Monday 3 June 2019

ஊழல் ஓழிப்பு செய்தி :0056

நிதி பேராணைகளாக மாறிப்போன "நீதி பேராணைகள்"
WRIT PETITION

காந்தி ஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதி வழங்குவதில் காலதாமதம் ஏன்?

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO/0056/2019 :நாள் :16. 06.2019

குற்றம் நடந்தது என்ன?

நெஞ்சை பதற வைத்த உண்மை சம்பவம்.

குற்றவாளி யார்?

திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

RTE இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் ஏழை மாணவன் காந்தி ஜி என்பவரை பள்ளியை விட்டு  03.06.2019 அன்று வெளியேற்றப்பட்ட விவகாரம்.

தேவையற்ற கூடுதல் கட்டணம் கேட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மாணவனை பள்ளியை விட்டு வெளியேற்றியது  தவறு தான் என ஒப்புக்கொண்டது பள்ளி நிர்வாகம்.

பணிந்தது திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம்.

இனி மேல் இது போன்ற தவறு நடக்காது.

முழு பொறுப்பும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நாளை வழக்கம் போல் மாணவன் காந்தி ஜி  பள்ளிக்கு வரலாம்.

நோட்டு புத்தகங்கள் வழங்குகிறோம்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வரும் போது கட்டணம் செலுத்துவது குறித்து முடிவு செய்யலாம்.

அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர்,
வடக்கு துணை வட்டாட்சியர், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்
பகிரங்க மன்னிப்பு கோரினார் கொங்கு வேளாளர் கவுண்டர் அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் அவர்கள்.

மாணவனின் போராட்டம் கை விடப்பட்டது.

பள்ளி நிர்வாகம் கேட்கும் கட்டணத்தினை  செலுத்தி தான் ஆக வேண்டும் இது தான் அரசு விதி என கூறி சட்ட விரோதமாக செயல் படும்  பள்ளிக்கு ஆதரவாக பள்ளி அலுவலகத்தில் அமர்ந்திருந்த திருப்பூர் மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி  போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் பள்ளியை விட்டு சென்றார்.

காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மாணவனை பள்ளி வாசலில் கடுமையான வெயிலில் உட்கார வைத்து இருந்த காரணத்தினால் மாணவனின் உடல் நலம் சிறிது பாதிக்கப்பட்டது 

இதனை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தின் இந்த இழிசெயலை வன்மையாக கண்டித்து சென்றனர்.

பலர் சாலை மறியல் செய்வதாக தெரிவித்தனர். அதனை நாங்கள் தடுத்து நிறுத்தினோம்.

தமிழகம் முழுவதிலும் இருந்து பல சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் மாணவனின் போராட்டத்தில் பங்கெடுப்பதாக தெரிவித்தனர்.

அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.

இது இலவச கல்வி உரிமைக்கான போராட்டம்.

மாணவனின் போராட்டம் வெற்றி பெறும்.

மாணவன் காந்திஜிக்கு இந்த போராட்டம் ஒன்றும் புதிதில்லை!

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல். கே. ஜி வகுப்பிற்கான சேர்க்கை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மறுத்த போது திருப்பூர் முதன்மை கல்வி அலுவலகத்தில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் நேரடியாக பள்ளிக்கு வந்து அனுமதி வழங்கினார்.

எல். கே. ஜி வகுப்பிற்கான கட்டணம் 7500  செலுத்த வில்லை எனக்கூறி நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் அடையாள அட்டை எதுவுமே பள்ளி நிர்வாகம் வழங்க வில்லை.

ஒரு வருடம்  பள்ளிக்கு வந்தும் கல்வி வழங்க மறுத்தது பள்ளி நிர்வாகம்.

அனைத்து மாணவர்களும் படிக்கும் போது காந்தி ஜி மட்டும் மிகுந்த ஏக்கத்துடன் தினமும் பள்ளி சென்று வந்தது வேதனை அளித்தது.

சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளை கண்டித்து "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு" சார்பாக அனுப்பர்பாளையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காலை முதல் மாலை வரை  உணவருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்
காந்தி ஜி.

நமது உண்ணாவிரத போராட்டம் அறிவித்தவுடன் யு. கே. ஜி வகுப்பிற்கான நோட்டு புத்தகங்கள் கட்டணம் இல்லாமல்
வழங்கினார்கள்.

கடந்த ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த வில்லை என கூறி முதல் வகுப்பில் மாணவன் காந்தி ஜி யை பள்ளியில் அனுமதிக்காமல்  பள்ளி நிர்வாகம் வெளியேற்றியது.

இரண்டு நாட்கள்  தொடர்ந்து பள்ளி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு இரண்டாவது வகுப்பில் அனுமதிக்காமல் 
வெளியேற்றினார்கள். இது  நான்காவது போராட்டம்.

அன்று இந்திய சுதந்திரத்துக்காக போராடினார் மகாத்மா காந்தி.

இன்று கல்வி உரிமைக்காக மூன்று வயதில் இருந்து போராடி வருகிறார் காந்தி ஜி.

மத்திய அரசின் இலவச கல்வி உரிமையை பெற தமிழகத்தின் ஒரு காந்திஜி பேர் கொண்ட மாணவன் ஒவ்வொரு ஆண்டும் போராடிப் போராடி கல்வி பயிலும் அவல நிலை இதற்குக் காரணம் யார்?

நோட்டு புத்தகங்கள் எதுவும் வழங்காமல் மற்ற மாணவர்களைப் போல்  படிக்க முடியாமல்  மூன்று ஆண்டுகள் அவரது கல்வி உரிமை
திட்டமிட்டு மறுக்கப்பட்டது.

மாணவனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிப்போம் என தெரிவித்த அனைத்து  சமூக அமைப்பு நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

சமூக சேவையில் கல்விப்பணி! அனைவருக்கும் கல்வி! நன்கொடை இல்லை!
என விளம்பரம் செய்யும் மேற்காண் பள்ளி நிர்வாகம்  இனி மேலாவது மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இரவு 10 மணி வரையிலும்  வேடிக்கை பார்த்து தாமதப்படுத்தியது மிகவும் வருத்தமளிக்கிறது.

டியூசன் பீஸ் மட்டும் தான் இலவசம். மற்றபடி பள்ளி நிர்வாகம் எவ்வளவு தொகை கேட்டாலும் கண்டிப்பாக கட்டி தான் ஆக வேண்டும். இது தான் அரசு விதி என சட்ட விரோதமாக செயல் படும் பள்ளி அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கு ஆதரவாக கூறிய கடமை தவறிய மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தான் பொறுப்பேற்க வேண்டும்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு சரியான விளக்கம் அளிக்க வில்லை.

கரிக்குலம் என்ற பெயரில் தேவை இல்லாத  கட்டணங்களை மாணவர்களிடமிருந்து சட்ட விரோதமாக  வசூலிக்கலாமா?

தீர்ப்பு வழங்குங்கள் என உயர்நீதி மன்றத்தில் நீதி பேராணை  வழக்கு பதிவு செய்தால் எட்டு மாதங்களாக
நிலுவையில் உள்ளது.

நீதி பேராணையா? நிதி பேராணையா?

பள்ளி நிர்வாகம் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்கள் வழங்கி உள்ளது.

மிகுந்த சந்தோசத்தில் போராளி காந்தி ஜி.

நாஞ்சில் கோ. கிருஷ்ணன் செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ் திருப்பூர்
உலாபேசி.:98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.....

No comments:

Post a Comment