Saturday 24 December 2016

உங்கள் பகுதியை லஞ்சம் ஊழல் இல்லாத பகுதியாக மாற்ற விரும்புவரா நீங்கள்?

லஞ்சம் தவிர்!                       நெஞ்சம் நிமிர்!!

"மக்கள் பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம் "

"லஞ்சம் ஊழலுக்கு எதிரானவரா நீங்கள்?

உங்கள் பகுதியை "லஞ்சம் ஊழல் " இல்லா பகுதியாக மாற்ற விரும்புகிறீர்களா?

உங்களது அனைத்து தேவைகளுக்கும் லஞ்சம் கொடுக்காமல் சாதிக்க நினைப்பவரா?

இலவச சட்ட விழிப்பறிவுணர்வு (சட்டப்பயிற்சி)   பெற விரும்புகிறீர்களா?

  கடமை தவறிய அரசு அதிகாரிகளினால் பாதிக்க பட்டுள்ளவரா?

உங்களது அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப் பட்டுள்ளதா?

சட்ட ஆணை இல்லாமல் உங்களது சொத்துகள் பறிக்கபட்டுள்ளதா ?

வழக்கறி்ஞர்களை நம்பி  ஏமாற்ற பட்டவரா நீங்கள்?

தகுதி இருந்தும் அரசின் சலுகைகள், சான்றிதழ்கள்  உதவித்தொகைகள் கிடைக்கப் பெறாதவரா நீங்கள்?

பல அமைப்புகளில் உறுப்பினராய் இருந்தும்  லஞ்சம் கொடுத்து தான்  உங்கள் தேவைகள் நிறைவேறுகிறதா?

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பில் "  உறுப்பினர் ஆக விருப்பமா?

அல்லது

எங்களுடன் இணைந்து சமுதாய பணியாற்ற. விரும்புகிறீர்களா ?

உறுப்பினர்களுக்கான தகுதிகள் :

1.எந்த குற்ற வழக்கிலும்  தண்டனை பெற்றவர்களாக இருக்கக் கூடாது.

2.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டியதில்லை.

3.ஜாதி, மதம், இனம், மொழி பாகுபாடு இல்லை.

4. எந்த ஒரு அரசியல் கட்சியிலோ,   அமைப்புகளிலோ .உறுப்பினராய் இருக்கலாம்.

5.இரண்டு புகைப்படம்  மற்றும் முகவரி ஆதார நகல் ஒன்று.

6. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.

7.  ஆண்டு சந்தா  ₹ 100 (ஒரு ஆண்டுக்கான உறுப்பினர்)

8. ஆயுள் சந்தா ₹ 1000 (நிரந்தர உறுப்பினர்)

9. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் படும்  .

அமைப்பின் பொறுப்பாளர்களுக்கான தகுதிகள் :

1. எந்த வித குற்ற வழக்கில் தொடர்புடையவராகவோ தண்டனை  பெற்றவராக இருக்க கூடாது.

2. எந்த ஒரு அரசியல் கட்சியிலும் பொறுப்பாளராக இருக்க கூடாது.

3. எந்த ஒரு அமைப்பிலும் பொறுப்பாளராக இருக்கலாம்.

4.எந்த விதமான ஆதாயத்தையும் எதிர் பார்க்க கூடாது.

5. முழு நேரம் பணியாற்ற தேவை இல்லை.
    உங்களது  குடும்பம், தொழில், உடல் நலனிற்கு தீங்கு ஏற்படாத வகையில்  பணியாற்றலாம்.

6. 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.(ஆண் பெண் இருபாலரும்)

7.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

8. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன், எந்த பகுதியில் பணியாற்ற விருப்பம் என கடிதம்  கொடுக்க வேண்டும்.

9. அமைப்பின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் தெரிந்திருக்க வேண்டும்.

10. ஆயுள் சந்தாவாக ₹ 1000 செலுத்த
வேண்டும்.

11. இரண்டு புகைப்படம்  மற்றும் முகவரி
ஆதாரநகல்.

எங்கள் அமைப்பில் உறுப்பினர் ஆவதாலோ, பொறுப்பாளர் ஆவதாலோ உங்களுக்கு என்ன நன்மை என்கிறீர்களா?

இவ்வுலகில் சாதிக்க பிறந்த சாதனையாளர்களில் நீங்களும் ஒருவராவீர்கள். !

ஆர்வம் உள்ளது ஆனால்  சட்ட வழிமுறைகள் தெரியவில்லையே என கவலைபட வேண்டாம்.

தேர்ந்தெடுக்கப் படும் பொறுப்பாளர்களுக்கு சிறந்த இலவச சட்ட பயிற்சி அளிக்கப்படும்.

"மாறுங்கள் ! மாற்றுங்கள்!"

முதலில் நீங்கள் மாற வேண்டும்.

இதுவே எங்கள் தாரக மந்திரம்.

இனி மாற்றம் என்பது சொல் அல்ல! செயல்!

அரசியலமைப்பு சாசன கோட்பாடு 51(A) ஓ
வின் கீழ்   நாடு முழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் "லஞ்சத்தை ஒழித்து " நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல எங்களுடன் இணைந்து மக்கள் பணியாற்ற ஆர்வம் உள்ள தன்னார்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

" தலைமை  அலுவலகம்  "

"சட்ட விழிப்புணர்வு மற்றும்  ஊழல் ஒழிப்பு அமைப்பு "
LEGAL AWARENESS AND ANTI CORRUPTION ORGANIZATION
பதிவு எண் : 10 /2015 :44 /2015
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
தமிழ் நாடு, இந்தியா-மெயில் :nanjillaacot@gmail. com

தொடர்புக்கு :
நாஞ்சில் K. கிருஷ்ணன்
நிறுவனர்
98655 90723

அரியலூர் R. சங்கர்
மாநில தலைவர்
98655 43303

V.சுப்பிரமணியன்
பொது செயலாளர்
98420 17989

குறிப்பு : உறுப்பினர் மற்றும்  பொறுப்பாளராக ஆக முடியாதவர்களுக்கும் நாங்கள் சேவை செய்து வருகிறோம்.
நன்றி.

1 comment: