Tuesday 5 April 2022

செந்தில் மனித உரிமை ஆணையம்

ஒப்புகையுடன் இணைந்த பதிவு அஞ்சல் 

மனுதாரர் பெயர் :
N. செந்தில் குமார், 

வயது : 23 

தந்தை பெயர் :.நடராஜன்

இருப்பிட முகவரி :
18/421, M.K.P . லே-அவுட், 
சேயூர் ரோடு, சூளை
அவினாசி – 641 654,

மாவட்டம்: திருப்பூர் 

தொடர்பு எண்  : 77080 84736

எதிர் மனுதாரர்கள் :

01. திரு செல்வம் 
தலைமை காவலர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்
திருப்பூர் மாநகரம்

02. திரு. கார்த்திக் 
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம் 
திருப்பூர் மாநகரம்

03. திரு. அர்ச்சுனன் 
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம் 
திருப்பூர் மாநகரம்

04. திரு ஜெயசந்திரன் 
சார்பு ஆய்வாளர் 
திருப்பூர் தெற்கு காவல் நிலையம் 
திருப்பூர் மாநகரம்

05.  திரு. பிரகாஷ் 
காவல் ஆய்வாளர் 
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்
திருப்பூர் மாநகரம்

06.திரு.சஞ்சய் குமார் 
காவல் ஆணையர்
திருப்பூர் மாநகரம்

07. திரு டாக்டர் கே எஸ். பழனிச்சாமி 
முன்னாள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 
இன்னாள் ஊரக வளர்ச்சி இயக்குநர் 
ஊரக வளர்ச்சி இயக்குநரகம் 
சென்னை

08 பொது தகவல் அலுவலர் /  துணை ஆணைய‌ர் 
மாநகர காவல் ஆணையர் அலுவலகம் 
திருப்பூர்

09.மேல்முறையீட்டு அலுவலர்/காவல் ஆணையர் 
மாநகர காவல் ஆணையர் அலுவலகம் 
திருப்பூர்

10.திரு.சுரேஷ் குமார் 
உதவி ஆணையர் 
சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு  அலுவலகம் 
திருப்பூர்

11.திரு அருண் குமார் 
தலைமை காவலர் 
சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு அலுவலகம் 
திருப்பூர்.

பெறுநர் :
தலைவர் அவர்கள்
மாநில மனித உரிமைகள் ஆணையம்    
143,P S  குமாரசாமி ராஜா சாலை, கிரீன்வேஸ் சாலை, அடையார், சென்னை - 600 028

அய்யா,

பொருள் : தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம்- 2003 க்கு எதிராக கூடுதல் வட்டி வசூலித்ததுடன் எனது இருசக்கர வாகனத்தினை சட்ட விரோதமாக பறித்து சென்ற எதிரிகள்  மீது எதிர்மனுதாரர் களிடம் புகார் அளித்தும் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யாமலும் எனது இருச்சக்கர வாகனத்தினை  மீட்டு தராமலும்  எதிரிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், கந்து வட்டி கும்பல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு எனது இருச்சக்கர வாகனத்தினை மீட்டு தரக்கோரியும் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும், பொருளாதார இழப்பீட்டினையும் ஏற்படுத்திய எதிர்மனுதாரர்களிடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையினை பெற்றுத்தர கோரியும் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993  சட்டப்பிரிவு 36/2  இன் கீழான மனு,

பார்வை : 
01.இருச்சக்கர வாகன பதிவு சான்று(R C BOOK) நகல் 

02.திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு நான் அனுப்பிய CrPc 154(3)   இன் கீழ் புகார் மனு நாள் :12.03.2019

03.தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு  7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல் வழங்க கோரி நான் அனுப்பிய மனு நாள் :31.03.2019

04.தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு  19(1) இன் கீழ் நான் அனுப்பிய முதல் மேல் முறையீட்டு மனு நாள் :08.04.2019

05.திருப்பூர் தெற்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் 91 CrPc ன் கீழ் அழைப்பானை நாள் :22.04.2015 (ஆண்டு தவறாக உள்ளது) 
அனுப்பப்பட்ட நாள் :23.04.2019 
கிடைக்கப்பெற்ற நாள் : 25.04.2019 நேரம் :4 மணி 
விசாரணை நாள் :25.04.2019  நேரம் :காலை 10 மணி 

06.இந்திய அஞ்சல் துறையின்  ஆன்லைன் சான்று நகல்: 25.04.2019

07  ஏழு தினங்களுக்கு முன் விசாரணை அழைப்பானை அனுப்ப கோரிய எனது கடிதநாள்:03.05.2019

08. திருப்பூர் தெற்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் 91 CrPc  ன் கீழ் அழைப்பானை நாள் :04.05 .2015(ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது) 
கிடைக்கப்பெற்ற நாள் :07.05.2019
விசாரணை நாள் :07.05.2019 நேரம் குறிப்பிட படவில்லை. 

