Tuesday 2 April 2019

வீரத்துறவி விவேகானந்தரின் உறுதி மொழி

வீரத்துறவி மகான் சுவாமி விவேகானந்தர் அவர்களின் உறுதி மொழி .LAACO/2019

இளைய பாரதத்தின் அங்கமாகிய நான் பெண்மையின் லட்சியம் சீதை
சாவித்திரி
தமயந்தி
கண்ணகி
ஆண்டாள்
ஜான்சிராணி
மற்றும் இவர்களை போன்றோர் என்பதை மறக்க மாட்டேன்.

கடந்த காலத்தில் நம் நாடு எப்போதுமே கடைபிடித்து வந்திருக்கின்ற அதன் கொள்கையான
உண்மை
மனநிறைவு மற்றும்
தொண்டு போன்றவற்றை மறக்க மாட்டேன் .

எனது செல்வம்
எனது வாழ்க்கை
ஆகியவை
எனது சுக போகத்திற்காகவோ அல்லது
எனது சொந்த
விருப்பத்திற்காகவோ அல்ல என்பதை நான் அறிவேன் .

எனது நாட்டிற்காகவும் அதன் மக்களுக்காகவும் என்னை தியாகம் செய்யவே நான் பிறந்து உள்ளேன் என்பதை நான் அறிவேன்.

தாழ்ந்த ஜாதியினர்
விவசாயிகள்
அறிவிலிகள்
ஏழைகள்
படிக்காதவர்கள்
சக்கிலியர்கள்
தோட்டிகள்
எல்லோரும் என்னுடைய ரத்தம் .
எனது சகோதர சகோதரிகள் என்பதை நான் அறிவேன்.

நான் எப்போதும் மனதில் உறுதி உள்ளவனாகவும் துணிவுள்ளவனாகவும்  அச்சம் அற்றவனாகவும் இருப்பேன்.

நான் இந்தியன் என்பதில் எப்போதும் பெருமிதம் கொள்வேன் .

"நான் இந்தியன் ஒவ்வொரு இந்தியனும் எனது சகோதரன் "என்று பெருமிதத்துடன் பறை சாற்றுவேன்.

இனி நான் கூறுவேன் அறியாமையில் உள்ள இந்தியன் ஏழை மற்றும் ஆதரவற்ற இந்தியன் படித்த இந்தியன்
தலித் இந்தியன் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்.

இனி நான்  உரத்த குரலில் பிரகடனம் செய்வேன்.

இந்தியன் எனது சகோதரன் இந்தியன் எனது வாழ்க்கை இந்திய சமுதாயம் எனது குழந்தைப் பருவத்தின் தொட்டில் எனது வாலிப பருவத்தில் இன்ப தோட்டம்
புனிதமான சொர்க்கம் .
எனது முதிய பருவத்தின் அமைதிப் பூங்கா
நான் கூறுவேன்
இந்திய மண் தான் எனது உயர்ந்த சொர்க்கம்
இந்தியாவின் நலன் தான் என்னுடைய நலன்
இரவும் பகலும் திரும்பத் திரும்ப இதை கூறுவேன் பிரார்த்தனை செய்வேன்.

இறைவா !வலிமையைத் தரும் இறைவா !
எனக்கு பயமின்மையை கொடு .
சக்தியை கொடு
எனது பலவீனத்தை எடுத்து விடு
என்னை தூய்மை உள்ளவனாக்கு ஒவ்வொருவரையும் அவரவர் இடத்தில் முழுநிறைவு உள்ளவராக்கு.

இன்று பல தடைகளுக்கும் இடையில் இளைஞர்களுக்கு எதிரே உள்ள கடுஞ்சுமை என்னவென்றால் இந்தியா பெற்றுள்ள விழிப்புணர்வை வேகப்படுத்த வேண்டும் .

எனவே இங்கு நான் உறுதிமொழி ஏற்கிறேன் .
இந்நாட்டில் எல்லாவிதமான சுரண்டல்
அநீதி
கண்மூடித்தனமான பணபலம் மற்றும் அதிகார பலம் ஆகியவற்றால் எங்கெல்லாம் மனித மதிப்பு மற்றும் மக்களின் உரிமை மீறப்படுகிறதோ
ஏழைகள்
அறியாமையில் உள்ளவர்கள் ஊனமுற்றவர்கள்
பாமர விவசாயிகள் மற்றும் மலைஜாதி மக்கள் ஆகியவர்களுக்கு எதிராக எங்கெல்லாம் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறதோ அவைகளை
தனியாகவோ அல்லது குழுவாகவோ
எழுத்து மூலமாகவோ அல்லது பேச்சு மூலமாகவோ
நியாயமான வழிமுறைகள் மூலம் எனது எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடு முழுமையான வளர்ச்சியைப் பெற உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
இதுவே எனது  உறுதி மொழி .

இறைவா ! எனது தாய் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் நான் செய்துள்ள உறுதிமொழிப்படி வாழ எனக்கு எல்லையில்லாத வலிமையைத் தா  .

பலர் நன்மைக்காகவும் பலரின் இன்பத்திற்காகவும் எனக்குள் இருக்கும் எல்லையில்லா ஆன்மீக சக்தி பொங்கி எழட்டும் .

வீரத்துறவி மகான் சுவாமி விவேகானந்தர் அவர்களின் இந்த உறுதி மொழி இந்திய மக்கள் மீதும் இந்திய தேசத்தின் மீதும் அளவற்ற பற்று கொண்டிருப்பதினை காண முடிகிறது‌.

இநத உறுதி மொழியினை இந்திய மக்கள் ஒவ்வொருவரும்  உள்ளன்போடு உறுதிமொழி ஏற்று அதன் படி வாழ்ந்தால்  இந்திய தேசம் விரைவில் வல்லரசாகும் என்பது உறுதி.

இந்த உறுதி மொழியினை ஏற்று இந்திய தேசத்திற்காகவும்  இந்திய மக்களுக்காகவும்  "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " அயராது பாடு பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நாஞ்சில் கோ கிருஷ்ணன் நிறுவனர்
உலாப்பேசி ;98 655 90 723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாப்பேசி :98 655 43303

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 ,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் ; nanjillaacot@gmail.com
02.04.2019

No comments:

Post a Comment