Saturday 24 December 2016

தனியார் பள்ளிகள் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க தடை!

லஞ்சம் தவிர்!                    நெஞ்சம் நிமிர்!!

                    " முக்கிய செய்தி " 

தனியார் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம்  வசூலிக்க தடை !!
Laaco /22 /04/2018

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்டம் .

THE TAMIL NADU SCHOOLS(REGULATION OF COLLECTION OF FEE  ACT -2009 .

                    "   சட்ட எண் : 22 / 2009 "

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து  வரையறை இல்லாமல் அவர்கள் விருப்பம் போல் அதிக கல்விக் கட்டணங்களை வசூலித்து வந்தனர்.

இந்த கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்திட.  தமிழக அரசு இந்த சட்டத்தின் படி   கல்விக்கட்டண நிர்ணய குழுவினை உருவாக்கியது.

ஓய்வு பெற்ற நீதிபதியினை தலைவராக கொண்ட இந்த குழுவினர்  ஒவ்வொரு பள்ளிகளும் வழங்கி  உள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு, மாணவர்கள் பாதுகாப்பு நலன்கள், ஆசிரியர்களின் தகுதிகள், மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்ற பல்வேறு தகுதிகளை ஆய்வு செய்து  ஒவ்வொரு ஆண்டும் LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும்  மாணவர்களுக்கான கல்விக்கட்டணங்களை பள்ளி வாரியாக தனித்தனியாக நிர்ணயம்  செய்து வருகிறார்கள்!

★இந்த குழுவினரால் நிர்ணயிக்கப் பட்ட கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது  இந்தச்சட்டப் பிரிவு 3 (2)  ன் படி   தடை விதிக்கப்பட்டுள்ளது.!

★இந்தச்சட்டப் பிரிவு 9 (1)  மீறி மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கு  மூன்று ஆண்டுகளுக்கு குறையாத ஏழாண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறை தண்டளையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.! 

★தமிழ் நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்டப்பிரிவு 9 (2)  ன் படி  குற்றவாளி என தீர்மானிக்கப்பட்ட பள்ளி நிர்வாகி  சட்டத்தை மீறி எந்த மாணவனிடமிருந்து அதிக கட்டணம்  வசூலிக்கப் பட்டதோ  அந்த மாணவனுக்கு அதிக கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.!

★கல்வி கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப் பட்ட கல்வி கட்டண விபரங்களை  அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.!

★குழு நிர்ணயிக்கும்  கட்டணம் ஒர் ஆண்டுக்கான TUITION. FEES மட்டுமே!

★நோட்டு, புத்தகம்,  டை, பெல்ட், சாக்ஸ், டைரி  போன்ற ஸ்டேசனரிக்கு மட்டும் பள்ளி கேட்கும் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

நோட்டு புத்தகங்களில் விற்பனை விலை அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

★பள்ளி பேருந்து, சிற்றுந்து கட்டணம் தனியாக செலுத்த வேண்டும்.

★இதனை தவிர டேர்ம் பீஸ்,  போன்ற எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது!

★பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்கள் அனைத்திற்கும்  உரிய முறையான ரசீது வழங்க வேண்டும்!

என்ன நண்பர்களே!

சட்டம் தெரியாமல் கல்வி கொள்ளையர்கள் கேட்கும் கட்டணங்களை  செலுத்தி இருப்பீர்கள்.

இனி மேல்  அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை மட்டும் செலுத்துங்கள்.

அய்யய்யோ!

★சட்டபடி நடந்தால் தனியார் பள்ளிகளில் அனுமதி தரமாட்டார்களே?

★நமது குழந்தைகளை கவனிக்க மாட்டார்களே?

★தேர்வில் பெயிலாக்கி விடுவார்களே?

★மாற்று சான்றிதழ்  (T C) கொடுத்து அனுப்பி விடுவார்களே?

★அவர்களை நாம்  பகைத்து விட்டால் நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?

தனியார் பள்ளி நிர்வாகிகள் தான் உங்கள் குழந்தைகள் அனைவருக்கும்
ழுழுமையான அளவு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி மொழி அளித்து தான் பள்ளி உரிமத்தினை புதிப்பித்து கொள்கின்றனர்.

