Thursday 30 May 2019

கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவு விளக்கம் அளிக்க கோரி மனு

மனுதாரர் :  
கோ. தாணுமூர்த்தி
148, கவிதா லட்சுமி நகர் அங்கேரிபாளையம் ரோடு அனுப்பர்பாளையம் புதூர் திருப்பூர் - 641 652

பெறுநர் :
பள்ளி முதல்வர் /தாளாளர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அங்கேரிபாளையம் ரோடு திருப்பூர் - 641 603.

அம்மையீர்!

பொருள்:  2019 -2020  ஆம் கல்வியாண்டில்  7 ஆம் வகுப்பிற்கான அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணம் மற்றும் பள்ளி தகவல் பலகையில் தெரிவித்துள்ள ஸ்டேஷனரி கட்டணம் வங்கி வரைவோலையாக செலுத்துவதுடன் தகவல் பலகையில் தெரிவித்துள்ள Administration  and maintenance fees  Rupees 6500.00 க்கான விளக்கத்தினை ஏழு தினங்களுக்குள் வழங்க கோருவது சம்பந்தமாக .

பார்வை :  
01. தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ள 7 ஆம் வகுப்பிற்கான கட்டண விபரம்.

02. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி           15,வேலம்பாளையம் கிளை
D.D.No:  818805. D.T: 29.05.2019
Amount: 10,285.00

03.. D.D.No: 818804. D.T: 29.05.2019.
Amount:  2465.00. 

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசனக் கோட்பாடு 51 A (அ) இன் கீழ் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்றி வரும் ஒரு இந்திய
குடிமகன் ஆவேன் .

எனது மகன் D.T. கோகுல்நாத் 2019 -2020 இந்த கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பில் தங்கள் பள்ளியில் கல்வி பயில இருக்கிறார்.

7 ஆம் வகுப்பிற்கான கல்வி கட்டணம் 10, 285. 00 ரூபாய், ஸ்டேஷனரி கட்டணம் 2465. 00 ரூபாய்

மற்றும்
Administration and maintenance கட்டணமான 6,500 ரூபாய் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 250 ரூபாய் பார்வை ஒன்றில் காணும் பள்ளி தகவல் பலகையில் கட்டண விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை: 2 -ல் காணும் வங்கி வரைவோலை மூலம் 10, 285. 00 ரூபாய் 2019 -20 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணமாக செலுத்தி உள்ளேன் .

பார்வை : 03 -ல் காணும்
பார்வை: 01 -இல்  தெரிவித்துள்ளபடி ஸ்டேஷனரி கட்டணமாக 2465. 00 ரூபாய் வங்கி வரைவோலையாக செலுத்தி உள்ளேன் .

பார்வை : 02 -ல் செலுத்தியுள்ள கல்விக்  கட்டணத்திற்கான ரசீது வழங்க கோருகிறேன்.

பார்வை : 03 -ல் செலுத்தியுள்ள ஸ்டேஷனரி கட்டணம் 2465.00 ரூபாய்க்கான MRP விபரங்களுடன் தனித்தனியாக ஒவ்வொரு இனங்களையும் குறிப்பிட்டு அதற்கான உரிய இரசீது வழங்க கோருகிறேன்.

மேலும் தாங்கள் செலுத்தக் கோரியுள்ள Administration and Maintenance கட்டணம் 6500.00 ரூபாய் கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்த கல்வி கட்டண வரம்பிற்குள் வரவில்லையா? என்ற தகவலை தெரிவிக்கவும்.

Administration and Maintenance கட்டணம் தனியாக வசூலிக்க கல்வி கட்டண நிர்ணய குழு தங்களுக்கு அனுமதி அளிக்கப்ட்டிருப்பின் அதற்கான உத்தரவு நகல் ஒன்று வழங்கக் கோருகிறேன்.

அல்லது
கட்டணம் வசூலிக்க தங்கள் பள்ளிக்கு சிறப்பு சலுகை அல்லது உத்தரவுகள் ஏதேனும் அரசால் வழங்கப்பட்டிருப்பின் அந்த உத்தரவின் நகல் ஒன்று வழங்கவும்.

அல்லது
Administration and Maintenance கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயம் செய்துள்ளதா? என்ற தகவலை தெரிவிக்க கோருகிறேன்.

