Monday 22 April 2019

நீதியைத்தேடி......... நூல்கள்.

நீதியைத்தேடி..........!!

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!

முத்தான ஐந்து
பொதுவுடமை நூல்கள்!!

நாட்டில் அமலில் உள்ள அடிப்படை சட்டங்களில் உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் விடை காணும் நூல்கள்!!

1."குற்ற விசாரணைகள்"

சட்ட ஆராய்ச்சியாளர் ஆசிரியர் திருமிகு .வாரண்ட் பாலா அவர்களின் கைவண்ணத்தில் .....
சட்ட விழிப்பறிவுணர்வினை தட்டி எழுப்பும் முத்தான 85 தலைப்பு களில்  240 பக்கங்கள் ....
வாசிக்க வாசிக்க திகட்டாத எளிய உரை நடை தமிழில் .....
அக்டோபர் 2006  அன்று  முதல் "குற்ற விசாரணைகள்"  என்ற நூலினை மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதி உதவியுடன் ஓசூர் கேர்சொசைட்டி  மூலம் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள சுமார் 3825 பொது நூலகங்களிலும் இந்நூல் கிடைக்கும் .

     "குற்ற விசாரணைகள்"
     ************************
1. நீதிமன்றத்தில் புதையல் !

2 நீதித் துறையில் உள்ள சிறப்பு அம்சம்!

3. உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி ?

4 நீங்களும் வக்கீல் தான்!

5 உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா?

6.உங்க பிரச்சனை யாருக்கு தெரியும் ?

7.தொழில் தர்மம்" னா "என்ன ?

8.நீங்க வாதாடுவதற்கும் வக்கீல் வாதாடுவதற்கும் உள்ள
வித்தியாசம்!

9 நீதிமன்றத்துக்கு அலைவது சாத்தியமா ?

10.உங்களுக்கு சட்டம் தெரியனுமா?

11 சட்டம் தெரிந்து கொள்வது சாத்தியமா ?

12.சட்டம் கட்டாயம்  தெரிஞ்சுக்கணும் !

13 .நாமல்லாம் நிரபராதிகளே ?

14. உங்களுக்கு தேவையான சட்டங்கள்!

15. சட்டங்கள் தமிழில் கிடைக்கின்றன!

16 நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் எதற்கு?

17 சட்டத்தமிழை  எப்படி புரிந்து கொள்வது ?

18 பொருளடக்கம் மிக முக்கியம்.

19 சேவைக் குறைபாடு நிச்சயம் தான் .

20 எழுத்துப்பிழை  என்ன செய்யும் ?

21 நீதிமன்றம் செல்ல ஆங்கில அறிவு தேவையா?

22 நீதிமன்றம் எப்படி இருக்கும் ?
எப்படி இருக்க வேண்டும் ?

23 .நீதிமன்ற இடத்தை மாற்று !

24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும் .

25 நீதிமன்றங்கள் இரண்டு வகை.

26 நீதிமன்ற பொது அதிகார விளக்கம்.

27 நடுவர் மற்றும் நீதிபதிகளின் அதிகார விளக்கம் .

28 விசாரணை நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும்.

29 .அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு?

30 குற்றம் எப்போது உருவாகிறது ?

31. குற்றம்னா  குற்ற வழக்குன்னா என்ன?

32 சட்டத்துக்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் !

33.காவல்துறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .

34 காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள் .

35 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி ?

36 காவல்துறை கண்காணிப்பாளரிடம் பதிவு செய்வது எப்படி ?

37.காவல் நிலையம் செல்லாமல் காவல் துறையில் புகாரை
பதிவு செய்யலாம் !

38.உளவு பிரிவுக்கு தகவல் சொல்லுதல்.

39 காவல்துறையில் விசாரணை எப்படி ?

40 நீதிமன்றத்திலும் புகார் தாக்கல் செய்யலாம் !

41 முறையீடு தாக்கல் செய்வது எப்படி ?

42 பரிசீலனையாக தாக்கல் செய்தல் .

43 தகவலாக தாக்கல் செய்தல்.

44 குற்றத்தை விசாரிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்தல்.

45 தனிப்புகார் என்ற வகையில் தாக்கல் செய்தல்.

46. புகாரை தட்டிக் கழிக்காமல் தடுப்பது எப்படி?

47 சாட்சிகள் கட்டாயம் தேவையா

48 பிரம்மாண வாக்குமூலத்தில் மூலம் சாதிக்கலாம் !

