Wednesday 8 May 2019

கொங்கு பள்ளிக்கு தன்னிலை விளக்கம் அளிக்க கோரி மனு

மனுதாரர்:
பழனிக்குமார்
த/பெ. ஆண்டியப்பன்
5/419 பி ,வேலன் நகர்
வெங்கமேடு ,
அங்கேரிபாளையம்,
திருப்பூர் -641 603

பெறுநர்:
பள்ளி முதல்வர் /தாளாளர்
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அங்கேரிபாளையம் சாலை திருப்பூர் - 641 603

அய்யா ,

பொருள் : வழக்கறிஞர்
S.முருகசாமி B.Com . B.L தங்களது கட்சிக்காரர் என குறிப்பிட்டு 7, பெஸ்ட் காம்ப்ளக்ஸ், குமரன் ரோடு தாராபுரம்- 638 656 என்ற போலியான முகவரியிலிருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு தாங்கள் ஏழு  தினங்களுக்குள் தன்னிலை விளக்கம் அளிக்க கோரி மனு,

பார்வை ; 01.மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் தங்களுக்கு அனுப்பிய கடித ந.க.எண் 4362/இ3/2018  நாள் :16.11.2018

02.தன்னிலை விளக்கம் அளிக்க கோரிய எனது மனு நாள் :05.04.2019

03.தங்களது கட்சிக்காரர் என தெரிவித்து எனக்கு வந்த கடித நாள் ; 27.04.2019

பார்வை: 01  இல் காணும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் எனது மகன் ப.காந்தி ஜி என்பவருக்கு கல்வி கட்டணம் செலுத்த கோரி முன்னுக்கு பின் முரண்பாடான தகவல் வழங்கியதாக  மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகளின்  விபரங்கள் மற்றும் எனது  மகனுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டண விபரங்களை  தெரிவிக்கும் படி,

பார்வை :02 இல் காணும் இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 101 -இன் கீழ் ஏழு தினங்களுக்குள் எழுத்து பூர்வமாக  தன்னிலை விளக்கம் அளிக்க கோரி மனு அனுப்பி இருந்தேன்.

நான் குறிப்பிட்டுள்ள ஏழு தினங்களுக்குள் எனக்கு பதில் அளிக்க வில்லை.

ஆனால் பார்வை :03 இல் காணும் தங்களது கட்சிக்காரர் என தெரிவிக்கப்பட்டு  27.04.2019 தேதியிட்டு எனக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள தாராபுரம் என்ற முகவரி போலியானது என உறுதி படுத்தப்பட்டுள்ளது .

வழக்கறிஞர் பதிவு எண் மற்றும் அலுவலக முத்திரை இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளது மிகுந்த சந்தேகம் அளிக்கிறது.

கடிதத்தில் எனது மகன் ப.காந்தி ஜி என்பதற்கு பதில் ப.காந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வை :01 இல் காணும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் மீது தாங்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை தான்
பார்வை 02 இல் காணும் தன்னிலை விளக்கம் அளிக்க கோரி இருந்தேன் .

ஆனால் நான் கோரிய தகவலுக்கான விளக்கம் அளிக்காமல் உங்கள் கட்சிகாரர் என குறிப்பிட்டு முன்னுக்கு பின் முரணான தகவல் அனுப்பப்பட்டுள்ளது .

எனது கடிதத்தில் கல்வி கட்டணம் செலுத்த கோரி தாங்கள் ரசீது வழங்கியதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை .

ஆனால் மாறாக தங்கள் வழக்கறிஞர் என கூறி கடிதம் அனுப்பியுள்ள நபர் ரசீது வழங்கியதாக  நான் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 கல்வி கட்டணம் மற்றும் தமிழக RTE விதிகள் -2011 பிரிவு 5 இன் படி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் எழுது பொருட்கள் சீருடைகள் இலவசமாக வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

அதனடிப்படையில் தான் எனது மகனுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடைகள் இலவசமாக வழங்க கோரியிருந்தேன் .

ஆனால் தாங்கள் அதனை வழங்காமல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மேலும் எனது மகனுக்கு தேவையில்லாத கராத்தே, டேபிள் டென்னிஸ் ,பாண்டு ,யோகா ,
வாழ்க வளமுடன் போன்ற தேவையில்லாத  கரிக்குலம் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு  தொகையினை  கட்டாயப்படுத்தி செலுத்த வேண்டுமென கூறி கடிதம் கொடுத்தீர்கள்.

இது சட்ட விரோதமான செயல் என நீதிமன்றத்தின் உதவியை நாடி யுள்ளேன். நீதிப்பேராணை வழக்கு  W. P. No :27401/18  நிலுவையில் உள்ளது .

ஆனால் உங்களது கட்சிக்காரர் என்று சொல்லப்படும் நபர் கட்டணம் செலுத்தாமல் இருப்பது  சட்ட விரோதம் என குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்  சட்டம் குறித்த அறிவு வறுமையில் தான் இவ்வாறு கூறியுள்ளதாக நினைக்கிறேன் .

மேலும் இந்திய சாட்சிய சட்டம் 101 தன்னிலை விளக்கம் கூறியது தவறு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் தாங்கள் என்னிடமிருந்து எந்த ஒரு கல்விக் கட்டணமும் பெறவில்லை என உறுதி மொழி கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு மேலும் கட்டணம் செலுத்த வேண்டும் என கடிதமும்  வழங்கியுள்ளது முன்னுக்குப் பின் முரணான வகையில் உள்ளது.

அதற்கு தகுந்த விளக்கம் அளிக்கும் கடமை தங்களுக்கு தான் உள்ளது. எனவே தான் இந்திய சாட்சிய சட்டம் 101 இன் கீழ் விளக்கம் அளிக்கும் படி கூறி இருந்தேன்.

பார்வை :03 இல் காணும் தங்கள் கட்சிக்காரர் எனவும் வழக்கறிஞர் என சொல்லி போலியான முகவரி யில் இருந்து  கடிதம் அனுப்பியது தங்களுடைய வழக்கறிஞர் தானா ?

அப்படியானால் அவரது வழக்கறிஞர் அவை பதிவு எண் மற்றும் உண்மையான முகவரியை தெரிவிக்கவும்.

மேலும் பார்வை :01 இல் காணும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் தங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை இக்கடிதம் கிடைக்கப் பெற்ற ஏழு தினங்களுக்குள் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

இணைப்பு பக்கங்கள்;

நாள்: 27.05.2019
இடம்: திருப்பூர்

மனுதாரர்

ஆ.பழனிக்குமார்

நகல் தக்க மேல் நடவடிக்கைக்காக;

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் -சென்னை

No comments:

Post a Comment