மேலும் Administration and Maintenance கட்டண விபரத்தினை என்னென்ன இனங்களுக்காக வசூலிக்கப்படுகிறது என்ற தனித்தனியான விபரங்கள் குறிப்பிட்டு இக்கடிதம் கண்ட ஏழு தினங்களுக்குள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அந்தக் கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைப்பு : வங்கி வரைவோலைகள் அசல்.

நாள்: 30.05.2019. 
இடம் : திருப்பூர்

மனுதாரர்

கோ. தாணுமூர்த்தி

நகல் : தக்க மேல் நடவடிக்கைக்காக.

01. கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் அவர்கள் - சென்னை.

02. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் - சென்னை.

Saturday 25 May 2019

மாவட்டம் வாரியாக நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள்.

1. ஸ்ரீ பெரும்புதூர் :23,343
2. கோவை : 23, 190
3.திருப்பூர் :21, 861
4.காஞ்சிபுரம் :21, 661 5.கிருஷ்ணகிரி :19, 825 
6.திருவள்ளூர் :18,, 275
7. நீல்கிரீஸ் :18, 149
8.விருது நகர் : 17, 292
9. சேலம் :17, 130
10. ஆரணி :16, 921
11 .மதுரை :16, 187
12 சென்னை வடக்கு :15, 687
13. சிதம்பரம் :15, 535
14.பொள்ளாச்சி :15, 110
15. தஞ்சாவூர் :15, 105
16.நாமக்கல் :15, 073
17 ஈரோடு : 14, 795
18.திருச்சிராப்பள்ளி :14, 437
19. திண்டுக்கல்  :14, 177 
20 .தென்காசி :  14, 056
21.சென்னை தெற்கு :13, 822
22. சென்னை மத்தி: 13, 812
23 தர்மபுரி: 13, 379
24.திருவண்ணாமலை :12, 317
25. அரக்கோணம்: 12, 179
26  விழுப்புரம்: 11, 943
27. கள்ளக்குறிச்சி :11, 576
28.பெரம்பலூர் :11, 325
29. திருநெல்வேலி :10, 958
30..தேனி :10, 685
31.கரூர் :9, 603
32. நாகப்பட்டினம் :9, 463
33. சிவகங்கை: 9, 283
34. தூத்துக்குடி: 9, 234
35 கடலூர் :8, 725
36 மயிலாடுதுறை :8, 231
37. இராமநாத புரம் :7, 595
38. கன்னியாகுமரி :6,131

Wednesday 22 May 2019

திருப்பூர் மாநகராட்சி புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் .

📢 *ஓர் முக்கிய அறிவிப்பு* !
LAACO/22.05.2019

*இதனால்  நம்ம தூய்மை மிகு திருப்பூர் மாநகராட்சி பொது ஜனங்களுக்கு தெரிவித்து கொள்வது யாதெனில்*  ..........!!

*டும் டும்*.........!
*டும் டும்* .........!
*டும்  டும்*......... !

*உங்கள் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட* *60 வார்டுகளிலும்*
*அடிப்படை வசதிகள் இல்லையா* ?

*டும் டும்*..........!
*டும் டும்* ..........!
*டும் டும்...........* !

*இனி மேல் பொது ஜனங்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்ங்கோ* !

*டும் டும்*.........!
*டும் டும்*..........!
*டும் டும்* ........!!

இப்படிக்கு........!!!
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அறிக்கை !

*2019  மே 22 பத்திரிக்கை செய்தி* :

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்
வரி செலுத்தும் பணிகள் ,
அடிப்படை வசதிகள் குறித்த புகார்கள் தெரிவிக்க தொலைபேசி  எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .

திருப்பூர் மாநகராட்சியில் வசிப்போர்
வரி செலுத்துதல் ,
குடிநீர் கட்டணம்  செலுத்துதல், தொழில் வரி ,
சொத்து வரி ,
தொழிற்சாலை உரிமம் பெறுதல் ,
பெயர் மாற்றம் ,
குடிநீர் இணைப்பு பெறுதல் போன்ற பணிகளுக்கும்
சாக்கடை வசதி ,
கொசு மருந்து தெளித்தல், சாக்கடை தூர்வாருதல்
மின்சார வசதி
உள்ளிட்ட வற்றுக்கும் தங்கள் அருகாமையில் உள்ள மண்டல அலுவலகங்களை பின் வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் .

