Thursday 9 May 2019

தனியார் பள்ளிகள் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க தடை !

லஞ்சம் தவிர்!                    நெஞ்சம் நிமிர்!!

              *முக்கிய செய்தி" " 

📢 *தனியார் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம்  வசூலிக்க தடை* !!
Laaco :22 /04/2018

*தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதினை முறைப்படுத்துதல்) சட்டம் -2009*

*THE TAMIL NADU SCHOOLS (REGULATION OF COLLECTION OF FEE)  ACT -2009*

*சட்ட எண் : 22 / 2009*

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து  வரையறை இல்லாமல் அவர்கள் விருப்பம் போல் அதிக கல்விக் கட்டணங்களை வசூலித்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தனர்.

இந்த கல்விக்கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட.  தமிழக அரசு இந்த சட்டத்தின் படி   கல்விக்கட்டண நிர்ணய குழுவினை உருவாக்கியது.

ஓய்வு பெற்ற நீதிபதியினை தலைவராக கொண்ட இந்த குழுவினர்  ஒவ்வொரு பள்ளிகளும் வழங்கி  உள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு, மாணவர்கள் பாதுகாப்பு நலன்கள், ஆசிரியர்களின் கல்வி தகுதிகள், மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்ற பல்வேறு தகுதிகளை ஆய்வு செய்து  ஒவ்வொரு ஆண்டும் LKG முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும்  மாணவர்களுக்கான கல்விக்கட்டணங்களை பள்ளி வாரியாக தனித்தனியாக நிர்ணயம்  செய்து வருகிறார்கள்!

★இந்த கல்வி கட்டண நிர்ணயக்குழுவினரால் நிர்ணயிக்கப் பட்ட கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது  இந்தச்சட்டப் பிரிவு 3 (2)  ன் படி   தடை விதிக்கப்பட்டுள்ளது.!

★இந்தச்சட்டப் பிரிவு 9 (1)  க்கு எதிராக மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கு  மூன்று ஆண்டுகளுக்கு குறையாத ஏழாண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறை தண்டளையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.! 

★தமிழ் நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்டப்பிரிவு 9 (2)  ன் படி  குற்றவாளி என தீர்மானிக்கப்பட்ட பள்ளி நிர்வாகி  சட்டத்தை மீறி எந்த மாணவனிடமிருந்து அதிக கட்டணம்  வசூலிக்கப் பட்டதோ  அந்த மாணவனுக்கு அதிக கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.!

★கல்வி கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப் பட்ட கல்வி கட்டண விபரங்களை  ஒவ்வொரு கல்வி ஆண்டும் அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.!

ஆனால் பெரும்பான்மையான பள்ளிகள் கல்வி கட்டண விபரங்களை தகவல் பலகையில் வெளியிடுவதில்லை .

★கல்விக்கட்டண குழு நிர்ணயிக்கும்  கட்டணம் ஒர் ஆண்டுக்கான TUITION. FEES (பாடம் நடத்துவதற்கான கட்டணம் ) மட்டுமே!

★நோட்டு, புத்தகம்,  டை, பெல்ட், சாக்ஸ், டைரி  போன்ற ஸ்டேசனரிக்கு மட்டும் பள்ளி கேட்கும் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

நோட்டு புத்தகங்களில் அதிக பட்ச விற்பனை விலை (MRP) அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு அச்சடிக்கப்படாமல் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.

எந்த பொருட்கள் விற்பனை செய்தாலும் செலுத்திய பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும்.

கல்வி கூடங்கள் ஸ்டேசனரி கடைகளாக செயல்பட கூடாது..

ஸ்கூல் பேக் உள்ளிட்டவைகளை கட்டாய படுத்தி மாணவர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யக்கூடாது என ஒரு வழக்கில் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்கள்.

★பள்ளி பேருந்து, சிற்றுந்து கட்டணம் தனியாக செலுத்த வேண்டும்.

பள்ளி பேருந்துகள் சிற்றுந்துகளில் அளவுக்கதிகமான மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது .

★இதனை தவிர டேர்ம் பீஸ்,  போன்ற எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது!

★பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்கள் அனைத்திற்கும்  உரிய முறையான ரசீது வழங்க வேண்டும்!

வைப்பு நிதியாக (Deposit ) பெறப்படும் கட்டணங்களை மாணவன் பள்ளியை விட்டு செல்லும் போது திரும்ப வழங்க வேண்டும்.

கட்டிட நிதி பள்ளி வளர்ச்சி நிதி என கட்டாய நன்கொடை வசூலிக்க்கூடாது .

கரிக்குலம்அல்லது எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி  என்ற பெயரில் கொள்ளை அடிப்பார்கள் .

1.ஸ்போக்கன் இங்கிலீஷ்

2.ஹேண்ட் ரைட்டிங் 

3.டீச்சிங் எய்டு

4.ஸ்மார்ட் கிளாஸ்

5.ஹிந்தி 

6.யோகா 

7.மனவளக்கலை

8.பரத நாட்டியம் 

9.டான்ஸ் 

10.டேபிள் டென்னிஸ் 

11.கராத்தே 

12.நீச்சல் 

13.துப்பாக்கி சுடுதல் 

14.கணிணி 

15.லேபரேட்டரி 

16.பேண்ட் வாத்தியம் 

போன்ற இன்னும் பல்வேறு விதமான கட்டணங்களை குறிப்பிட்டு ஒரு தொகையினை ரசீது இல்லாமல் சட்ட விரோதமாக வசூலித்து விடுவார்கள்.

ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவனுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் எனவும் ஹேண்ட் ரைட்டிங் என ஆங்கிலம் பேசவும் எழுதவும்  தனியாக கட்டணம் வசூலிப்பது  எவ்வளவு வெக்கக்கேடான செயல் !

4000 மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் தான் கராத்தே பயில்வார்கள் .

சுமார் 50 மாணவர்கள் தான் யோகா பயில்வார்கள் .

ஆனால் LKG முதல் + 2 வரைக்கும் அனைத்து மாணவர்களிடம் இருந்தும் கரிக்கும் என்ற பெயரில் கட்டணங்கள் வசூலிப்பது முறை கேடாகும்..

LKG மாணவனுக்கு டேபிள் டென்னிஸ் கட்டணம் செலுத்த கூறுவது ஏற்புடையதா ?

உங்கள் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்லி கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்..

என்ன? எனதருமை நண்பர்களே!பெற்றோர்களே!

சட்டம் தெரியாமல் கல்வி கொள்ளையர்கள் கேட்கும் கட்டணங்களை இதுநாள் வரை கஷ்டப்பட்டு செலுத்தி இருப்பீர்கள்.

இனி மேல்  அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணங்களை மட்டும் உங்கள் குழந்தைகளுக்கு செலுத்துங்கள்.

அய்யய்யோ!

★சட்டபடி நடந்தால் தனியார் பள்ளிகளில் அனுமதி தர மாட்டார்களே?

★நமது குழந்தைகளை கவனிக்க மாட்டார்களே?

★தேர்வில் பெயிலாக்கி விடுவார்களே?

★மாற்று சான்றிதழ்  (T C) கொடுத்து அனுப்பி விடுவார்களே?

★அவர்களை நாம்  பகைத்து விட்டால் நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?

நாம் ஏழைகள்.அவர்களை நம்மால் எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா ?

தனியார் பள்ளி நிர்வாகிகள் தான் உங்கள் குழந்தைகள் அனைவருக்கும்
ழுழுமையான அளவு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி மொழி அளித்து தான் பள்ளி உரிமத்தினை புதிப்பித்து கொள்கின்றனர்.

எல்லோரும் பள்ளிக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள்!

நாமும் எங்கேயாவது கடன் வாங்கியாவது  அவர்கள் கேட்கும்  கூடுதல் கட்டணத்தை கட்டி விடுவோம்.!

