Saturday 30 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0050 லஞ்சம் வாங்கும் காவலூழியர் !

ஊழல் ஒழிப்பு செய்தி :,LAACO /0050/2019 ;நாள் ; 04.04.2019

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்!

காவல் ஊழியர்களா?
வழிப்பறிக் கொள்ளையர்களா?

திருப்பூர் மாநகர காவல் ஊழியர்களின் அத்து மீறல்கள்!

நூதன முறையில் சட்ட விரோதமாக லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாநகர காவலூழியர்கள்!

20.03.2019 அன்று இரவு சுமார்  7.20 மணி அளவில் திருப்பூர் அவிநாசி சாலை அனுப்பர்பாளையம் புதூர் கோவை டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே கண்ட காட்சி !.

நான்கு இளைஞர்கள் பரபரப்பாக நின்று கொண்டிருந்தனர்.

அருகில் ஒரு காவலூழியரும் நின்று ஏதோ பேசி கொண்டிருந்தனர்.

கொஞ்ச தூரத்தில் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த காவலூழியர் ஒருவரிடம் ஒரு இளைஞன் கெஞ்சி கொண்டிருப்பதினை காண முடிந்தது.

சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என ஓரமாக நின்று கவனித்தோம்.

அருகில் இருந்த சிட்டிமேன் பியூட்டி சலூன் என்ற கடைக்குள் காவலூழியர் ஒரு இளைஞரை  அழைத்து சென்று விட்டு வெளியில் வந்தார். .

அப்போது ஒரு இளைஞன் சக நண்பனிடம் என்னடா பண்றது மச்சி ₹ 1000 ரூபாய் கேட்கிறான்டா !

₹:300 தான் கையில் இருக்கிறது என பேசியது நமது காதில் விழுந்தது.

அந்த காவலூழியர் லஞ்சம்  தான் கேட்கிறார் என உறுதியானது.

லஞ்சம் வாங்கும் போது  கையும் களவுமாக பிடித்து விடலாம் எனக்காத்திருந்தோம்.

அந்த காவலூழியன் பலே கில்லாடி!

பொது இடத்தில் லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என தெரிந்து
திடீரென அந்த இளைஞரை அழைத்து கொண்டு மீண்டும் சிட்டிமேன் பியூட்டி சலூனுக்குள் நுழைந்தார்.

நுழைந்த வேகத்தில் அப்படியே லஞ்ச பணத்தினை பெற்றுக்கொண்டு வெளியில் வந்தார்.

இருச்சக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு காவலூழியருடன் பறந்து சென்று விட்டார்.

காவல் ஊழியர்கள் ஓட்டி வந்த
இருச்சக்கர வாகன பதிவு எண்.TN 39 BF 7033 ஹோண்டா சைன் வாகனம் என நினைக்கிறோம்.

திருப்பூர் மாநகர 4 வேலம்பாளையம் காவல் நிலைய காவல் ஊழியராக இருக்கக்கூடும் என நினைக்கிறோம்

சலூன் கடைக்குள் இருந்து வெளியில் வந்த அந்த இளைஞன் வேகமாக சாலையை கடக்க முயற்சி செய்தான்.

அந்த இளைஞரை பின் தொடர்ந்து  சென்று தம்பி என்ன பிரச்சனை என்றேன்.

எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்றேன் .

₹300 Three Hundred. என்றார்.

எதற்கு ? என்றேன் இன்சூரன்ஸ் இல்லை அதனால் தான் என்றார்.

ரசீது கொடுத்தாரா என்றேன்?
இல்லை என்றார்.

லஞ்சமா என்றேன்?

ஆம் என சொல்லி விட்டு பதட்டத்துடன் வேகமாக  சென்று விட்டார்.

காவல் ஊழியர்கள் அதிகார வரம்பை மீறி தங்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறி சரியான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடம் இருந்து தேவையான அளவு லஞ்ச பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

இரவு நேரங்களில் திருப்பூர் மாநகர பகுதிகளில் வலம்  வரும் காவல் ஊழியர்கள் போலீஸ் நண்பர்களை  துணைக்கு வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளை நிறுத்தி  குடிச்சிருக்கியா வாயை ஊது என ஊத சொல்கின்றனர்.

அவ்வாறு வாகன ஓட்டிகள் யாரேனும் மது அருந்தி இருந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது கிடையாது.

மாறாக அந்த வாகன ஓட்டியின் இருசக்கர வாகனத்தினை பறித்து அருகில் இருக்கும் ஏதாவது ஒரு இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விடுகின்றனர் .

அபராதமாக ₹ 2,500 முதல் ₹ 3,000 வரை என தங்களுக்கு தேவைப்படும்  பணத்தை அவர்கள் லஞ்சமாக பெற்று விடுகின்றனர்.

காவல்துறையினரின் சோதனைச்சாவடிகளில் வாகன ஓட்டிகளை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் ஸ்பாட்பைன்  எனக்கூறி ரசீது வழங்காமல் லஞ்சம் பெற்று வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

ஒரு சில காவல் உதவி ஆய்வாளர்கள் வாகன சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் அறிவிப்பு நோட்டீஸ் மட்டும்  கொடுத்து ஸ்பாட் பைன் என கூறி அபராதம் வசூலித்து வருகின்றனர்.

ஒரு சில காவல் உதவி ஆய்வாளர்கள் வாகன சோதனையின் போது காவல் ஆய்வாளர் கையொப்பமிட்ட ஸ்பாட் பைன் ரசீதின் மூலம் சட்ட விரோதமாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் நமக்கு வந்த வண்ணம் உள்ளது

உளவுத் துறையினருக்கு காவல்துறையினரின் இந்த லஞ்ச வேட்டை குறித்து தெரியாமல் போனது ஏன் ?

திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையர் ,துணை ஆணையர் ,ஆணையர் அவர்களுக்கு இது குறித்து உண்மையிலேயே தெரியாதா என்ன?

கோரிக்கை;
லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வரும் திருப்பூர் மாநகர காவல் ஊழியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

இணைப்பு :காணொளி

நாஞ்சில் கோ கிருஷ்ணன் செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ் திருப்பூர் 
உலா பேசி 98 65 5 90 723
உண்மை சம்பவங்கள் தொடரும்......

No comments:

Post a Comment