Thursday 8 August 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0063

🏛 *திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அகிலம் போற்றும் மகத்தான சாதனை*!!
👍👍👍👍👍👍👍👍👍
📢 *ஊழல் ஒழிப்பு செய்தி: LAACO*:
*0063 /2019; நாள் : 08.08.2019*

*குற்றம்  நடந்து கொண்டிருப்பது என்ன* ?

உண்மை சம்பவம் .!

*திருப்பூர் மாவட்ட செயல் துறை நடுவராகிய மாவட்ட ஆட்சியர்  டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி அவர்களின் பார் போற்றும் சாதனை* !

*இந்திய ஆட்சி பணியில்  இவர் ஒரு ஆச்சரியக் குறியீடு*!

*இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தில் இப்படி ஒரு ஆட்சியரை காண்பது அரிதிலும் அரிது* !

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்   அலுவலகத்தில் கொடுத்த  நமது அவசர பொது நல புகார் மனு மீது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்களை தெரிவித்துள்
ளார்கள்.

நன்றி சொல்ல வார்த்தை இல்லையே ?

தலை வணங்குகிறோம்.🙏

*திருப்பூர் மாவட்டம் ,வடக்கு வட்டம் ,அங்கேரிபாளையம் சாலையில் செயல் பட்டு வரும் கொங்கு வேளாளர் அறக்கட்டளைக்கு சொந்தமான கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  மாநகராட்சி அனுமதி பெறாமல் மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளுக்கு எதிராக சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை இடிக்கக்கோரி குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு -144   இன் கீழ்  மாவட்ட செயல் துறை நடுவராக பொறுப்பு வகிக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  07.12.2017 அன்று  "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு"  சார்பாக பொது நல புகார் மனு நேரில் கொடுக்கப்பட்டது*

*நமது புகாரை கண்டவுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிர்ந்து போனார்களாம்*

*தனது ஆளுகைக்கு உட்பட்ட அதிகார வரம்பிற்குள் சட்ட விரோதமாக மாணாக்கர்  பாதுகாப்பு நலன்களுக்கு  எதிராக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத பள்ளி கட்டிடமா ? என்று கொதித்து  எழுந்தார்களாம்*.

உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களாம்.

*உடனடியாக  உட்கோட்ட நடுவராகிய திருப்பூர் கோட்டாட்சியர் அவர்கள் மூலம் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தினை ஆய்வு  செய்து விசாரணை  அறிக்கை வழங்கும்படி உத்தர விட்டார்களாம்*.

*மாவட்ட செயல் துறை நடுவர்  அவர்களின் உத்தரவினை ஏற்றுக்கொண்ட உட்கோட்ட நடுவர் அவர்கள் உடனடியாக சட்ட விரோதமாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து மாநகராட்சி அனுமதி பெறாமல் சட்ட விரோதமாகவும் பள்ளிக்கல்வி அரசாணைகளுக்கு  முரணாகவும், கட்டிட உறுதி தன்மை இல்லாமல் அவசர அவசரமாக கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் பள்ளி கட்டிடம் கட்டி வருவதாகவும் தீ விபத்து போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் விபத்தில் சிக்கும் மாணவர்களை காப்பாற்ற தீயணைப்பு  வாகனங்கள் பள்ளி கட்டிடத்தினை சுற்றி வர இயலாது என்றும், மாணாக்கர் பாதுகாப்பு நலனுக்கு எதிரான கட்டிடம் எனவும் இதனை இடிப்பதில் தவறேதும் இல்லை எனவும் மாவட்ட செயல் துறை நடுவர் அவர்களிடம் ஆய்வறிக்கையை வழங்கியுள்ளார்களாம்.*

சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்திற்கு  பொறுப்பு வகிக்கும் திருப்பூர் மாநகராட்சி  முதல் மண்டல அலுவலக பொறியாளர், உதவி ஆணையர், கட்டிடம் கட்ட தடையின்மை சான்று வழங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய அலுவலர், சுகாதார சான்று வழங்கிய சுகாதார ஆய்வாளர், ,சுகாதார துணை இயக்குநர், இருப்பிட (Accommodation ) சான்றிதழ் வழங்கிய திருப்பூர் வடக்கு வட்டாட்சியர், உள்ளூர் திட்டக்குழும அலுவலர், வட்டார கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர்  என அனைத்து துறை கடமை தவறிய அரசூழியர்கள் அனைவரையும்  நேரில் அழைத்து,
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில்  பிஞ்சு குழந்தைகள் கருகி மடிய காரணம் யார் ?