1. *முதல் மண்டல அலுவலகம்*;
4 வேலம் பாளையம் 
அனுப்பர்பாளையம்
0421 -2256815 ,
2258985 மற்றும் ,
2256983
(1 முதல் 15 வார்டுகள் )

2. *இரண்டாவது மண்டல அலுவலகம்*:
தொட்டிபாளையம்
0421 -2484887 
2488257 
(16 முதல் 30 வார்டுகள்)

3. *மூன்றாவது மண்டலம் அலுவலகம்*:
நல்லூர்
0421 -2374466 ,
2374465
(31 முதல் 45 வார்டுகள்)

4. *நான்காவது மண்டல அலுவலகம்* :
ஆண்டிபாளையம்
0421 - 2260067 ,
2261169
(46 முதல் 60 வார்டுகள்)

*தெரு விளக்கு குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண்* :
*850 850 0000*
*தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்*

பொது மக்கள் தங்கள் பகுதி மண்டல அலுவலகங்களில் மேற்படி  எண்களிலோ
நேரில் சென்றோ
அல்லது
தபால் மூலமோ
மாநகராட்சி உதவி ஆணையருக்கு  புகார்  தெரிவிக்கலாம்
💥💥💥💥💥💥💥💥💥
✍ *நாஞ்சில் கோ.கிருஷ்ணன்*
நிறுவனர்
*சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு  அமைப்பு*
363, காந்தி ரோடு ,
பெரியார் காலனி ,
திருப்பூர்- 641 652
உலா பேசி : 98655 90723
மின்னஞ்சல் : nanjillaacot@gmail.com

*குறிப்பு ; திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் உங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற லஞ்சம் கேட்டால்  உடனடியாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை  துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் அளிக்க அழைக்கிறோம்*.🙏
*தொடர்பு எண் :‌ 94450 48880*

Tuesday 14 May 2019

தகவல் அறியும் உரிமைச் சட்டத்துற்கு கட்டு படாத அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாட்டு.

#தகவல் #அறியும் #உரிமைச்சட்டத்திற்கு  #
#கட்டுபடாத #அனைத்து #அரசியல் #கட்சி #தலைவர்களின் #மீது #பகிரங்க #குற்றச்சாட்டு!  "

நீங்கள் ஏன் தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பிற்குள் வர மறுக்கிறீர்கள்?

மக்களிடம் கையேந்தி வீடு வீடாக சென்று எனக்கு வாக்களியுங்கள் என யாசிப்பது எதனால்?

மக்களிடம் இருந்து நன்கொடையாக கட்சி  நிதி என்று பல்லாயிரம் கோடிகளை வசூலிப்பது யாருக்காக?

அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம் யாருடையது?

அனைத்து வசதிகளுடன் சுக போக உல்லாச வாழ்க்கை வாழ்வது யாருக்காக?

அரசின் அனைத்து துறைகளிலும்  ஊழல் செய்வது  யாருக்காக?

இதுவரை நீங்கள் ஊழலே செய்ய வில்லை என உங்களால் சொல்ல முடியுமா?

ஒரே ஒரு நாள் மட்டும் சாதாரண ஏழை மக்கள் வாழும் வாழ்க்கையினை உங்களால் வாழ முடியுமா?

ஏழையாக இருந்து தான் கட்சி ஆரம்பித்தேன்!  ஆனால் இன்றும் ஏழையாகத் தான் இருக்கிறேன் என உங்களால் சொல்ல முடியுமா?

அசியலமைப்பு  சாசன கோட்பாடு 47 க்கு எதிராக அரசின் கொள்கை முடிவு என மது பானம் தயாரித்து விற்பனை செய்கிறீர்களே இது யாருக்காக?

அரசின் அனைத்து துறைகளிலும் நடை பெறும் லஞ்சத்தை ஏன் உங்களால் ஒழிக்க முடியவில்லை?

மக்களுக்காக தான் கட்சி நடத்துகிறோம் என பாசாங்கு செய்து  மக்களை முட்டாளாக்குவது எதனால்?

நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் வாக்குக்கு பணம் கொடுப்பது எதனால்?

