Tuesday 13 August 2019

கிராம சபை என்றால் என்ன?

📢 #கிராம 🏡#ஊராட்சி #பகுதிகளில் #வசிக்கும் #பொது #மக்களுக்கு #ஒர் #முக்கிய 🌠#அறிவிப்பு!

🏛 15.08.2019 🇮🇳சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடை பெற இருக்கிறது.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அது சமயம் அனைத்து ஊராட்சி பகுதி மக்களும் தவறாது கலந்து கொண்டு உங்கள் கிராமத்தின்  வளர்ச்சி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள், வரவு செலவு கணக்குகள் குறித்த விபரங்கள் பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்
👆👆👆👆👆👆👆👆👆
கிராம சபை கூட்டம்👨‍🏫👩‍🏫 என்றால் என்ன?

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

எந்தெந்த🤔 தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?

1. ஜனவரி 26 🇮🇳(குடியரசு தினம்)
2. மே 1 🛠🚩(உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 🇮🇳(சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 👨🏽‍🦲(காந்தி ஜெயந்தி)

#கிராம #சபை #கூட்டம் #எங்கெங்கு 🤔#நடை #பெறும்?

தமிழகத்தில் உள்ள சுமார் 12, 524 அனைத்து கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் நடை பெறும்..
😄😄😄😄😄😄😄😄😄

கிராம சபை கூட்டத்தினை நடத்துவது யார்?🧐

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை /ஊராட்சி தலைவர்👍

கிராம சபை உறுப்பினர்கள் யார்?🤔

அந்தந்த கிராமத்தில் வசிக்கும் 🗳வாக்குரிமை உள்ள மக்கள்.
🗳🙋‍♂🙋🗳🙋🙋‍♂🗳🙋‍♂🙋
எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்?

அந்தந்ந கிராமத்தில் வசிக்கும் மொத்த மக்களில் பத்து சதவீதம் பேர் அதாவது 1000 பேர் என்றால் 100 பேர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
💯💯💯💯💯💯💯💯💯

இப்படி பல் வேறு விதமான கேள்விகள் !

உங்களது அனைத்து கேள்விகளுக்கும்  கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு விடை காணலாம்.

வருகிற 15.08.2019 சுதந்திர 🇮🇳தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம  சபை கூட்டம் நடை பெற இருப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் கா. பாஸ்கரன் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதம் அசலாக பொது மக்களின் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது. Laaco
👇👇👇👇👇👇👇👇👇
அன்றைய தினம் அனைத்து கிராம மக்களும் தவறாமல் கிராம சபை கூட்டத்தில் பங்கெடுத்து உங்களின் ஜனநாயக கடமையினை சிறப்புடன் ஆற்றிட "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு" சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனுப்புநர்:
முனைவர்.
கா.பாஸ்கரன் இ.ஆ.ப.
இயக்குநர்
ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி இயக்ககம்
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை - 600 015

பெறுநர்:
மாவட்ட ஆட்சித் தலைவர்
அனைத்து மாவட்டங்கள்
(சென்னை நீங்கலாக)

ந.க.எண் :365 / 2019 ஊராட்சி 2.2 ,நாள்:05.08.2019

அய்யா / அம்மையர்

பொருள் : கிராம சபைக் கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 15.08 2019 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துதல். - கூட்ட பொருள்கள் விவரம் அனுப்புதல் தொடர்பாக,

பார்வை : 01 அரசாணை (நிலை) எண் 245  ஊ.வ.(சி1) துறை
நாள்: 19 .11.1998

02.அரசாணை (நிலை) எண் :130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் :25.09.2006

பார்வை: 01 ல் காணும் அரசாணையில் உத்தரவிடப்பட்ட தற்கினங்க சுதந்திர தினமான
15. 08.2019 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். .

இதில் அனைத்து பிரிவு கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த கூட்ட பொருள்கள் ( Agenda) விவாதிக்கப்பட வேண்டும்.

மேற்படி கிராம சபை கூட்டம் ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 15.08.2019 அன்று காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும் .

தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள இடம் நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பார்வை: 02 ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பார்வை:01 ல்  கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள பொருள்களுடன் 15. 08 .2019 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது

மேலும் 15.08.2019 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு
29.08.2019 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு : கிராம சபை கூட்டம் பொருள்கள்

ஓம். பாஸ்கரன்
இயக்குநர்

இயக்குநருக்காக,

நகல் :
1.அரசு கூடுதல் தலைமைச் செயலர் ,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தலைமை செயலகம்
சென்னை -  9

2 .மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
சென்னை - 35

3. திட்ட இயக்குனர்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அனைத்து மாவட்டங்கள்

4. உதவி இயக்குனர் ஊராட்சிகள் அனைத்து மாவட்டங்கள்
Laaco/2019

✍✍✍✍✍✍✍✍✍
15.08 2019 சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள்கள் விபரம். 👍

பொருள்: 01 கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.

