Friday 30 August 2019

கழிவுநீர் கால்வாய் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் புகார்

தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்  பொதுநல புகார் மனு,

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாப்பேசி :98655 90723

எதிர்மனுதாரர் :
திரு. வாசுக்குமார் அவர்கள்
உதவி ஆணையர்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் - 641 652

பெறுநர் :
முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
குமார் நகர், திருப்பூர்.

அய்யா, 
கடிதம் எண் : LAACO/  CM/CL /008/TPR/2019 ;நாள் :30.08.2019

பொருள் :பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி 4 வேலம்பாளையம் பிரதான சாலை மணீஸ் தியேட்டர் முதல் அனுப்பர்பாளையம் புதூர் வரையில் கழிவு நீர் கால்வாய் கட்டக்கோரி பொதுநல புகார் மனு,

மக்களின் அடிப்படை பொது தேவைகளை நிறைவேற்று
வதற்காக  அரசாணை
களையும் பல்வேறு விதமான அரசு துறைகளையும்  அரசு  ஏற்படுத்தி உள்ளது.

அதனை நிறைவேற்ற அந்தந்த துறைகளுக்கு என அரசு  சார்பாக பலதரப்பட்ட ஊழியர்களையும் நியமித்துள்ளது.

பொது மக்களிடம்  இருந்து பல்வேறு விதங்களில் வசூலிக்கப்படும் வரி இனங்கள் மூலம் பெறப்படும் வருவாயில் இருந்து மக்கள் பணி செய்ய நியமிக்கப்பட்ட மக்களின் சேவகர்களான அரசூழியர்களுக்கு மாத
ஊதியம்,சொகுசு வாகனங்கள், பல்வேறு விதமான சலுகைகள், பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதியம் என வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் உரிமைகளான அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள், அரசு நல திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றை அரசுத்துறை
களிடம் கோரும் மக்களுக்கு மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் செய்து கொடுக்கும் கடமை அரசூழியர்களுக்கு உண்டு.

ஆனால் கடமை தவறிய அரசூழியர்கள் இதனை செய்வது இல்லை.

மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் வாராவாரம் நடை பெற்று வருகிறது. .

முதலமைச்சர் தனிப்பிரிவும் செயல் பட்டு வருகிறது.

இது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானதாகும்.

இந்த குறைதீர்க்கும் முகாம்களினால் எந்த பயனும் இல்லை.

எந்த குறைகளும் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை.

அரசாணைகளின் படி பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படுவது இல்லை.

நீதிமன்றம் சென்றாலும் நீதி கிடைப்பதில்லை.

அப்படியானால் மக்கள் பணிகளை செய்வது யார்?

உள்ளாட்சி தேர்தல் நடை பெற இருக்கும் நிலையில் தாங்கள் இப்போது முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட  முகாம் என்ற பெயரில் நாடு முழுவதும் முகாம்களை அமைத்துள்ளீர்கள்.

பாதிக்கப்பட்ட பொது மக்களும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ் பழனிச்சாமி அவர்களிடம் நாம் கொடுத்த அவசர பொதுநல புகார் மனு சுமார் 327  நாட்களுக்கு பிறகு குப்பைக்கு சென்றது ஒரே ஒரு உதாரணம்.

நாமு‌ம்  எதிர்மனுதாரர் திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணைய‌ர் வாசுக்குமார் என்பவரிடம் கழிவு நீர் கால்வாய் சம்பந்தமாக 30.11.2017 அன்று பொது நல மனு அளித்தோம்.

அதுவும் குப்பைக்கு போய் விட்டது.

இந்த கடமை தவறிய அரசூழியர்களுக்கு மக்கள் வரிபணத்தில் இருந்து ஊதியம் வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய முதலமை‌ச்ச‌ர் ஆகிய தாங்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனினும் கீழ் காணும் கோரிக்கை மனுவினை தங்களின் நேரடி  சிறப்பு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், மாநகராட்சி முதல் மண்டல அலுவலக 5 ஆவது வார்டுக்கு  உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டி 1998 ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை வைத்து வருகிறேன் .

மாநகராட்சி 1, 5, 14, 15. வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.

4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது  வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கழிவு நீர் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்

மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.

இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள
முதல் வார்டுக்கு  மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.

கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.

இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக  28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன்.

ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை

437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.

மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும்  வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால்  சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.

தரமற்ற முறையில் கட்டிய கழிவு நீர் கால்வாய் ஆங்காங்கே உடைந்து விட்டது.

மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!

நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்
சாலையினர் சிறிய அளவிலான குழாய்களை பதித்து மண்ணால் மூடியும்  தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.

மழை காலங்களில்  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.

சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தியதுடன் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொண்டு இருப்பது மிகுந்த வேதனையையும் சொல்லொணா துயரத்தையும்  அளிக்கிறது.

சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே!  என வெற்று விளம்பர படுத்தும்
திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி என தாங்கள் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்திருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது.

₹86.25 இலட்சம் செலவு செய்து தரமற்ற முறையில் கட்டப்பட்ட பிரதான கழிவு நீர் கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.

கோரிக்கை : 01
எதிர்மனுதாரரிடம் 30.11.2017 அன்று கொடுக்கப்பட்ட மேற்காண் மனு மீது இன்றைய தினம் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். .

கோரிக்கை :02
மழை காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும்.
அப்போது பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் படும் துயரத்தினை தாங்கள் ஒரு முறை வந்து நேரில் பார்வை இட்டு இந்த சாலையை கடந்து செல்ல வேண்டுகிறோம்.

கோரிக்கை :03
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்

கோரிக்கை :04
437 மீட்டர்  கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் உடைந்த  கழிவு நீர் கால்வாய் மேற் பகுதியை உடனடியாக பழுது நீக்க வேண்டுகிறோம் .

கோரிக்கை :05
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.

கோரிக்கை ;06
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவு நீர்கால்வாய் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

பல முறை புகார் செய்தும் கடமை தவறிய மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை!

லஞ்சம் பெறுவதினையும் ஊழல் செய்வதினையும் தான் கடமை என நினைக்கின்றனர் போலும் .

கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!

நாமு‌ம் நமது கடமையாகவும் உரிமையாகவும் கொண்டு தங்களின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

நாள் :30.08.2019
இடம் : திருப்பூர் 

மனுதாரர்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

No comments:

Post a Comment