Sunday 5 May 2019

ஊழல் ஒழிப்பு செய்தி ;0052/ 2019

ஊழல் ஒழிப்பு செய்தி; LAACO,/0052/2019 ,; நாள் :10.05.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன ?

உண்மை சம்பவம் !

குற்றவாளி யார் ?

பிணத்தில் பணம் பார்க்கும் அவிநாசி அரசு மருத்துவமனை ஊழியர் ராமராஜன்!

சடலக்கூறாய்வு (பிரேத பரிசோதனை) செய்த பின்னர் சடலத்தை திருப்பி ஒப்படைக்க லஞ்சம்!

28.04.2019 அன்று திருப்பூர் அம்மாபாளையம் அருகில் இருக்கும் கல்குவாரியில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி மரணம் !

திருமுருகன் பூண்டி காவல் துறையினர் சடலங்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சடலக்கூறாய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் ஆகையால் சடலக்கூறாய்வு செய்யப்படவில்லை.

அடுத்த நாள் சடலக்கூறாய்வு செய்த பின்னர் சடலத்தினை ஒப்படைக்க தலா ரூபாய் ₹ 500  லஞ்சம் கேட்டுள்ளார்.

₹ 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க சென்றவர்  பின்னால் நாம் சென்றோம் .

அங்கு பிணவறை ஊழியர் ராமராஜன் :₹ 500 ரூபாய் லஞ்சப் பணத்தை பெறுவதினை நேரில் கண்டோம்.

விசாரித்த போது சடலத்தை கட்டிக்கொடுக்க வேட்டி மற்றும் சடலக்கூறாய்வு செய்த பின்னர் ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் வைப்பதற்கான பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் அவரது பணத்தில் வாங்குவதாக தெரிவித்தார்.

சடலங்களிலிருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியது.

சிறிது நேரம் கூட நம்மால் அங்கு நிற்க முடிய வில்லை .

சடலங்களை வைக்க குளிர்சாதன பெட்டி இல்லையென்றார்.

நீரில் மூழ்கி இறந்த காரணத்தினால் சடலங்களிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தார் .

இது நமக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது

பொது சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சடலத்தினை பிரேத பரிசோதனை செய்து பாதுகாப்பற்ற முறையில் கொடுப்பது சட்ட விரோதமான செயலாகும்.

இது குறித்து மருத்துவ உதவி மையம் 104 இல் அழைத்து புகார் தெரிவித்தோம்.

அவர்கள் அவிநாசி அரசு மருத்துவமன CMO முதன்மை மருத்துவ அலுவலரிடம் விசாரணை செய்யச் சொல்லி பேசி உள்ளோம். நீங்கள் சென்று  எழுத்து மூலமாக புகார் கொடுக்கும் படி கூறினார்கள் .

தொடர்ந்து இரண்டு மூன்று தினங்களாக தொடர்பு கொண்டு புகார் அளித்தீர்களா  ? என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

எனவே புகாரினை CMO  விடம் நேரில் கொடுப்பதற்காக 02.05.2019 அன்று சென்றோம் .

ஆனால் அவர் அலுவலகத்தில் இல்லை. அங்கிருந்த ஊழியர் 3.30 மணிக்கு வருவார் என்று சொன்னார்கள்

காத்திருந்தோம் .
ஆனால் வரவில்லை.

அங்கிருந்த ஒருவர் உங்களுக்கு என்ன பிரச்சனை என்ன வேண்டும் என்றார்.

சார் நாங்கள் CMO   பார்க்க வேண்டும் என்றோம்.

CMO காலையில் தான் பார்க்க முடியும்.

காலையில் எவ்வளவு நேரம் பணியில் இருப்பார் .

நாளைக்கு லீவா இருந்தாலும் இருக்கும் . தெரியாது என்றார்.

இங்கு நான் தான் டூட்டி டாக்டர் மெடிக்கல் ஆபீசர் நான் தான் உங்களுக்கு என்ன வேண்டும் ?உடம்புக்கு ஏதும் பிரச்சனையா என்று ஆவேசமாக கேட்டார்.

இல்லை!

CMO  பார்த்து புகார் கொடுக்க வேண்டும் என்றோம்.

புகார் என்றால் போலீஸ் ஸ்டேஷனில் போய் கொடுங்கள் .
நான் பார்த்து கொள்கிறேன் என்றார்.

மீண்டும் லஞ்சம் ₹ 1200 வாங்கிய பிணவறை ஊழியன் ராமராஜன்!

அன்றைய தினம் பாம்பு கடித்து இறந்த சுமார் 35 வயதான ஒரு பெண்ணின் சடலத்தினை ஒப்படைக்க ₹1200 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளான்.