கிராம ஊராட்சிகளில் 01. 06 .2019 முதல் 31. 07. 2019 முடிய உள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் மேற்கொண்ட செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்

அ) குடிநீர் வசதிக்கான செலவினங்கள், கைபம்பு விசை பம்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பராமரிப்பு, செலவு விவரங்கள்,

ஆ) மின்சார வசதிக்கான செலவினங்கள்,

இ) பொது நிதியில் எடுக்கப்பட்ட மூலதன பணிகள் அதன் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரம்

ஈ) இதர நிர்வாக செலவினங்கள் விபரம்

பொருள் : 02 குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்

கடந்த ஆண்டுகளில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள காரணத்தினால் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறைந்து உள்ளது.
எனவே கீழ்க்கண்ட நீர் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள கோருதல்.

1.அனைவருக்கும் குடிநீர் கிடைக்கப்பெறும் வகையில் குடிநீரை அனைத்துக் கிராமங்களுக்கும் முறையாக விநியோகம் செய்தல்.

2 குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் பொது குழாய்களில் அருகில் குளித்தல் துணி துவைத்தல் பாத்திரங்கள் கழுவுதல் போன்ற செயல்களை தவிர்த்தல்.

3. குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகித்தல்

4 வீட்டில் குடிநீர் குழாய்களில் கசிவு இல்லாமல் பராமரித்தல்.

5 தெருக் குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுத்தல் மற்றும் பயன்பாட்டில் இல்லாத போது குடிநீர் குழாயை மூடி வைத்தல்.

6 குளியலறையில் உள்ள குழாய்களில் தண்ணீரின் வேகத்தை குறைத்து உபயோகித்தல்.

பொருள் :03  கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வுடன் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கீழ்காணும் விவரப்படி மேற்கொள்வதை உறுதி செய்தல்

அனைத்துக் குக்கிராமங்களிலும் துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளுதல்

சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல்

மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல்
(பிரதி மாதம் 5 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி)

தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை பின்வருமாறு தடுத்தல்

1. தெளிந்த நீர் தொட்டி
2. பயன்பாடற்ற பானைகள்
3 குளிர்சாதனப்பெட்டி பின்புறம்
4 பழைய டயர்
5. தேங்காய் மட்டைகள்
6.செடிகள் வளரும் தொட்டி
7 புதிய கட்டுமானப்பணி நடக்கும் இடங்கள்
மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் அவற்றை முறையாக அகற்றியும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளுதல்.

பொருள் :04  ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளில் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல்.

நடப்பு நிதி ஆண்டில் (2019- 20) ஊராட்சி பகுதியில் நடைபெறும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தல்.

பொருள் :5  கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP)

14 வது மத்திய நிதி மானிய குழுவினரால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதி கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும்

கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள கட்டுமான வசதிகள் மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப் எடுக்கப்பட்டுள்ள/ எடுக்கப்பட வேண்டிய பணிகளுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறுதல்

மேலும் இதர ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள் மற்றும் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை கிராம சபைக்கு தெரிவித்து ஒப்புதல் பெறுதல்.

மேலும் கிராம வளர்ச்சித் திட்டத்திளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 11 - வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 29 பொருட்கள் தொடர்புடைய துறைகளின் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து தயார் செய்ய வேண்டும்.

பொருள் :06 பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல்

அரசாணை எண் 84 சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நாள் 25. 06.2018 இன் படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இவ்வாணையின்படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், உணவை பாதுகாக்கவும் மேசைகள் மீது போடவும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்,தாள்கள் , பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப்புகள் பிளாஸ்டிக் தம்ளர், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள் , பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை  தயாரித்தல் இருப்பு வைத்தல் விநியோகம் விற்பனை மற்றும் இட மாற்றம் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு ஆணையின்படி பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாகும் வகையில் அனைவரும் ஒத்துழைக்கவும் மேலும் ஊராட்சியில் செயல்பட்டு வணிக நிறுவனங்களான  டீக்கடை பெட்டிக்கடை சிற்றுண்டி உணவகங்கள் மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யாமல் இருக்க வலியுறுத்துவதென  தீர்மானித்தல்

கிராம ஊராட்சியில் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்கிட தீர்மானித்தல்.

பொருள் : 07 உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாயவிலை கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த அரசாணையில் உதவிட பட்டுள்ளதை தொடர்ந்து முன்னுரிமை குடும்ப அட்டை( PHH) பயனாளிகளின் பட்டியல் கிராம சபையின் ஒப்புதல் பெறுதல் வேண்டும்.

பொருள் : 8.  முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம்

பொருள்: 8.1 
(அ) சுகாதார உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுதல்

(ஆ) கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல். கழிப்பறையை கட்டி தொடர்ந்து அதனை பயன்படுத்துவதன் மூலம் கிராம ஊராட்சியின் முழுசுகாதார முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பாராட்டு தெரிவித்தல்.

