகளுக்கு பெற்றுத்தர வழிவகை செய்தல்.

10.ஓட்டுநர் உரிமம் ,வாக்காளர் அடையாள அட்டை ,குடும்ப அட்டை ,நிரந்தர வருமான வரி அட்டை ,கடவுச்சீட்டு ,பத்திரப்பதிவு ,சமையல் எரிவாயு இணைப்பு ,மின் இணைப்பு ,குடிநீர் இணைப்பு ,வீட்டு வரி விதிப்பு ,கட்டிட அனுமதி பெற ,அரசு கேபிள் டிவி இணைப்பு பெற ,தொலைபேசி இணைப்பு ,மருத்துவ காப்பீடு இது போன்ற பொது மக்களுக்கு பயனுள்ள அனைத்து தேவைகளையும் அரசு குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் லஞ்சம் கொடுக்காமல் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் பெற்றுத்தர வழிவகை செய்தல்

11. பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08 2006 தேதியிட்ட114 எண்ணிட்ட அரசாணைப்படி 60 தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அந்தந்த அரசுத் துறை அலுவலகங்களில் தாங்கள் அளித்த மனு மீது என்னென்ன நடவடிக்கைகள்  எடுக்கப் பட்டன ?மனு நிராகரிக்கப்பட்ட காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 சட்டபிரிவு 6 (1 ):இன் கீழ் 30 தினங்களுக்குள் பெற்றுத் தருவதுடன் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உதவி செய்தல்.

12. மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணை :48 பள்ளிக்கல்வி x2 துறை நாள் 21.07 2004 இல் தெரிவித்துள்ள அறிவுரைகள் நிபந்தனைகளை கடைபிடிக்காமல் பொய்யான உறுதிமொழி வழங்கி சட்டத்திற்கு புறம்பான வகையில் உரிமம் பெற்றுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை கண்டறிந்து அப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை கொள்ளல்.

13.தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்டம் -2009 இன் படியும் கல்விக் கட்டண நிர்ணயக் குழு வினரால் நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணங்களை மட்டும் செலுத்தி தனியார் பள்ளிகளில் கல்வி பயில அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

14. கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணை எண் 155 22 .07.2000 பிரிவு 9 (d) இன்படி திரவ பெட்ரோலிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் எதுவும் விநியோகஸ்தர்கள் வசூலிக்கப்படுவது சட்டப்படி குற்றம் என சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

15.அரசு கேபிள் டிவி சட்டத்தின்படி அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணமாக மாத சந்தா தொகை ரூபாய் 70 மட்டும் கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்கள் செலுத்தினால் போதும் என விழிப்புணர்வு செய்தல்

16 தமிழக மின்சார வாரிய தர நிர்ணய விதிகள் -2014 பிரிவு 21 இன் படி மின் பயனீட்டாளர்களுக்கு ஏற்படும் காலதாமத சேவை குறைபாட்டிற்கு மின்சார வாரியம் வழங்கும் இழப்பீட்டு தொகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து ஒவ்வொரு மின் நுகர்வோருக்கும் விழிப்புணர்வு செய்தல்

17.மத்திய மாநில அரசுகளின் அமலில் உள்ள சட்டங்களையும் அரசாணைகள் அறிவிப்புகள் வேண்டுதல்கள் நலத்திட்ட உதவிகள் போன்ற அனைத்து திட்டங்களையும் துண்டுபிரசுரங்கள் குறுஞ்செய்தி வலைதளம் முகநூல் தொலைக்காட்சி வானொலி பத்திரிகைகள் செய்தித்தாள்கள் தொலைபேசி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பெறச் செய்தல்

18. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்தல்

19.ரத்த தானம் கண் தானம் உடல் தானம் உடல் உறுப்பு தானம் போன்ற உயிர் பாதுகாப்புக்கான தானங்களை அறக்கட்டளை நிர்வாகிகள் அங்கத்தினர்கள் அனைவரும் செய்வதுடன் இது சம்பந்தமான கருத்தரங்குகளையும் மருத்துவ முகாம்களையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடர்ந்து நடத்துதல்.