என்ற பயம் குழந்தைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு காரணத்தினால் மட்டும் தான் இந்த கல்வி கொள்ளையர்கள்  சுதந்திரமாக பயம் இல்லாமல் உள்ளனர்!

சிறிய ஓலைக்குடிசையில் பள்ளி ஆரம்பித்தவர்கள் இன்று பல மாட மாளிகைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழுகின்றனர்,!

இது அனைத்தும் நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம்.

இந்த கல்வி கொள்ளையர்களை தண்டிக்க வேண்டிய. அரசு கல்வித்துறை அதிகாரிகளும் இவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு  கடமை செய்ய தவறுகின்றனர்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு  எந்த ஒரு தனியார் பள்ளிகளையும் நேரடியாக ஆய்வு செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கேடு கெட்ட கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளி கல்விக்கொள்ளையர்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் ஆண்டு தோறும் பள்ளிக்கு சாதகமான ஆய்வறிக்கையினை போலியாக. வழங்கி வந்தார்கள் .

தற்பொழுது மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள் அனைத்தும் இழுத்து மூடி ஆய்வாளர்களுக்கு வேறு பணி வழங்கி விட்டனர்.

கல்விக்கட்டணத்தை எப்படி செலுத்துவது*?

★www.tn.govt.in .school fees என்ற இணைய தள முகவரிக்கு சென்று உங்கள் மாவட்டத்தின் பெயரினையும், உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் பெயரை டைப் செய்தால் கல்வி கட்டண விபரங்கள் இருக்கும்!

2019 -2020 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து

வெளியிட படாத பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு பழைய கல்வி கட்டணத்துடன் பத்து சதவீதம் கூடுதலாக சேர்த்து அந்த கட்டணத்தினை மட்டும் வங்கி வரையோலையாக எடுத்து  உங்கள் குழந்தையின் பெயரினை குறிப்பிட்டு கடிதம் எழுதி  சம்பந்தப்பட்ட பள்ளிக்கு பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அனுப்புங்கள்.

★அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்புங்கள்.

★பள்ளி நிர்வாகம் உங்களை அழைத்து மிரட்டினால்,  முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி இயக்குநர் கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவருக்கு புகார் அனுப்புங்கள்.

★இந்த கடமை தவறிய கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ, பள்ளி நிர்வாகிகள்  உங்களை மிரட்டினாலோ அல்லது கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ  எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.!

உங்கள் புகாரினை பதிவு செய்ய "தனியார் பள்ளி புகார் " 98655 90723 என்ற நமது வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்.

✍ அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 19 (1)  அ வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :
💥💥💥💥💥💥💥💥💥       
பதிவு எண் :10 /2015 : 44 /2015

" *சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு*"
*LEGAL AWARENESS. AND ANTI CORRUPTION. ORGANIZATION*.
363,  காந்தி ரோடு, பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

LAACO வின் முக்கிய அறிவிப்பு!

நிர்வாகிகள் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் .

*நாஞ்சில். கோ.கிருஷ்ணன்*
நிறுவனர்
உலாபேசி :98655 90723
தொடர்பு கொள்ளும் நேரம் :தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை

*அரியலூர் ரா. சங்கர்*
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு கொள்ளும் நேரம் : தினமும் காலை 10 மணி முதல் 1.00 மணி வரை

*ஆ.பழனிக்குமார்*
மாநில அமைப்பு செயலாளர் 
உலாபேசி :97910 50513 
தொடர்பு நேரம் : நாள் முழுவதும் 

நன்றி 🙏

மாறுங்கள்! மாற்றுங்கள்!
கொடுக்க வேண்டாம் லஞ்சம்!

உரிமையை கேட்டுப் பெறுவோம்!👍

கல்வி கொள்ளையர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவோம்.!👍

இனி மாற்றம் என்பது நமது கையில்!👍

ஊழலுக்கு விடை கொடுப்போம்!👍

அனைவருக்கும்  இந்த செய்தியினை பகிருங்கள் நண்பர்களே!! 🙏

No comments:

Post a Comment