Tuesday 2 April 2019

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் கடிதம்

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ,சென்னை-6

ந. க.எண் 4362 /இ3 / 2018 நாள் :
16 .11 .2018

பொருள்  :மெட்ரிகுலேஷன் பள்ளிகள் -திருப்பூர் மாவட்டம் -கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் _2009 இன் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கையில் கட்டணம் செலுத்த கோருவதாக பெறப்பெற்ற புகார் சார்பாக,

பார்வை ;
1 திருப்பூர் மாவட்டம் திரு ஆ.பழனி குமார் என்பாரின் புகார் மனு நாள் :13 06 .2018 மற்றும்
11 .08 .2018

2 இவ்வியக்க செயல்முறைகள் ந.க.எண் ; 4362/இ3/2018 நாள்;
11 .07.2018 மற்றும் 04. 09 .2018

3 .மனுதாரரின் உறுதிமொழி சான்று நாள் 21. 03 .2018

4. கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அளிக்கப்பட்ட கட்டண விபரம் (07.05.2018 நாளிட்ட ) மற்றும் மாணவருக்கான செலுத்தப்பட வேண்டிய 06 .06 .2018 நாளிட்ட கட்டண விவரம் ரசீது.

5 திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை கடித எண் :9648 /அ3 /2018 :நாள் ;11. 10. 2018

6 .வழக்கு எண் டபிள்யூ.பி.எண்;
27401 /2018 :நாள் ;24 .10 .2018

பார்வை 1 ல் கண்டவாறு மனுதாரரின் புகார் மனுவானது  இவ்வியக்ககம்  13 .06 .2018 மற்றும் 11.08.2018 ஆகிய நாளிட்ட தேதிகளில் பெறப்பட்டது .

பார்வை 2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கு விசாரணை அறிக்கை அனுப்ப தெரிவிக்கப்பட்டு பார்வை: 5 ல் கண்டவாறு விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது .

மேற்கண்ட அறிக்கையில் மனுதாரர் தனது குழந்தைக்கு கல்விக் கட்டணம் (Tution Fees ) RTE விதிப்படி செலுத்தப்பட வேண்டியது இல்லை என்றும் இதர கட்டணங்கள் பாடநூல் எழுது பொருட்கள் போன்ற கட்டணங்களும் கரிக்குலம்  என்ற இனத்தின் கீழான கட்டணங்களும் 2016 -17 ஆம் ஆண்டு முதல் 2018 -19 ஆண்டு முடிய செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு கட்டண தொகை விபரம் அளிக்கப்பட்டுள்ளது .

மேலும் நிலுவை கட்டணங்களை உடனடியாக செலுத்த தேவையில்லை என்றும் மாணவரை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது

புகாருக்குரிய  பள்ளியின் மூலம் பார்வை 4 ல்  குறிப்பிடப்பட்டவாறு வாறு 07 .05 .2018 மற்றும் 06. 06  2018 ஆகிய நாளிட்ட பள்ளிக் கட்டண விபர ரசீது இவ்வியக்கம் பெறப்பட்டுள்ளது

மேலும் பார்வை 3 ல்  கண்டவாறு மனுதாரரிடம் இருந்து எந்த ஒரு கல்விக் கட்டணமும் பள்ளி நிர்வாகம் பெறவில்லை என்ற உறுதிமொழி சான்றும்  பள்ளி நிர்வாகம் பெற்றுள்ளது  முன்னுக்குப்பின் முரண்பாடாக உள்ளது .

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 இன் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கை செய்யப்படும் குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் பள்ளி நிர்வாகம் பெறக்கூடாது என பள்ளி முதல்வருக்கு திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்

பெறுநர் :
முதல்வர்
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
திருப்பூர்

நகல்
ஆ.பழனிக்குமார்
த/பெ.ஆண்டியப்பன்
5/419 வேலன் நகர்
வெங்கமேடு
அங்கேரிபாளையம்
திருப்பூர் -641 603

No comments:

Post a Comment