நீங்கள் கொலை,  கொள்ளை போன்ற செயல்களில் உங்கள் கட்சியினர் ஈடுபட்டதில்லை என உங்களால் சொல்ல முடியுமா?

நீங்கள் இதுவரையிலும் செய்த ஊழல்களை  உங்களால் பட்டியலிட முடியுமா?

உங்களை நம்பி பல தொண்டர்கள் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்ற ஆணவமா?

மக்களுக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

அனைத்தும் உங்களுக்காக தான்!

பொது  மக்களிடம் வசூல் செய்யும் நிதி
மற்றும் கட்சி வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் தெரிந்து விட கூடாது என்ற காரணத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் வர பயப்படுகிறீர்கள்!

எனவே அதனை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சேர்ந்து எதிர்க்கிறீர்கள்?

வெளிப்படை தன்மை இல்லாத உங்களிடம் இருந்து பொது மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை!

நான் கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள்?

மக்களை எப்போதும் முட்டாளாக. நினைக்க வேண்டாம்!

என.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல்  ஒழிப்பு அமைப்பு "

Sunday 12 May 2019

நீதிபதிகள் வக்கீல்கள் குறித்து மகாத்மாவின் கருத்து!

வக்கீல்கள் நீதிபதிகள் குறித்து வழக்கறிஞரான மகாத்மா காந்தி அவர்களின் கருத்து :

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது .

வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை .

பணக்காரர் ஆவதற்கான தொழில்களில் வக்கீல் தொழிலும் ஒன்று .

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன் .

இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை .

இவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள்.

இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் என்னும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர் .

இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன .

கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்ட பிறகே வக்கீல்கள் மனிதத் தன்மையில் குறைந்தவர்களாகவும்  கோழைகளாகவும் மாறினார்.

மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு !

தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்வதாக இருந்தால் அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்தவித ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது .

மேலும் ,எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் .

எனவே அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிடப் போவதில்லை என்பது நிச்சயம் .

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர் .

அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன. என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறகு இத்தொழிலை குறித்து எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய  தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை இங்கே பலப்படுத்தி இருப்பதே ஆகும் .

விபச்சாரத்தை போல
இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும் .

வக்கீல்களைப் பற்றி நான் கூறியன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் .

நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்

வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள் .

ஒவ்வொருக்கு ஒருவர் பக்க பலமாக இருப்பார்கள் .

இவைகள் முற்றிலும் உண்மை. இதற்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்காகும்.

ஆதாரம் : மகாத்மா காந்தி தனது நாற்பதாவது வயதில் எழுதிய "இந்திய சுயராஜ்யம்" என்ற நூலில் 11 -ஆவது கட்டுரை
தமிழ் வெளியீடு
காந்திய இலக்கியச் சங்கம்
மதுரை - 62 50 20

நன்றி
நீதியைத்தேடி ......
சட்ட அறிவுக்களஞ்சியம்
ஆசிரியர் ; சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள்.
வெளியீடு; கேர் சோசைட்டி ,ஓசூர்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு  அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641652
உலா பேசி  :98655 90723

Saturday 11 May 2019

வழக்கறிஞர் தொழிலை விளம்பரப்படுத்தக் கூடாதூ !

வழக்கறிஞர் தொழிலை விளம்பரப் படுத்தலாமா ?
LAACO:12.05.2019

வழக்கறிஞர் சட்டம் -1961
(ஈ.பிரிவு IV சக வழக்கறிஞருக்கு ஆற்ற வேண்டிய கடமை )

விதி :36 வழக்கறிஞர் தொழிலை விளம்பரப்படுத்தக் கூடாது .

சுற்றறிக்கைகள்
விளம்பரங்கள்
தரகர்கள்
நேரடி தொடர்புகள்
தேவையற்ற கலந்துரையாடல்கள் செய்தித்தாள் விமர்சனங்கள் அல்லது தான் வாதாடிய விவரங்களுடன் செய்தித்தாளில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட செய்தல்
ஆகியவற்றின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு வழக்கறிஞர் தனது தொழிலை விளம்பரம் செய்யக்கூடாது

வழக்கறிஞரின் பெயர்ப்பலகை சாதாரண அளவில் தான் இருக்க வேண்டும் .

