Thursday 13 June 2019

விகாஸ் வித்யாலயா பள்ளி மீது புகார்.

மனுதாரர் :

B. வெங்கடேஷன்
No 9, S N V S லே - அவுட்
கொங்கு மெயின் ரோடு
திருப்பூர் - 641 607

எதிர் மனுதாரர்கள்:

01. பள்ளி முதல்வர் /தாளாளர் விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
எம் எஸ் நகர்
திருப்பூர் - 641 607

02. திருமதி. சாந்தி
முதன்மை கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர் - 641 604

பெறுநர் :

01.இயக்குனர் அவர்கள்
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்  DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை- 600 006

02. மாநில திட்ட இயக்குனர் அவர்கள் (SSA)
அனைவருக்கும் கல்வி இயக்ககம்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை 600 006

03.இயக்குனர் அவர்கள்
தொடக்கப் பள்ளிகள் இயக்குனரகம்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை - 600 006

04. அரசு முதன்மை செயலாளர்  அவர்கள்
பள்ளிக் கல்வித்துறை
தலைமை செயலகம்
சென்னை - 600 009

05.கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர்
கல்வி கட்டண நிர்ணயக் குழு அலுவலகம்
DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை- 600 006

அய்யா,

பொருள் : பள்ளியின் பெயரை மாற்றிய காரணத்தினால் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சடடத்தின் கீழ்  கல்வி பயிலும் எனது மகனுக்கு இலவச கல்வி இல்லை என்றும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோரும் எதிர்  மனுதாரர் :01 என்பவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு சட்ட விரோதமாக என்னிடம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் அனைத்தையும் திரும்ப வழங்கக்கோரியும், தொடர்ந்து  RTE சலுகையில் கல்வி பயில அனுமதிக்க கோரியும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்  அவர்களின் உத்தரவினை நிராகரித்த எதிர்மனுதாரர் :02 என்பவர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 2 (4) இன் கீழ்  முறையீடு,

பார்வை : 01.
2016- 2017 எல்.கே.ஜி வகுப்பிற்கான கல்வி கட்டணம் வசூலித்தனர்.
கேஷ் ரசீது எண் இல்லை
பள்ளி பெயர் இல்லை
தேதி: 07.04. 2016
தொகை 20, 000.00
Fee Card :12. 05.2016
தொகை :8,200 .00

02. 2017- 2018 யு.கே.ஜி வகுப்பிற்கான கட்டணம் வசூலித்த னர்.
Fee Card :11. 05 .2017
தொகை: 9060 .00
புக்ஸ்: 3,630 .00
சீருடை: 440. 00

03 .2018- 2019 முதல் வகுப்புக்கான கட்டணம் வசூலித்தனர். 
Fees Card  : தேதி 26.05 2018 
தொகை: 21, 325 .00

04 .Slip No: 57 ஸ்டேஷனரி கட்டணம் :4, 940. 00.
தேதி :03.05.2018

05. ரசீது எண்: 270 
தேதி :12. 05. 2018
ஸ்கூல் பேக் :750.00 ரூபாய்

06.ரசீது எண்: 4017 :
தேதி : 26.05 2018
சீருடை: 486.60
(விகாஸ் வித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல்) என கட்டண ரசீது வழங்கப்பட்டுள்ளது

07.2019 -2020 ஆம் கல்வி ஆண்டு இரண்டாம் வகுப்பிற்கான கல்வி கட்டணம் செலுத்தக் கோரி விபரம் துண்டுச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில்
1 st Term :15, 820.00
2 nd Term :11, 000.00
3 rd Term :11, 040. 00
Store :2, 910.00
ஆக மொத்தம் :40,770.00

08. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்களுக்கு நான் அனுப்பிய புகார் மனு நாள் :15. 04 .2019

09. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரின் செயல் முறைகள்  கடித ந. க எண்: 1279/இ3 /2019 நாள் :25 .04 .2019

மேற்காண் முகவரியில் வசித்து வருகிறேன்

2016- 2017 ஆம் கல்வி ஆண்டில் கொங்கு நகரில் இயங்கி வந்த எதிர்மனுதாரர் :01 என்பவரின்  விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் எனது மகன் V. ரித்திக் சிவம் என்பவரை 2016- 2017 ஆம் கல்வி ஆண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்த்தேன்.

