Friday 10 May 2019

அரசூழியர்கள் எப்படி பணி புரிய வேண்டும் ?

அரசூழியர்கள் தங்கள் கடமையில் நேர்மையுடனும் முழு ஈடுபாட்டுடனும் பணி புரிய வேண்டும்.
LAACO; 11.05.2019

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள்- 1973
விதி : 20 கடமையில் நேர்மையும் முழு ஈடுபாடும்

(1) பணியாளர் ஒவ்வொருவரும் எந்நேரமும் கடமையில் முற்றிலும் நேர்மையும் பங்கும் கொண்டவராக இருப்பதுடன் பணியாளர்களுக்கு பொருந்தாத எதையும் செய்யக்கூடாது .

(2) பணியாளர் ஒவ்வொருவரும் அப்போதைக்குத் தம்முடைய கட்டுப்பாட்டின் மற்றும் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு பணியாளர்களைக் கடமையில் நேர்மையும் பற்றும் கொண்டிருப்பதற்கான இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் .

(3) (i) அரசுப்பணியாளர் எவரும் தன்னுடைய அலுவலக பணிகளை நிறைவேற்றுகையில் அல்லது தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை செலுத்துகையில் தன்னுடைய மேலலுவலரின் ஆணைப்படி செயற்படும் தருணங்கள் தவிர மற்றபடி தன்னுடைய தேர்ந்த முடிவின்படி அல்லாமல் வேறு வகையில் செயற்படக் கூடாது.

(ii ) பொதுவாக மேலலுவலரின் கட்டளைகள் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.

சார்நிலை பணியாளர்களுக்கு வாய்மொழி ஆணைகள் தவிர்க்கப்படவேண்டும் .

வாய்மொழி ஆணை தவிர்க்க இயலாதவிடத்து மேலலுவலர் அதனை பின்னர் உடனடியாக எழுத்து வடிவில் உறுதிப்படுத்த வேண்டும் .

( iii) மேலலுவலரிடமிருந்து வாய்மொழி ஆணையைப் பெற்ற அரசுப் பணியாளர் இயன்ற விரைவில் அவ்வாணையின் உறுதியாக்கத்தினை  எழுத்து வடிவில் கேட்க வேண்டும் .
அதன்படி அவ்வாணையை எழுத்து வடிவில் உறுதிப்படுத்துவது மேலலுவலரின் கடமையாகும் .

( iv) அரசு பணியாளர் எவரும் தன்னுடைய அலுவல் பணிகளை நிறைவேற்றுகையில்  அல்லது தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்துகையில்  முறைப்படி தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை தவிர்க்கக்கூடாது.

மேலும் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பகிர்வு செய்யும் திட்டத்தின்படி மேலலுவலரின் அறிவுறுத்தமோ ஏற்பளிப்போ தேவைப்படாத நேர்வுகளில் அவரிடமிருந்து அறிவுறுத்தத்தை அல்லது அனுமதியைக் கோரக்கூடாது .

விளக்கம் : தம்மிடம் ஒப்படைக்கப்படும் பணியை வழக்கமாக அதற்குரிய கால அளவில் மற்றும் தம்மிடம் எதிர்பார்க்கப்படும் தரத்தில் நிறைவேற்றத் தவறும் அரசுப்பணியாளர், உள் விதி (1) இன்படி பணியில் ஆர்வம் இல்லாதவராகக் கருதப்படுவார்.

நாஞ்சில் கோ. கிருஷ்ணன் நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 ,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலா பேசி:98655 90723

No comments:

Post a Comment