Friday 5 April 2019

RTE நீதிமன்ற உத்தரவு !

RTE இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில முடியுமா?
LAACO/05.04.2019

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 இன் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில்  எல் கே ஜி வகுப்பு   அல்லது முதல் வகுப்பில் இருந்து தொடங்கும் பள்ளிகளில் முதல் வகுப்பிற்கு மட்டுமே  மாணவர்கள் சேர்க்கை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது!

பெரும்பாலான தனியார் பள்ளிகள் எல் கே ஜி வகுப்பிலிருந்து தான் தொடங்கப்பட்டுள்ளன.

இது அரசியலமைப்பு சாசனத்திற்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கும் முரண்பாடாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் வகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு புகார் அனுப்பி அதன் பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி அவர்கள் முதல் வகுப்பில்  குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள் .

அந்த உத்தரவு அப்படியே கீழே பதிவு செய்துள்ளோம்.

பெற்றோர்களே !
உங்கள் குழந்தைகளையும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகளில்  மேற்காண் உத்தரவினை சுட்டிக்காட்டி அனுமதி கேளுங்கள் .

அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டால் உங்கள் மாவட்ட  சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு உங்களது புகாரினை பதிவு அஞ்சலில் அனுப்பியோ அல்லது நேரில் கொடுத்து நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

சட்டப்பணிகள் ஆணைக்குழு என்பது அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் அமைந்திருக்கும் .

மாவட்ட முதன்மை நீதிபதி இதன் தலைவர் ஆவார்.

இங்கு புகார் அளிப்பதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது.
வழக்கறிஞர் தேவையில்லை !

தீர்ப்பு உங்கள் பார்வைக்கு ;

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
திருவண்ணாமலை

முன்னிலை _திரு.G.மகிழேந்தி பி.ஏ.பி.எல்
தலைவர்/ முதன்மை மாவடட நீதிபதி
மாவட்டசட்டப்பணிகள்
ஆணைக்குழு
திருவண்ணாமலை
அவர்களின் செயல் முறை நடவடிக்கை பி -370

உத்தரவு :

நாள் :08 06 2018

ஆரணி வட்டம் ஆகாரம் விண்ணமங்கலம் A I M பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 விதி (1) (C) இன் படி முதல் வகுப்பில் சேர
1. விசாலி 2 .சாய்தீப்  இரு குழந்தைகளுக்காக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே ஆரணி வட்டம் நெசல் விகாஸ் வித்யாலயா பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் சஜித்குமார் என்பவரும் விண்ணப்பித்துள்ளார்

அவ்வாறே போரூர் கஸ்தம்பாடி ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதல் வகுப்பிற்கு ஜி .ஷாம் குமார் என்பவரும் விண்ணப்பித்துள்ளார் .

ஆனால் திருவண்ணாமலை  IMS மெட்ரிகுலேஷன் பள்ளிகளின்  ஆய்வாளர் திரு ‌ப.ராஜேந்திரன் அவர்களிடம் விண்ணப்பித்தும் முதல் வகுப்பிற்கு சேர்க்க இயலாது என அறிவுறுத்தியதாக மனுதாரர்களின் விசாரணையில் தெரியவருகிறது

பின்னர் ஆய்வாளர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திருவண்ணாமலை அவர்களிடமிருந்து 14. 05 .2018 தேதியிட்ட பதில் பெறப்பட்டது

இந்த மனுவின் விசாரணையின் போது ஆய்வாளர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தனது விண்ணப்பத்தில் மனுதாரர் தெரிவிப்பதை போல திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான LKG வகுப்பில்   RTE Act 2009 பிரிவு 12 (1) (C) Section 1V ல் குறிப்பிட்டவாறு வழிவகை செய்யப்பட்டுள்ளதால்  முதல் வகுப்பில் எவ்வொரு பள்ளியும் இம்மாவட்டத்தில் நுழைவு நிலை வகுப்பாக (முதல் வகுப்பாக ) கொண்டிராத நிலையில் அதற்கான வழிவகை இச்சட்டப் பிரிவின் படி செய்யப்படவில்லை என்பதை பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .

ஆனால் Directorate of matriculation schools Right to   Education Application ,_2018 Application form for admission of children of weaker section of disadvantaged Groups  (LKG or 1st standard )   என்று தெளிவாக கண்டுள்ளது .

அவ்வாறே தமிழ்நாடு அரசும் வெளியிட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறையின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 இல் வகுக்கப்பட்ட விதிமுறைகளில் பக்கம் 2 விதி 2  21 சேர்க்கையில் சட்ட பிரிவு 3 (1) மற்றும் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் ஆகும். என்றே கண்டுள்ளது.

மேலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தை பள்ளியில் சேர்க்கப்படாமலோ அல்லது படிப்பு இடையில் நிறுத்தி இருந்தாலோ என்றே கண்டுள்ளது .

மேலும் கூடுதல் பிரிவு 5 (1 ) இல் கல்வி ஆணையில் இடையில் ஏதேனும் ஒரு காரணத்தினால் வேறு பள்ளியில் சேர விரும்பும் குழந்தைக்கும் என்றே கண்டுள்ளது .

அவற்றைக் கருத்தில் கொண்டு முதல் வகுப்பில் இலவச கட்டாயக் கல்வியான அருகாமையில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வி முடிக்கும் வரை சட்டப்படி ஏற்படுத்துவதாகும்.

மேற்கண்ட சட்டமானது குழந்தைகளின் கல்வி அந்தந்த பொருளாதார சமூக சூழ்நிலையாலும் தடைபடக் கூடாது என்பதே ஆகும் .

எனவே அதனை கருத்தில் கொண்டு பிரிவு 13 (2) இன்  படி கூறப்பட்ட விபரத்தை உணர்ந்து தாமதமின்றி இந்த கல்வி ஆண்டில் மனுதாரர்களான குழந்தைகளை தொடர்புடைய பள்ளிகளில் அந்தந்த வகுப்பில் அரசால் அனுமதிக்கப்பட்ட வகுப்பில் சேர்த்து மேற்சொன்னபடி அந்தந்த கல்வி நிறுவனங்கள் இலவச கட்டாயக் கல்வியை அளித்திட வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்துகிறது .

தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
திருவண்ணாமலை

பெறுதல் :

1.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை

2 மாவட்ட கல்வி அதிகாரி
மாவட்ட கல்வி அலுவலகம்
பி‌ஆர்.சி வளாகம் போரூர்

3 மாவட்ட கல்வி அதிகாரி
மாவட்ட கல்வி அலுவலகம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்
ஆரணி

நகல் :

1.இலட்சுமணன்
த/பெ ஏழுமலை
1156 இ .ராட்டினமங்கலம் கூட்ரோடு சேவூர் கிராமம்
ஆரணி வட்டம்

2 செல்வி விசாலி
த/பெ. முருகன் 
1/176 மாரியம்மன் கோவில் தெரு மருசூர்
ஆரணி தாலுகா

3 செல்வன் சாய்தீப்
த/பெ ஆனந்தன்
1 /146 பஜனை கோயில் தெரு மருசூர்
ஆரணி தாலுகா

4.செல்வன் சஜித்குமார்
த/பெ கருணாகரன்
451 காந்திநகர் அரையாளம் ஆரணி தாலுக்கா

5 .செல்வன்  ஷாம்குமார்
த/பெ சண்முகம்
138 மேட்டுத்தெரு இலுப்பைக்குணம்
போரூர் தாலுக்கா

மேலும் இது குறித்து முழுமையான தகவல் பெறவும் நீதிமன்ற தீர்ப்பின் நகல்  பெறவும்  தொடர்பு கொள்ளவும் .

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர்- 641 652
தொடர்பு எண்: 98 655 90 723

தொடர்பு கொள்ளும் நேரம் :
தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை

குறிப்பு ; "தனியார் பள்ளி புகார்" whatsapp குரூப்பில் இணைய
98 655 90 723 என்ற எண்ணிற்கு உங்களது தொடர்பு எண் பெயர் முகவரி அனுப்பவும்.

No comments:

Post a Comment