09. .இந்திய அஞ்சல்துறை ஆன்லைன் சான்று நகல் :07.05.2019

10 .07.05.2019 அன்று தெற்கு காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு சென்றது  குறித்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நான் அனுப்பிய விளக்க கடிதம் நாள் : 13.05.2019

11.பொது தகவல் அலுவலரின் பதில் கடித நாள் :17.05.2019 
அனுப்பபட்ட நாள் : 21.05.2019
கிடைக்கப்பெற்ற நாள் : 23.05.2019

12. .பொது தகவல் அலுவலரின் பதில் கடித நாள் :17.05.2019 
அனுப்பபட்ட நாள் : 21.05.2019
கிடைக்கப்பெற்ற நாள் : 23.05.2019

13. பொதுதகவல் அலுவலரும் மேல் முறையீட்டு அலுவலரும் ஒரே பதில் கொடுத்ததுடன்  நான் கோரிய தகவல்களை மறுத்திருப்பதின் மூலம் முழுமையான தகவல்களை வழங்கக்கோரி  மீண்டும் சட்டப்பிரிவு 19(1) இன் கீழ் முதல் மேல்முறையீட்டு இரண்டாவது கடிதத்தினை 28.05.2019 அன்று அனுப்பி உள்ளேன். 

14. திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணையர் அவர்களுக்கு 07.08.2019 அன்று அனுப்பப்பட்ட  கடிதம். 

15.சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணையர் அவர்கள் 11.09.2019 அன்று கையொப்பமிட்டு 12.09.2019 அன்று அனுப்பிய விசாரணை அழைப்பாணை கடிதம். கிடைக்கப்பெற்ற நாள் :14.10.2019 

16. விசாரணை அழைப்பாணை காலதாமதமாக பெறப்பட்டதற்கான இந்திய அஞ்சல் துறையின் ஆன் லைன் சான்று. 

17.விசாரணை அழைப்பாணை காலதாமதமாக கிடைக்கப்பெற்றது குறித்து சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணைய‌ர் அவர்களுக்கு 03.10  2019                              அன்று நான் அனுப்பிய கடிதம் 

18. எனது இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்ற எதிரிகள்  கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவுகள் மற்றும் எதிர்மனுதாரர்கள் 04, 05 மற்றும் 11 பேசிய ஆடியோ நுண்பட சுருள்.

மனுதாரராகிய நான் மேற்காண் முகவரியில் வசித்து வரும் ஒரு இந்திய குடிமகன் ஆவேன்.

எதிரியான விக்னேஷ்வரன் என்பவர் கோவை  R.V.S.  கலைக்கல்லூரியில் 2013 – 2016 கல்வி ஆண்டில் என்னுடன் கல்வி பயின்ற கல்லூரி நண்பர் ஆவார் .

எனது தந்தையின் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைபட்டதால் எதிரி விக்னேஷ்வரன் என்பவரிடம் 25.07.2018 அன்று ரூபாய் 25,000.(இருபத்தைந்தாயிரம்) கடனாக பெற்றேன்.

ஒரு வாரத்தில் திருப்பி கொடுப்பதாக சொன்னேன்.ஆனால் , என்னால் பணத்தினை திருப்பி கொடுக்க முடியவில்லை.

எனவே முதல் தவணையாக ரூபாய் 5000 , இரண்டாம் தவனையாக ரூபாய் 3000 , மூன்றாம் தவணையாக ரூபாய் 5000 , நான்காம் தவணையாக ரூபாய் 5000 , ஐந்தாம் தவணையாக ரூபாய் 5000 , ஆறாம் தவணையாக ரூபாய் 10,000 . ஆக மொத்தம் ஆறு தவணைகளாக ரூபாய் 33,000 திருப்பி கொடுத்து விட்டேன்.