இந்த லஞ்ச ஊழியன் ராமராஜன் மருத்துவமனை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறான் .

லஞ்சம் வாங்குவது குறித்து புகார் அளித்த போதும் தைரியமாக மீண்டும் லஞ்சம் வாங்குகிறான் என்றால் லஞ்ச பணத்தில் மருத்துவ அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு என்பது தெளிவாக தெரிகிறது.

புகாரினை பதிவஞ்சலில் அனுப்பினோம் .

மனுதாரர்:
நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
363 ,காந்தி ரோடு
பெரியார் காலனி 
திருப்பூர்- 641 652
உலா பேசி:98655 90723

பெறுநர்:
முதன்மை மருத்துவ அலுவலர் அவர்கள்
அரசு மருத்துவமனை
அவிநாசி
திருப்பூர் மாவட்டம்.

அய்யா ,

பொருள் : சடலக்கூறாய்வு  செய்த பின்னர் சடலங்களை  திருப்பி ஒப்படைக்க தலா ரூபாய் 500 லஞ்சம் பெற்ற மருத்துவ ஊழியர் ராமராஜன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது சம்மந்தமாக குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் முறையீடு ,

28.04.2019 அன்று திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு வட்டம் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் தேங்கி இருந்த நீரில் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு கல்வி பயின்று வந்த கோகுல் ,ஹரிஹர சேதுபதி என்ற இரு மாணவர்கள் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்து திடீர் மரணம் அடைந்து விட்டார்கள் .

அதில் கோகுல் என்ற மாணவன் எனது நண்பர் சுப்பிரமணி என்பவரது மகன் ஆவார்.

அந்த  சடலங்களை திருமுருகன் பூண்டி காவல் துறையினர் மீட்டு  தங்களது அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சடலக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற காரணத்தினால் சடலங்களை சடலக்கூறாய்வு செய்யப்பட வில்லை.

அடுத்த நாள் 29.04.2019 திங்கள் கிழமை சடலக்கூறாய்வு செய்த பின்னர்  சடலங்களை அவர்களின் பெற்றோர்களிடம்  ஒப்படைக்க அப்போது பிணவறையில் பணியில் இருந்த ராமராஜன் என்ற மருத்துவ ஊழியர் சடலங்களை பொட்டலம் செய்து கொடுப்பதற்கான துணி உள்ளிட்ட செலவுக்காக தலா ரூபாய் 500  லஞ்சமாக கேட்டு பெற்றுக் கொண்டார் .

இதனை நேரில் பார்த்த நான்
அப்போது அவரிடம் அரசு மருத்துவமனையில் சடலங்களை பொட்டலம் செய்து  வழங்க துணி கொடுக்க மாட்டார்களா என்றேன்.

ஆமாம் கொடுக்க மாட்டார்கள் .நான் தான் கையில் உள்ள பணத்தை செலவு செய்து துணிகள் மற்றும் பரிசோதனைக்கு எடுத்து வைத்துள்ள ரத்தம் உள்ளிட்டவைகளுக்கான பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் வாங்குவதாக தெரிவித்தார்.

சடலங்கள் மிகுந்த தூர்நாற்றம் வீசியது.

காரணம் கேட்ட போது  சடலங்களில் உள்ள தண்ணீர் முழுவதும் ஒழுகி தான் துர்நாற்றம் வீசுவதாக
தெரிவித்தார்.

குளிர் சாதன பெட்டி இல்லை என தெரிவித்தார்.

துர்நாற்றம் வீசும் சடலங்களை பாதுகாக்கப்படாமல் பொது சுகாதாரக்கேடு  ஏற்படும் விதத்தில்
பொட்டலம் செய்து வழங்கியது நமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

சடலங்களைப் பொட்டலம் செய்து வழங்க தலா ₹ 500 லஞ்சம் பெற்ற மருத்துவ ஊழியர் ராமராஜன் என்பவரை பணிநீக்கம் செய்ய கோரியும் ,
லஞ்சம் வாங்குவதினையும் பொது சுகாதார கேடு ஏற்படும் விதத்தில் சடலங்களை சடலக்கூறாய்வு செய்து வழங்குவதனை கண்காணிக்கத் தவறிய மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும், லஞ்சம் பெற்ற பணத்தை திரும்ப வழங்க கோரியும், 104 மருத்துவ உதவி மைய அலுவலரின் வேண்டு கோளின் படியும்  இந்த புகார் மனு தங்களிடம் நேரில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இணைப்பு : காணொளி

நாள் ;02.05.2019
இடம்; திருப்பூர்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலா பேசி:98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்...

No comments:

Post a Comment