Friday 28 June 2019

அண்ணா பல்கலை கழக தரமற்ற கல்லூரிகள்

அண்ணா  பல்கலைகழகம் வெளியிட்ட  தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்

1. திருநெல்வேலி
ஏ.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4937

2. ஈரோடு
ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2332

3. வேலூர்,
அன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1137

4. சென்னை
அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1133

5. கன்னியாகுமரி,
அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4999

6. காஞ்சிபுரம்
அறிஞர் அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி TNEA code 1201

7. திருவண்ணாமலை
அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1503

8. திருவள்ளூர்
பஜரங் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1102

9. கோவை ,
கேப்பிடல் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2370

10. திருச்சி,
கேர் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 3841

11. தூத்துக்குடி
சாண்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4931

12. நாமக்கல்
சிஎம்எஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2635

13. நாமக்கல்,
டாக்டர் நாகரத்தினம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2662

14. கோவை
ஈசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2749

15. திருநெல்வேலி
ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4980

16. நாமக்கல்
எக்சல் பிசினஸ் ஸ்கூல்

17. நாமக்கல்
எக்சல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2664

18. வேலூர்
ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1506

19. காஞ்சிபுரம்
ஜிகேஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1407

20. ராமநாதபுரம்
கணபதி செட்டியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5924

21. சேலம்
கணேஷ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2341

22. தூத்துக்குடி
ஹோலிகிராஸ் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 4934

23.கன்னியாகுமரி
இமானுவேல் அரசர் ஜே ஜே காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4932

24. திருவள்ளூர்
இந்திரா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1229

25. தூத்துக்குடி
இன்பேன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4976

26. காஞ்சிபுரம்
ஜே இஐ மாதாஜி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1235

27. கன்னியாகுமரி
ஜேம்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4987

28. சென்னை
ஜவஹர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1153

29. திருவள்ளூர்
ஜெயா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1221

30. தர்மபுரி
ஜெயலட்சுமி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 2640

31. விருதுநகர்
காமராஜ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4959

32. காஞ்சிபுரம்
காஞ்சி பல்லவன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1208

33. சிவகங்கை
காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் TNEA code 5533

34. நாமக்கல்
கிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2631

35. காஞ்சிபுரம்
லார்ட் வெங்கடேஸ்வரா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1205

36. காஞ்சிபுரம்
மாதா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1243

37. திருநெல்வேலி
மகாகவி பாரதியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4998

38. வேலூர்
எம்எம்இஎஸ் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர்

39. ராமநாதபுரம்
முகமமது சதக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5907

40. சென்னை
முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1400

41. காஞ்சிபுரம்
முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1301

42. புதுக்கோட்டை
மதர் தெரசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3846

43. கோவை
என் ஆர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2351

44. கன்னியாகுமரி
நாராயணகுரு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4977

45. அரியலூர்
நெல்லியாண்டவர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 3466

46. காஞ்சிபுரம்
நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1431

47. திருவண்ணாமலை ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1529

48. மதுரை
பிடிஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5911

49. காஞ்சிபுரம்
பல்லவன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1209

50. தஞ்சை,
பரிசுத்தம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் TNEA code 3833

51. கோவை ,
பார்க் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2716

52. கோவை,
பார்க் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2768

53. திருச்சி,
பாவேந்தர் பாரதிதாசன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3815

54. காஞ்சிபுரம்
பெரி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1452

55. திருச்சி,
பிரைம் நெஸ்ட் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் TNEA code 3446

56. திருச்சி
ஆர்விஎஸ் கேவிகே ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2778

57. கோவை
ஆர்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2731

58. திண்டுக்கல்
ஆர்விஎஸ் எஜூகேசனல் டிரஸ்ட் TNEA code 5862

59. வேலூர்
ராணிப்பேட்டை இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1511

60. திண்டுக்கல்
ரத்னவேல் சுப்பிரமணியம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5913

61. கோவை
எஸ்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2654

62. காஞ்சிபுரம்
சக்திமாரியம்மன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1214

63. தர்மபுரி
சப்தகிரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2616

64. வேலூர்
சரஸ்வதி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1515

65. திருநெல்வேலி
சர்தார் ராஜா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5968

66.கோவை
சசூரி அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2738

67. திருப்பூர்
சசூரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2717

68. திண்டுக்கல்
எஸ். பி. எம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5930

69. சென்னை
ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் செயின்ட் பீ்ட்டர்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1127

70. சேலம்
ஸ்ரீசத்யம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2346

71. ஈரோடு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2747

72. காஞ்சிபுரம்
ஸ்ரீ ஆண்டாள் அழகர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1417

73. காஞ்சிபுரம்
எஸ். எம். கே போர்மா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1313

