Tuesday 11 June 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0055

ஊழல் ஓழிப்பு செய்தி :LAACO/0055/2018 :நாள் : 11.06.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவம்.

சுமார் மூன்று கோடி கல்வி கட்டண கொள்ளை!

கல்வி கொள்ளையர் யார்?

சமூக சேவையில் கல்விப்பணி! நன்கொடை இல்லை! அனைவருக்கும் கல்வி!
என விளம்பர படுத்தி வரும் திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்!

கல்வி கட்டண கொள்ளைக்கு உடந்தையாகவும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும்  பள்ளிக்கு ஆதரவாகவும் மிகுந்த  பாதுகாப்பாகவும் இருந்து வரும் கடமை தவறிய திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி!

2019 - 2020 கல்வி ஆண்டிற்கான
அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம் சுமார்

நோட்டு புத்தகங்கள் ஸ்டேஷனரி கட்டணமாக சுமார்

இந்த கட்டணங்கள் போதாது என்று

மனுதாரர் :  
கோ. தாணுமூர்த்தி
148, கவிதா லட்சுமி நகர் அங்கேரிபாளையம் ரோடு அனுப்பர்பாளையம் புதூர் திருப்பூர் - 641 652

பெறுநர் :
பள்ளி முதல்வர் /தாளாளர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அங்கேரிபாளையம் ரோடு திருப்பூர் - 641 603.

அம்மையீர்!

பொருள்:  2019 -2020  ஆம் கல்வியாண்டில்  7 ஆம் வகுப்பிற்கான அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணம் மற்றும் பள்ளி தகவல் பலகையில் தெரிவித்துள்ள ஸ்டேஷனரி கட்டணம் வங்கி வரைவோலையாக செலுத்துவதுடன் தகவல் பலகையில் தெரிவித்துள்ள Administration  and maintenance fees  Rupees 6500.00 க்கான விளக்கத்தினை ஏழு தினங்களுக்குள் வழங்க கோருவது சம்பந்தமாக .

பார்வை :  
01. தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ள 7 ஆம் வகுப்பிற்கான கட்டண விபரம்.

02. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி           15,வேலம்பாளையம் கிளை
D.D.No:  818805. D.T: 29.05.2019
Amount: 10,285.00

03.. D.D.No: 818804. D.T: 29.05.2019.
Amount:  2465.00. 

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசனக் கோட்பாடு 51 A (அ) இன் கீழ் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்றி வரும் ஒரு இந்திய
குடிமகன் ஆவேன் .

எனது மகன் D.T. கோகுல்நாத் 2019 -2020 இந்த கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பில் தங்கள் பள்ளியில் கல்வி பயில இருக்கிறார்.

7 ஆம் வகுப்பிற்கான கல்வி கட்டணம் 10, 285. 00 ரூபாய், ஸ்டேஷனரி கட்டணம் 2465. 00 ரூபாய்

மற்றும்
Administration and maintenance கட்டணமான 6,500 ரூபாய் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 250 ரூபாய் பார்வை ஒன்றில் காணும் பள்ளி தகவல் பலகையில் கட்டண விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை: 2 -ல் காணும் வங்கி வரைவோலை மூலம் 10, 285. 00 ரூபாய் 2019 -20 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணமாக செலுத்தி உள்ளேன் .

பார்வை : 03 -ல் காணும்
பார்வை: 01 -இல்  தெரிவித்துள்ளபடி ஸ்டேஷனரி கட்டணமாக 2465. 00 ரூபாய் வங்கி வரைவோலையாக செலுத்தி உள்ளேன் .

பார்வை : 02 -ல் செலுத்தியுள்ள கல்விக்  கட்டணத்திற்கான ரசீது வழங்க கோருகிறேன்.

பார்வை : 03 -ல் செலுத்தியுள்ள ஸ்டேஷனரி கட்டணம் 2465.00 ரூபாய்க்கான MRP விபரங்களுடன் தனித்தனியாக ஒவ்வொரு இனங்களையும் குறிப்பிட்டு அதற்கான உரிய இரசீது வழங்க கோருகிறேன்.

மேலும் தாங்கள் செலுத்தக் கோரியுள்ள Administration and Maintenance கட்டணம் 6500.00 ரூபாய் கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்த கல்வி கட்டண வரம்பிற்குள் வரவில்லையா? என்ற தகவலை தெரிவிக்கவும்.

Administration and Maintenance கட்டணம் தனியாக வசூலிக்க கல்வி கட்டண நிர்ணய குழு தங்களுக்கு அனுமதி அளிக்கப்ட்டிருப்பின் அதற்கான உத்தரவு நகல் ஒன்று வழங்கக் கோருகிறேன்.

அல்லது
கட்டணம் வசூலிக்க தங்கள் பள்ளிக்கு சிறப்பு சலுகை அல்லது உத்தரவுகள் ஏதேனும் அரசால் வழங்கப்பட்டிருப்பின் அந்த உத்தரவின் நகல் ஒன்று வழங்கவும்.

அல்லது
Administration and Maintenance கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயம் செய்துள்ளதா? என்ற தகவலை தெரிவிக்க கோருகிறேன்.

மேலும் Administration and Maintenance கட்டண விபரத்தினை என்னென்ன இனங்களுக்காக வசூலிக்கப்படுகிறது என்ற தனித்தனியான விபரங்கள் குறிப்பிட்டு இக்கடிதம் கண்ட ஏழு தினங்களுக்குள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அந்தக் கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைப்பு : வங்கி வரைவோலைகள் அசல்.

நாள்: 30.05.2019. 
இடம் : திருப்பூர்

மனுதாரர்

கோ. தாணுமூர்த்தி

நகல் : தக்க மேல் நடவடிக்கைக்காக.

01. கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் அவர்கள் - சென்னை.

02. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் - சென்னை.

No comments:

Post a Comment