Thursday 4 April 2019

நீங்களும் வக்கீல் தான் !!

நீங்களும் வக்கீல் தான் !!
LAACO  Nanjil /03.04.2019

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் .

அடிப்படை உரிமை என்பது எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்.

உதாரணத்திற்கு .....உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உங்களின் எண்ணபடி  அப்பா அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படி செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா ? இல்லை தானே இது தான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது.

உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போகிறீர்கள் . அல்லது கலெக்டரை பார்த்து உங்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்க போகிறீர்கள். இதற்காக வக்கீல் யாரையும்  வைத்து கொள்கிறீர்களா ? இல்லையே !

அப்புறம் எதற்கு கோர்ட்டுக்கு மட்டும் வக்கீல் வச்சி  வாதாடனும்?

உங்களுக்கு என்ன நடந்தது ?
அல்ல என்ன தேவை ?
என்பதை எப்படி உங்கள் அப்பா அம்மாவிடமோ அல்லது  பிறரிடமோ அல்லது கலெக்டரிடமோ கேட்கின்றீர்களோ  அதே போல் நீதிபதியிடமும் கேட்கப் போகிறீர்கள் அவ்வளவு தான் .

வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா?

நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல் தான் அப்படீன்னு
குற்ற விசாரணை முறை விதிகள் 1973 - ன் விதி 2 (17 )
உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 - ன் விதி 2 (15)
மற்றும்
வழக்கறிஞர் சட்டம் 1961 -ன் பிரிவு 32 -ம் தான் கூறுகிறது .

முன்அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போது தான் வாங்க வேண்டும் .

நமக்கு நாமே வாதாடும் போது தேவையில்லை .ஏன் என்றால் நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19 (1 )(அ) ன் படி பேச்சு உரிமை ,எழுத்து உரிமை ,கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை .

வக்கீல்கள் எத்தனை தான் பட்டம் பெற்றிருந்தாலும் வழக்கறிஞர் அவையில் தொழில் செய்வதற்காக பதிவு செய்திருந்தாலும் வேறு நபருக்காக ஆஜராகும் ஒவ்வொரு வழக்கிலும் வழக்கறிஞர்கள் நீங்க அடுத்தவர்களுக்காக வாதாடனும் அப்படீன்னா ,எப்படி நீதிமன்றத்தின் முன் அனுமதி வாங்கனுமோ அதே மாதிரி வக்கீலும் வாங்கித்தான் ஆகனும்

இதைத்தான் வக்கீல்கள் ஒவ்வொரு வழக்கிலும் வக்காலத்து அதாவது தமிழில் பரிந்து பேசும் உரிமை கோரி மனு தாக்கல் செய்கின்றனர் .

இப்ப புரியுதா நீங்க வக்கீலுக்கு படிக்கா விட்டாலும்  வக்கீல் தான் அப்படீன்னு.

நன்றி .சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களின்
நீதியைத் தேடி ...
நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் !
"குற்ற விசாரணைகள்"
என்ற சட்ட விழிப்புணர்வு
நூலில் இருந்து.......
நூல்களை பெற ;
வாட்ஸ் ஆப் எண் : 98 42 90 91 90

No comments:

Post a Comment