74. தஞ்சாவூர்,
எஸ்எம்ஆர் ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3451

75. மதுரை
சோலையம்மாள் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5914

76. வேலூர்
ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1438

77. வேலூர்
ஸ்ரீ நந்தனம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1514

78. சிவகங்கை
ஸ்ரீராஜராஜன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5502

79. சிவகங்கை
செயின்ட் மிக்கேல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5919

80. ஈரோடு
சூர்யா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2748

81. விழுப்புரம்
சூர்யா குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 1434

82. கோவை,
தமிழ்நாடு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2721

83. கோவை
தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2728

84. திருச்சி,
திருச்சி இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 3820

85. மதுரை
அல்ட்ரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பார் உமன் TNEA code 5942

86. விருதுநகர்
விபி எம் எம் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன் TNEA code 4679

87. விருதுநகர்
வி. பி. முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் பார் உமன் TNEA code 4979

88. விழுப்புரம்
வேதாந்தா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1136

89 திண்டுக்கல்
வீரம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5851

தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 89 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரிகள் கோவையிலும் உள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிலான நடவடிக்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Sunday 23 June 2019

உண்ணாவிரத அனுமதி கோரி கடிதம்.

மனுதாரர் :
நாஞ்சில் கோ கிருஷ்ணன் நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
பதிவு எண் : 10/2015, 44/2015
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலாப்பேசி : 98 655 90 723

பெறுநர் :
காவல் ஆய்வாளர் அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்

அய்யா,

பொருள் : இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 12 (1) (C) மற்றும் 13 ( 1) இன் கீழ்  தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களில் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களிடம் கல்விக் கட்டண கொள்ளை அடித்து வரும் தனியார் பள்ளிகளை கண்டித்தும்,
தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதினை முறைப்படுத்துதல்) சட்டம் - 2009 மற்றும் அரசு கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்டித்தும், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு துணை போகும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கண்டித்தும்,
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா? அல்லது
இலவச மற்றும் மானிய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா? என்பதினை மத்திய மாநில அரசுகள் தெளிவு படுத்த வேண்டும்  என "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு" சார்பாக அமைதியான வழியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு
14.07.2019 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5 00 மணி வரையில் அனுமதி அளிக்க கோரி இந்திய அரசியலமைப்பு சாசனக் கோட்பாடு 19 (1) அ, ஆ மற்றும் 51 A (ஒ) வின் கீழ் மனு,

மேற்காண் முகவரியில் தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும் அரசாணைகளையும் லஞ்சம் ஊழலுக்கு எதிராகவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வூட்டும்  வகையில் தமிழகம் முழுவதும் சென்று இலவச சட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் பயிற்சிகளையும்  அளித்து வருகிறோம்.

இந்நிலையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் ஏழை எளிய வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாக தமிழகம் முழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நமக்கு தினமும் புகார் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

நீதிமன்றம் சென்றாலும் நீதி கிடைக்கவில்லை.

எனவே இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா? அல்லது இலவச மற்றும் மானிய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா? என்பதை மத்திய மாநில அரசுகள் பொது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ள இருக்கிறோம்.

ஏற்கனவே கடந்த 30.07.2017 அன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில்  தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டோம்  என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தனியார் பள்ளிகளை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காள காரணங்கள் மற்றும் நோக்கங்கள் :

1 இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 இன் படி கல்வி பயிலும்  25 விழுக்காடு ஏழை எளிய வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து  கல்வி கட்டணம் மற்றும் பல்வேறு விதமான கட்டணங்களை முறையான பற்றுச் சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக வசூலித்து வருகிறார்கள் 

2 இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி என சட்டத்தில் தெரிவித்து விட்டு மூன்று வயது குழந்தைகளுக்கு மட்டும் நுழைவு நிலை வகுப்பான L. K. G மட்டும் தான் அனுமதி என சட்டத்தில் திருத்தம் செய்து 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கும் இந்த சட்டத்தின்கீழ் கல்வி பயில அரசு வழிவகை செய்ய வேண்டும்.

3.சட்ட விரோதமாக அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை அரசு கண்டறிந்து மூடும் போது அந்த பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் உடனடியாக கல்வியை தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும்.

4 தமிழ்நாடு ஆர் டி. இ விதிகள் 2011 பிரிவு 5 இல் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடைகள் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து தனியார் பள்ளிகளும் நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடைகள் என உரிய பற்று சீட்டு வழங்காமல்  கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள்.