49 புலனாய்வு அவசியமா?

50.நீங்க காவல் நிலையத்துக்கு அவசியம் போகணுமா ?

51.அதிர்ச்சி வைத்தியம் அப்படின்னா என்ன ?

52.நடுவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது எப்படி ?

53. நியாயம் வேண்டுமா ?சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்க!

54. தற்காப்பு நடவடிக்கை சட்டப்படி சரியே !

55 குற்றச்சாட்டில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி ?

56.காவல்துறை விசாரணையை சந்திப்பது எப்படி ?

57.விசாரணையா ? கைதா ?
எப்படி தெரிந்து கொள்வது ?

58 விசாரணையில் ஆஜராக செலவு தொகை கேட்கலாம் .

59.ஜாமீனில்  வருவது எப்படி?

60.24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

61. புலனாய்வு முடித்து சமர்ப்பிக்கப்படும் இறுதி அறிக்கை!

62. காவல்துறை நீதித்துறை பரிசீலனையை விசாரணையை சந்திப்பது எப்படி ?

63. பரிசீலனை மற்றும் விசாரணை இடையேயான வித்தியாசம் !

64. நடுவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் தரலாம் .

65.ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு சிறந்த வழி என்ன?

66. காவல் துறையின் டைரி!

67.நீதிமன்ற டைரி பார்ப்பது எப்படி?

68. நீதிமன்ற விசாரணையை சந்திப்பது எப்படி ?

69. குற்றச்சாற்று எப்படி
இருக்கணும் ?

70. கு.வி.மு.வி  இன் சில முக்கிய தகவல்கள் !

71.அறிவிப்புகள் /மனு மாதிரிகள்

72..அறிவிப்பு மாதிரி -1

73. மாதிரி அறிவிப்பு -2

74. விளக்கம் கோரி அறிவிப்பு -1

75.விளக்கம் கோரும் அறிவிப்பு -2

76.நினைவூட்டில் /தற்காப்பு அறிவிப்பு-1

77.வாக்கு மூலம் பதிவு செய்வது-1

78. நகல் மனு மாதிரி-1

79. பொதுநல வழக்கு தாக்கல் மனு மாதிரி-1

80. சட்டப்பிரச்சினையை எழுப்பும் மனு மாதிரி -1

81.சாட்சியம் பதியக்கோரி மனுத்தாக்கல் மாதிரி -1

82.பரிசீலனையை தாக்கல் செய்யும் மனு மாதிரி -1

83. செலவுத்தொகை கோரும் மனு மாதிரி -1

84 மேலட்டை மற்றும்  தைக்கும் மாதிரி .

85 நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக்கழகம்.

இந்நூல் மற்றும் ஆசிரியர் வாரண்ட் பாலா அவர்களின் அனைத்து நூல்கள் தேவைப்படுவோர் கீழ் காணும் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு திரு.அய்யப்பன் அவர்களை தொடர்பு கொண்டு குறைந்த நன்கொடையில் பெற்றுக் கொள்ளலாம் .
தொடர்பு எண்;098429 09190

சட்ட விழிப்புணர்வு பணியில்.....
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி 98 655 90 723
மின்னஞ்சல்; nanjillaacot@gmail.com
24.04.2019

Friday 12 April 2019

RTE இலவச கல்விக்கு விண்ணப்பிக்க அழைக்கிறோம் !!

#முக்கிய #செய்தி!

#கல்வி #அவசரம்
LAACO /2019

#தனியார் #பள்ளிகளில் #கல்விக்கட்டணம்
#செலுத்தாமல #இலவசமாக
#கல்வி #பயில்வது #எப்படி ?

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் -2009  என்றால் என்ன?

RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT --2009

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்  இல்லாமல் நமது குழந்தைகளை  இலவசமாக படிக்க வைக்க முடியுமா?

முடியும்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்

பள்ளிக்கல்வி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டLA் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1)  (C)  மற்றும் பிரிவு  13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும்  இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்  அதற்கு வழி வகை செய்கிறது
LAACO /2018

இந்த சட்டம்  ஆறு வயது முதல்  பதினான்கு  வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் (சர்வ சிக்ஷா அபியான் SSA )
கொண்டு வரப்பட்டது

இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்?

★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★தாழ்த்தப்பட்டவர்கள்,

★ மலை ஜாதியினர், 

★ பிற்படுத்தப் பட்டவர்கள்,

★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★ மூன்றாம் பாலினத்தவர்  (திருநங்கைகள்)

★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு  கீழ் உள்ள அனைத்து வகுப்பினர்கள்.

