Saturday 6 April 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0051

ஊழல் ஒழிப்பு செய்தி;LAACO/0051/2019; நாள்; 06.04.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன ?

உண்மை சம்பவம் .

குற்றவாளி யார்!

கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
அங்கேரிபாளையம் சாலை
திருப்பூர்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் ஏழை மாணவனை கடந்த 3 ஆண்டுகளாக பழி வாங்கி வரும்  பள்ளி நிர்வாகம்!

சமூக சேவையில் கல்விப் பணி !அனைவருக்கும் கல்வி !நன்கொடை இல்லை!
என பகட்டான விளம்பரம்

சட்ட விரோதமாக செயல்படும் பள்ளிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கடமை தவறிய திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி!

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009

தமிழ்நாடு RTE விதி - 2011 பிரிவு 5 இல்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடைகள் இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேற்காண் பள்ளி நிர்வாகம் கரிக்குலம்  என்ற பெயரில் யோகா ,கராத்தே,டேபிள் டென்னிஸ் பல்வேறு விதமான கட்டணங்களாக  ₹ 22000 .00 ரூபாய் கட்டாயமாக செலுத்த வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளனர்.

எந்த ஒரு கல்விக் கட்டணமும் பெறவில்லை என மாணவணின் பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்கி கொண்டு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என கடிதம் வழங்கியிருக்கிறார்கள்.
அதுவும் கடமை தவறிய திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி முன்னிலையில் !

மெட்ரிக் பள்ளி இயக்குனர் அவர்கள் கடிதத்தில் முன்னுக்குப் பின் முரணாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் எந்த ஒரு கல்விக் கட்டணத்தையும் மாணவனிடம் இருந்து பெற கூடாது என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .

ஆனால் சட்டவிரோதமாக செயல்படும் பள்ளி மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தினை நிராகரித்துவிட்டதாக தெரியவருகிறது

மனுதாரர்:
ஆ பழனிக்குமார்
த/பெ. ஆண்டியப்பன்
5/419 பி ,வேலன் நகர்
வெங்கமேடு
அங்கேரிபாளையம்
திருப்பூர் 641 603

பெறுநர்:
பள்ளி முதல்வர் /தாளாளர்
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அங்கேரிபாளையம் சாலை திருப்பூர் 641 603

அய்யா ,

பொருள் : இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் எனது மகன் ப.காந்தி ஜி என்பவருக்கு கல்வி கட்டணம் செலுத்த கோரி முன்னுக்கு பின் முரண்பாடான தகவல் வழங்கியதாக  மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின்  விபரங்கள் மற்றும் எனது  மகனுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டண விபரங்களை இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 101 -இன் கீழ் ஏழு தினங்களுக்குள் எழுத்து பூர்வமாக  தன்னிலை விளக்கம் அளிக்க கோரி மனு

பார்வை:
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் தங்களுக்கு 16.11.2018 அன்று அனுப்பிய கடிதத்தின் நகல்  எனக்கும்  அனுப்பப்பட்டுள்ளது .
அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது .

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ,சென்னை-6

ந. க.எண் 4362 /இ3 / 2018 நாள் :
16 .11 .2018

பொருள்  :மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - திருப்பூர் மாவட்டம் -கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 இன் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கையில் கட்டணம் செலுத்த கோருவதாக பெறப்பெற்ற புகார் சார்பாக,

பார்வை ;
1 திருப்பூர் மாவட்டம் திரு ஆ.பழனி குமார் என்பாரின் புகார் மனு நாள் :13 06 .2018 மற்றும்
11 .08 .2018

2 இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண் ; 4362/இ3/2018 நாள்;
11 .07.2018 மற்றும் 04. 09 .2018

3 .மனுதாரரின் உறுதிமொழி சான்று நாள்: 21. 03 .2018

4. கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அளிக்கப்பட்ட கட்டண விபரம் (07.05.2018 நாளிட்ட ) மற்றும் மாணவருக்கான செலுத்தப்பட வேண்டிய 06 .06 .2018 நாளிட்ட கட்டண விவரம் ரசீது.

