Sunday 4 August 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0062

*எச்சரிக்கை*!! 😡

*புதிய இருசக்கர வாகனம் வாங்கும் நுகர்வோர்கள் கவனத்திற்கு*!

*மோசடி நிறுவனங்கள்*!!
🛵🛵🛵🛵🛵🛵🛵🛵🛵
📢 *ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO/0062/2019 :நாள் :03.08.2019*

*குற்றம் நடந்தது என்ன*?

*உண்மை சம்பவம்*

*குற்றவாளிகள் யார் யார்*?

1.  *TVS இருசக்கர வாகன* *விற்பனையாளர்*
*S. V. மோட்டார்ஸ் அவிநாசி*

2. *வேலவா ஆட்டோ* *பைனான்ஸ்*
*திருப்பூர்*

3. *ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்* *நிறுவனம்*
*திருப்பூர் கிளை*

*குற்ற உடந்தை யார் யார்*?

1.மோட்டார் வாகன ஆய்வாளர்
அவிநாசி

2.வட்டார போக்குவரத்து அலுவலர்
திருப்பூர் வடக்கு

3 போக்குவரத்து இணை ஆணையர்
கோவை

*குற்றசாட்டுக்கான காரணம் என்ன*?

🛵 இருசக்கர வாகனம்  வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் போது  காப்பீடு செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து பதிவு எண் பெற்ற பின்னர் தான்  டெலிவரி செய்யப்பட வேண்டும்.

*பதிவு செய்யாமல் விற்பனை செய்யப்பட்ட வாகனத்தினை பொது சாலைகளில் இயக்க அனுமதி அளிப்பது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம்*

அவ்வாறு சட்ட விரோதமாக பொது சாலைகளில் இயக்க அனுமதி அளிக்கும் விற்பனையாளரின் வணிக சான்றினை ( TRADE CERTIFICATE)
மத்திய மோட்டார் வாகன விதி : 44 இன் கீழ் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆனால் பெரும்பாலான விற்பனையாளர்கள் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை மதிப்பதில்லை.

*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், அலுவலர்கள் லஞ்சம் பெற்று கொண்டு கடமை செய்ய  தவறுகின்றனர்*

*TVS இருசக்கர வாகன விற்பனையாளரான திருப்பூர் பாரத் ஆட்டோஸ் நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜூபிட்டர் ரெட் வாகனத்தினை பதிவு செய்யாமல் விற்பனை செய்யப்பட்டதற்காக  புகார் அளித்து அந்நிறுவனத்தின் வணிக சான்று ரத்து செய்ய பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*.

*அவிநாசி  S. V. மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு  விற்பனை செய்யப்பட்ட TVS  PHOENIX 125 இருசக்கர வாகனத்தை விற்பனை செய்த நாளில் பதிவு  செய்யாமல் 21 தினங்கள் கடந்து காலதாமதமாக பதிவு செய்ததுடன் , காப்பீட்டில் தயாரிப்பு தேதியினை போலியாக பதிவு செய்தும், முறை கேட்டில் ஈடுபட்டுள்ளனர்*.

மேலும்
வாடிக்கையாளருக்கு வாகன கடன் கொடுத்த  வேலவா ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கு என S. V. மோட்டார்ஸ் வங்கி கணக்கு கொடுத்து தவணை தொகை 46,000 ரூபாய் முழுவதும் வாடிக்கையாளர் செலுத்திய  பின்னர்  விற்பனையாளரும் கடன் கொடுத்தவரும் கூட்டு சதியில் ஈடுபட்டு  வங்கி கணக்கில் செலுத்திய பணத்தினை மோசடி செய்து விட்டு  பணம் செலுத்தினால் தான் R. C புக் வழங்குவோம் என தெரிவித்துள்ளனர்.

*கரூர் வைஸ்யா வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி  SV மோட்டார்ஸ் என்ற நிறுவன  வங்கி கணக்கில் பணம் செலுத்திய விபரங்களை வங்கி மூலம் பெற்றுள்ளார் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்*.