2018-2019 ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் எம்.எஸ். நகரில் இயங்கி வந்த
எதிர்மனுதாரர் 01 என்பவரின் விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாற்றம் செய்தேன்.

அட்மிசன் நம்பர் :VKN 2640

பார்வை:01 இல் காணும் கேஷ் ரசீது மூலம் 07.04. 2016 அன்று என்னிடம் கல்வி கட்டணமாக ரூபாய் 20,000.00 பெற்றுக்கொண்டனர்

அந்த ரசீதில் பள்ளியின் பெயர் ரசீது எண் எதுவும் குறிப்பிடப்படவில்லை

மேலும் ஸ்டேஷனரி எனக்கூறி
12.05.2016 அன்று 8500. 00 ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டனர்

விகாஸ் வித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள FEES CARD இல் வரவு  வைத்து கொடுத்துள்ளனர்.
அதற்கான ரசீது வழங்க வில்லை

2016 - 2017 கல்வி ஆண்டில்
எல்.கே.ஜி வகுப்பிற்கு 20,000 .00 +8600. 00 ஆக மொத்தம் 28, 600 ரூபாய் கட்டணம் என்னிடம் வசூலித்துள்ளனர்.

2017 - 2018 கல்வி ஆண்டில் யு. கே. ஜி வகுப்பிற்கான கல்வி கட்டணமாக 11.05. 2017 அன்று  9060.00 ரூபாய் பார்வை 02 இல் காணும் FEES CARD  மூலம் வசூலித்துள்ளனர்.

புக்ஸ் எனக்கூறி 3,630. 00 ரூபாயும் சீருடைக்கு 440. 00 ரூபாயும் சேர்த்து ஆக மொத்தம் 13,130.00 வசூலித்துள்ளனர்

2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பிற்கான கல்விக் கட்டணமாக
26 5 2018 அன்று 21 325 ரூபாய் பார்வை 03 இல் காணும் FEES CARD மூலம்
வசூலித்துள்ளனர்.

ஸ்டேஷனரி கட்டணம் என
03. 05 .2018 அன்று 4940.00 ரூபாயும்
பார்வை:04 இல் காணும் ஸ்லிப் எண்:  57 மூலம் வசூலித்துள்ளனர்

ஸ்கூல் பேக் கட்டணமாக
12. 05 2018 அன்று 780 .00 ரூபாய் பார்வை:05 இல் காணும் ரசீது எண் :270 மூலம் வசூலித்துள்ளனர்.

பார்வை :06 இல் காணும் ரசீது எண் :4017  மூலம் 26 05 2018 அன்று சீருடை கட்டணமாக 486 60 வசூலித்துள்ளனர்
ஆக மொத்தம் 21 325.00 + 4940. 00+780 .00+486 60 = 27, 531.60 ரூபாய் மொத்த கட்டணம் வசூலித்துள்ளார்கள்.

RTE பெற்றோர்களுக்கான கூட்டம்   12.04.2019  அன்று பள்ளியில் நடை பெற்றது.

அப்போது பள்ளி  முதல்வர் , தாளாளர் மற்றும் தலைவர் விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி. யினை விகாஸ் வித்யாலயா  ஜுனியர் மெட்ரிக் பள்ளி என பெயர் மாற்றம் செய்து உள்ளோம் எனவும்,

இனி மேல் RTE  ஸ்கீமில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காது எனவும்,

எனவே பள்ளி நிர்வாகம் கேட்கும் கட்டணம் அனைத்து பெற்றோர்களும் செலுத்தி படிக்க வைக்க வேண்டும் என்றும்  தெரிவித்தனர்.

2019 - 2020 கல்வி ஆண்டில் பார்வை :07 இல் காணும் இரண்டாம்  வகுப்பிற்கான கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என துண்டுச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரம்:
Ist Term :15820.00+2nd Term :11000+3rd Term :11000 Store:2910.00 ஆக மொத்தம் 40770..00
ரூபாய் செலுத்த கோருகின்றனர்.

கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு செல்லலாம் என தெரிவித்தனர்.