நீங்கள் அனைவரும் பொறுப்பற்ற முறையில் செயல்பட காரணம் என்ன?

தனியார் பள்ளி நிர்வாகமா உங்களுக்கு ஊதியம் தருகிறது?

உங்களை போன்ற கடமை தவறிய
ஊழியர்களால் தான் மாவட்ட நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

அனைவர் மீதும் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன் என்று ஆவேசமடைந்துள்ளார்.

*மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவால் ஒட்டு மொத்த அரசூழியர்களும் ஆடி போய் விட்டதாக செய்தி*

*குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 144 கீழ் தனது அதிகாரத்தை பயன் படுத்தி திருப்பூர் மாநகராட்சி அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்  முழுவதும் காவல் துறை, வருவாய்துறை கல்வித்துறையினருடன்  சென்று  முற்றிலும் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள்*

நீதி வென்றது .

*மாணாக்கர்கள் பாதுகாப்பு நலன்கள் முற்றிலும் பாதுகாக்கப்பட்டது*

ஒரே பரபரப்பு!
எங்கு பார்த்தாலும் மாவட்ட ஆட்சியரை மக்கள்  வாழ்த்தி பேசி கொண்டிருந்தனர்.

*எங்களது வாழ்நாளில் இப்படி ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியரை நாங்கள் கண்டது   இல்லை என மக்கள் பெருமிதம் கொண்டனர்*

திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டியவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் கிடக்கிறார்களாம்.

*இந்திய ஆட்சிப்பணியில் இவர் ஒரு கலங்கரை விளக்கம்*.

வாழ்த்துவோர் வாழ்த்தலாம் .......👍

அய்யகோ.......!!
எனதருமை மக்களே!

அவசரப்படாதீங்க  கொஞ்சம் நிற்க .......!!

இது நிஜம் அல்ல! 👎
மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் கற்பனை கலந்த  😁
எனது ஆழ்ந்த கனவு!
ஆம்.

புகார்  மனு கொடுத்து 327 தினங்கள் கடந்து  விட்டதே எந்த நடவடிக்கையும் இல்லையே என்ற கவலையில் அப்படியே தூங்கிப் போனேன். 

கனவு கலைந்து விருட்டென விழித்தெழுந்தேன்.

அய்யகோ!!
இறைவா!
எனது கனவு மட்டும் நிறை வேறி இருந்தால் எப்படி இருந்திருக்கும்..
மன்னிக்கவும். 🙏

லஞ்சம் வாங்கும் கடமை தவறிய அரசூழியர்கள் இருக்கும் வரையில் நமது கனவு பலிக்கப் போவதில்லை.

உண்மை
சம்பவம்........
கீழே தெரிவிக்கப் பட்டுள்ளது 👇

*குற்றம் நடந்தது என்ன*?

*மேற்காண் நமது புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் பள்ளி கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு தற்பொழுது சுமார் 1800 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்*

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு முழுமையான அளவு உயிர் பாதுகாப்பில்லை.

*எனவே "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு ":சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு பதிவு செய்யப்பட்டது*
*WRIT PETTION NO : 26830/2018*
*நாள் :24.10.2018*

இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து  நமது புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை  26.10.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தள முகவரி தொடர்பினை குறுஞ்செய்தி வழியாக அனுப்பி இருந்தார்கள்.

இதனை கண்ட  நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தினையும் அளித்துள்ளது

*மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற விபரங்களை*..........

*இதோ உங்கள் பார்வைக்கு*
😡😡😡😡😡😡😡😡😡
1. 07.12.2017 அன்று  நமது புகார் மனுவினை 11.51.51.மணிக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி சிறப்பு துணைஆட்சியர்
GDP மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

2.20.01.2018 அன்று 11.07.31 மணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாற்றம்.
இம்மனு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை சார்ந்தது மாற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர்(பொது)  மீண்டும் சிறப்பு துணை ஆட்சியர் GDP அவர்களுக்கு அனுப்பி உள்ளார்.

44 நாட்கள் நமது புகார் மனு மீது கடுமையான முறையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு நமது புகார் மனுவினை மாற்றம் செய்யலாம் என ஒரு வழியாக சிறப்பு துணை ஆட்சியர் GDPஅவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

3.23.01.2018 அன்று 16.51.04 மணிக்கு
மூன்று தினங்களில் சிறப்பு துணை ஆட்சியர் அவர்கள் நடவடிக்கைக்காக திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பி உள்ளார்.