பாதிக்கப்பட்ட நுகர்வோர் புகார் அளித்த போதும் கடமை தவறிய திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வில்லை.

கோவை போக்குவரத்து இணை ஆணையரின் விசாரணையும் திருப்தி அளிக்க வில்லை.

எனவே *பாதிக்கப்பட்ட  நுகர்வோர் ஒருவர் போக்குவரத்து ஆணையருக்கு அளித்த புகார் மனு  அப்படியே அசலாக இங்கே கீழே  தரப்பட்டுள்ளது*

போக்குவரத்து ஆணையர் நுகர்வோரின் இப்புகார் குறித்து உரிய விசாரணை செய்து S. V. மோட்டார்ஸ் நிறுவன வணிக சான்றினை ரத்து செய்து 46000. 00 ரூபாய் மோசடி செய்த விற்பனையாளர் மீதும்  கடமை தவறிய போக்குவரத்து  அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து  பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு  வாகன பதிவு சான்றிதழ் திரும்ப பெற்று தருவாரா? அல்லது நீதி மன்றம் சென்று தான் நிவாரணம் பெற வேண்டுமா?
காத்திருப்போம்.......!!
Laaco.
✍✍✍✍✍✍✍✍✍

மனுதாரர்;
J.முத்துகுமார்
த/பெ N.ஜெயராமன்,
77 /4 எஸ் வி.காலனி வடக்கு, பி.என் ரோடு,
திருப்பூர் - 641 602 .

எதிர்மனுதாரர்கள்:
01. D.சக்திவேல்,
உரிமையாளர்
S.V. மோட்டார்ஸ் ,
எண்: 1 விஜய் காம்ப்ளக்ஸ் கைகாட்டி புதூர் ,
அவிநாசி - 641 654, திருப்பூர் மாவட்டம் .

02.   முருகேசன்  உரிமையாளர்
வேலவா  ஆட்டோ பைனான்ஸ் ,
எண் : 6 ,அதியமான் வீதி ,மார்க்கெட் அருகில் ,
திருப்பூர் -641 604.

03. மேலாளர்
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்,
1 ,தனம்ஸ் டவர்ஸ் முதல் மாடி,
பென்னி மெயின் ரோடு, பார்க் ரோடு, திருப்பூர் - 641 604 .

04. M.K.பாலசுப்பிரமணியன்,
மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு-1 ,
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ,
அவிநாசி - 641 654 .

05. வட்டார போக்குவரத்து அலுவலர் ,
வட்டார போக்குவரத்து  அலுவலகம்,
திருப்பூர் வடக்கு , குமார் நகர் ,
திருப்பூர் - 641 603.

06. K.R. கிருஷ்ண மூர்த்தி
இணை போக்குவரத்து ஆணையர்
இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம்
டாக்டர்.பாலசுந்தரம் சாலை
கோவை ¬– 641 018.

பெறுநர் :
போக்குவரத்து ஆணையர் அவர்கள்,
போக்குவரத்துத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை- 600 005.

அய்யா,

பொருள் : *இருசக்கர வாகனத்தினை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யாமல் சட்ட விரோதமாக விற்பனை செய்து பொதுச் சாலையில் இயக்க அனுமதி அளித்த எதிர்மனுதாரர்:01 என்பவரின் வணிக சான்றினை (TN 39 TCR NO:332/2014) மத்திய மோட்டார் வாகன விதி - 44 இன் கீழ் ரத்து செய்ய கோரியும், தவணைத் தொகை முழுவதும் செலுத்திய பின்னரும் வாகன பதிவு சான்றிதழ் வழங்காமல்  மோசடி செய்து வரும் எதிர்மனுதாரர் :01 மற்றும் 02 என்பவர் மீதும்  நடவடிக்கை எடுத்து வாகன பதிவுச் சான்றிதழை திரும்பப் பெற்றுத் தரக் கோரியும் போலியான காப்பீடு வழங்கிய எதிர்மனுதாரர் :03 என்பவர் மீதும் இதற்கு பொறுப்பு வகிக்கும் கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் :04 மற்றும் 05 என்பவர்கள் மீதும் முறையான  விசாரணை செய்யாத எதிர்மனுதாரர்: 06 என்பவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவு 2(4 ) இன் கீழ், புகார் மனு*

*Reference / பார்வை*

01.New vehicle delivered On 27 .12 .2014.

