Sunday 2 June 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0054

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO/0054/2019 :நாள் :03.06. 2019

குற்றம்  நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவம்

கல்வி உரிமைக்கான போராட்டம்

குற்றவாளி யார்?

பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் நேரடிப் பேட்டி

சமூக சேவையில் கல்விப்பணி நன்கொடை இல்லை அனைவருக்கும் கல்வி என ஊரை ஏமாற்றி கொள்ளையடித்து வரும் பள்ளி

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீண்டும் மீண்டும் அராஜகம்  

RTE இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 12 (c) 1 இன் கீழ் கல்வி பயிலும் ஏழை மாணவன் காந்திஜி என்பவரை பள்ளி நிர்வாகம் மூன்று ஆண்டுகளாக இதர கட்டணம் கட்ட வில்லை என்ற காரணத்தினால் இன்று 03.06.2019  பள்ளியை விட்டு வெளியேற்றி உள்ளார்கள்.

தமிழ்நாடு  RTE விதிகள் - 2011 பிரிவு :5 என்பது மாணவர்களுக்கு க்கான நோட்டுப் புத்தகம்  எழுது பொருட்கள் சீருடைகள் உள்ளிட்டவைகள் இலவசம் என்றும் எந்த ஒரு கல்வி கட்டணமும் செலுத்தாமல் கல்வி பயிலலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளி நிர்வாகம் கராத்தே டேபிள் டென்னிஸ் , யோகா கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஷ், வாழ்க  வளமுடன், போன்ற பல்வேறு விதமான இதர கட்டணங்களை கரிக்குலம் என்ற பெயரில் கட்டாயமாக செலுத்தக் கோரி அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப் பேராணை வழக்கு எண் : 24407/ 2018 (24.10 2018) வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி மற்றும் மாவட்ட   நிர்வாகம் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும்  பள்ளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்

நீதிமன்றத்திலும் நீதி கிடைக்க வில்லை 

நீதிமன்றமும் விலை போய் விட்டதா?

இலவசக்கல்வியா மானிய கல்வியா என்று தமிழக அரசு உடனடியாக தெளிவு படுத்த வேண்டும் .

இலவசம்
மற்றும்
கட்டாயம்
கல்வி
உரிமை
சட்டம்

என சட்டம் போட்டு  கல்வியை வியாபாரமாக்கி சட்ட விரோதமாக செயல் படும் பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது யார்!

நீதி மன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் வரையில் பள்ளி வாசலிலேயே மாணவன் ப.காந்தி ஜி யுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எனது மகனுக்கு தேவையில்லாத கட்டணங்களை நீதி மன்றம் கட்ட சொல்லும்  வரையில்  போராட்டத்தை கை விட போவதில்லை என அவரது பெற்றோர் சமூக ஆர்வலர் பழனிக்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஆ. பழனிக்குமார்
உலாபேசி : 97910 50523

கோரிக்கை :

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

நாஞ்சில் கோ. கிருஷ்ணன் செய்தியாளர்
ஊழல் ஓழிப்பு  செய்தி மாத இதழ் திருப்பூர்
உலாபேசி :98655 90723

No comments:

Post a Comment