Sunday 25 December 2016

தனியார் பள்ளிகளின் முறைகேடுகள் -ஊழல்கள்! துணை போகும் மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்! செயல் இழந்து கிடக்கும் மெட்ரிக்பள்ளிகள் இயக்குநரகம் Vs பள்ளிக்கல்வித்துறை!!


# அதிர்ச்சி ரிப்போர்ட்!!
*************************
மெட்ரிக்பள்ளிகள் இயக்குநரகம் Vs பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் தனியார் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது.

★உத்தரவு!
*************
தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என சட்ட  விதிமுறைகளையும் பல அரசாணைகளையும், உத்தரவுகளையும்  பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது.

★அனுமதி!
*************
இந்த உத்தரவுகள் அனைத்தும் சரியாக கடை பிடிக்கும் பள்ளிகளை மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் ஆய்வு செய்வதுடன்  பள்ளிகளின் மூலம் பெறப்பட்ட உண்மை சான்றிதழ்களை  இயக்குநரகத்தில்  வழங்கி பள்ளிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

★ஆய்வறிக்கை!
*******************
ஆண்டு தோறும் அனைத்து பள்ளிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து ஆய்வறிக்கையினை அளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

★தீ விபத்து!
**************
இந்நிலையில் கும்பகோணத்தில்   சட்டத்திற்கு புறம்பாக செயல் பட்டு வந்த தனியார் பள்ளியில் 94 மழலை குழந்தைகள் தீயில் கருகி சாம்பலான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையையும்  ஏற்படுத்தியது.

★விசாரணை கமிஷன்!
**************************
கும்பகோணம் பள்ளி தீவிபத்து தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் அவர்களின் தலைமையிலான  கமிஷன் 2661 பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

★அதிர்ச்சி தகவல்!
*********************
இதில் கட்டிட உறுதி தன்மை இல்லாமல் 1557 பள்ளிகளும், கட்டிட உரிமம் இல்லாமல் 1670 பள்ளிகளும், தகுதியற்ற மின்சார ஒயரிங் உள்ள 1281 பள்ளிகளும், தீயணைப்பு சாதனங்கள் இல்லாமல் 2386 பள்ளிகளும்  இயங்கி வருவதாக அதிர்ச்சி தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணாக்கர் பாதுகாப்பு நலன்களை இந்த பள்ளிகள்  கடைபிடிக்க வில்லை என நிரூபணம் ஆகி உள்ளது.

முறை கேடாக இயங்கும் பள்ளிகளின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

★மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்!
*******************************
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் செயல் படும் 12000 க்கும் மேற்பட்ட  பள்ளிகளுக்கும் 15 மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களே உள்ளனர்.

இவர்களால் ஒரு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய இயலாது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் .

★சான்றிதழ்கள்!
********************
சுகாதாரச்சான்று,  தீ தடுப்பு தடையின்மைச்சான்று, கட்டிட உறுதிச்சான்று, என அனைத்து சான்றிதழ்களையும் லஞ்சம் கொடுத்து வாங்கி பள்ளி நிர்வாகிகள் மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களிடம் வழங்கி பள்ளி உரிமத்தினை தொடர்ந்து புதுப்பித்து கொள்கின்றனர்.

மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களும் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்யாமல் நற்சான்றிதழ் வழங்குகின்றனர்.

இந்த கடமை தவறிய அதிகாரிகளினால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு யார் பொறுப்பு?

★அரசுடமை!
***************
சட்டத்திற்கு புறம்பாக செயல் படும் பள்ளிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும்.

★இலவச கட்டாய கல்வி
உரிமைச்சட்டம் -2009

★தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம்  முறைப்படுத்துதல் சட்டம் -2009

★கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டம் -1992

95 சதவீதம்  பெற்றோர்களுக்கு  இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்  பற்றியும்,

தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டண நிர்ணய குழு நிர்ணயித்துள்ள அரசு கல்விக்கட்டணம் குறித்தும் எதுவும் தெரியாதாம்!

அய்யகோ! 

★இதற்கு காரணம் யார் ?
****************************
அமலில் உள்ள சட்டங்களையும், அரசாணைகளையும்  மதிக்காத கல்வியை வியாபார மாக்கிய தனியார் பள்ளி நிர்வாகிகள் தான்.

★கடமை தவறிய அதிகாரிகள்!
**********************************
இதனை கண்காணிக்க வேண்டிய மெட்ரிக் பள்ளிகள்  ஆய்வாளர்களும், முதன்மைக்கல்வி  அதிகாரிகளும்  தான்  பொறுப்பேற்க வேண்டும்.

★தகவல் பலகை!
*******************
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஆண்டு தோறும்  25 சதவீதம்  ஏழை எளிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்கப்படும் விபரங்களை பள்ளிகளில் தகவல் பலகை வைக்க வேண்டும்.

அது போல்  அரசு நிர்ணயம் செய்துள்ள LKG முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கான கல்விக்கட்டண விபரங்களை பெற்றோர்கள் பார்வைக்கு தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும்!

எந்த பள்ளி நிர்வாகியாவது வைத்திருக்கிறானா?

★அரசாணைகள்!
********************
மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணை : - 48 பள்ளிக்கல்வி (எக்ஸ்) -2004. மற்றும் அரசாணை :270. 22.10.2012 ன் படி ஏதாவது ஒரு பள்ளிக்கூடம்  இயங்குகிறதா?

இல்லை!  இல்லை!  இல்லவே இல்லை!

★பொய்யான உறுதி மொழி! போலிசான்றிதழ்!
*******************
அனைத்தும்  அரசு விதிமுறை  படி தான் உள்ளது என பொய்யான உறுதி மொழி வழங்கியும்  சான்றிதழ்களை லஞ்சம் கொடுத்து வாங்கியும்  பள்ளி உரிமத்தை  புதுப்பித்து கொள்கின்றனர் .

இதற்கு கடமை தவறிய மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள்  துணை போகின்றனர்.

★பெற்றோர்களே!  நண்பர்களே!
சகோதர, சகோதரிகளே!

94 மழலை குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் தீவிபத்து  இன்னும் நெஞ்சை விட்டு மறையவில்லை.!

★உங்கள்  அன்பு குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் முன் அந்த பள்ளியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்  .!
*******************************************
1.  அரசு அனுமதி பெற்றுள்ளார்களா?
அனுமதி எண் என்ன?

2.  பள்ளியின் நான்கு புறமும் பாதுகாப்புக்கான  சுற்றுச்சுவர் உள்ளதா?

3. ஓடு,  ஓலை, தகரம், ஆஸ்பெட்டாஸ் சீட்டிலான கூரைகள் இல்லாமல் கான்கிரீட்டிலான கூரைகள்(RCC Roof)  உள்ளதா ?

3. வகுப்பறையின் அருகில் கழிவறைகள் உள்ளதா?

4. கழிவு நீர் மற்றும் மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறும் விதத்தில் வடிகால் வசதி உள்ளதா?

5. சுத்தமான குடிநீர் வழங்கப் படுகிறதா?

6. இடி தாங்கி பொறுத்தி உள்ளனரா?

7. தள்ளு கதவுகள்  இழுவை  கதவுகள்  உள்ளதா?

8. குறைந்த பட்சம்  ஒரு ஏக்கரில் விளையாட்டு மைதானம்  உள்ளதா?

9. LKG முதல் மூன்றாம்  வகுப்பு வரை தரை தளத்தில் செயல் படுகிறதா?

10. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும்  30  மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 

ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும்  35. மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும்,

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும்  கல்வி கற்று கொடுக்கிறார்களா?

11. கல்வி திறமை வாய்ந்த ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக  பாடம் நடத்துகிறார்களா?

12. ஒவ்வொரு வகுப்பிற்கும் அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை மட்டும் வசூலிக்கிறார்களா?

13.  வசூலிக்கும்  அனைத்து கட்டணங்களுக்கும் பற்றுச்சீட்டு (ரசீது)  வழங்குகிறார்களா?

14. தீத்தடுப்பு நடவடிக்கைகள், முதலுதவி பெட்டிகள் வைத்துள்ளனரா?

15. கழிவறைகள் சுகாதாரமான முறையில் உள்ளதா?

16. இலவச கட்டாயக்கல்வி பயிலும் மாணவர்களிடம்  அரசிடம் இருந்து பணம் வரவில்லை, எனவே கல்விக்கட்டணங்களை செலுத்த சொல்கின்றனரா?

17. உங்கள் குழந்தை படிக்க வில்லை என்றோ அல்லது கல்விக்கட்டணம் கட்டாத காரணத்தினால்  மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லுங்கள் என நிர்பந்தம் செய்கிறார்களா?