5 திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை கடித எண் :9648 /அ3 /2018 :நாள் ;11. 10. 2018

6 .வழக்கு எண் டபிள்யூ.பி.எண்;
27401 /2018 :நாள் ;24 .10 .2018

பார்வை 1 ல் கண்டவாறு மனுதாரரின் புகார் மனுவானது  இவ்வியக்ககம்  13 .06 .2018 மற்றும் 11.08.2018 ஆகிய நாளிட்ட தேதிகளில் பெறப்பட்டது .

பார்வை 2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கு விசாரணை அறிக்கை அனுப்ப தெரிவிக்கப்பட்டு பார்வை: 5 ல் கண்டவாறு விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது .

மேற்கண்ட அறிக்கையில் மனுதாரர் தனது குழந்தைக்கு கல்விக் கட்டணம் (Tution Fees ) RTE விதிப்படி செலுத்தப்பட வேண்டியது இல்லை என்றும் இதர கட்டணங்கள் பாடநூல் எழுது பொருட்கள் போன்ற கட்டணங்களும் கரிக்குலம்  என்ற இனத்தின் கீழான கட்டணங்களும் 2016 -17 ஆம் ஆண்டு முதல் 2018 -19 ஆண்டு முடிய செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு கட்டண தொகை விபரம் அளிக்கப்பட்டுள்ளது .

மேலும் நிலுவை கட்டணங்களை உடனடியாக செலுத்த தேவையில்லை என்றும் மாணவரை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது

புகாருக்குரிய  பள்ளியின் மூலம் பார்வை 4 ல்  குறிப்பிடப்பட்டவாறு வாறு 07 .05 .2018 மற்றும் 06. 06  2018 ஆகிய நாளிட்ட பள்ளிக் கட்டண விபர ரசீது இவ்வியக்கம் பெறப்பட்டுள்ளது

மேலும் பார்வை 3 ல்  கண்டவாறு மனுதாரரிடம் இருந்து எந்த ஒரு கல்விக் கட்டணமும் பள்ளி நிர்வாகம் பெறவில்லை என்ற உறுதிமொழி சான்றும்  பள்ளி நிர்வாகம் பெற்றுள்ளது  முன்னுக்குப்பின் முரண்பாடாக உள்ளது .

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 இன் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கை செய்யப்படும் குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் பள்ளி நிர்வாகம் பெறக்கூடாது என பள்ளி முதல்வருக்கு திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்

பெறுநர் :
முதல்வர்
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
திருப்பூர்

நகல்
ஆ.பழனிக்குமார்
த/பெ.ஆண்டியப்பன்
5/419 வேலன் நகர்
வெங்கமேடு
அங்கேரிபாளையம்
திருப்பூர் -641 603

சமூக சேவையில் கல்விப்பணி !நன்கொடை இல்லை !அனைவருக்கும் கல்வி ! என்று கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பாக விளம்பரப் படுத்தப் பட்டுள்ள தங்களது கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எனது மகன் ப..காந்தி ஜி என்பவரை  கல்வி பயில வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தேன்.

ஆனால் எனது விண்ணப்பம் தங்கள் பள்ளி நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது

எனவே கல்வி உரிமையை மீட்டெடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஈரோடு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் மூலம் தங்கள் பள்ளியில் எனது மகனுக்கு 2016- 2017 எல் கே ஜி வகுப்பிற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது.

எல் கே ஜி வகுப்பிற்கான கல்விக் கட்டணம் செலுத்த வில்லை என்ற காரணத்தினால் எனது மகனுக்கு
நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் எதுவும் வழங்க வில்லை.

ஒரு ஆண்டு இலவச கல்வி திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது .

2017-2018 யு.கே.ஜி வகுப்பிற்கான
நோட்டு புத்தகங்களை கட்டணம் இல்லாமல் வழங்கினீர்கள் .