02. Vehicle Extended warranty registration form Customer Copy On 27. 12.2014.

03.User manual and service book given On 27. 12 .2014.

04.First Cash receipt number ;13238 given from S V Motors On 27. 12. 2014.

05.Second Cash receipt number ;13307 given from S.V. Motors On 05 .01 .2015.

06.Velava Auto Finance given Loan Card SV - 198 On 30.12.2014

6(a) Velava Auto Finance Authorization letter from RTO Dated On :14.01.2015.

07.Reliance General Insurance  On : 06 .01 .2015.

08.E-payment Acknowledgment Transaction On : 12. 01 .2015.

09.Registration Certificate On :14.01.2015  (TN 39 BP 5511)

10.S .V  Motors  sended their Bank Account number details on
SMS to my mobile number dated on 18.8.2015 & 04.09.2015.

11.First letter sended to S.V. Motors dated on 09.04.2018.

12.Second letter sented to S V Motors On 16.07.2018 Under Section 101
Indian evidence Act  -1872 .

13.Replied Letter from S V motors On  25. 07. 2018.

14.A Letter Sended to Velava Auto Finance  On 01 .08.2018  Under
Section 101 Indian evidence Act -1872 .

15.Replied Letter from V.Kannan Advocate,Velava Auto Finance On 09 .08.2018.

16. A Letter to Public information Officer Under Section
7 (1) Right to
Information Act -2005 On : 06.09.2018.

17. A Letter Sended to Appellate Authority Officer Under Section
19 (1) Right to Information Act -2005 On :04.10. 2018.

18.Replied letter from Public Information officer  On: 04.10.2018 (கடித
ந.க.எண்:  048929/அ/3/2018  )
(a) Vehicle Invoice dated  On 14 01. 2015
(b ) Authorisation letter dated On 14.01.2015
(c) Certificate Inspection of Motor Vehicle dated On 14 .01. 2015
(d ) Form  20 dated On: 14.01.2015
(e)  Form 21  dated On:14.01.2015
(f)  Form 22  dated On :14.01.2015
(g) Form 19  dated On :14.01.2015
( h) Form 17 (Trade Certificate) dated On : 14.01.2015.

19.First complaint Letter  Sended to Karur Vysya Bank
Tirupur Branch  dated On :06.09.2018.

20.Replied Letter from Karur Vysya Bank manager dated On :08.10.2018.

21.Second Letter Sented to Karur Vysya Bank, Karur On 12. 01 .2019 .

22.Replied letter  from Karur Vysya Bank  Manager dated On  07.02.2019.

23.First Letter Sented to City Union Bank dated On :06.09. 2018.

24.Replied letter from City Union Bank   dated On :15.09.2018.

25.Second Letter Sented to City Union Bank Kumbakonam 14. 01. 2019.

26.Replied from City Union Bank kumbakonam dated  On 04.02 .2019

26(a)  Replied from City Union Bank Tirupur Branch manager On  12.02.2019.

27.A Complaint Letter Sended to Tirupur North RTO dated On 08 .03 2019
(Xerox Copy to Kovai Joint Transport Commissioner & Transport Commissioner).

28.An Enquiry from Kovai Joint Transport Commissioner  dated On 18. 03 .2019.

29.An  Enquiry held On 25.03.2019 by Joint transport commissioner
which was not satisfied.

30.Transport Commissioner ordered to Enquire the Kovai Joint
Transport Commissioner Letter dated On :28.03.2019.

மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசனம் - 1950 கோட்பாடு 5 இன் படி ஒரு இந்திய குடிமகன் ஆவேன்

எதிர்மனுதாரர் :01 என்பவரிடமிருந்து பார்வை :01 இல்  காணும் வாகன டெலிவரி ரசீது மூலம் டி. வி. எஸ் ஃபோனிக்ஸ் 125 இருசக்கர வாகனத்தை 27. 12. 2014 அன்று விலைக்கு வாங்கினேன்.