18.  அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தில் பள்ளியை நடத்த முடியாது  என்று கூறி அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா?

19. பள்ளி பேருந்துகள், சிற்றுந்துகள் நல்ல முறையில் பராமரிக்க படுகிறதா?

20. சொந்த கட்டிடத்தில் இயங்காத பள்ளிகள்  முப்பது ஆண்டுகளுக்கான வாடகை ஒப்பந்தம்  செய்துள்ளனரா?

21.  பள்ளி கட்டிடங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா?

22. எங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாங்களே பொறுப்பு என உறுதி மொழி அளிக்கின்றனரா?

23.ஆசிரியர்கள் வகுப்பறையில் செல் போன் உபயோகிக்கின்றனரா?

24.  பள்ளி நடைபெற்று கொண்டிருக்கும் போது  பாதுகாப்பற்ற முறையில்  கட்டுமான பணி செய்கின்றனரா?

25. பள்ளி நிர்வாகிகள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

26. மெட்ரிக் மேல் நிலை பள்ளிகளில் ப்ரீ -கேஜி வகுப்புகள் நடத்துகின்றனரா?

27.  பள்ளி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தீ அணைப்பு வாகனம் பள்ளி கட்டிடத்தை சுற்றி வந்து தீயை அணைக்க சுற்றிலும்  போதுமான இட வசதி செய்துள்ளார்களா?

28. 20 மாணவர்களுக்கு  ஒரு குடிநீர் குழாய் உள்ளதா?

29. 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் உள்ளதா?

30. 50 மாணவர்களுக்கு ஒரு கழிவறை உள்ளதா?

31. மாணவர்கள் அமர்வதற்கு சாய்வான இருக்கை உள்ளதா?

32. பள்ளி அறைகளில் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளதா ?

33. கட்டிட உறுதி தன்மை சான்று பெற்றுள்ளனரா?

34. கட்டிட உரிமம் பெற்றுள்ளனரா?

35.  ஆய்வக பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை தனி அறையில் பாது காப்பாக உள்ளதா?

36. உயர் அழுத்த மின் கம்பிகள் பள்ளியினூடே செல்கிறதா?

இதைப்பற்றி எல்லாம் ஆராய்ச்சி  செய்ய நேரமும் இல்லை !
எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை. 
தேவையும் இல்லை! என நினைக்கிறீர்களா?

அய்யோ!  எனது குழந்தைக்கு பள்ளியில் அனுமதி கிடைத்தால் போதும் எப்படியாவது கஷ்டப்பட்டு கடன் வாங்கியாவது அந்த பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?

அல்லது,
நமது குழந்தையின் பாதுகாப்பு நலன்தான்  முக்கியம்.  சட்டப்படி  அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை தவிர கல்விக் கொள்ளையர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த மாட்டேன் என்பவரா நீங்கள்?

பல பெற்றோர்களின் கண்ணீர் எங்களை நிலை குழைய செய்து விட்டது!

★சிறை!
*********
விடமாட்டோம்!  கல்வியின் பெயரால் கொள்ளை அடிக்கும் கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்.

இவர்கள் வெளியில் இருந்தால் நாட்டிற்கு பேராபத்து!

★பொதுநல வழக்கு!
***********************
மாவட்ட வாரியாக இவர்கள் மீது "பொது நல வழக்கு " பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்.

★நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
*****************************************
சட்டத்திற்கு புறம்பாக செயல் படும் பள்ளிகளின்  ஆதார பூர்வமான தகவல்களையும், ஆதாரங்களையும்  எங்களுக்கு அனுப்புங்கள்.

★அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 19 (1) அ. மற்றும் 51 (A)  ஒ வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :
*******************************************
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
LEGAL AWARENESS AND ANTI CORRUPTION ORGANIZATION
பதிவு எண் :10/2015 :44/2015
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
இ -மெயில் :nanjillaacot@gmail.com

★மேலும், தொடர்புக்கு :
*************************
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி  : 98655 90723

ரா .சங்கர்
மாநில தலைவர்,
உலாபேசி :98655 43303

இனி மாற்றம்  என்பது சொல் அல்ல செயல்!

உரிமைக்கு குரல் கொடுப்போம் !
ஊழலுக்கு விடை கொடுப்போம் !

No comments:

Post a Comment