அவரது பெயர் பலகையில்
அவர் வழக்கறிஞர் மன்றம்
அல்லது ஏதேனும்
ஒரு அமைப்பின் தலைவர்
அல்லது உறுப்பினர்
அல்லது ஏதேனும் ஒரு சங்கம் அல்லது அமைப்புடன் தொடர்புடைய
அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்றவர்
அல்லது நீதிபதியாக
அல்லது தலைமை வழக்கறிஞராக இருந்தவர் போன்ற விவரங்கள் எழுதப்படக் கூடாது

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

Friday 10 May 2019

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 169 என்ன சொல்கிறது ?

அரசூழியர்கள் ஒரு குறிப்பிட்ட சொத்தை விலைக்கு வாங்கவோ  ஏலம் கேட்கவும் கூடாது

இந்திய தண்டனைச் சட்டம்-1860 சட்டப்பிரிவு:  169

ஒரு பொது ஊழியர் அரசு ஊழியர் என்ற நிலையிலும் குறிப்பிட்ட ஒரு சொத்தை வாங்க கூடாது .
ஏலம் கேட்க கூடாது என்ற நியதி இருக்கிறது

அந்த நியதியை மீறி ஒரு பொது ஊழியர் அப்படிப்பட்ட சொத்தை தன் பேரிலாவது தனியாகவோ கூட்டாகவோ வாங்குவதும் ஏலம் கேட்பதும்  குற்றமாகும் .

அந்த பொது ஊழியருக்கு அத்தகைய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதில் சம்பந்தப்பட்ட சொத்தை அவர் விலைக்கு  வாங்கி இருந்தால் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும்.

அரசூழியர்கள் எப்படி பணி புரிய வேண்டும் ?

அரசூழியர்கள் தங்கள் கடமையில் நேர்மையுடனும் முழு ஈடுபாட்டுடனும் பணி புரிய வேண்டும்.
LAACO; 11.05.2019

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள்- 1973
விதி : 20 கடமையில் நேர்மையும் முழு ஈடுபாடும்

(1) பணியாளர் ஒவ்வொருவரும் எந்நேரமும் கடமையில் முற்றிலும் நேர்மையும் பங்கும் கொண்டவராக இருப்பதுடன் பணியாளர்களுக்கு பொருந்தாத எதையும் செய்யக்கூடாது .

(2) பணியாளர் ஒவ்வொருவரும் அப்போதைக்குத் தம்முடைய கட்டுப்பாட்டின் மற்றும் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு பணியாளர்களைக் கடமையில் நேர்மையும் பற்றும் கொண்டிருப்பதற்கான இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் .

(3) (i) அரசுப்பணியாளர் எவரும் தன்னுடைய அலுவலக பணிகளை நிறைவேற்றுகையில் அல்லது தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை செலுத்துகையில் தன்னுடைய மேலலுவலரின் ஆணைப்படி செயற்படும் தருணங்கள் தவிர மற்றபடி தன்னுடைய தேர்ந்த முடிவின்படி அல்லாமல் வேறு வகையில் செயற்படக் கூடாது.

(ii ) பொதுவாக மேலலுவலரின் கட்டளைகள் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.

சார்நிலை பணியாளர்களுக்கு வாய்மொழி ஆணைகள் தவிர்க்கப்படவேண்டும் .

வாய்மொழி ஆணை தவிர்க்க இயலாதவிடத்து மேலலுவலர் அதனை பின்னர் உடனடியாக எழுத்து வடிவில் உறுதிப்படுத்த வேண்டும் .

( iii) மேலலுவலரிடமிருந்து வாய்மொழி ஆணையைப் பெற்ற அரசுப் பணியாளர் இயன்ற விரைவில் அவ்வாணையின் உறுதியாக்கத்தினை  எழுத்து வடிவில் கேட்க வேண்டும் .
அதன்படி அவ்வாணையை எழுத்து வடிவில் உறுதிப்படுத்துவது மேலலுவலரின் கடமையாகும் .

( iv) அரசு பணியாளர் எவரும் தன்னுடைய அலுவல் பணிகளை நிறைவேற்றுகையில்  அல்லது தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்துகையில்  முறைப்படி தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை தவிர்க்கக்கூடாது.

