Sunday 11 August 2019

ஊழல் ஒழிப்பு செய்தி : 0064

ஒழுங்கீீனமா நடந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இந்திய ஆட்சி பணிக்கு தகுதியானவரா

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO :0064/2019 :நாள் :11.08.2019

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்

அத்தி வரதர்...       !

யார் இந்த அத்தி வரதர்?

திவ்ய தேசங்கள் என அழைக்கப்படும் வைணவ திருத்தலங்கள் 108  இதில் 31 ஆவது திவ்ய தேசம் தான் காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் திருக்கோவில்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெள்ளி பேழையில்  துகில் கொண்டிருக்கும் திருக்கோவில் தெப்பக்குளத்தின் நீருக்குள் இருந்து வெளி வந்து பக்தர்களுக்கு  அருட்காட்சி கொடுப்பாராம்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம் தான் அத்திவரதர்.

தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள் தானாம்.

இந்தக் கோவிலின் ஆதி மூர்த்தியாக இருந்தவர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்ட அத்திவரதர்.

அவர் தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

தற்போது காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர்.

இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் கொண்டார். 

வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். இதனால், காயத்ரி, சாவித்ரி துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம்.


யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பின்னப்பட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டு விட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் அருளியதாக புராணம் கூறுகிறது.

தன் யாகத்தை காத்த பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு அத்திமரத்தில் வடிவமைக்க வைத்தார் பிரம்மர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.

வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.

மேலும், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பகைமை இருந்த காலத்தில் அத்தி வரதரை பகைவர்களிடம் இருந்து காப்பதற்காகவும், மண்ணில் குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி அத்தி வரதரை மறைத்து வைத்து பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே போல் மொகலாயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்தும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளை போகாமல் தடுப்பதற்காகவும், அத்தி வரதரை மறைத்து வைப்பதற்காகவும் குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்பதும் செவி வழிச்செய்தி.

இந்த நம்பிக்கையின் பேரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருவிழா தற்போது நடைபெறுகிறது. குளத்தில் இருக்கும் அத்தி வரதர் சிலை 9 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இதற்கு முன்னதாக 1979-ம் ஆண்டு அத்தி வரதர் ஆனந்த புஷ்கர தீர்த்தத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எழுந்தருளி உள்ளார்.

இந்த அத்திவரதரை தரிசனம் செய்யவே நாடு முழுவதும் இருந்து பல இலட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

நீண்ட வரிசையில் நாள் முழுவதும் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

கட்டுக்கடங்காமல் தினமும் வருகை தரும் இந்த பக்தர்களின் கூட்டத்தினை கட்டு படுத்துவது, 

பாதுகாப்பது, போக்குவரத்தினை ஒழுங்கு படுத்துவது, சிறப்பு தரிசனம் என வி.ஐ.பி,வி .வி.ஐ.பி, அரசியல் வாதிகள் அரசு உயர் அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினர் போன்றோர்களுக்கு சிறப்பு பாது காப்பு அளிப்பது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது என  பெரும் சவாலான பணியினை மிகுந்த மன உளைச்சலுடன் இரவு பகல் பாராது  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட காவல் துறையினர் செய்து வருகின்றனர். 

காஞ்சிபுரம் அத்தி வரதர் ஆலய வி. ஐ. பி. வி. வி ஐ. பி சிறப்பு தரிசன  பகுதியில் அனுமதி சீட்டு இல்லாமல் வயதான  பக்தர்களை அனுமதித்தது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா நேரில் சென்று பொது இடத்தில் பலர் முன்னிலையில் ஒருமையில் பேசி மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் அந்த காணொலி வைரலாக பரவி வருகிறது.

நீ எந்த ஸ்டேசன்? 