எல்லோரும் பள்ளிக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள்!

நாமும் எங்கேயாவது கடன் வாங்கியாவது  அவர்கள் கேட்கும்  கூடுதல் கட்டணத்தை கட்டி விடுவோம்.!

என்ற பயம் குழந்தைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு காரணத்தினால் மட்டும் தான் இந்த கல்வி கொள்ளையர்கள்  சுதந்திரமாக பயம் இல்லாமல் உள்ளனர்!

சிறிய ஓலைக்குடிசையில் பள்ளி ஆரம்பித்தவர்கள் இன்று பல மாட மாளிகைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழுகின்றனர்,!

இது அனைத்தும் நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம்.

இந்த கல்வி கொள்ளையர்களை தண்டிக்க வேண்டிய. அரசு கல்வித்துறை அதிகாரிகளும் இவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு  கடமை செய்ய தவறுகின்றனர்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு  எந்த ஒரு தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கேடு கெட்ட அலுவலர்கள் தனியார் பள்ளி கல்விக்கொள்ளையர்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் பள்ளிக்கு சாதகமான ஆய்வறிக்கையினை போலியாக. வழங்கி வருகிறார்கள்.

# கல்விக்கட்டணத்தை எப்படி செலுத்துவது?

★www.tn.govt.in .school fees என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்கள் மாவட்டத்தின் பெயரினையும், உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் பெயரை டைப் செய்தால் கல்வி கட்டண விபரங்கள் இருக்கும்!

2018 -2019 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் இன்னும் இணைய தளத்தில் வெளியிடப்பட வில்லை!

பழைய கல்வி கட்டணத்துடன் பத்து சதவீதம் கூடுதலாக சேர்த்து
அந்த கட்டணத்தினை மட்டும் வங்கி வரையோலையாக எடுத்து  உங்கள் குழந்தையின் பெயரினை குறிப்பிட்டு கடிதம் எழுதி  சம்பந்தப்பட்ட பள்ளிக்கு பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அனுப்புங்கள்.

★அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்புங்கள்.

★பள்ளி நிர்வாகம் உங்களை அழைத்து மிரட்டினால், மெட்ரிக்ப்பள்ளி ஆய்வாளர், முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி இயக்குநர் கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவருக்கு புகார் அனுப்புங்கள்.

★இந்த கடமை தவறிய கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ, பள்ளி நிர்வாகிகள்  உங்களை மிரட்டினாலோ அல்லது கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ  எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.!

உங்கள் புகாரினை பதிவு செய்ய "தனியார் பள்ளி புகார் " 98655 90723 என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்.

அரசியலமைப்புசாசனக்கோட்பாடு 19 (1)  அ வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :
             
              பதிவு எண் :10 /2015 :44 /2015

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
LEGAL AWARENESS. AND ANTI CORRUPTION. ORGANIZATION.
363,  காந்தி ரோடு, பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

LAACO வின் முக்கிய அறிவிப்பு!

நிர்வாகிகள் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் .

நாஞ்சில். கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723
தொடர்பு கொள்ளும் நேரம் :தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு கொள்ளும் நேரம் : தினமும் காலை 10 மணி முதல் 1.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00

*ரா.கோபால்சாமி*
மாநில துணை தலைவர் 
உலாபேசி :98422 98761
தினமும் இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை 

*ஆ.பழனிக்குமார்*
மாநில அமைப்பு செயலாளர் 
உலாபேசி :97910 50513 
தொடர்பு நேரம் : நாள் முழுவதும் 

*கோ.தாணு மூர்த்தி*
மாநில பொருளாளர் 
உலாபேசி :99438 14132
தொடர்பு நேரம் : மாலை :5.00 மணி முதல் இரவு 9.00 மணி 

நன்றி 🙏

மாறுங்கள்! மாற்றுங்கள்!
கொடுக்க வேண்டாம் லஞ்சம்!

உரிமையை கேட்டுப் பெறுவோம்!

கல்வி கொள்ளையர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவோம்.!

இனி மாற்றம் என்பது நமது கையில்!

ஊழலுக்கு விடை கொடுப்போம்!

அனைவருக்கும்  பகிருங்கள் நண்பர்களே!!

No comments:

Post a Comment