5000 ரூபாய் மட்டும் வங்கி கணக்கு மூலமாகவும் , ஐந்து தவணைகள் நேரடியாகவும் கொடுத்துள்ளேன்.பணம் கடன் கொடுக்கும் போது வட்டி எவ்வளவு என்பது குறித்து விக்னேஷ்வரன்  என்பவர் எதுவும் கூறவில்லை.

எனினும் அசல் 25,000. 00 த்துடன் ஆறு மாத கால வட்டியாக சுமார் 
8,000. 00 ரூபாய் திருப்பி கொடுத்து விட்டேன்.

இந்நிலையில் 25,000 ரூபாய்க்கு வாரம் 1500 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கான வட்டி மட்டும் 36,000 ரூபாய் ஆகி உள்ளது. 33,000 ரூபாய்தான் கொடுத்திருக்கிறாய், வட்டி 3000 ரூபாய் மற்றும் அசல் 25,000 ரூபாய் சேர்த்து ஆக மொத்தம் 28,000 ரூபாய் கொடுக்கும் படி எதிரி விக்னேஷ்வரன்  என்பவர் கூறினார்.

எனக்கு இது மிகுந்த அதிர்ச்சி அளித்தது. 

வாரம் 1500 ரூபாய்  வட்டி கொடுப்பதாக நான் ஒப்புக்கொள்ளவில்லை. 25,000 ரூபாய் அசல் மற்றும் வட்டியாக சுமார் ரூபாய் 8000 கொடுத்துவிட்டேன். இனிமேல் என்னால் கூடுதல் வட்டி கொடுக்க முடியாது என கூறினேன்.

இந்நிலையில் 20.01.2019 அன்று திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உஷா தியேட்டர் அருகில் நான் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது எதிரி விக்னேஷ்வரன் என்பவர் முத்துப்பாண்டி என்பவருடன் வந்து எனது இருசக்கர வாகனத்தினை பறித்து எடுத்து சென்றுவிட்டனர்.

முழு பணத்தினையும் கொடுத்தால் தான் இருச்சக்கர வாகனத்தினை திருப்பி கொடுக்க முடியும் என கூறிவிட்டார்.

பார்வை :01  இல் காணும் எனது தந்தை நடராஜன் என்பவருக்கு சொந்தமான TN 39 BV 7722 ஹோண்டா HORNET என்ற ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தினை பறித்து சென்றது அதிர்ச்சி அடைந்தேன்.

அதன் பிறகு மூன்று முறை வாகனத்தினை திருப்பி கொடுப்பதாக கூறி திருப்பூர் உஷா தியேட்டர் அருகே விக்னேஷ்வரன் :என்பவர் வரச் சொன்னார். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் செல்லும் போது என்னிடம் வாகனத்தை கொடுக்க மறுத்து விட்டார்.

எனது வாகனத்தினை பறித்து சென்ற குற்றம் நடந்த இடம் திருப்பூர் மாநகர காவல் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்ற காரணத்தினால் தெற்கு காவல் நிலையம் சென்று இது குறித்து 19.02.2019 அன்று புகார் அளித்தேன்.

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் அன்றைய தினம் பணியில் இருந்த  எதிர்மனுதாரர் :01 தலைமை காவலர் செல்வம் மற்றும்  எதிர்மனுதாரர் :02  கார்த்திக், எதிர்மனுதாரர் :03 அர்ச்சுனன் என்ற காவலூழியர்கள் , எனது புகார் குறித்து கேட்டறிந்தனர்.

நான் புகார் அளித்த எதிரி  விக்னேஷ்வரன் என்பவரை காவல் நிலையம் வரும்படி 
அழைத்தனர் .

எதிரி விக்னேஷ்வரன்  என்பவருடன்  இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் கணேஷ் மற்றும் இருவர் வந்திருந்தனர்.

எதிரி விக்னேஷ்வரன் என்பவர் நான் பணம் எதுவும் திருப்பி கொடுக்க வில்லை என கூறினார். 
ஆடியோ ஆதாரம் உள்ளது என நான் தெரிவித்த போது பணம் வாங்கியதை ஒப்புகொண்டார்.

எதிரி விக்னேஷ்வரன் என்பவருடன் வந்தவர்கள்  இந்து முன்னனியை சேர்ந்த அப்பகுதி பிரமுகர்கள்  என சொன்னார்கள்.