மேலும் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பகிர்வு செய்யும் திட்டத்தின்படி மேலலுவலரின் அறிவுறுத்தமோ ஏற்பளிப்போ தேவைப்படாத நேர்வுகளில் அவரிடமிருந்து அறிவுறுத்தத்தை அல்லது அனுமதியைக் கோரக்கூடாது .

விளக்கம் : தம்மிடம் ஒப்படைக்கப்படும் பணியை வழக்கமாக அதற்குரிய கால அளவில் மற்றும் தம்மிடம் எதிர்பார்க்கப்படும் தரத்தில் நிறைவேற்றத் தவறும் அரசுப்பணியாளர், உள் விதி (1) இன்படி பணியில் ஆர்வம் இல்லாதவராகக் கருதப்படுவார்.

நாஞ்சில் கோ. கிருஷ்ணன் நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 ,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலா பேசி:98655 90723

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை !!

லஞ்சம் தவிர்!                    நெஞ்சம் நிமிர்!

#முக்கிய #செய்தி !

#தனியார் #பள்ளிகள் #கூடுதல்  #கல்வி #கட்டணம் #வசூலிக்க #தடை !!
LAACO :10 /05/2019

தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதினை முறைப்படுத்துதல்) சட்டம் -2009

THE TAMIL NADU SCHOOLS (REGULATION OF COLLECTION OF FEE)  ACT -2009

சட்ட எண் : 22 / 2009

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து  வரையறை இல்லாமல் அவர்கள் விருப்பம் போல் கூடுதல் கல்விக் கட்டணங்களை வசூலித்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தனர்

இந்த கல்விக்கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட.  தமிழக அரசு இந்த சட்டத்தின் மூலம்*
கல்விக்கட்டண நிர்ணய குழுவினை உருவாக்கியது.

ஓய்வு பெற்ற நீதிபதியினை தலைவராக கொண்ட இந்த குழுவினர்  ஒவ்வொரு பள்ளிகளும் வழங்கி  உள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு, மாணவர்கள் பாதுகாப்பு நலன்கள், ஆசிரியர்களின் கல்வி தகுதிகள், மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்ற பல்வேறு  விதமான தகுதிகளை ஆய்வு செய்து  ஒவ்வொரு ஆண்டும் LKG முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும்  மாணவர்களுக்கான கல்விக்கட்டணங்களை பள்ளி வாரியாக தனித்தனியாக நிர்ணயம்  செய்து வருகிறார்கள்.!

★ இந்த கல்வி கட்டண நிர்ணயக்குழுவினரால் நிர்ணயிக்கப் பட்ட கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது  இந்தச்சட்டப் பிரிவு 3 (2)  ன் படி   தடை விதிக்கப்பட்டுள்ளது.!

★ இந்தச்சட்டப் பிரிவு 9 (1)  க்கு எதிராக மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கு  மூன்று ஆண்டுகளுக்கு குறையாத ஏழாண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்டும்.

★ தமிழ் நாடு பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதினை முறை படுத்துதல்
சட்டப்பிரிவு 9 (2)  ன் படி  குற்றவாளி என தீர்மானிக்கப்பட்ட பள்ளி நிர்வாகி  சட்டத்தை மீறி எந்த மாணவனிடமிருந்து அதிக கட்டணம்  வசூலிக்கப் பட்டதோ  அந்த மாணவனுக்கு அதிக கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.!

★கல்வி கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப் பட்ட கல்வி கட்டண விபரங்களை  ஒவ்வொரு கல்வி ஆண்டும் அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.!

ஆனால் பெரும்பான்மையான பள்ளிகள் கல்வி கட்டண விபரங்களை தகவல் பலகையில் வெளியிடுவதில்லை

★கல்விக்கட்டண குழு நிர்ணயிக்கும்  கட்டணம் ஒர் ஆண்டுக்கான TUITION. FEES (பாடம் நடத்துவதற்கான கட்டணம் ) மட்டுமே!

★நோட்டு, புத்தகம்,  டை, பெல்ட், சாக்ஸ், டைரி  போன்ற ஸ்டேசனரிக்கு மட்டும் பள்ளி கேட்கும் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

நோட்டு புத்தகங்களில் அதிக பட்ச சில்லறை விற்பனை விலை ( MRP) அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு அச்சடிக்கப்படாமல் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.