பார்வை :02 இல் காணும் வாகன உத்திர வாதத்திற்கான ரசீது 27.12.2014 அன்று வழங்கினார்கள்.

பார்வை:03 இல் காணும் வாகனம்  உபயோகம் மற்றும் பராமரிப்பு செய்வதற்கான கையேட்டினை 27. 12. 2014 அன்று வழங்கினார்கள்.

பார்வை: 04 இல்  காணும்  முன்பணமாக 17,000.00 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது 27.12 2014 அன்று வழங்கினார்கள்.

பார்வை: 05 இல்  காணும் முன் பணம் 1000.00 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது 05. 01.2015 அன்று வழங்கினார்கள்.

வாகன மொத்த விலை  63,000. 00 இதில் முன்பணம் 18,000.00 போக  மீதி 45000. 00 ரூபாய்க்கு எதிர்மனுதாரர்:02 என்பவரது  பார்வை:06 இல்  காணும் வேலவா ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் மூலம் கடன் பெற்றதற்கான கடன் அட்டையை 30.12 2014 அன்று  வழங்கினார்கள்.

14.01.2015 தேதியிட்ட பார்வை: 6(a) இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :02 என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கியுள்ளனர்.

எதிர்மனுதாரர் :03 என்பவரது பார்வை:07 இல் காணும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மூலம் 06 .01. 2015 அன்று வாகன காப்பீடு செய்துள்ளனர்.

எதிர்மனுதாரர்:01 என்பவர்  பார்வை :08 இல் காணும் e-payment பணப்பரிமாற்றம் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு
12. 01 .2015 அன்று பணம் செலுத்தி
யுள்ளார்கள்.

எதிர்மனுதாரர்: 01 என்பவர் பார்வை:09 இல் காணும் 14.01.2015 அன்று  எனக்கு விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தை  வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தார்கள்
(பதிவு எண் :TN 39 BP 5511)

27 12. 2014 அன்று எனக்கு எதிர்மனுதாரர்:01 என்பவரால் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனம 14. 01. 2015 அன்று தான் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் விற்பனை செய்யப்பட்டு சுமார் 21 தினங்கள் கடந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களை  பதிவு செய்யாமல் பொதுச் சாலையில் இயக்குவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம் என்பதை சமீபத்தில் போக்குவரத்து ஆணையர் அவர்களின் உத்தரவினை பத்திரிக்கை செய்தி வாயிலாக அறிந்தேன். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது.

வாகனத்தினை பதிவு செய்யாமல் சுமார் 21 தினங்கள் நானும் பொதுசாலையில் இயக்கி குற்றம் புரிந்துள்ளேன்.

எதிர்மனுதாரர்:01  என்பவர் வாகனத்தை பதிவு செய்யாமல் தெரிந்தே சட்ட விரோதமாக எனக்கு விற்பனை செய்துள்ளார்.

எதிர்மனுதாரர் :01 என்பவரது  அலுவலகத்தில் இருக்கும் எதிர்மனுதாரர்: 2 என்பவரிடம் நான் வாகன கடன் பெற்ற வகையில் மாத தவணை தொகையினை நேரில் சென்று செலுத்தி வந்தேன்.

இந்நிலையில் மாதத்தவணை தொகையை வங்கி கணக்கின் மூலம் எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு செலுத்துவதற்காக எதிர்மனுதாரர்:01  என்பவரை தொடர்பு கொண்டு கேட்ட போது பார்வை : 10 இல்  காணும் பணம் செலுத்துவதற்கான வங்கி கணக்கு விவரங்களை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பினார்கள்

நானும் எதிர்மனுதாரர் :01 என்பவர் அனுப்பிய  சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி மூலம் மாத தவணை தொகையினை செலுத்தி வந்தேன்.