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

எனவே பார்வை :07 இல் காணும் இது குறித்த புகாரினை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்களுக்கு அனுப்பினேன்.

பார்வை:08 இல் காணும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்களின் கடிதம் எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் எதிர்மனுதாரர் :01  என்பவர் மீது எதிர்மனுதாரர் :02 என்பவர் இன்றைய தினம் வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் 14.05.2019 அன்று  பள்ளி நிர்வாகம் RTE ஸ்கீமில் கல்வி பயிலும் அனைத்து பெற்றோர்களையும் அழைத்து கல்வி கட்டணத்தில் 17,000 ரூபாய் தள்ளுபடி போக மீதி தொகை செலுத்த வேண்டும் என கூறினார்கள்.

03 06 2019 அன்று பள்ளி திறக்க இருக்கும் நிலையில் பள்ளியின் பெயரினை மாற்றியுள்ளோம் எனவே RTE இலவச கல்வி இல்லை என மறுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

2018-2019 கல்வி ஆண்டில் விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக்குலேஷன்
பள்ளி என எனது மகனுக்கு அடையாள அட்டை மற்றும் பள்ளி டைரி வழங்கியுள்ளார்கள்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் என சட்டம் போட்டு கட்டாயப்படுத்தி இலவச கல்வி பயில வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது.

ஆனால் எதிர்மனுதாரர்: 01 என்பவர் சட்டங்களையும் பள்ளி கல்வி அரசாணைகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக கல்விக்கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 கல்விக் கட்டணம் இலவசம் என்றும் தமிழ்நாடு RTE விதிகள் 2011 பிரிவு 5 இல் நோட்டு புத்தகம், சீருடை, எழுது பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை:

01 . பெயர் மாற்றம் செய்யப்பட்ட விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளியில் எனது மகனின் கல்வியை தொடர தாங்கள் வழிவகை செய்யக் கோருகிறேன்.

02. 2016- 2017 என்னிடம் வசூலிக்கப்பட்ட  28 200. 00 மற்றும் 2017 2018 ஆம் ஆண்டில் என்னிடம் வசூலிக்கப்பட்ட 13 130. 00 ரூபாய் மற்றும் 2018 -2019 ஆண்டில் என்னிடம் வசூலிக்கப்பட்ட 27 531. 60 ஆக மொத்தம் 68 863 60 ரூபாய் எதிர்மனுதார் 01 என்பவரிடமிருந்து எனக்கு திருப்பி மீட்டுக் கொடுக்கும் படி வேண்டுகிறேன்.

03. 2019- 2020 ஆம் கல்வியாண்டில் துண்டுச் சீட்டு மூலம் செலுத்த கோரும் கட்டணம் 40,770 தள்ளுபடி போக மீதி 23,770 ரூபாய் என்னிடம் வசூலிக்காமல் இலவச கல்வி வழங்க கோருகிறேன்.

04. சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பள்ளி நிர்வாகி மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.

05. தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதினை முறைப்படுத்துதல் சட்டம் -2009 சட்டப்பிரிவு 11(2) –இன் படி மாவட்ட குழு தலைவராக இருக்கும் எதிர்மனுதாரர் 02: என்பவருக்கு புகார் வரும்  தனியார் பள்ளிகளில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள முழுமையான அதிகாரம் இருந்தும் எனது புகார் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டும் எதிர்மனுதாரர்: 01 என்பவர் மீது நடவடிக்கை எடுக்காமலும்  இதனை கண்காணிக்க தவறிய அதற்கு பொறுப்பு வகிக்கும் எதிர்மனுதாரர்:02  என்பவர் ஆகிய திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.

06. நேர்மையான கல்வி அதிகாரியினை நியமித்து  முழுமையான  விசாரணை மேற் கொண்டு  பாதிக்கப்பட்ட எனக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இணைப்பு பக்கங்கள் : 08

நாள் : 04.06.2019 இடம்:திருப்பூர்                                                                                           
                                                                 நகல் :

1.பள்ளி முதல்வர் /தாளாளர்
விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

2 முதன்மை கல்வி அலுவலர்
திருப்பூர்

3.மாவட்ட ஆட்சி தலைவர்
திருப்பூர்

No comments:

Post a Comment