Wednesday 19 June 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :55 /3

*RTE இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் திருப்பூர் விகாஸ் வித்யாலயா குரூப்ஸ் பள்ளிகளின் தொடரும் முறைகேடுகள்.............. 03*

*ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO/0055 /2019:நாள்:13.06.2019*

*குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?*

*உண்மை சம்பவம்.*

*#குற்றவாளி #யார்?*

*01.பள்ளி தாளாளர் /தலைவர்*
*விகாஸ் வித்யாலயா*
*நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி*

*குற்ற உடந்தை யார்?*

*02 திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் சாந்தி!*

*இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் முறைகேடு! !*

*ஏழை எளிய மாணவர்களிடம் கல்வி கட்டண கொள்ளை! !*

*நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை ஜூனியர் மெட்ரிக் பள்ளியாக மாற்ற சொன்னது யார்?*

*கடந்த ஆண்டே விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி என அடையாள அட்டை மற்றும் டைரி வழங்கி விட்டு இந்த ஆண்டு தான் பெயர் மாற்றம் செய்துள்ளோம் என போலி வேசம் போடுவது எதனால்?*

*RTE! இலவச கல்வி க்கு கட்டணம் வசூலிக்க அதிகாரம் வழங்கிய முதன்மை கல்வி அலுவலர் சாந்தி மீது நடவடிக்கை எடுப்பது யார்?*

*முதன்மை கல்வி அலுவலரை இடம் மாற்றம் செய்திருப்பதின் மூலம் பாதிக்கப்பட்ட  பெற்றோர்களுக்கு நீதி கிடைக்க வில்லையே?*

*இவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெரும் பாலான பெற்றோர்களின் வேண்டு கோளாக உள்ளது.*

*சட்ட விரோதமாக  துண்டு சீட்டில்  கல்விக்கட்டண கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.*

*ஏழை எளிய மாணவர்களிடம் இருந்து  எந்த ஒரு கல்வி கட்டணம் பெறாமல் இலவச கல்வி வழங்க  தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

*இலவச கல்வி என்ற பெயரில்  77,230.00 ரூபாய் சட்ட விரோதமாக வசூல்.செய்யப்பட்ட பணத்தினை உடனடியாக திரும்ப வழங்கிட வேண்டும்.*

*பாதிக்கப்பட்ட ஒரு பெற்றோரின் புகார் கடிதம் கீழே இணைக்கப் பட்டுள்ளது.*
*Laaco*

மனுதாரர் :

S.செல்வி
92,M.S.நகர்
கொங்கு மெயின் ரோடு,
திருநீலகண்டபுரம் வடக்கு,
திருப்பூர்–641 607

எதிர் மனுதாரர்கள்:

01.பள்ளி முதல்வர் தாளாளர்
விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
எம் எஸ் நகர்
திருப்பூர் - 641 607

02.திருமதி. சாந்தி
முதன்மை கல்வி அலுவர்கள் முதன்மை கல்வி அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர் - 641 604

பெறுநர் :

01.இயக்குனர் அவர்கள்
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்  DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை                  நுங்கம்பாக்கம்
சென்னை- 600 006

02. மாநில திட்ட இயக்குனர் அவர்கள்(SSA)
அனைவருக்கும் கல்வி இயக்ககம்
கல்லூரிசாலை               நுங்கம்பாக்கம்
சென்னை 600 006

03.இயக்குனர் அவர்கள்
தொடக்கப் பள்ளிகள் இயக்குனரகம்
கல்லூரி சாலை              நுங்கம்பாக்கம்
சென்னை - 600 006

04. அரசு முதன்மை செயலாளர்  அவர்கள்
பள்ளிக் கல்வித்துறை
தலைமை செயலகம்
சென்னை -600 009

05.கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் கல்வி கட்டண நிர்ணயக் குழு அலுவலகம் DPI காம்ப்ளக்ஸ்கல்லூரி சாலை நுங்கம்பாக்கம்
சென்னை- 600 006