எந்த ஸ்டேசன்னு சொல்லு? 
என்ன நீ பித்தலாட்டம் பண்றீயா? 
போலீஸ் காரன்ங்க எல்லாம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? 
மண்ணு மாதிரி நிற்கிற? 
டேய் என்னடா சாரி? 
தொலைச்சு போடுவேன் ராஸ்கல்? 
முக்கியமான வி. ஐ பி. மினிஸ்டர் வரும் போது இப்படி பண்ணீட்டு இருக்க? 
நீ சஸ்பெண்ட் தான்! சஸ்பெண்ட் தான்! 
ஐ. ஜி எங்கே வரச்சொல்லு என ஆவேசமாக கூச்சலிட்டு கத்தியதுடன் வாடா போடா என   மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசியது மாவட்ட ஆட்சியர் என நினைக்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. .

ஒட்டு மொத்த காவல்துறை மீது இவர் வெறுப்பை உமிழ காரணம் என்ன? 

இது குறித்து நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விசாரித்த போது  காவல் துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்த காரணத்தினால் தான் மாவட்ட ஆட்சியர் அங்கு சென்றதாக தெரிவித்தனர்அப்படியே லஞ்சம் வாங்கியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்காதது  ஏன்?

நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் லஞ்சம் வாங்கிய காவலூழியரை ஏன் கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது தானே?

பொது இடத்தில் அவ்வளவு ஆவேசமாகவும்  கீழ்தரமாகவும் ஏன் நடந்து கொண்டார்?

லஞ்சம் வாங்கியது குறித்து அப்போது ஏன் கேள்வி எழுப்ப வில்லை?

காவல் துறையினர் சல்யூட் அடிப்பதற்கும் பாதுகாப்புக்கும் தான் தேவையா?

காவல் உயர் அதிகாரியிடம் சொல்லி கண்டித்து இருக்கலாம் 

அல்லது 
தவறு செய்திருந்தால் தனியாக அழைத்து அட்வைஸ் செய்திருக்கலாம்.

அதை விடுத்து அதிகார திமிரில் 

ஆட்டம் போடுவது மாவட்ட செயல் துறை நடுவருக்கு  கொஞ்சமும் அழகில்லை.

மாவட்ட ஆட்சியர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை மறைக்கவே காவல் துறை மீது லஞ்ச புகார் கூறுகிறார் என்பது தான் அப்பட்டமான உண்மையாக இருக்க முடியும்.

காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்வதாக இருந்தால் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுடன் மிரட்டல் விடுத்த மாவட்ட ஆட்சியர் பொன்னையாவையும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். 

கண்டிப்பாக இவர் இந்திய ஆட்சி பணிக்கு கொஞ்சமும் தகுதியற்ற நபர் என இதன் மூலம் உறுதியாக தெரிய வருகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற போது வி. ஐ. பி & வி. வி. ஐ. பி சிறப்பு தரிசனம் எதற்கு?

மினிஸ்டர் யார்?ம

க்கள் பிரதிநிதி தானே?

சிறப்பு தரிசன வழியில் சாமானியன் சென்றது அப்படி என்ன குற்றம்?

இரவு பகல் பாராமல் காவல் பணி செய்வது அத்தனை சுலபமா?

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு மட்டும் தான் காவல் துறை தேவையா?

மக்கள் தான் எஜமானர்கள்!

காவலூழியர்கள் அரசூழியர்கள் அனைவரும் மக்களின்  சேவகர்கள் தான் என்பதினை ஏன் மறந்து விடுகிறீர்கள்?

நாஞ்சில் கோ. கிருஷ்ணன்

செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ் 
திருப்பூர்
உலாபேசி :98 655 90 723
உண்மை சம்பவங்கள் தொடரும்.... 


1 comment:

  1. Facing errors like unable to withdraw coins in Blockchain is so common. But, still, most of the users are unaware of its recovery methods and process. Why waste time looking out for the solutions, when you can easily avail fruitful assistance from the talented advisors who are there to support you in every possible way. Dial Blockchain support number and get in touch with the advisors immediately to get rid of the errors. You can rely on their services and get on the spot solutions and methods to eliminate the Blockchain troubles.

    ReplyDelete