Monday 19 December 2016

ஊழல் ஒழிப்பு செய்தி:0010 முதியோர் உதவித் தொகை வழங்குவதில் ஊழல் முறைகேடு ?

" ஊழல் ஒழிப்பு செய்தி " : 010 /19.12.2016

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன ?

உண்மை சம்பவங்கள் !

பொது நல வழக்கு  ?

O A P  (OLD AGE PENSION )

முதியோர் ,விதவை , ஊனமுற்றோர் , கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு சமூக நலத்துறையின் மூலம் நிதி உதவி அளிக்கப் பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் முதியோர் உதவி தொகை  வழங்கியதில் ஊழல் , முறைகேடு , அரசுக்கு வருவாய் இழப்பு ?

எப்படி ?

1. திருப்பூர் வடக்கு 

2.  திருப்பூர் தெற்கு

3.  பல்லடம்

4. உடுமலைப்பேட்டை

5. தாராபுரம்

  6. மடத்துக்குளம்

  7. காங்கேயம்

  8. ஊத்துக்குளி

  9. அவினாசி
 
ஆகிய ஒன்பது வட்டங்களை கொண்டது தான் திருப்பூர் மாவட்டம்.

மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அறுபது வயதிற்கு மேற்பட்ட  முதியோர்களுக்கு  மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப் பட்டு வருகிறது .

ஆமாம் .நல்ல விஷயம் தானே ?

இல்லை .இல்லை .

வறுமை கோட்டிற்கு கீழ் வாழாத வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள்  தான் பொய்யான ஆவணங்கள் கொடுத்து  உதவித் தொகை பெற்று வருகின்றனர் .

உண்மையிலேயே கஷ்டப்படுகிற ஏழை முதியவர்களுக்கு அரசின் உதவி தொகை கிடைப்பதில்லை .

இதற்கு  காரணமான குற்றவாளிகள் யார் ?
.
உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன ?

வறுமை கோட்டிற்குள் வாழ்பவர்களின் விபரம் B.P. L  NO ( Below Poverty Line )
ஒவ்வொரு கிராமங்களின் அரகத்துறை அலுவலகங்களில் பராமரிக்கப் பட்டு வருகிறது  .

1.  B.P. L NO இருப்பவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்

2. ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்கள் உள்ளவராக இருக்கக் கூடாது .

3. ஆண் வாரிசு இருக்க கூடாது .

4. சொந்தமான வீடோ , நிலமோ இருக்க கூடாது .

5 வயோதிகத்தின் காரணமாக  கூலி வேலை செய்து பொருள்  ஈட்ட கூடியவராக இருக்கக் கூடாது .

6 . பிச்சை எடுத்து வாழ்பவராக இருக்கக் கூடாது .

7 . அவருக்கு தெரிந்த நபர்கள் இவர் மீது இரக்கப்பட்டு தரும் உணவை உண்டு வாழ்பவராக இருக்க வேண்டும் .

இந்த தகுதி உள்ள முதியவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து  ஒப்புதல் வாக்கு மூலத்துடன் ,

மக்கள் சபை உறுப்பினர் , ராஜ்யசபை உறுப்பினர் ,மாநகராட்சி மன்ற உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர் , ஏழை இல்லம் ஒன்றின் நிர்வாகி , அல்லது  மாநில , மத்திய அரசின் பதிவுள்ள அதிகாரி யாராவது ஒருவரிடம் சான்றிதழ் பெற வேண்டும் .

அரசு மருத்துவரிடம் வயது சான்று பெற வேண்டும் .

கிராம நிர்வாக அலுவலர் தல ஆய்வு செய்து மனுதாரர் தகுதியானவராக இருந்தால்  உதவித் தொகை வழங்க  சிபாரிசு செய்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் .

மனுதாரர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரையும் நேரில் விசாரணை செய்து உதவித் தொகை வழங்கலாம் என வருவாய் ஆய்வாளர் விசாரணை  அறிக்கையினை வட்டாட்சியருக்கு வழங்க வேண்டும் .

அதன் பின்னரே மனுதாரருக்கு சமூக நலத்துறையின் கீழ் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் .

ஆனால் ,

இந்த நடைமுறை பின்பற்ற படவில்லை .

தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசியல் வாதிகள் , கிராம நிர்வாக அலுவலர்கள் , வருவாய் ஆய்வாளர்கள் , வட்டாட்சியர்கள் மூலம் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது .

எனவே ,
திருப்பூர் மாவட்டத்தில் உதவித் தொகை பெறுபவர்களின்  விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டோம் .

ஆனால் , கடமை தவறிய அதிகாரிகள் தகவல் வழங்காத காரணத்தினால் மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தோம் .

தகவல் ஆணையரின் உத்தரவின் பேரில் திருப்பூர் சமூக நலத்துறை துணை ஆட்சியர்  தகவல் ஆணையத்துக்கு  நேரில் வரவழைக்கப்பட்டு அனைத்து உதவித் தொகை பெறும் பயனாளிகளின்  விபரங்களையும் சட்டப் பிரிவு  7(6) ன் படி இலவசமாக சீடியாக (நுண்பட சுருள்) பெற்றுள்ளோம் .

மாதம் தோறும் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள் .

இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிய வருகிறது .

தற்பொழுது கள ஆய்வில் உள்ளோம் .

விட மாட்டோம் லஞ்ச அதிகாரிகளை .

கள ஆய்வு முடிந்தவுடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த அனைத்து லஞ்ச அதிகாரிகள் மீது பொதுநல வழக்கு பதிவு செய்ய  உள்ளோம் .

நமது நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவித் தொகைகள் சென்று அடைய வேண்டும் .

கடமை தவறிய அதிகாரிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் .

அரசுக்கு ஏற்படும் இழப்பீட்டினை தடுக்க வேண்டும் .

திருப்பூர் மாவட்ட நண்பர்களே!
தகுதியற்ற பயனாளிகள் விபரம் தங்களுக்கு தெரிய வந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் .
என ,

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 , காந்தி ரோடு ,
பெரியார் காலனி , திருப்பூர் -641 652

நாஞ்சில் K கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
செல் ; 98655 90723

உண்மை சம்பவங்கள் தொடரும் .............

No comments:

Post a Comment