Sunday 25 December 2016

காவல் துறையா? கொலைகார துறையா?

காவல் துறையா?
களவானி துறையா?
கொலைகார துறையா?

குற்ற விசாரணை முறைச்சட்டம் -1973. சட்டப்பிரிவு 36 மற்றும் 149. ன் படி  காவல்துறை  கீழ் நிலை அதிகாரிகளும்   உயர் அதிகாரிகளும்  ஒரு குற்றம் நடை பெறும் முன்னர்  அதனை தடுத்து நிறுத்த. அனைத்து விதத்திலும் முயற்சி  செய்வதை  தனது கடமையாக கொள்ள வேண்டும் என. உத்தரவிடப் பட்டுள்ளது.

இதை எவனாவது எங்கேயாவது  செய்திருக்கிறானா?

மது கடையை அகற்றக் கோரி செல் போன் கோபுரத்தில் ஏறி ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்ற துப்பில்லாத கேடு கெட்ட கடமை தவறியவர்கள் யார்?

துணை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா  மரணத்திற்கு யார் காரணம்?

காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப் படுபவர்கள்  மரணம் அடைவதற்கு  காரணம் யார்,?

சிறை சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின்  திடீர் மரணத்திற்கு காரணம் யார்?

ஒரு பாவமும் அறியாத நிரபராதிகள் மீது பொய் வழக்கு போடுவது யார்?

 தகவல் அறியும் உரிமைச்சட்டம்  மூலம்   ஆக்கிரமிப்புகளை  கண்டறிந்து  வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தினால்  கஞ்சம் பள்ளி பிரிவில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த ராமசாமி என்பவர் மீது  கஞ்சா, சாராய வியாபாரம்  என அவிநாசி காவல் நிலையத்தில்  பொய் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியது யார்?

இவர்கள் லஞ்சம் பெற்று கொண்டு பொய் வழக்கு  போடுவதில்  கில்லாடிகள்.

நாமக்கல் வட்டாட்சியரை கண்டித்து தனி மனிதனாக உண்ணாவிரதம்  இருக்க காவல் துறையில் அனுமதி   பெற்ற  சமூக ஆர்வலர், இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் அறங்காவலர் , 74 வயது இளைஞர் நாமக்கல் செல்லப்பன் அவர்கள்  இல்லத்திற்கு அதிகாலை மூன்று மணிக்கு சென்று கிராம நிர்வாக அலுவலரை  ஜாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை முயற்சி செய்ததாகவும், பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது யார்?

முக நாலில் தன் மகளை பற்றி ஆபாசமான பதிவு வந்துள்ளது என புகார் கொடுத்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அங்கும், இங்கும் அலையவிட்டு  சேலம் வினு பிரியா  என்ற  ஒரு இளம் பெண்ணின்  மரணத்திற்கு காரணம் யார்?

பல சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குகள் போட்டவர்கள் யார்?

இவர்களா!
பொது மக்களின் பாது காவலர்கள்?

இந்த கடமை தவறிய காவல் ஊழியர்களை தண்டிப்பது யார்?

இதற்கு யார் பொறுப்பு?

இது போல் பல மரணங்கள்  நடந்து கொண்டு  தான் இருக்கிறது.

ஒன்றன் பின் ஒன்றாக பல மரணங்கள்  !

அனைத்தும் கால ஓட்டத்தில் காற்றில் கரைந்து  மறைந்து  விடுகிறது .

அடுத்து ? ? ?

காவல் துறையினர் பொது மக்களின் பாது காவலர்கள் என்பதினை மறந்து காக்கிச் சட்டைக்குள்  வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என பொது மக்களுக்கு எதிரான  சட்ட விரோதமான செயல்களை செய்வது வன்மையாக கண்டிக்க தக்கது.

LAACO Nanjil. .

No comments:

Post a Comment