எதிரியுடன் வந்தவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து என்னை மிரட்டினார்கள் . 
வாரம் 1500 ரூபாய் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும் எனக் கூறினார்கள்.

அதற்கு  எதிர்மனுதாரர்கள் 01,02 மற்றும் :03   என்பவர்கள் ஆமாம் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும். அப்போது தான் இருச்சக்கர வாகனத்தினை திருப்பி கொடுப்பார்கள் என்றார்கள் .

என்னால் கூடுதல் வட்டி கொடுக்க பணம் இல்லை என்றேன்.

அதற்கு எதிர்மனுதாரர் :01 தலைமை காவலர் செல்வம் என்பவர் பணம் கொடுக்க முடியாது என்றால் செத்து போ என ஒருமையில் பேசினார். 

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது 

உதவி ஆய்வாளர் ஜெயசந்திரன் என்பவரும் எனது புகார் குறித்து விசாரனை செய்தார்கள்.

கூடுதல் வட்டி வசூலிப்பது தவறு என்றும் இருச்சக்கர வாகனத்தினை வாங்கி என்னிடம் கொடுக்குமாறு எதிர்மனுதாரர் :03 காவலூழியர்  அர்ச்சுனன் என்பவரிடம் கூறினார்.

ஆனால் ,எதிர்மனுதாரர் :03 காவலூழியர் அர்ச்சுனன் என்பவர் எனது வாகனத்தினை திரும்ப பெற்று தரவில்லை.

மற்றொரு காவல் உதவி ஆய்வாளரும் (பெயர் தெரிய வில்லை) எனது புகாரினை விசாரனை செய்து எதிரி விக்னேஷ்வரன் என்பவரிடம் செல்போனில் பேசினார்.

பெர்னாண்டஸ் என்ற காவலூழியரும் எனது புகார் குறித்து கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டார்.சுமார் பத்து தினங்களாக  தெற்கு காவல் நிலையம் அலைந்தேன். 
எனது புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

எனது புகாரினை பெற்று மனு ரசீது வழங்கவோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ இல்லை.

ஆளாளுக்கு வாய் மொழியாக தான் விசாரணை செய்தார்கள்.
எதிரியுடன் வந்த இந்து முன்னணியை  சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் வைத்தே கூடுதல் வட்டி கொடுக்க வேண்டும் என்றதை தெற்கு காவல் நிலைய காவலூழியர்கள்  வேடிக்கை பார்த்தனர்.கந்து வட்டிக்கு ஆதரவாக காவலூழியர்கள் செயல் பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கந்து வட்டி கும்பலிடம் இருந்து எனது இரு சக்கர வாகனத்தை மீட்டு கொடுங்கள் என நீதி கேட்டு சென்ற எனக்கு கடமை தவறிய திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவல் ஊழியர்களால் நீதி மறுக்கப்பட்டுள்ளது.

எனது புகாரினை பெற்று உரிய மனு ரசீது வழங்கி அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்திருக்க வேண்டும்.

புகார் அளித்த எதிரி விக்னேஷ்வரன்  என்பவருடன் எனக்கு சம்பந்தமே இல்லாத இந்து முன்னனியை சேர்ந்த மூவர் காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு காவலூழியர்கள் முன்னிலையில் என்னை மிரட்டினார்கள் 

25,000 கடனுக்கு 36,000 ரூபாய் வட்டி மட்டும் கொடுக்க வேண்டும் என காவல் ஊழியர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதின் மூலம் கந்து வட்டி கும்பலுக்கும் திருப்பூர் தெற்கு காவல் ஊழியர்களூக்கும் தொடர்பு இருக்கும் என இதன் மூலம் உறுதியாக தெரிய வருகிறது.  

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் எனக்கு நீதி மறுக்கப்பட்ட காரணத்தினால் நீதி வேண்டி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு குற்ற விசாரணை முறைச்சட்டப் பிரிவு 154(3) இன் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் பார்வை:02 இல் காணும் புகார் மனுவினை  12.03.2019 அன்று அனுப்பி இருந்தேன்.

அதன் நகலினை எதிர்மனுதாரர் :07 திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் அவர்களுக்கும் அனுப்பினேன்.

இந்நிலையில் எதிரி விக்னேஷ்வரனுடன் வந்த இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மீதும் புகார் அளித்த காரணத்தினால் மற்றொரு இந்து முன்னணி நிர்வாகி நித்யானந்தம் என்பவர் எனது மொபைல் போனுக்கு அழைத்து சங்கர் கணேஷ் மீது கையை நீட்டினாலே கையை வெட்டுவேன். நீ நேரில் வா புகார் ஏன் கொடுத்தாய் என கொலை மிரட்டல் விடுத்தார்.

மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு புகார் அனுப்பிய பின்னர் எதிரிகளிடமிருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்த காரணத்தினாலும் சுமார் 18 தினங்களாக எனது புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினாலும் எனது புகார் மனு குறித்து பார்வை :03 இல் காணும்  மாநகர காவல்துறை எதிர்மனுதாரர் :08 பொது தகவல் அலுவலரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் 31.03.2019 அன்று தகவல் கோரினேன்.

எதிர்மனுதாரர் :08 கடமை தவறிய பொது தகவல் அலுவலர் அவர்களும் 48 மணி நேரத்திற்குள் எனக்கு பதில் வழங்க வில்லை. எனவே பார்வை :04 இல் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 19(1) இன் கீழ் 08.04.2019 அன்று எதிர் மனுதாரர் :09 என்பவருக்கு முதல் மேல்முறையீடு செய்தேன்.

எதிர்மனுதாரர் :05 திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் அவர்களின் பார்வை :05 இல் காணும் CrPc 91  இன் கீழ் 22.04.2019 அன்று அனுப்பப்பட்ட  அழைப்பாணை கடிதம் விசாரணை நாளான 25.04.2019  அன்று பார்வை :06 இல் காணும் இந்திய அஞ்சலக சான்று மூலம் 25.04.2019 அன்று தான் கிடைக்கப்பெற்றது 

விசாரணை  கடிதம் காலதாமதமாக கிடைக்கடப் பெற்றதால் விசாரணை நாளான 25.04.2019 அன்றைய தினம் காலை 10 மணி விசாரணையில் கலந்து கொள்ள இயலாத காரணத்தினை எதிர்மனுதாரர்:05 காவல் ஆய்வாளர் அவர்களின்  மொபைல் எண்ணிற்கு அழைத்து தெரிவித்தேன். 

விசாரணைக்கு அழைக்கும் போது தான் வரவேண்டும் என தெரிவித்து விட்டார்கள்.

எனவே விசாரணை தேதிக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக  கடிதம் அனுப்பக்கோரி பார்வை :07  இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :05 காவல் ஆய்வாளருக்கு 03 05.2019 அன்று அனுப்பினேன்.

04.05.2019 தேதியிட்டு   CrPc 91  இன் கீழ் 07. 05.2019 அன்று விசாரணைக்கு வருமாறும், நான் கோரிய ஒரு வாரகால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்து எதிர்மனுதாரர்:05  காவல் ஆய்வாளர் அவர்களிடம் இருந்து வரப்பெற்ற  பார்வை :08 இல் காணும் கடிதம் இந்திய அஞ்சலக ஆன்லைன் சான்று பார்வை:09 இன் மூலம் விசாரணை நாளான 07.05. 2019 அன்று தான் எனக்கு கிடைக்கப்பெற்றது.

அதில் விசாரணை நேரம் குறிப்பிடாத காரணத்தினால் மாலை சுமார் 7.00 மணி அளவில் திருப்பூர் தெற்கு காவல் நிலையம் சென்றேன்.

அங்கு அப்போது எதிர் மனுதாரர் :05 காவல் ஆய்வாளர் பணியில் இல்லை.

பணியில் இருந்த எதிர்மனுதாரர் :04 உதவி ஆய்வாளர் ஜெயசந்திரன் என்பவரிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருப்பதாக தெரிவித்த போது எதிர் மனுதாரர்:05  காவல் ஆய்வாளர் விடுப்பில் சென்றிருப்பதாகவும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வருமாறும் தெரிவித்தார்.

இதனால் மிகுந்த மன துயரத்திற்கு ஆளாகினேன்

விசாரணைக்கு நேரில் ஆஜராகியது குறித்து பார்வை :10  இல் காணும் விளக்க கடிதத்தினை எதிர்மனுதாரர் :05 காவல் ஆய்வாளர் அவர்களுக்கு 13.05 2019 அன்று அனுப்பினேன்.