கடன் தொகை முழுவதும் செலுத்தி முடிந்த பின் எனக்கு சேர வேண்டிய வாகன பதிவு சான்றிதழை திரும்பக் கேட்ட போது  27300.00 ரூபாய் நிலுவையில் உள்ளது என்றும் முழு தொகையும் செலுத்தி வாகன பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு எதிர்மனுதாரர்:02 என்பவர்  தெரிவித்தார்.  இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கோரி எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு 09.04.2018 அன்று பார்வை :11 இல் காணும்  கடிதத்தினை அனுப்பினேன்.
ஆனால் பதில் எதுவும் அனுப்பாத காரணத்தினால் 16.07.2018 அன்று பார்வை :12 இல் காணும் தன்னிலை விளக்கம் அளிக்க கோரி கடிதம் அனுப்பினேன்.

25.07.2018 அன்று பார்வை :13 இல் காணும் பதில் கடிதத்தினை எதிர்மனுதாரர் :01 அனுப்பினார்.

அதில் வாகனத்தினை பதிவு செய்த பிறகு தான் விற்பனை செய்துள்ளதாகவும் எதிர்மனுதாரர் :02 என்பவர் குறித்த எந்த விபரமும் தெரியாது என பொய்யான பதில் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

01.08 2018 அன்று பார்வை :14 இல் காணும் தன்னிலை விளக்கம் அளிக்க கோரி எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு கடிதம் அனுப்பினேன்.

09.08.2018 அன்று பார்வை:15 இல் காணும் எதிர்மனுதாரர் :02 என்பவரது கட்சிகாரர் எனக்கூறி அறிவு வறுமையில் இருக்கும் வழக்கறிஞர் ஒருவர் மூலம் பதில் அனுப்பினார்.

அந்த பதில் முன்னுக்கு பின் முரணான வகையில் இருந்தது.

06.09.2018 அன்று பார்வை :16 இல் காணும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எனது இருசக்கர வாகனம் பதிவு செய்தது குறித்த முழு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் வழங்க கோரியிருந்தேன்.

பொது தகவல் அலுவலர் பதில் அளிக்காத காரணத்தினால் 04.10 2018 அன்று பார்வை :17 இல் காணும் சட்டப்பிரிவு 19 (1) இன் கீழ் முதல் மேல்முறையீடு செய்தேன்.

04.10.2018 அன்று பார்வை :18   a, b, c, d, e, f, g, h இல் காணும் ஆவண நகல்கள் மூலம் பொது தகவல் அலுவலர் பதில் அனுப்பினார்.

இதில் எதிர்மனுதாரர்கள் :01 மற்றும் 02 இருவருடைய மோசடிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்மனுதாரர்:03 என்பவர் 10/2014 தயாரிப்பு வாகனத்தினை 2015 தயாரிப்பு வாகனம் என போலியான காப்பீடு செய்துள்ளனர்.
மேலும் 27.12.2014 அன்று எனக்கு விற்பனை செய்யப்பட்டு 14.01.2015 அன்று விற்பனை ரசீது போடப்பட்ட எனது இருசக்கர வாகனத்திற்கு 06.01.2015 அன்று காப்பீடு செய்யப்பட்டதாக பெரும் மோசடி நடை பெற்றுள்ளது.

இந்த மோசடிக்கு எதிர்மனுதாரர் :04 அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் எதிர்மனுதாரர் :05 திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரும் துணை போய் உள்ளனர்.

எதிர்மனுதாரர் :01 என்பவரான S. V. மோட்டார்ஸ் வங்கி கணக்குகளில் நான் செலுத்திய தவணை தொகைகள் குறித்து எதுவும் தெரியாது என பார்வை :13 இல் காணும் கடிதம் வாயிலாக தெரிவித்து விட்ட காரணத்தினாலும்

எதிர் மனுதாரர்:02 என்பவர் நிலுவை தொகை செலுத்தினால் தான் வாகன பதிவு சான்றிதழ் வழங்க முடியும் என பார்வை :15 இல் காணும் கடிதம் வாயிலாக கூறி விட்ட காரணத்தினாலும் மிகுந்த மனதுயரத்திற்கு ஆளாகி உள்ளேன்.

எனவே 06.09.2018 அன்று பார்வை :19 இல் காணும் நான் பணம் செலுத்திய கரூர் வைஸ்யா வங்கிக்கு விளக்கம் கோரினேன்.

