Friday 23 December 2016

குடும்ப அட்டையின் விபரம் தெரிய வேண்டுமா?

குடும்ப அட்டையில் உங்களது  ஆதார் எண் மற்றும் கைபேசி எண் இணைத்து விட்டீர்களா?

இல்லை எனில் உடனே இணையுங்கள்!

நண்பர்களே!  உங்களது குடும்ப அட்டைக்கு என்னென்ன பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மற்றும்     முழுமையான  விபரம் தெரிய வேண்டுமா?

கூகுள் பிளே ஸ்டோர் சென்றுTNEPDS என்னும் ஆப்பினை பதிவிறக்கம் செய்யுங்கள்  .

அதில் உங்களது கைபேசி எண்ணை இணையுங்கள்.

பின்னர் உங்களது கடவுச் சொல் குறுஞ்செய்தியாக வரும். 

அந்த கடவுச் சொல்லினை பதிவு செய்த உடன்,

உங்களது பெயர் மற்றும்  முழுமையான விபரம்

உங்கள் நியாய விலைக்கடையின் இருப்பிடம்  மற்றும் வரைபடம்.
 
உங்களது உரிமம்

பரிவர்த்தனைகள்

கடையின் தினசரி இருப்பு விபரம்

கடை வேலை நேரம்

கடை விடுமுறை நாள்

புகார் செய்ய வேண்டிய விபரம்

தெரிய வரும்.

மேலும் நீங்கள் பொருள்  வாங்கியவுடன் அதன் விபரம் குறுஞ்செய்தியாக வரும்.

உங்களது  உரிமைகள் மறுக்கப்பட்டால்  புகார் செய்யுங்கள்.

ஆன் லைன் புகார் :

நுகர்வோர் :
நாஞ்சில் K. கிருஷ்ணன்
159/12 A  ,சரவண பவனம் ,
தியாகி குமரன் புதுக்காலனி
4. வேலம் பாளையம்
திருப்பூர் -641 652 .
                
பெறுநர் :
ஆணையர் அவர்கள்,
உணவு பொருள் வழங்கல்
மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத துறை  , சென்னை .

அய்யா ,

பொருள் : எனக்கு வழங்க வேண்டிய  கோதுமை  மோசடி   செய்யப்பட்டுள்ளது குறித்து புகார் :                   

                                                     
குடும்ப அட்டை எண் : 13/W/0092699

நுகர்வோராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51(அ) ன் கீழ் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்றி வரும் ஒரு இந்திய குடிமகன் ஆவேன் .

2005 ஆம் ஆண்டு குடும்ப அட்டை பெற்றுள்ளேன் .

மாதந்தோறும் எனது குடும்ப அட்டைக்கு பத்து கிலோ கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் தற்பொழுது தான் அறிந்தேன் .

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

மாதம் மூன்று கிலோ கோதுமை மட்டுமே  எனக்கு வழங்கப்பட்டு வருகிறது .
அதுவும் எல்லா மாதமும் தவறாமல்  கிடைப்பதில்லை .

அப்படியானால் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  கோதுமை  கள்ள சந்தையில் அதிக விலையில்  விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகம்  எழுந்துள்ளது .

எனது உரிமை திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளதாக தெரிய  வருகிறது .

இதற்கு காரணமான கடமை தவறிய விற்பனையாளரினால் எனக்கு மிகுநத மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது .

எனவே  இதற்கு காரணமான கடமை தவறிய  விற்பனையாளர் மற்றும் அதற்கு பொறுப்பு வகிக்கும்  அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோருகிறேன் .

மேலும் ,  இனி வரும் காலங்களில் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பத்து கிலோ கோதுமையை  மாதந்தோறும் தவறாமல் வழங்க நடவடிக்கை எடுக்க  கோருகிறேன் .

எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் நிராகரிக்கப்படுமாயின் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் முறையிடுவதினை தவிர வேறு வழி இல்லை என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் .

நாள் : 23 .12.2016
இடம் ; திருப்பூர்                            

                                                 நுகர்வோர்
நாஞ்சில் K. கிருஷ்ணன் .

No comments:

Post a Comment