Friday 23 August 2019

ஜல் சக்தி அபியான் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஓர் முக்கிய அறிவிப்பு!
LAACO /2019 :23.08.2019

ஜல் சக்தி அபியான்!

சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

24.08.2019 அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் ஜல் சக்தி அபியான் "சிறப்பு கிராம சபைக் கூட்டம்" நடை பெற உள்ளது.

ஜல் சக்தி அபியான் என்றால் என்ன?

மழை நீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து  பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல் படுத்துதல்.

நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் மத்திய அரசால் கண்டறியப் பட்டுள்ளது. 

எனவே, நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க 'ஜல்சக்தி' அபியான் என்னும் திட்டத்தை, மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி அன்று தொடங்கி உள்ளது. 

இதற்காக, 255 கூடுதல் மற்றும் இணைச் செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. 

இவர்கள், ஒவ்வொரு வறட்சியான மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக இருந்து, நீர் சேமிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான பரப்புரை மற்றும் திட்டங்களை செயல்படுத்துவார்கள். 

மழைக் காலமான ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 வரை இந்த திட்டம், செயல்படுத்தப்படவுள்ளது. 

இந்த  திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரிகள் அனைவரும் கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்.

இவர்கள் மத்திய அரசு அதிகாரிகள், இயக்குநர், துணைச் செயலர்கள் பதவி அந்தஸ்தில் உள்ளவர்கள், நீர் ஆதாரத்துறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மாநில, மாவட்டக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவர்

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 168 ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டம் செயல் படுத்த பட உள்ளது. 

சிறப்பு கிராம சபைக் கூட்டத்தின் பயன் என்ன?

நீர் பாதுகாப்பு,
மழை நீர் சேகரிப்பு,
நீர் மேலாண்மை,
பாரம்பரிய மற்றும் பிற நீர் நிலைகள், ஏரிகள் புதுப்பித்தல் ,
நீர்வடி பகுதி மேம்பாடு செய்தல்,
தீவிர காடு வளர்ப்பு திட்டத்தை செயல் படுத்துதல் 
மீன் நிரப்பு கட்டமைப்புகளை புதுப்பித்தல்
போன்ற பல் வேறு பணிகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் விவாதித்து செயல் படுத்திட கிராம ஊராட்சி பகுதி மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு  பயன் பெறுமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை புதுப்பித்து நீரை பாதுகாத்திடவும், தீவிர காடு வளர்ப்பு திட்டத்தை செயல் படுத்தி மழை பெறவும் , மழை நீர் சேகரிப்பு செய்து நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடவும், குடி நீர், பற்றாக்குறை இல்லாமல் விவசாயம் செழித்திடவும், நீர் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்திடவும்  மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடை பெற இருக்கிறது என்பதினை தெரிவித்து கொள்கிறோம்.

மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில்..............!!

நாஞ்சில் கோ. கிருஷ்ணன் நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலாப்பேசி : 98 655 90 723 மின்னஞ்சல் :
nanjillaacot@gmail.com

No comments:

Post a Comment