Saturday 24 December 2016

ஊழல் ஒழிப்பு செய்தி:0003 கடவுளை காட்சிப்பொருளாக்கி பக்தர்களை பார்வையாளர்களாக்கி நூதன முறையில் மோசடி!

" ஊழல் ஒழிப்பு செய்தி" : 003

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன ?

உண்மை சம்பவம் !

நெஞ்சு பொறுக்குதில்லையே !

கடவுளை காட்சிப் பொருளாக்கி !

பக்தர்களை பார்வையாளர்களாக்கி வியாபார தந்திரம்!

கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் நிறுவனம் !

  கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருகின்றனர் ?

தமிழகத்தின் தென் திருப்பதி என மக்கள் நினைத்து செல்லும் புண்ணய ஸ்தலம் .?

உண்டியல்  வருமானம் இல்லை .!
வாகன நிறுத்த கட்டணம் இல்லை .!
தரிசன கட்டணம் இல்லை .!
அர்ச்சனை கட்டணம் இல்லை. .!
மிதியடி பாதுகாப்பு கட்டணம் இல்லை. .!
கைப்பேசி பாதுகாப்பு கட்டணம் இல்லை. .!
கழிவறை கட்டணம் இல்லை .!
அன்னதானம் இலவசம் .!

இப்படி ஒரு கோவிலை காண ஆசையா ?

இந்த கோவில் எங்குள்ளது ?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்குப் பட்ட தென்மலை என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது .

இயற்கை சூழல் நிறைந்த  பகுதியில் திருப்பதி ஏழு மலையnன் ஆலயம் கண்ணபிரான் மில்ஸ் மற்றும் கே ஜி  டெனிம் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியாருக்கு சொந்தமான இபத்தில் அமைக்கப்பட்டுள்ளது .

14.04.2016  தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் 1-ம் தேதி அன்று தென் திருப்பதி என்று அழைக்கபடும் வைணவ தலத்திற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தோம் .

வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தினோம் .

அங்கே கண்ட தகவல் பலகையில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.

பரவாயில்லை .
எழுமலையான் மீது பாரத்தை போட்டு ஆலயம் நுழைவு வாயில் வந்தோம் .

அங்கு இருந்த அறிவிப்பு பலகை மிகவும் அதிர்ச்சி அளித்தது .

இது கண்ணபிரான் மில்ஸ் மற்றும் கே ஜி டெனிம் பிரைவேட் லிமிடெட் என்ற தனியாருக்கு சொந்தமான வழிபாட்டு தலம் ஆகும்.

இந்த வழிபாட்டு தலத்திற்கு வருபவர்கள் அனைவரும் பார்வையாளர்களாக மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் .

வழிபாட்டு தலம் திறப்பதும் மூடுவதும் நிர்வாகத்தின் முடிவாகும் .

பார்வையாளர்களை அனுமதிப்பதும் அனுமதி மறுப்பதும் நிர்வாகம் முடிவு செய்யும் .

கூட்டமாக நின்று சத்தமாக பேசுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் .

கைபேசி , கேமரா , திண்பண்பங்கள் உள்Gள கொனடு செல்ல அனுமதி இல்லை .

இங்கு கடவுள் காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளார் ?

பக்தர்கள் பார்வையாளர்களாக்கப்பட்டுள்ளனர்?

உள்ளே செல்லலாமா ? வேண்டாமா ?

தயக்கத்துடன் உள்ளே சென்றோம் .

அன்றைய தினம் பல்லாயிரகணக்கான மக்கள் பெருங்கூட்டம் .

நுழைவு வாயிலில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தோம்

கைபேசிகளை பாதுகாப்பாளர் வாங்கி வைத்துக் கொண்டு .  டோக்கன் .வழங்கினார்கள் .

அங்கிருந்த வருகை பதிவேட்டில் எங்கு இருந்து வருகிறோம் என்ற விபரங்கள் பதிவு செய்து கையொப்பம் இட சொன்னார்கள் .

மெட்டல் டிடெக்ட்டர் கருவி மூலம் ஆண்கள் பெண்கள் சோதனை செய்யப் பட்ட பின்னரே  உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.

சுமார் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலஸ்தானத்தை அடைந்தோம். .

ஒரு சில விநாடிகள் மட்டுமே சிலையை பார்க்க அனுமதி .

ஆழ்வார்கள் சந்நிதியில் அவர்களுக்கு வேண்ட பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டார்கள் .

மூலஸ்தானத்தை சுற்றிலும் தென்னை ஓலை கீற்றினால் சுவர் போல் மறைக்கப்பட்டிருந்தது .

தீ விபத்து ஏற்பட்டால் பார்வையாளர்கள் தீயில் கருகும் அபாயம் உள்ளது .

வெளியில் வரும் வழியில் சாமிக்கு சாற்றிய புடவை 1200 ரூபாய்க்கும் வேஷ்டி750 ரூபாய்க்கும் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

ஒரு லட்டு 20 ரூபாய் வீதம் விற்பனை செய்து கொண்டிருந்தனர் .

100 ரூபாய் கொடுத்து ஐந்து லட்டு வாங்கினோம் .

லட்டு விற்பனை செய்த பணம் குவியல் குவியலாக அட்டை பெட்டிகளில் ..........,?

அன்னதான நன்கொடை வசூல் பல்லாயிர கணக்கில் . ..... . .. ..,?

ஒரு கரண்டி புளியோதரை சாதம் இலவசமாக வழங்கினார்கள் .

அடுத்து
ஐஸ்கிரீம் , பாப்கான் , குளிர்பானங்கள் ,காப்பி  , உணவு விடுதி

விற்பனை படு ஜோர் .

வியாபார நோக்குடன் வணிக வளாகம் போல் பல கடைகள் .

அனைத்து கடைகளிலும் அமோக விற்பனை பல்லாயிர கணக்கில் ..........,?

மாஸ்டர் பிளான் ,
இதுதான் வியாபார தந்திரம் .....

தென் திருப்பதி என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை நம்ப வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் நிறுவனத்தின் சூத்திரம் .

பாவம் ஏமாளி மக்கள் .......?

இங்கு வரும் பக்தர்கள் இல்லை | இல்லை பார்வையாளர்களுக்கு பாதுகாப்பில்லை .

இந்துக்கள். 'பண்டிகை காலங்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் ........

ஆலய வழிபாடு என்பது இந்துக்களின் நம்பிக்கை .

பக்தர்களாக வருபவர்கள் பார்வையாளர்களாக மாற்றப்படும் விபரீதம்!

அரசு சிறப்பு பேருந்து வசதி வேறு .

கடவுள் பெயரால் நூதன மோசடி ......?

பொது மக்களின் பணம் ஒரே இடத்தில் ..... குவியல் குவியலாக ..........?

இதற்கு அனுமதி வழங்கியது யார் ? யார் ?

வருமான வரித்துறையினருக்கு தெரியாதா ?

அறநிலைய துறையினர் வேடிக்கை பார்ப்பது எதனால் ?

லஞ்ச அதிகாரிகள் ...... ?

தென் திருப்பதி என பெயர் சூட்டியது யார் ?

கோரிக்கை ; அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த வழிபாட்டு தலத்தினை முழுமையாக ஆய்வு செய்து அரசுடமை ஆக்க வேண்டும் செய்வார்களா ?

LAACO  நாஞ்சில் K.கிருஷ்ணன்
ஊழல் ஒழிப்பு செய்தியாளர்
திருப்பூர் மாவட்டம்
26.08. 2016

உண்மை சம்பவங்கள் தொடரும் ........!!

படியுங்கள் ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ் .

No comments:

Post a Comment