Friday 30 August 2019

நோட்டரி வக்கீல்களை நோண்டி நொங்கு எடுப்பது எப்படி?

📢 #நோட்டரி #வக்கீல்களை #நோண்டி #நொங்கு #எடுப்பது #எப்படி?
LAACO /2019
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
ரயில் அல்லது பேருந்து நிலையத்தில் "வட" "வட" என பரபரப்பாக வடையை விற்பது போல நீதிமன்ற வளாகத்தில் "நோட்ரீ." ... "நோட்ரீ" . என பொய்யர்கள் தங்களின் கையெழுத்தை விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
கையெழுத்து தலையெழுத்தை மாற்றும் என்ற ஜோதிடம் யாருக்கு பலிக்கிறதோ இல்லையோ நோட்டரி வக்கீல்களுக்கு நிச்சயம் பலித்து  கொண்டு தான் இருக்கிறது

இதில் இப்போது நவீன யுக்தியாக இந்திய அரசு என்ற கூடுதல் விளம்பரம் வேறு.
நோட்டரி பொய்யர்களால் இந்திய அரசானது எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து இருக்கிறது என்பதை கூவிக்கூவி சொல்கிறார்கள் போலும்.

மத்திய அரசில் நிரந்தரமாக பணியாற்றும்  ஊழியர்களே பிரதிநிதிகளாக இருக்கும் போது அரசுக்கும் இவர்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாத போது என்ன அருகதையில்  இந்திய அரசு என விளம்பரம் செய்து கொள்ள முடியும்?

உண்மையில் இவர்களை நோட்டரிகளாக அங்கீகரிப்பது அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் தானே? மேலும் இவர்களின் நேரடி தொடர்பும் நீதிமன்றங்களில் தானே?
அதனால் உயர்நீதிமன்றம் என போட்டுக்கொள்ளலாமே?
ஏன் போட்டுக்கொள்ளவில்லை? இனி போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

ஆனாலும் நாம் தானே உலகின் மிகச்சிறந்த பொய்யர்கள்? நம்மை யார் கேள்வி கேட்க முடியும்? என்ற தைரியத்தில் இப்படி எல்லாம் நம்மிடம் துணிந்து தவறு செய்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னோடியாக உள்ள நீதிபதிகளை மிஞ்ச  நினைத்தால் கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச பிழைப்பும் நாறிடுமே! என்ன செய்வது?

இப்போது தான் தட்டிக்கேட்க மட்டுமல்ல அவர்களை தவிடு பொடியாக்கவும் நாம் வந்து விட்டோமே? . 👍

நோட்டரி ஆவணம் முழுக்க முழுக்க அப்படியே செல்லும் என பலரும் நினைக்கின்றார்கள் இது உண்மை அல்ல.
அதில் உள்ள ஒவ்வொரு வாசகமும் முறையாக கேள்வி எழுப்பப்படும் போது மெய்பிக்கப்பட வேண்டியதே  .

மெய்பிக்க  வேண்டியதில்லை என்றோ அல்லது  சட்டப்படி அப்படியே செல்லும் என்றோ எந்த நோட்டரியோ சொன்னால் அவர் சொல்வதையே மேற்குறிப்பாக எழுதி விட்டு பின் சம்பந்தப்பட்ட உங்களின்  சங்கதிகளை எழுதச் சொல்லிப் பாருங்கள்.
ஆளை விட்டால் போதுமடா சாமி என கழன்று கொள்வார்கள்.

உங்களுக்கு எதிராக நோட்டரி ஆவணங்கள் எதுவும் சான்றாக தாக்கல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டால் அந்த ஆவணத்தை புனைந்தவர்களை (பொய்யாக உருவாக்கிய நபரையும் மூல காரணமாக இருந்த பொய்யரையும்) சாட்சியாக அழைத்து விசாரணை செய்யலாம்.

அந்த விசாரணையில்.....

உறுதிமொழி என்றால் என்னவென்று தெரியுமா?

எந்த இடத்தில் நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டீர்கள்?

அந்த உறுதிமொழி சான்றளித்துள்ள  பொய்யரை எப்படி தெரியும்?

இதற்கு முன்பாக அவரிடம் வேறு ஏதும் உறுதி மொழி எடுத்துக் கொண்டீர்களா?

உறுதி மொழி எடுத்து கொண்டதற்காக கட்டணம் எவ்வளவு செலுத்தினீர்கள்?

கட்டணம் செலுத்தியதற்கான ரசீது பெற்று கொண்டீர்களா?

உறுதிமொழி  ஆவணத்தில் சொல்லியுள்ள அடிப்படை ஆதாரம் என்னென்ன?
என்பன உட்பட பல கேள்விகளை எழுப்பி திக்குமுக்காட வைக்கலாம்.

இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இதே போல் சம்பந்தப்பட்ட நோட்டரிகளையும் சட்டவிரோதமாக ஆலோசனை சொன்னதை வெளிக்கொண்டு வருவதற்காக நீதிமன்றச் சாசன உறுபு 128 இன் கீழ் முக்கிய சாட்சியாக அழைத்து விசாரணை செய்யலாம்.

உறுதிமொழி ஆணையர் சட்டம் 1952 மற்றும் விதிகள் 1956 ஆகியவைகளில் இவர்களின் கடமைகள் கட்டணங்கள் ஆகியவை வரையறுக்கப் பட்டுள்ளன.

அதன் விரிவஞ்சி சொல்லாமல் விட்டு விடுகிறேன்.

நன்றி.
✍️ சட்ட ஆராய்ச்சியாளர்
ஆசிரியர் திரு வாரண்ட் பாலா அவர்களின் நீதியைத் தேடி நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்....
சாட்சியங்களை சேகரிப்பது எப்படி?
என்ற நூலில் வரிசை எண் :75 பக்கம் எண்: 251,252,253

நூல்களை பெற :
வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவலாக......

#நோட்டரி #கையொப்பம் #தேவைஇல்லை!!

சான்றுறுதி அலுவலர் என்று சொல்லப்படுகிற நோட்டரிகளிடம் அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய படுவது உள்ளிட்ட எந்த ஒரு ஆவணங்களிலும் பணம் கொடுத்து கையொப்பம் பெற தேவை இல்லை.
அவரவர் சுய ஒப்பம் இட்டால் போதுமானது.

#திருமணம் #செய்ய #தடை!!

நோட்டரி அலுவலகங்களில் பணம் வாங்கி கொண்டு இரகசிய திருமணங்களையும் முன்னின்று நடத்தி வைக்க நோட்டரிகளுக்கு அதிகாரம் இல்லை.

நாஞ்சில் கோ கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலாப்பேசி:98 655 90 723

No comments:

Post a Comment