பொருள்: 8..2 திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள்:

(அ) கிராம ஊராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து குடியிருப்புகள், பள்ளிகள் ,அங்கன்வாடி மையம், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முழுமையான சுகாதார நிலையை அடைந்த கிராம ஊராட்சிகள் தங்கள் கிராம ஊராட்சியை திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக ஏற்கனவே அறிவித்ததைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்தல்
கழிவறைகளை தொடர்ந்து பயன்படுத்துதல் குறித்தும்  கிராம சபையில் விவாதித்தல்

(ஆ) கிராமங்களில் சுகாதார மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தல் மற்றும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளுதல்.

(இ) திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகள் தொடர்ந்து பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசித்தல்

(ஈ) ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊக்குநராக (Motivator) சுகாதார மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும்  அவர்களுடன் ஊராட்சியில் பணியாற்றும் பிற துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து தனிநபர் இல்ல கழிப்பறைகளை பயன்படுத்த
நேரடி தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கழிப்பறைகளை தொடர்ந்து பயன்படுத்துதல் குறித்தும் விவாதித்தல்

பொருள்: 8. 3 குழுக்களுக்கு ஒத்துழைப்பு :

கிராம நலன் கருதி கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவில் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தல்
மற்றும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை நல்கிட உறுப்பினரிடம்  கோருதல்
Laaco/2019

பொருள் :8.. 4 திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல்:

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள்
வருமான இழப்பு  மருத்துவச் செலவு குழந்தையின் வளர்ச்சி பாதிப்பு ஆகிய தீமைகள் குறித்து கிராம சபை உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

பொருள்: 8. 5 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள்:

ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் பராமரிப்பு மற்றும் அவற்றின் தொடர் செயல்பாடு குறித்து விவாதித்தல் மற்றும் தனிநபருக்கு கழிவறை கட்ட இடம் இல்லாத பட்சத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமுதாய கழிப்பறை கட்டிக் கொடுத்தல் குறித்து விவாதித்தல் மற்றும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை அறவே அகற்றப்பட்ட மேற்படி இடத்தில் ஊராட்சியின் பொது தேவைக்காக பயன்படுத்துதல்
மற்றும் பராமரித்தல் குறித்து விவாதித்தல்

பொருள்: 8.6 பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள்:

அரசு பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் கழிப்பறைகளை பராமரித்திட கிராம வறுமை ஒழிப்பு சங்கம்/ ஊராட்சி அளவிலான சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு மூலம் ஈடுபடுத்தப்படும் துப்புரவு பணியாளர்கள் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை ஒவ்வொரு நாளும் இரண்டு முறை சுத்தம் செய்தல் பள்ளி துவங்கும் முன்பு வகுப்பறைகளை தூய்மைப்படுத்துதல் பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்துதல்
கழிப்பறைகளில் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு  வசதிகள் ஏற்படுத்துவது குறித்து விவாதித்தல்

பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல்:

தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஊரக பகுதிகளில்  உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான சுகாதாரம் குறித்த படம் வரைதல் வண்ணம் தீட்டுதல் கட்டுரை எழுதுதல் மற்றும் பேச்சுப் போட்டிகள் பள்ளிகள் அளவில் நடத்தப்படுவது குறித்து விவாதித்தல்

பொருள்: 8.7 திடக்கழிவு மேலாண்மை திட்டம் :

தூய்மை காவலர்கள் கிராமங்களில் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்

பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை காவலர்களுக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்வதுடன் வீட்டையும் கிராமத்தையும் சுத்தமாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளுதல்

பொருள்: 8.8 அனைத்து ஊராட்சி பகுதிகளை ஒட்டி உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திட  வேண்டி ஆற்றுப்படிகளில் கழிவுநீர் கலப்பதை மற்றும் குப்பைகளை கொட்டி ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க செயல்திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்துதல்.

பொருள்: 8.9 அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தில் முறையாக உரம் தயாரித்திட கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உரம் தயாரித்தல்

ஊராட்சியில் உள்ள மரக்கன்றுகளுக்கு பயன்படுத்திடவும் மற்றும் எஞ்சிய உரத்தினை தேவையான ஊராட்சி /தனிநபர்களுக்கு விற்பனை செய்தல் குறித்து விவாதித்தல்

பொருள்: 8.10 முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் உறுதிமொழியை கிராம சபை உறுப்பினர்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளுதல்

பொருள்: 9  ஜல் சக்தி இயக்கம்
Laaco/2019

ஓம்.கா.பாஸ்கரன்
இயக்குநர்

இயக்குநருக்காக,
05/.08/ 19

✍ கிராம சபை விழிப்புணர்வு பணியில்.........
💥💥💥💥💥💥💥💥💥
நாஞ்சில்
கோ கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI- CORRUPTION ORGANIZATION
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர்- 641 652
உலாப்பேசி:
98 655 90 723
மின்னஞ்சல் :
nanjillaacot@gmail.com

அரிமா ரா. சங்கர்
மாநில தலைவர்
அரியலூர்
உலாபேசி :98655 43303

M. விவேகானந்தன்
மாநில பொது செயலாளர்
திருச்சி
உலாபேசி :94886 11427

No comments:

Post a Comment