4.25.01.2018 அன்று 15.51.02 மணிக்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டது என முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் சிறப்பு துணை ஆட்சியர் GDP அவர்களுக்கு மீண்டும் நமது புகார் மனு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  
5.08.02 2018 அன்று 17.32.21 மணிக்கு
நடவடிக்கைக்காக சிறப்பு துணை ஆட்சியர் GDP அவர்கள் சுமார் 14 நாட்கள் மீண்டும் சுயமாக சிந்தித்து முழமையாக ஆய்வு மேற்கொண்டு   திருப்பூர் மெட்ரிக்குலேசனுடைய  மேற்பார்வையாளருக்கு அனுப்பி உள்ளார்.

6.11.09.2018 அன்று 17.35.16 மணிக்கு
இம்மனு இந்த அலுவலகம் தொடர்பு  இல்லாததால் மெட்ரிக்குலேசன் மேற்பார்வையாளர் அவர்கள்  ஏழு மாதங்கள் சுமார் 210 நாட்கள் இரவு பகல் பாராது தொடர் ஆய்வுக்கு பின்னர் மனுவின் உண்மை நிலையை மிகவும் சிரமப்பட்டு கண்டறிந்து  திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு  அனுப்பி உள்ளார்.

7.ஆனால்  11.09.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலருக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி மேற்பார்வையாளரால் அனுப்பப்பட்ட மனு 16.10.2018 அன்று 13.13.47 மணிக்கு சிறப்பு துணை ஆட்சியர் GDP அவர்கள் சுமார் 34 தினங்களுக்கு பிறகு மீண்டும்  முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி உள்ளார்.

முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட நமது புகார் மனு சிறப்பு துணை ஆட்சியருக்கு எப்படி போனது என்பது ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

மீண்டும் சிறப்பு துணை ஆட்சியர் 34 தினங்கள் இடை விடாது முழுமையான அளவில் கவனம் செலுத்தி நமது புகார் மனுவினை
மீண்டும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பி அவரது கடமையினை திறம்பட ஆற்றி உள்ளார்கள்.

8.26.10.2018 அன்று 12.13.47 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் சுமார் பத்து தினங்கள் மனுவினை இரவு பகல் பாராது ஆய்வு செய்து ஏற்பு இணைய வழி தகவல் மட்டுமே. அலுவலகத்தில் பெறப்பட்டது. மனு ஈரோடு மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் குறித்து என்பதால் உரிய நடவடிக்கையின் பொருட்டு ஈரோடு மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டது என சிறப்பு துணை ஆட்சியர் GDP அவர்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளது.

9.26.10.2018 அன்று 13.00.9 மணிக்கு சிறப்பு துணை ஆட்சியர் அவர்கள் GDP ஈரோடு மெட்ரிக்பள்ளி ஆய்வாளருக்கு மனு அனுப்பப்பட்ட. விபரத்தினை நமக்கு தெரிவித்துள்ளார்கள்.

அப்பப்பா !
படிக்கவே தலையை சுற்றுகிறதே.!
எத்தனை எத்தனை அலைச்சல் !
சபாஷ் !

வழக்கு பதிவு செய்த பின்னர் குப்பையில் போடப்பட்ட நமது புகார் மனுவிற்கு அவசர அவசரமாக கதை திரைக்கதை வசனம் எழுதி இழுத்து மூடப்பட்ட ஈரோடு மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டதாக  நமது புகார் மனுவினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

நமது அவசர பொதுநல புகார் மனு மீது 11 மாதங்கள் சுமார் 327 நாட்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படும் அரசு ஊழியர்களான சிறப்பு துணை ஆட்சியர்,ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மெட்ரிகுலேஷன் பள்ளி மேற்பார்வையாளர் முதன்மைக்கல்வி அலுவலர்
ஆகியவர்கள் மாறி மாறி மிகவும் கவனமுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ள அரசூழியர் ஈரோடு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தான் என்பதினை கண்டறிந்து அனுப்பியுள்ளது  மெய் சிலிர்க்க வைத்துள்ளது .
அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகின்றோம்.

*சுமார் 327 தினங்கள் நமது புகார் மனுவினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  செயல் படும் அலுவலகங்களில் தோளில் தூக்கிக் சுமந்து கடைசியில் அரசால் இழுத்து மூடப்பட்டு பல மாதங்கள் ஆகி செயல் பாட்டில் இல்லாத ஈரோடு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்திற்கு நமது புகார் மனு அனுப்பப்பட்டது இந்திய வரலாற்று சுவடிகளில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று*

எவ்வளவு வெக்க கேடான செயல்!

புகார் கொடுப்பவரை முட்டாள்கள் என நினைத்து எது வேண்டுமானாலும் செய்வார்கள்
இந்த கடமை தவறிய அரசூழியர்கள்.

*குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவு- 144 இன் கீழ் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்த கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடத்தினை தடை செய்ய அதிகாரம் இருந்தும் மாவட்ட செயல் துறை நடுவர் அதனை தடை செய்யவோ அல்லது நாம் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அரசால் செயல் படாமல் இருக்கும் ஈரோடு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அவர்களுக்கு நமது புகார் மனுவினை அனுப்பி உள்ளதாக தெரிவித்து இருப்பது நமது புகார் மனுவினை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டதாகவே கருதுகிறோம்*

இப்படி பட்ட ஒரு ஆட்சியர் இந்திய ஆட்சிப் பணியில் தொடர்ந்து நீடிக்கலாமா ?
என்பதினை திருப்பூர் மாவட்ட மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும் .

*பொதுநல வழக்கு தள்ளுபடி* !

காரணம்  என்ன ?
சமூக ஆர்வலர் பழனிக்குமார் என்பவர் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தான் பொது நல வழக்கு தொடரப்பட்டது .

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் தனது மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த கோரிய கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் பழனிக்குமார் நீதி பேராணை வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ளது..

*இந்த வழக்கை காரணம் காட்டி பழனிக்குமாருக்கு ஆதரவாக தான் பொது நல வழக்கு போடப்பட்டிருப்பதாக கடமை தவறிய அரசு ஊழியர்களின் சார்பாக அரசூழிய பொய்யர்கள்  மூலம் உயர் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த காரணத்தினால் நமது வழக்கை பொதுநல வழக்காக ஏற்றுக் கொள்ள இயலாது என உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது*

அப்படியானால் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் சட்டப்படியான கட்டிடமாக மாறி விடுமா என்ன ?

சட்ட விரோதம் சட்ட விரோதம் தான் !

மட்டற்ற மகிழ்ச்சியில் கடமை தவறிய அரசு ஊழியர்கள்
மற்றும் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும்  கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் .

*கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 மழலை குழந்தைகள்  தீயில் கருகி மடிந்ததற்கு காரணம் சட்ட விரோதமான பள்ளிக்கட்டிடம் தான்*😭

அதே போல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும்  மாணவர்களின் உயிருக்கு எந்த விதமான  ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில் தான் பொதுநல வழக்கு பதிவு செய்தோம்.

*எங்களுக்கு மேற்காண் பள்ளி மீது எந்த விதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவும் கிடையாது*

பண பலம் !
அதிகார பலம் !
கடமை தவறிய திருப்பூர் மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மற்றும் லஞ்ச அரசு ஊழியர்களின் அசுர பலம்  !

சமூக சேவையில் கல்விப்பணி !
நன்கொடை இல்லை !அனைவருக்கும் கல்வி !
என தம்பட்டம் அடித்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின்  பலம் இதுவே.

இந்த பலம் பலவீனம் ஆகும் நாள் விரைவில் வரும் !

விட மாட்டோம் !
எது எவ்வாறு இருப்பினும் மக்கள் மன்றத்தில் ஒரு நாள் இவர்கள் அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

*தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பள்ளிகள் குறித்து எங்கள் கவனத்திற்கு தெரிய வந்தாலோ அல்லது அந்த பள்ளி நிர்வாகிகள் மூலம் பெற்றோர்களுக்கோ மாணவர்களுக்கோ பாதிப்பு ஏற்படுவது குறித்து புகார் வரப்பெற்றாலும் அவர்களுக்கு என்றென்றும் நாங்கள் ஆதரவு கரம் நீட்டுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*.
💥💥💥💥💥💥💥💥💥
✍ *நாஞ்சில்*
*கோ கிருஷ்ணன்* செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்* திருப்பூர்
உலா பேசி :98 655 90 723
உண்மை சம்பவங்கள் தொடரும்....🙏

No comments:

Post a Comment