அய்யா,

பொருள் : பள்ளியின் பெயரை மாற்றிய காரணத்தினால் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 சட்டப்பிரிவு 12(1)C இன்  கீழ்  கல்வி பயிலும் எனது  மகனுக்கு இலவச கல்வி இல்லை என்றும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோரும் எதிர்  மனுதாரர் :01 என்பவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு சட்ட விரோதமாக என்னிடம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் அனைத்தையும் திரும்ப வழங்கக்கோரியும், தொடர்ந்து  RTE சலுகையில் கல்வி பயில அனுமதிக்க கோரியும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்  அவர்களுக்கு புகார் மனு அனுப்பியும் அதற்கு பொறுப்பு வகிக்கும் கடமை தவறிய  எதிர்மனுதாரர் :02 என்பவர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 2 (4) இன் கீழ்  முறையீடு,

பார்வை : 01.
2015-2016 ம் கல்வி ஆண்டுக்கான  எல்.கே.ஜி  பீஸ் கார்டு

02: 2016-2017 ம் கல்வி ஆண்டுக்கான  யு.கே.ஜி  பீஸ்கார்டு மற்றும் கட்டண விபரம்

03  2017 -2018 ம் கல்வியாண்டுகான முதலாம் வகுப்பு பீஸ் கார்டு

04. 2018-2019 ம் ஆண்டுக்கான 01.06.2018  வழங்கப்பட்ட கேஷ் ரசீது
     
05. 2019 -2020 மூன்றாம் வகுப்பிற்கான கல்விக்கட்டணம் செலுத்தக்கோரிய துண்டு சீட்டு

06.மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்களுக்கு புகார்
மனு அனுப்பிய நாள் (22.4.2019)

மேற்காண் முகவரியில் வசித்து வருகிறேன்

எதிர்மனுதாரர் :01 என்பவர் பள்ளியில் எனது மகன் .S.ஹரிஷ்  என்பவரை 2015- 2016 ஆம் கல்வி ஆண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் L.K.G  வகுப்பில் சேர்த்தேன்.

அட்மிசன் நம்பர் :  LKG  ல் VKN 2530    UKG,I,& II STD   VKN  :2534

அட்மிசன் நம்பர் வழங்கியதில் VKN 2530 எனவும் VKN 2534 எனவும் இரண்டு விதமான எண்கள் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

எல்.கே.ஜி வகுப்பிற்கான கல்விக்கட்டணமாக 2015-2016 ம் ஆண்டிற்கு 25,000 ரூபாய் என்னிடம் பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது ஏதும் வழங்கவில்லை.

பார்வை 01 ல் காணும் பீஸ் கார்டு மட்டும் வழங்கி உள்ளனர்.

யு.கே ஜி வகுப்பிற்கான கல்விக்கட்டணமக  2016-2017 ம் ஆண்டிற்கு 27280  ரூபாய் பார்வை 02 ல் காணும் துண்டு சீட்டு மற்றும் பீஸ் கார்டு மூலம் 19.05.2016 அன்று  செலுத்தினேன். ஆனால் அதற்கான ரசீது ஏதும்
வழங்கவில்லை.

முதல்  வகுப்பிற்கான கல்விக்கட்டணமக  2017-2018 ம் ஆண்டிற்கு 10000  ரூபாய் பீஸ் கார்டு மூலம் 23.05.2017 அன்று  செலுத்தினேன். ஆனால் அதற்கான ரசீது ஏதும் வழங்கவில்லை.

இரண்டாம் வகுப்பிற்கான கல்விக்கட்டணமக  2018-2019 ம் ஆண்டிற்கு 10000 ரூபாயும் ஸ்டேசனரி கட்டணமாக 4950 ரூபாய் 01.06.2018  அன்று  செலுத்தினேன். ஆனால் கல்வி கட்டணம் செழுத்திய ரசீது வழங்கவில்லை . பார்வை 04 இல் காணும் ஸ்டேசனரி கட்டண ரசீது மட்டும் வழங்கினார்கள். அதில் ரசீது எண் பள்ளியின் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

RTE பெற்றோர்களுக்கான கூட்டம்   12.04.2019   அன்று பள்ளியில் நடை பெற்றது.

அப்போது பள்ளி தாளாளர் மற்றும் தலைவர் விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி.யினை விகாஸ் வித்யாலயா  ஜுனியர் மெட்ரிக் பள்ளி என பெயர் மாற்றம் செய்து உள்ளோம் எனவும்,

இனி மேல் RTE  ஸ்கீமில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காது எனவும்,

எனவே பள்ளி நிர்வாகம் கேட்கும் கட்டணம் அனைத்து பெற்றோர்களும் செலுத்தி படிக்க வைக்க வேண்டும் என்றும்  தெரிவித்தனர்.