ஆனால் அதன் பிறகு எந்த விசாரணை அழைப்பாணையும் வரவில்லை.

இந்நிலையில் 31.03 2019  அன்று 48 மணி நேரத்தில் நான் கோரிய தகவல் பார்வை :11 இல் காணும் 23.05.2019 அன்று எதிர்மனுதாரர் :08 பொதுதகவல் அலுவலரிடம் இருந்து  சுமார் 52 தினங்கள் கடந்து வரப்பெற்றது.

08.04.2019 அன்று சட்டப்பிரிவு 19 (1) இன் கீழ் எதிர்மனுதாரர் :09 முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு நான் அனுப்பிய மனுவிற்கு பார்வை :11 இல் காணும் 23.05 2019 அன்று பொதுதகவல் அலுவலரிடம் இருந்து சுமார் 44 நாட்கள் கடந்து பதில் வரப்பெற்றது.

பார்வை :10 மற்றும் 11 இல் ஒரே பதில் தான் வழங்கப்பட்டுள்ளது. 

அதில்  நான் கோரிய முழுமையான தகவல் வழங்கப்பட வில்லை. தங்களை விசாரணைக்கு ஆஜராக கோரி இரண்டு முறை 91 கு. வி. மு. ச. வின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகாததால் மனு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சொல்லொனா துயரத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே பார்வை :12 இல் காணும் சட்டப்பிரிவு 19(1)  இன் கீழ் முதல் மேல்முறையீட்டு இரண்டாவது கடிதத்தினை 28.05.2019 அன்று 
எதிிர்மனுதாரர் :09 மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பினேன்.

ஆனால் இன்று வரை எனக்கு பதில் வழங்க வில்லை.

சம்மன் காலதாமதமாக  அனுப்பப்பட்டதால் முதல் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என தெரிவித்தும்., இரண்டாம் விசாரணைக்கு ஒரு நாள் கூட கால அவகாசம் வழங்காமலும் இரண்டாம் விசாரணை நாளான 07.05.2019 அன்று விசாரணைக்கு நேரில் சென்ற போது விசாரணை அலுவலராகிய காவல் ஆய்வாளர் விடுப்பில் சென்று இருந்த காரணத்தினால் விசாரணை நடை பெறாத காரணம் குறித்தும் பார்வை :09 இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :05 காவல் ஆய்வாளருக்கு அனுப்பினேன்.

திருப்பூர் தெற்கு காவல் நிலைய கடமை தவறிய காவலூழியர்களையும் எதிர் மனுதாரர்களாக பார்வை :02 இல் காணும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள காரணத்தினால் 
தான் எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என உறுதியாக தெரிய வருகிறது.

திட்டமிட்டு மறுக்கப்பட்ட நீதியை பெற வேண்டி பார்வை:13 இல் காணும் புகார் மனுவினை எதிர்மனுதாரர் :10  திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவிஆணையர் அவர்களுக்கு  07.08.2019          அன்று
அனுப்பினேன் 

ஆனால் எதிர்மனுதாரர் :11 தலைமை காவலர் அருண் குமார் என்பவர் விசாரணைக்கு வருமாறு மொபைல் போனில் அழைத்ததின் பேரில் 23.08.2019 அன்று நேரில் சென்றேன். 

நான் புகார் அளித்த எதிரிகள்  வர வில்லை. 

அன்றைய தினம் எதிர்மனுதாரர்:10 உதவி ஆணையர் இல்லாத காரணத்தினால் விசாரணை நடை பெற வில்லை. 

எதிர்மனுதாரர் :11 தலைமை காவலர் அருண்குமார் எனது கோரிக்கையினை கேட்டு விட்டு இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்ற எதிரிகள் மீது வழக்கு போட எங்களுக்கு அதிகாரம் இல்லை. வண்டியை வாங்கி கொடுப்போம் என்றும் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தார். 

நான் அங்கிருந்து வந்த பிறகு இந்து முன்னணியை சேர்ந்த எதிரிகள் வந்திருப்பதாகவும் அவர்கள் தெரியாமல் கொலை மிரட்டல் விட்டதாக தெரிவித்ததாகவும் என்ன செய்யலாம் என மொபைல் போனில் அழைத்து எதிர் மனுதாரர்:11 என்பவர் கேட்டார். 
நான் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன். 