08.10. 2018 அன்று பார்வை :20 இல் காணும் கடிதம் மூலம் கரூர் வைஸ்யா வங்கி விளக்கம் அளிக்க மறுத்து விட்டது.

எனவே மீண்டும் 12. 01.2019  அன்று பார்வை :21 இல் காணும் கரூர் வைஸ்யா வங்கி தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினேன்.

07.02.2019 அன்று பார்வை :22 இல் காணும் பதில் கடிதம் கிடைத்தது.
அதில் எதிர்மனுதாரர் :01 என்பவரது வங்கி கணக்கில் நான் செலுத்திய 31000.00 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்மனுதாரர் :01 என்பவர் வங்கிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

06.09.2018 அன்று பார்வை :23 இல் காணும் கடிதத்தினை விளக்கம் அளிக்க கோரி சிட்டி யூனியன் வங்கிக்கு அனுப்பினேன்.
15.09 2019 அன்று பார்வை :24 இல் காணும் கடிதம் மூலம் சிட்டி யூனியன் வங்கி விளக்கம் அளிக்க மறுத்து விட்டது.
எனவே 04.01.2019 அன்று பார்வை :25 இல் காணும் கடிதத்தினை விளக்கம் அளிக்க கோரி சிட்டி யூனியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினேன்.

04.02.2019 மற்றும் 12.02.2019 தேதி அன்று பார்வை :26 மற்றும் 26 (a) இல் காணும் சிட்டி யூனியன் வங்கியின் பதில் கடிதம் கிடைத்தது. அதில் எதிர்மனுதாரர்:01 என்பவரது வங்கி கணக்கில் நான் செலுத்திய 15,000.00 ரூபாய் வரவு வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.

08.03.2019 அன்று பார்வை :27 இல் காணும் புகார் கடிதத்தினை எதிர்மனுதாரர் :05 என்பவருக்கு அனுப்பினேன். அப்புகார் மனுவின் நகலினை எதிர்மனுதாரர் :06  என்பவருக்கும் தங்களுக்கும் அனுப்பினேன்.

எதிர்மனுதாரர்:05 என்பவர் எனது புகார் குறித்து இன்றைய தினம் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எனது புகார் மனுவினை நிராகரித்து விட்டார்கள்.

18.03 2019 அன்று தேதியிட்டு 25.03.2019 அன்றைய தினம் விசாரணை நடைபெற இருப்பதாக பார்வை :28 இல் காணும் கடிதம் எதிர்மனுதாரர் :06 என்பவரிடம் இருந்து வரப்பெற்றது.

அன்றைய விசாரணையில் எதிர்மனுதாரர்கள் :01 மற்றும் 02 என்பவர்களும் நானும் கலந்து கொண்டேன்.

ஆனால் எனது புகார் குறித்து எதிர்மனுதாரர் :06 என்பவர் முழுமையாக விசாரணை செய்ய வில்லை.

எதிர்மனுதாரர்கள் :01 மற்றும் 02 என்பவர்களுக்கு ஆதரவாக தான் பேசினார். விசாரணைக்கு வந்தது குறித்து கடிதம் எழுதி கொடுத்து விட்டு செல்லும் படி கூறினார்கள்.

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
எனவே விசாரணை  முழுமையான  அளவில் திருப்தி அளிக்க வில்லை. ஆட்சேபனையுடன் கையொப்பம் செய்துள்ளேன் என பார்வை: 29 இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர்:06 என்பவரிடம் நேரில் கொடுத்தேன்.
28.03 2019 அன்று எதிர்மனுதாரர்:06 என்பவருக்கு பார்வை:30 இல் காணும் தாங்கள் அனுப்பிய கடிதத்தில் எனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியிருந்தீர்கள்.

ஆனால், எதிர்மனுதாரர்:06 என்பவர் நான்கு மாதங்கள் ஆகியும் இன்றைய தினம் வரையிலும் எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் தங்களுடைய உத்தரவினையும் நிராகரித்து விட்டதாக தெரிய வருகிறது.