பார்வை 05 ல் காணும் துண்டு சீட்டின் மூலமாக 2019 - 2020 கல்வி ஆண்டில் மூன்றாம்  வகுப்பிற்கு  முதல் தவணை 17820 , 2ம் தவணை 11000 , 3ம் தவணை 11760 , ஸ்டோர் 3290 ஆக மொத்தம் 43870.00 ரூபாய் கட்டனம் செலுத்த கோரியுள்ளனர்.

கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு செல்லலாம் என தெரிவித்தனர்.

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

எனவே பார்வை :06 இல் காணும் இது குறித்த புகாரினை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்களுக்கு அனுப்பினேன்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் RTE ஸ்கீமில் கல்வி பயிலும் அனைத்து பெற்றோர்களையும் 14.05.2019 அன்று  அழைத்து கல்வி கட்டணத்தில் தள்ளுபடி தருவதாகவும் மீதி தொகை செலுத்த வேண்டும் என கூறினார்கள்.

03 06 2019 அன்று பள்ளி திறக்க இருக்கும் நிலையில் பள்ளியின் பெயரினை மாற்றியுள்ளோம் எனவே RTE இலவச கல்வி இல்லை என மறுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் என சட்டம் போட்டு கட்டாயப்படுத்தி இலவச கல்வி பயில வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது.

ஆனால் எதிர்மனுதாரர்: 01 என்பவர் சட்டங்களையும் பள்ளி கல்வி அரசாணைகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக கல்விக்கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 கல்விக் கட்டணம் இலவசம் என்றும் தமிழ்நாடு RTE விதிகள் 2011 பிரிவு 5 இல் நோட்டு புத்தகம், சீருடை, எழுது பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை:

01 . பெயர் மாற்றம் செய்யப்பட்ட விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளியில் எனது மகனின் கல்வியை தொடர தாங்கள் வழிவகை செய்யக் கோருகிறேன்.

02.2015-2016,2016-2017 ,  2017 -2018 மற்றும் 2018-2019  ஆம் கல்வி ஆண்டுகளில்   என்னிடம் வசூலிக்கப்பட்ட  77,230.00 ரூபாய் எதிர்மனுதார் 01 என்பவரிடமிருந்து எனக்கு திருப்பி மீட்டுக் கொடுக்கும் படி வேண்டுகிறேன்.

03. 2019- 2020 ஆம் கல்வியாண்டில் செலுத்த கோரும் கட்டணம்  43,870  ரூபாய் என்னிடம் வசூலிக்காமல் இலவச கல்வி வழங்க கோருகிறேன்.

04. சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பள்ளி நிர்வாகி மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.

05. தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதினை முறைப்படுத்துதல் சட்டம் -2009 சட்டப்பிரிவு 11(2) –இன் படி மாவட்ட குழு தலைவராக இருக்கும் எதிர்மனுதாரர் 02: என்பவருக்கு புகார் வரும்  தனியார் பள்ளிகளில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள முழுமையான அதிகாரம் இருந்தும் சட்ட விரோதமாக செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்களுக்கு பார்வை :04 இல் காணும்  புகார் அனுப்பியும் எதிர்மனுதாரர்: 01 என்பவர் மீது நடவடிக்கை எடுக்காமலும்  இதனை கண்காணிக்க தவறிய அதற்கு பொறுப்பு வகிக்கும் எதிர்மனுதாரர்:02  என்பவர் ஆகிய திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.

06. நேர்மையான கல்வி அதிகாரியினை நியமித்து  முழுமையான  விசாரணை மேற் கொண்டு  பாதிக்கப்பட்ட எனக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மனுதாரர்: S.செல்வி

இணைப்பு பக்கங்கள் : 05

நாள் :   04.06.2019                                                                                                              
இடம்:திருப்பூர்                                                                                                                                                                                                                 

நகல் :
1.பள்ளி முதல்வர்/தாளாளர்
விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

2 முதன்மை கல்வி அலுவலர்
திருப்பூர்

3.மாவட்ட ஆட்சி தலைவர்
திருப்பூர்*

💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாஞ்சில் கோ.கிருஷ்ணன்*
*செய்தியாளர்*
*ஊழல் ஒழிப்பு செய்தி* *மாத இதழ்*
*திருப்பூர்*
*உலாபேசி : 98655 90723.*
*உண்மை சம்பவங்கள் தொடரும்..........🙏*

No comments:

Post a Comment