இந்நிலையில் பார்வை :14  இல் காணும் 13.09.2019 அன்று விசாரணைக்கு வருமாறு அனுப்பிய கடிதம்  11.09.2019 அன்று எதிர்மனுதாரர் :10 என்பவரால் கையொப்பமிடப்பட்டு  12.09.2019 அன்று பதிவஞ்சலில் அனுப்பப்பட்டு பார்வை :15  இல் காணும் இந்திய அஞ்சலக ஆன்லைன் விபரபடி 14.09.2019 அன்று எனக்கு கிடைக்கப்பெற்றது.

திருப்பூர் மாநகர காவல்துறையினர் எனக்கு தீங்கு செய்யும் நோக்கத்துடன் செய்து வரும் தவறினை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவும் செய்திருப்பது  எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சொல்லொணா துயரத்தினையும்  ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் எதிர்மனுதாரர் :11  தலைமை காவலர் அருண்குமார் 30.09.2019 அன்று அழைத்து விசாரணைக்கு வராதது குறித்து கேட்டு விட்டு  01.10.2019 அன்று உதவி ஆணையர் விசாரணைக்கு நேரில் வரும்படி கூறியதாக தெரிவித்தார். 

ஆனால்  நான் 01.10.2019 அன்று நேரில் சென்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரையிலும்  சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு அலுவலகத்தில் காத்திருந்தேன். 

அன்றைய தினமும் எதிர்மனுதாரர்: 10 அலுவலகம் வரவில்லை. 

நான் புகார் அளித்த எதிரிகளும் வரவில்லை. 
எதிரிகள் போனை எடுக்க வில்லை என தலைமை காவலர் தெரிவித்தார்கள். 

எதிர்மனுதாரர்:10 உதவி ஆணையர் வந்த பிறகு மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக கூறி என்னை எதிர்மனுதாரர் :11 தலைமை காவலர் அனுப்பி விட்டார். 

எனவே  விசாரணை கடிதம் காலதாமதமாக வந்தது குறித்து விளக்க கடிதத்தினை பார்வை:16 இல் காணும் 03.10.2019 அன்று  எதிர்மனுதாரர் :10 உதவி ஆணையர் அவர்களுக்கு அனுப்பினேன். 

அதன் நகலினை காவல்துறை தலைவர் அவர்களுக்கும், உயர்நீதிமன்ற மனித உரிமை பிரிவு  பதிவாளர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளேன். 

கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்து கொலை மிரட்டல், கூடுதல் வட்டி கேட்டு எனது இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்றவர்கள் மீது உரிய விசாரணை செய்து இந்திய  தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் இன்றைய தினம் வரையில் வழக்கு பதிவு செய்யவும் இல்லை. 

எனது இருச்சக்கர வாகனத்தினை எதிரிகளிடம் இருந்து இன்றைய தினம் வரையிலும் மீட்டு கொடுக்கவும் இல்லை. 

எனது இருச்சக்கர வாகனம் இல்லாமல்  பத்து மாதங்கள் சுமார் 283  தினங்களாக எனது வாழ்வாதாரமும் சுதந்திரமும்  எதிரிகளால்  திட்ட மிட்டு பறிக்கப்பட்டதன் மூலம் நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். 

எனது இருச்சக்கர வாகன காப்பீடு தேதி காலாவதியாகிய பின்னரும் எதிரிகள் சட்ட விரோதமாக இன்றைய தினம் வரையிலும் பொது சாலையில் சட்ட விரோதமாக பயன் படுத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாநகர காவல்துறையினரால் எனக்கு நீதி கிடைக்க வில்லை என கருதி தான் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உடனடியாக நீதி கிடைக்கும் என நம்பினேன்

அவர்களாலும் பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்க வில்லை. 

எனது இருசக்கர வாகனத்தினை கந்து வட்டி கும்பல் சட்ட விரோதமாக பறித்து சென்றதின் மூலம்  மனித உரிமை மீறப்பட்டுள்ளது. 
எனது வாழ்வாதாரம் இழந்து கேள்வி குறியாகி உள்ளது

இறுதியாக  பாதிக்கப்பட்ட எனக்கு தங்களை விட்டால் நீதியை பெற்றுத்தர வேறு  யாரும் இருப்பதாய் தெரிய வில்லை. 