*கோரிக்கை* :

01.  *மேற்காண் எனது புகார் குறித்து தாங்கள் நேர்மையான போக்குவரத்து அலுவலரை நியமித்து முழுமையான அளவில் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து விசாரணை செய்ய வேண்டுகிறேன்*.

02.  *பதிவு செய்யாமல் சட்ட விரோதமாக எனக்கு விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தினை* *தெரிந்தே பொதுச் சாலையில் இயக்க அனுமதித்த* *எதிர்மனுதாரர்:01* 
*S. V. மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக சான்றினை (TN 39 TCR NO:332/2014) மத்திய மோட்டார் வாகன விதி - 44 இன் படி ரத்து செய்யும் படி வேண்டுகிறேன்*.

03. *எதிர்மனுதாரர் :02 என்பவர் எனக்கு வாகன கடன் கொடுத்த  அன்றைய தினத்தில் வாகனத்தினை பதிவு செய்யாமலும், காப்பீடு செய்யாமலும், விற்பனை ரசீது (இன்வாய்ஸ்) இல்லாமலும் சட்ட விரோதமாக வாகன கடன்  கொடுத்ததாக போலியாக செயல் பட்டிருப்பது  இதன் மூலம் உறுதியாக தெரிய வருகிறது*.

மேலும் *எதிர்மனுதாரர்கள் :01 மற்றும் 02 என்பவர்கள் இருவரும் கூட்டு சதி செய்து கரூர் வைஸ்யா வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி மூலம் நான் செலுத்திய 46000.00 பணத்தினை மோசடி செய்துள்ளனர்*

*எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனது இருசக்கர வாகன அசல் பதிவு சான்றிதழ், மாற்று வாகன சாவி, கடன் நிலுவை இல்லா சான்று உள்ளிட்டவைகளை திரும்ப பெற்றுத்தர வேண்டுகிறேன்*

04.  எதிர்மனுதாரர்: 03 என்பவர்
27.12 2014 அன்று விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனத்திற்கு
06. 01. 2015 அன்று காப்பீடு செய்ததில் வாகன தயாரிப்பு தேதி 2014 க்கு பதிலாக 2015 என போலியான காப்பீடு செய்துள்ளார்.

*எனவே அவர் மீது உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்*.

05.  *எதிர் மனுதாரர்கள் : 01 , 02 மற்றும் 03  என்பவர்களின் மோசடிக்கு எதிர்மனுதாரர் : 04 என்பவர் துணை போய் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது*

எனவே *எதிர்மனுதாரர்: 04 மோட்டார் வாகன ஆய்வாளர் M.K.பாலகிருஷ்ணன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறேன்*

06 *27. 12. 2014 அன்று எனக்கு எதிர்மனுதாரர் :01 என்பவரால் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனத்திற்கு விற்பனை ரசீது வழங்காமலும், காப்பீடு செய்யாமலும் ,  வாகன பதிவு செய்யாமலும் , வாகன டெலிவரி ரசீது மட்டும் வழங்கி விட்டு 14. 01. 2015 அன்று தான் விற்பனை செய்யப்பட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து எனது வாகனத்தை பதிவு செய்த எதிர்மனுதாரர் :05 திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறேன்*

07.  *சட்ட விரோதமாக செயல்பட்ட எதிர் மனுதாரர்கள்:01 முதல் 05  வரை அனைவர் மீதும் நான் அளித்த புகார் மனு மீது உரிய விசாரணை செய்யாமல் எதிர் மனுதாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கடமை தவறிய எதிர்மனுதாரர் : 06 கோவை இணை போக்குவரத்து ஆணையர் K. R . கிருஷ்ண மூர்த்தி என்பவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்*

பார்வை 01 முதல் 30 வரையிலான இணைப்பு பக்கங்கள் : 70

நாள் : 31. 07.2019
இடம் :திருப்பூர்

💥💥💥💥💥💥💥💥💥
✍ *நாஞ்சில்*
*கோ கிருஷ்ணன்*
செய்தியாளர்
*ஊழல் ஓழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.... 🙏

No comments:

Post a Comment