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் நலிவடைந்த பிரிவினர்கள் என  இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்

1. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்;
யார்? யார்?

அ) துப்புரவு பணியாளர்களின்
குழந்தைகள்
ஆ) எய்ட்ஸ் நோயாளிகள் குழந்தைகள்
இ) மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள்
ஈ) ஆதரவற்ற குழந்தைகள்
உ) திருநங்கைகள்

2.நலிவடைந்த பிரிவினர் யார்? யார்?

ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள்  இருக்கும் SC ,ST,BC,MBC,BCM,FC,OC அனைத்து வகுப்பினரின் குழந்தைகள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில்  இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் தனியார் பள்ளிகளில்  கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT -2009)  R T E. ன்  கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்.

மற்றும் முதல்  வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில்  சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு.

L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள்  8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்.

இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள  தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து  கல்வி பயிலலாம்.

இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது என தெரிவிக்கின்றனர்.

இது அரசியலமைப்பு சாசனத்திற்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கும் முரண்பாடாக உள்ளது

இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.

அனைத்து தனியார் பள்ளிகளும்  25 சதவீதம்  இடங்களை  கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தின் கீழ்  சேரும் குழந்தைகளுக்கு
கண்டிப்பாக  ஒதுக்கீடு செய்ய  வேண்டும்.

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம்  அதாவது 38 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.

சிறுபான்மை பள்ளிகள் இதனை எதிர்த்து நீதிமன்றம்  சென்று விதி விலக்கு பெற்றுள்ளனர்.

ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார்  பள்ளிகள் சிறுபான்மையினர்  பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் ஏழை எளிய குழந்தைகள் இலவச கல்வி பயில அனுமதி இல்லை.

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது.

தமிழ்நாடு RTE விதி -2011 பிரிவு 5 இன் படி இலவச கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சீருடை நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை.  கட்டணம் செலுத்துங்கள்  பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்.

அவ்வாறு நீங்கள் எந்த ஒரு  கட்டணமும்  செலுத்த தேவை இல்லை.

இலவச கல்வியில் பயிலும் மாணவர்களிடமிருந்து எந்த ஒரு கல்விக் கட்டணமும்  பெறவில்லை என பெற்றோரிடம் உறுதிமொழி கடிதத்தினை பள்ளி நிர்வாகிகள் வாங்குகின்றனர் .

ஆனால் கல்விக் கட்டணம் Tution Fees மட்டும் தான் அரசு வழங்கும் எனவும் கரிக்குலம் என்ற பெயரில் கராத்தே ,யோகா
வாழ்க வளமுடன் டேபிள் டென்னிஸ் ,பாண்டு , ஸ்மார்ட் கிளாஸ் , கணினி,ஸ்போக்கன் இங்கிலீஷ் ,ஹேண்ட் ரைட்டிங் ,டீச்சிங் எய்டு ,போன்ற
பல்வேறு விதமான கட்டணங்களையும் சீருடை  நோட்டு புத்தகங்கள் ,எழுது பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களுக்கான கட்டணங்களை தனியாக கட்டாயப்படுத்தி சட்ட விரோதமாக கேட்டு பெற்றுக் கொள்கின்றனர்.

உங்கள்  குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால்  உங்கள் மாவட்டத்தில் இருக்கும்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,   மெட்ரிக்பள்ளிகள்  இயக்குநர்,  இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.

சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில்  தகவல் பலகை வைக்க வேண்டும்.

★எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி  கனவினையும் நிறைவேற்றுங்கள்.

★கல்வி உங்கள் மிக அருகாமையில்!

★பெயர் தான் இலவசக்கல்வி !

★இது கேவலம் அல்ல!

★மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

★கவலை வேண்டாம்!

★இது கனவல்ல!  நிஜம் !

★ எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

2019 -2020 கல்வி ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை 2019 ஏப்ரல் மாதம் 22 ம் தேதி முதல் 2019  மே மாதம் 18 ஆம்  தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.

★ விண்ணப்பம் செய்வது எப்படி?

★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே  விண்ணப்பிக்கலாம்
அல்லது

1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்.

3.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

4.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

6..அனைத்து தனியார் பள்ளிகள்

உங்கள் வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் சுமார் 5 தனியார் பள்ளிகளில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்

ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு  மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் .

விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்

1. பிறப்பு சான்று
2..குழந்தையின்   புகைப்படம்
3.ஜாதி சான்று
4.வருமான சான்று
5.இருப்பிட சான்று
6.முகவரி ஆதாரம்
7.தாய் தந்தை ஆதார் அடையாள அட்டை

இந்த ஆவணங்களை பெறுவது எப்படி ?

★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று  இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில்  ஒவ்வொரு சான்றுக்கும் ₹ 60 ரூபாய் கட்டணம் செலுத்தி  வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.

★இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

★தனியார்  பள்ளிகளில்  L.K.G வகுப்பிற்கான  சேர்க்கை 02.04.2019 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள்.
இது சட்ட விரோதமான செயலாகும்.

★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2019 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள்  குறிப்பிட்டு 12..04.2018 அன்று* *பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்.

★ *22.04.2019 முதல் 18.05.2019: வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*

தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்கள்  பின்னர் தெரிவிக்கப்படும்

கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள்  கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

★ இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!

இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமை யாக செயல் படுத்தப்பட்டது..

★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.

இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு  அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்.

★ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.

★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.

★2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

★2017-2018 ஆம் கல்வி ஆண்டில்
2,36000.இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம்  காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40 000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.

★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.

2018- 2019 ஆம் கல்வியாண்டில் 90607 இடங்கள் நிரம்பியது .

1.இதில் வாய்ப்பு மறுக்கப்பட்ட  பிரிவினர்களின் குழந்தைகள்;18275

2.எய்ட்ஸ் நோயாளிகள்
குழந்தைகள் ;07

3..துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்: 118:

4. ஆதரவற்றோர் ;39

5. அதிக கவனம்  தேவைப்படும் குழந்தைகள்:263;

6.நலிவடைந்த பிரிவினர்: 71905

2019 -2020  ஆம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் இலவச சேரக்கை  நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.

★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் . 

★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.

★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.

★ தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை .

மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

ஆனால் தற்போது மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள்  நீக்கப்பட்டு மெட்ரிக்  பள்ளிகள்  ஆய்வாளர் அலுவலகங்கள் அனைத்தும் இழுத்து மூடி விட்டனர்.

தற்போது மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும்  மாவட்ட கல்வி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது .

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தமிழக ஆட்சியாளர்களினாலும்  கடமை தவறிய கல்வி அதிகாரிகளினாலும் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் என்பதினை   மானிய மற்றும் கட்டாய கட்டண கொள்ளை கல்வி உரிமைச் சட்டம் என பெயரினை மாற்றுவதே நல்லது.

கல்வி உரிமையை போராடி பெறும் நிலையில் தமிழக ஏழை எளிய மக்கள்!

பெற்றோர்களே!
நண்பர்களே !
சமூக ஆர்வலர்களே!
சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ
கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ கல்வி அதிகாரிகளினாலோ  நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும்  இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்  தனியார்  பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும்  .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்*  *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால்*
எங்களது
" தனியார் பள்ளி புகார் 98655 90723 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு
உங்களது பெயர் ஊர் குறிப்பிட்டு புகார் அனுப்புங்கள்*

மாறுங்கள்! மாற்றுங்கள்!!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு! 
நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?
அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள்  நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.

கவலை வேண்டாம்!!
உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்.

அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு.

கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வு பணியில்
வாழ்த்துக்களுடன்..........

" சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
*LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION*
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் : nanjillaacot@gmail.com

#முக்கிய #அறிவிப்பு

நிர்வாகிகளின் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் நேரம் அறிவித்துள்ளோம்.

இந்த நேரங்களில் மட்டும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேண்டுகிறோம்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்,
உலாபேசி :98655 90723
தொடர்பு நேரம் : தினமும்  இரவு 9.30 முதல் 10.30 வரையிலும்

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு நேரம் : தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையிலும்

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி :97910 50513
தொடர்பு நேரம் : நாள் முழுவதும்

தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே எங்களின் இலட்சியம்.

எங்களின் இலட்சியம் நிறைவேறிட
நண்பர்களே  படித்து விட்டு உடனடியாக மற்றவர்களுக்கு பகிருங்கள் உங்களால் ஒரு ஏழை குழந்தையாவது பயனடையட்டும்.
நன்றி 🙏
பதிவு நாள் :12.04.2019