பார்வை :18 இல் காணும் எதிரி :01 விக்னேஷ்வரன் மொபைல் எண் :9976765562 மற்றும் கொலை மிரட்டல் விட்ட 
எதிரி 02 இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் கணேஷ் மொபைல் எண் :99521 67698
எதிரி 03.இந்து முன்னணியை சேர்ந்த நித்யானந்தம் மொபைல் எண் :99528 86871 மற்றும் 
எதிர்மனுதாரர் 04.ஜெயசந்திரன் சார்பு ஆய்வாளர் மொபைல் எண் :9442420502
எதிர்மனுதாரர் :05 பிரகாஷ் காவல் ஆய்வாளர் மொபைல் எண் :94981 59296
எதிர்மனுதாரர் :11 அருண்குமார் தலைமை காவலர்  மொபைல் எண் :6382904648 
ஆகியவர்கள் 
என்னிடம் மொபைல் போனில் அழைத்து  பேசிய ஆடியோ பதிவினை நுண்பட சுருளாக (CD) இத்துடன் இணைத்துள்ளேன்.

கோரிக்கைகள் :

01.எனது புகார் மனு மீது உரிய விசாரணை செய்து இருச்சக்கர வாகனத்தினை சட்ட விரோதமாக பறித்து சென்ற எதிரிகள் மீது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் - 38/2003 இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோருகிறேன். 

02.என்னிடம் பறித்து சென்ற எனது தந்தை யின் இரு சக்கர வாகனத்தினை மீட்டு தரக்கோருகிறேன். 

03.கூடுதல் வட்டி வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிந்தும் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதுடன் நான் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத கடமை தவறிய திருப்பூர் தெற்கு காவல் நிலைய எதிர்மனுதாரர்கள் : 01 முதல் 05 மற்றும் எதிர்மனுதாரர்கள் :10, 11 சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவலூழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

04.கடமை தவறிய காவலூழியர்களுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் காவலூழிய பணிக்கு தகுதியற்ற  எதிர்மனுதாரர் :06 திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

05.கந்து வட்டி குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தவறிய திருப்பூர் மாவட்ட முதன்மை நிர்வாக ஊழியரான எதிர் மனுதாரர் :07  முன்னாள் மாவட்ட ஆட்சியர் / தற்போதைய ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

06. பார்வை :03 இல் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு பார்வை : 11 இல் காணும் பதில் மனுவில் இரண்டு முறை விசாரணைக்கு அழைத்தும் நான் விசாரணைக்கு செல்லாத காரணத்தினால் எதிர்மனுதாரர்:06 என்பவருக்கு அனுப்பிய புகார் மனு மீது விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் வழங்கிய எதிர் மனுதாரர் :08 பொது தகவல் அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

 07.பார்வை :04 இல் காணும் மேல் முறையீடு செய்த பின்னர் பார்வை :12 இல் காணும் எதிர்மனுதாரர் :08 பொது தகவல் அலுவலர் கொடுத்த அதே பொய்யான பதிலை மீண்டும் வழங்கியதுடன் பார்வை : 13 இல் காணும் மேல் முறையீட்டு இரண்டாவது கடிதத்திற்கு இன்றைய தினம் வரை பதில் வழங்காத எதிர்மனுதாரர் :09  என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

08.மேற்காண் எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

09..இருச்சக்கர வாகனம் இல்லாத காரணத்தினால்  பணிக்கு செல்வதற்கும் அவசர தேவைகளுக்கும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான எதிர் மனுதாரர்களிடமிருந்து உரிய இழப்பீட்டு தொகையினை பெற்று தருமாறு வேண்டிக் கொள்கிறேன். 

எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் நான் கூறியுள்ள சங்கதிகளை நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 101 மற்றும் 105 இன் கீழ் எனக்கு இருக்கிறது என்பதினை நான் அறிவேன். 
எனது புகாரில் நான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை என்னால் நிரூபிக்க இயலாமல் எதிர் மனுதாரர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டால்  இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு -211 இன் கீழ் நீதி மன்றம் வழங்கும் தண்டனையை மனதார ஏற்றுக்கொள்வேன் என இந்திய சாட்சியச்சட்ட உறுபு - 70 இன் கீழ் பிரம்மாணமாக இன்றைய தேதியில் கையொப்பம் செய்துள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் :

நாள் :01.11.2019                                 
இடம்:சேயூர்                                                                                                       

மனுதாரர் 



N. .செந்தில் குமார்

No comments:

Post a Comment