எந்த பொருட்கள் விற்பனை செய்தாலும் செலுத்திய பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும்.

கல்வி கூடங்கள் ஸ்டேசனரி கடைகளாக செயல்பட கூடாது..

ஸ்கூல் பேக் உள்ளிட்டவைகளை கட்டாய படுத்தி மாணவர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யக்கூடாது என ஒரு வழக்கில் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலைவர் உத்தர விட்டுள்ளார்கள்.

★பள்ளி பேருந்து, சிற்றுந்து கட்டணம் தனியாக செலுத்த வேண்டும்.

பள்ளி பேருந்துகள் சிற்றுந்துகளில் அளவுக்கதிகமான மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது .

★இதனை தவிர டேர்ம் பீஸ்,  போன்ற எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது!

★பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்கள் அனைத்திற்கும்  உரிய முறையான ரசீது வழங்க வேண்டும்!

வைப்பு நிதியாக (Deposit ) பெறப்படும் கட்டணங்களை மாணவன் பள்ளியை விட்டு செல்லும் போது திரும்ப வழங்க வேண்டும்.

கட்டிட நிதி பள்ளி வளர்ச்சி நிதி என கட்டாய நன்கொடை வசூலிக்கக்கூடாது .

*கரிக்குலம் அல்லது  எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி  என்ற பெயரில் கொள்ளை அடிப்பார்கள்*

1.ஸ்போக்கன் இங்கிலீஷ்

2.ஹேண்ட் ரைட்டிங்

3.டீச்சிங் எய்டு

4.ஸ்மார்ட் கிளாஸ்

5.ஹிந்தி

6.யோகா

7.மனவளக்கலை

8.பரத நாட்டியம்

9.டான்ஸ்

10.டேபிள் டென்னிஸ்

11.கராத்தே

12.நீச்சல்

13.துப்பாக்கி சுடுதல்

14.கணிணி

15.லேபரேட்டரி

16.பேன்ட் வாத்தியம்

போன்ற இன்னும் பல்வேறு விதமான கட்டணங்களை குறிப்பிட்டு ஒரு தொகையினை ரசீது இல்லாமல் சட்ட விரோதமாக வசூலித்து விடுவார்கள்.

ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவனுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் எனவும் ஹேண்ட் ரைட்டிங் என ஆங்கிலம் பேசவும் எழுதவும்  தனியாக கட்டணம் வசூலிப்பது  எவ்வளவு வெக்கக்கேடான செயல் !

4000 மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் தான் கராத்தே பயில்வார்கள் .

சுமார் 50 மாணவர்கள் தான் யோகா பயில்வார்கள் .

ஆனால் LKG முதல் + 2 வரைக்கும் அனைத்து மாணவர்களிடம் இருந்தும் கரிக்குலம் என்ற பெயரில் கட்டணங்கள் வசூலிப்பது முறை கேடாகும்..

LKG மாணவனுக்கு டேபிள் டென்னிஸ் கட்டணம் செலுத்த கூறுவது ஏற்புடையதா ?

உங்கள் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்லி கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்..

என்ன? எனதருமை நண்பர்களே!பெற்றோர்களே!

சட்டம் தெரியாமல் கல்வி கொள்ளையர்கள் கேட்கும் கட்டணங்களை இதுநாள் வரை கஷ்டப்பட்டு கடன் வாங்கி செலுத்தி இருப்பீர்கள்.

இனி மேல்  அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணங்களை மட்டும் உங்கள் குழந்தைகளுக்கு செலுத்துங்கள்.

அய்யய்யோ!

★சட்டபடி நடந்தால் தனியார் பள்ளிகளில் அனுமதி தர மாட்டார்களே?

★நமது குழந்தைகளை கவனிக்க மாட்டார்களே?

★தேர்வில் பெயிலாக்கி விடுவார்களே?

★மாற்று சான்றிதழ்  (T C) கொடுத்து அனுப்பி விடுவார்களே?

★அவர்களை நாம்  பகைத்து விட்டால் நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?

நாம் ஏழைகள்.அவர்களை நம்மால் எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா ?