20.அமைப்பின் நோக்கங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் இணையான மற்ற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்பு சாசனம் -1950 கோட்பாடு 19 (1 ) அ மற்றும் ஈ இன் கீழ் இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் சென்று பொதுமக்கள் நலனிற்காக சட்ட பயிற்சிகளையும் உதவிகளையும் செய்து அயராது பாடுபடுதல் .

21. இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 கோட்பாடு 47  க்கு எதிராக உடல் ஆரோக்கியத்திற்கு கேடு செய்யும் போதையூட்டும் மது வகைகளையும் அரசு தயாரித்து விற்பனை செய்வதை நிறுத்தி பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தல் செய்தல்

22.பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் செலுத்துச் சீட்டு Bill வாங்குவதன் மூலம் அரசிற்கு விற்பனை வரியினால்  வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு செய்தல்.

23. மொபைல் போன், மின்சாரம் தங்க நகைகள் குடியிருப்பு வீடுகள் மருத்துவமனைகள் பேருந்துகள் காப்பீடுகள் இதர பொருட்கள் போன்றவற்றில் சேவை குறைபாடுகளினால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நுகர்வோர் நீதிமன்றம் மூலம் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்தல்.

24.வறுமைக்கோட்டிற்கு மிகவும் பின்தங்கிய ஒவ்வொரு கிராமத்தையும் தேர்ந்தெடுத்து அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அரசின் சான்றிதழ்கள் உதவித்தொகைகள் போன்ற அனைத்து வசதிகளையும் லஞ்சம் கொடுக்காமல் பெற்றுத் தந்து வஞ்சமில்லா முன்மாதிரி கிராமமாக உருவாக்குவதுடன்  அவர்களின் வாழ்வாதாரத்தையும் பேணி காத்தல்.

25.மத்திய மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரி இனங்களையும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தவறாமல் செலுத்திடக் கோரி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு அரசின் வருவாயைப் பெருக்கி அதன் மூலம் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்ல அரசுக்கு உதவி செய்தல்

26.லஞ்சம் வாங்காமல் அனைத்து அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை ஆண்டுக்கு ஒரு முறை பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தல்.

27.அனைத்து தொழிலாளர்களின்  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட இதன் ஒரு அங்கமாக தொழிற்சங்கம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பேணி காத்தல்

28.ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து விதமான கல்லூரிகளையும் பயிற்சி நிறுவனங்களை நிறுவி மிகவும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியையும் பயிற்சியையும் வழங்குதல்.

29.ஆதரவற்றவர்கள் முதியோர்கள் மாற்றுத் திறனாளிகள் மனநலம் குன்றியவர்கள் விதவைகள் திருநங்கைகள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் பிச்சைக்காரர்கள் அனாதை குழந்தைகள் தொழுநோயாளிகள் போன்ற சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்களுக்கு தேவையான காப்பகங்களையும் மறுவாழ்வு இல்லங்கள் நிறுவி பராமரித்து வருதல்.

30. அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ வசதிகளை செய்துதர சிறந்த மருத்துவமனையை நிறுவி பராமரித்து வருதல்

31.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்தல்

32.படித்த படிக்காத வேலை இல்லாத இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

33.பேரிடர் போன்ற இயற்கை சீற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழி வகைகளை செய்தல்.

34.ஜாதி மத ஒற்றுமையை வளர்க்கவும் தீண்டாமையை ஒழிக்கவும் பாடுபடுதல்

35 உடற்பயிற்சி மன வள மேம்பாடு சமூக பொறுப்புணர்ச்சி மனவளர்ச்சி இறை உணர்வு தியானம் யோகாசனம் ஒழுக்க மேம்பாடு போன்றவைகளை வளர்க்க பாடுபடவும் அவைகளை வளர்க்கவும் பரப்பவும் நிலையங்கள் அமைத்தல் மற்றும் நடத்தி வருதல் .

36.நாளிதழ் வார இதழ் மாத இதழ் கள் சட்டப் புத்தகங்கள் ஆகியவற்றை விநியோகம் செய்ய பிரசுரங்களையும் பதிப்பகங்களையும் நிறுவுதல் .

37.சுகாதாரத்தினையும்
சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வீட்டிற்கு ஒரு மரம் நடுவதுடன் அது சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

38.நுகர்வோர் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணம் பெற்று தர வழி வகை செய்தல்.

No comments:

Post a Comment