2018- 2019 கல்வியாண்டில் விடுமுறை முடிந்து பள்ளி திறந்த போது ஒன்றாம் வகுப்பில் சேர்க்கைக்காக தங்கள் பள்ளிக்கு வந்த போது கல்வி கட்டணம் செலுத்த வில்லை எனக்கூறி பள்ளி நுழைவு  வாயிலில் பள்ளி பாதுகாவலர்கள் உடற்கல்வி ஆசிரியர்களால்  தடுத்து நிறுத்தப்பட்டு எனது இரு சக்கர வாகன சாவியையும் பறித்து க்கொண்டீர்கள்.

எனது  மகனை பள்ளிக்குள் அனுமதிக்க வில்லை .

எனவே பள்ளி முன்பாக நானும் எனது மகனும் 2 தினங்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்து கல்வி பயிலும் எனது மகனுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் கரிக்குலம்  என்ற பெயரில் கல்வி கட்டணங்கள் செலுத்த வேண்டுமென 06 06 .2018 அன்று திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் முன்னிலையில் நடை பெற்ற பேச்சு வார்த்தையின் போது செலுத்த வேண்டிய தொகை  குறித்து கடிதம்  வழங்கினீர்கள் .

இலவச கல்வியில் சேர்ந்து பயிலும் எனது மகனுக்கு இந்த கட்டணங்களை செலுத்த முடியாது என தெரிவித்தேன் .

முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் தங்களுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் கேட்கும் அனைத்து கட்டணங்களையும் செலுத்தி தான் ஆகவேண்டும் என திட்டவட்டமாக கூறினார்கள் .

எனவே இது சம்பந்தமாக மெட்ரிக் பள்ளிகள்  இயக்குநர் அவர்களுக்கு  புகார் மனு  அனுப்பியிருந்தேன் .

அதற்கு பார்வையில் காணும் மெட்ரிக் பள்ளி இயக்குநர் அவரிடமிருந்து வரப்பட்ட கடிதத்தில்  மனுதாரரிடமிருந்து எந்த ஒரு கல்விக் கட்டணமும் பள்ளி நிர்வாகம் பெறவில்லை என்ற உறுதிமொழி சான்றும் பள்ளி நிர்வாகம் பெற்றுள்ளது .

கட்டணமும் செலுத்தும் படி கடிதமும் வழங்கப்பட்டுள்ளது .

இது முன்னுக்குப்பின் முரண்பாடாக உள்ளது .

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 இன் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில்  சேர்க்கை செய்யப்படும் குழந்தைகளிடம் கல்வி கட்டணம் பள்ளி நிர்வாகம்  பெறக்கூடாது என பள்ளி முதல்வருக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது

ஆனால் தாங்கள் கேட்ட கூடுதல் கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி எனது மகனுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்ட எந்த ஒரு கல்வி உபகரணங்களையும்  வழங்க வில்லை  .இந்த கல்வி ஆண்டிலும் எனது மகனின் கல்வி உரிமை திட்ட மிட்டு பறிக்கப்பட்டுள்ளது.

இது குழந்தைகள் கல்வி உரிமை மீறிய செயலாகக் கருதுகிறேன்.

இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு எண்;27401 24 .10. 2018  அன்று வழக்கு தொடர்ந்துள்ளேன்.

மெட்ரிக் பள்ளிகள்  இயக்குநர்  அவர்களின் பார்வையில் காணும் கடிதத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகளின் விபரங்கன்
மற்றும்
எனது மகனுக்கு நான் செலுத்த வேண்டிய முழுமையான கல்வி கட்டண விபரங்களை இக்  கடிதம் கிடைக்கப் பெற்ற ஏழு தினங்களுக்குள் எழுத்து பூர்வமாக இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 101 இன் கீழ் தன்னிலை விளக்கம் அளிக்க கோரி இந்த மனு தங்கள் கவனத்திற்கு பதிவு அஞ்சலில் அனுப்பப்படுகிறது

இணைப்பு : கடித நகல்

நாள்:05.04.2019
இடம்: திருப்பூர்

மனுதாரர்

ஆ.பழனிக்குமார்

நகல் தக்க மேல் நடவடிக்கைக்காக;

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் -சென்னை

No comments:

Post a Comment