தனியார் பள்ளி நிர்வாகிகள் உங்கள் குழந்தைகள் அனைவருக்கும்
ழுழுமையான அளவு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி மொழி அளித்து தான் பள்ளி உரிமத்தினை புதிப்பித்து கொள்கின்றனர்.

எல்லோரும் பள்ளிக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள்!

நாமும் எங்கேயாவது கடன் வாங்கியாவது  அவர்கள் கேட்கும்  கூடுதல் கட்டணத்தை கட்டி விடுவோம்.!

என்ற பயம் குழந்தைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு காரணத்தினால் மட்டும் தான் இந்த கல்வி கொள்ளையர்கள்  சுதந்திரமாக பயம் இல்லாமல் உள்ளனர்!

சிறிய ஓலைக்குடிசையில் பள்ளி ஆரம்பித்தவர்கள் இன்று பல மாட மாளிகைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழுகின்றனர்,!

இது அனைத்தும் நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம்.

இந்த கல்வி கொள்ளையர்களை தண்டிக்க வேண்டிய. அரசு கல்வித்துறை அதிகாரிகளும் இவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு  கடமை செய்ய தவறுகின்றனர்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு  எந்த ஒரு தனியார் பள்ளிகளையும் நேரடியாக ஆய்வு செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கேடு கெட்ட கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளி கல்விக்கொள்ளையர்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் ஆண்டு தோறும் பள்ளிக்கு சாதகமான ஆய்வறிக்கையினை போலியாக. வழங்கி வந்தார்கள் .

தற்பொழுது மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள் அனைத்தும் இழுத்து மூடி ஆய்வாளர்களுக்கு வேறு பணி வழங்கி விட்டனர்.

#கல்விக்கட்டணத்தை #எப்படி #செலுத்துவது?

★www.tn.govt.in .school fees  (Tamil Nadu Private School Fees  Determination Committee District Wise ) என்ற இணைய தள முகவரிக்கு சென்று உங்கள் மாவட்டத்தின் பெயரினையும், உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் பெயரை டைப் செய்தால் கல்வி கட்டண விபரங்கள் இருக்கும்!

2019 -2020 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

வெளியிட படாத பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு பழைய கல்வி கட்டணத்துடன் பத்து சதவீதம் கூடுதலாக சேர்த்து அந்த கட்டணத்தினை மட்டும் வங்கி வரையோலையாக எடுத்து  உங்கள் குழந்தையின் பெயரினை குறிப்பிட்டு கடிதம் எழுதி  சம்பந்தப்பட்ட பள்ளிக்கு பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அனுப்புங்கள்.

★அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்புங்கள்.

★பள்ளி நிர்வாகம் உங்களை அழைத்து மிரட்டினால்,  முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி இயக்குநர் கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவருக்கு புகார் அனுப்புங்கள்.

★இந்த கடமை தவறிய கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ, பள்ளி நிர்வாகிகள்  உங்களை மிரட்டினாலோ அல்லது கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ  எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.!

உங்கள் புகாரினை பதிவு செய்ய "தனியார் பள்ளி புகார் " 98655 90723 என்ற நமது வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்.

அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 19 (1)  அ வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் ;
**********************************    
பதிவு எண் :10 /2015 : 44 /2015

" சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு"
LEGAL AWARENESS. AND ANTI CORRUPTION. ORGANIZATION
363,  காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் - 641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

LAACO வின் முக்கிய அறிவிப்பு !

நிர்வாகிகள் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் .

நாஞ்சில். கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723
தொடர்பு கொள்ளும் நேரம் :தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு கொள்ளும் நேரம் : தினமும் காலை 10 மணி முதல் 1.00 மணி வரை

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி :97910 50513
தொடர்பு நேரம் : நாள் முழுவதும்
நன்றி

#மாறுங்கள்! #மாற்றுங்கள்!

#கொடுக்க #வேண்டாம் #லஞ்சம்!

உரிமையை கேட்டுப் பெறுவோம்!

கல்வி கொள்ளையர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவோம் .

இனி மாற்றம் என்பது நமது கையில்.

ஊழலுக்கு விடை கொடுப்போம்.!

அனைவருக்கும்  இந்த செய்தியினை பகிருங்கள் நண்பர்களே!!