5.கரிக்குலம் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்ற பெயரில் யோகா, கராத்தே, டேபிள் டென்னிஸ், டீச்சிங் எய்ட், பாண்டு வாத்தியம், டான்ஸ், கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங், வாழ்க வளமுடன், மனவளக்கலை  போன்ற பல்வேறு விதமான கட்டணங்களை கட்டாயப்படுத்தி வசூலிக்
கின்றனர். கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றுகின்றனர்.

6.அரசிடமிருந்து நிதி வரவில்லை வந்ததும் திரும்ப வழங்குகிறோம் எனக்கூறி மாணவர்களிடமிருந்து சட்ட விரோதமாக கல்விக் கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.

7 கல்விக் குழு கூட்டம் நடைபெறும் போது கல்வி கட்டணம் பெற்றது குறித்து கல்வி அதிகாரியிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் அப்போது தான் அரசு எங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்றும் பொய்  சொல்ல சொல்கின்றனர்.

8.எந்த ஒரு கல்வி கட்டணமும் வாங்க வில்லை என ஒரு பொய்யான உறுதிமொழி சான்றினை பெற்றோர்களிடம் வாங்கி தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசை ஏமாற்றி வருகின்றனர்.

9.இது குறித்து கல்வி அலுவலர்களுக்கு  தெரிந்தும் சட்ட விரோதமாக செயல்படும் பள்ளி நிர்வாகிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

10.அரசு உங்கள் குழந்தைகளுக்கு மானியமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் வழங்குகிறார்கள். மீதி தொகையை நீங்கள் தான் வழங்க வேண்டும் என ஒவ்வொரு மாணவரிடமிருந்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கட்டணங்களை கட்டாயப்படுத்தி வசூலித்து வருகிறார்கள்.

11.25 விழுக்காடு மாணவர் சேர்க்கையில் மோசடி நடைபெற்று வருகிறது

150 மாணவர்களுக்கு மட்டும்  நுழைவு நிலை வகுப்பான L. K. G க்கு  அனுமதி இருக்கும் நிலையில்  400 க்கும் மேற்பட்ட மாணவர்களை நுழைவு நிலை வகுப்பில் சேர்த்து கொண்டு 150 மாணவர்கள் தான் என்றும்  25 விழுக்காடு 38 மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கி பெற்றோர்களையும் அரசையும் ஏமாற்றி வருகிறார்கள்.

12.மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளில் சொல்லப்பட்ட எந்தவிதமான பாதுகாப்பு நலன்களையும் கடைபிடிக்காமல் பொய்யான உறுதிமொழியை தனியார் பள்ளிகள் வழங்கி வருகின்றனர்.

13.20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய் 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் 50 மாணவர்களுக்கு ஒரு மல கழிப்பிடம் உள்ளிட்டவைகள் இல்லை

14.அரசு அனுமதி பெறாமல் சட்ட விரோதமான பள்ளிக் கட்டிடங்களை கட்டி வருகிறார்கள் 
அந்த கட்டிடங்களுக்கு கட்டிட உறுதித் தன்மை இருப்பதாக தெரிய வில்லை.

15.அரசு விதிமுறைப்படி ஆர் சி சி கட்டிடம் அல்லாத சிமெண்ட் சீட், டின் சீட், தகர சீட், ஓட்டு வில்லை போன்ற கட்டிடங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.

16.1 முதல் 5 வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் 5 முதல் 8 ஆம்  வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு  ஒரு ஆசிரியரும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படாமல் ஒரு வகுப்பறையில் குறைந்தபட்சம் 50 மாணவர்களை அமர்த்தியுள்ளனர்.

17.1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களை தரைதளத்தில் அமர்த்தாமல் முதலாம் மற்றும் இரண்டாம் தளத்தில் அமர்த்தியுள்ளனர்.

18 பள்ளி பராமரிப்பு சம்பந்தமாக   ஆய்வு செய்வதற்காக பெற்றோர்களை கொண்ட அன்னையர் குழுவினை உருவாக்கி  பள்ளி முழுவதும் சென்று பார்வை இட்டு ஆய்வு செய்த விபரங்களை பதிவு செய்ய பதிவேடுகளையும்  எந்த ஒரு பள்ளியிலும் கடைபிடிக்கப் படவில்லை

19. பள்ளி கட்டிடங்களில் இடிதாங்கி பொருத்தப்படவில்லை

20 தீ விபத்து மற்றும் பேரிடர் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் பள்ளியை சுற்றி வந்து விபத்தில் சிக்கும் மாணவர்களை காப்பாற்ற  போதுமான இட வசதிகள் செய்யப்படவில்லை.

21.மாணவர்களின் குருதி வகை உடல் ஒவ்வாமை மருத்துவ விபரங்கள்  குறித்த பதிவேடுகள் பராமரிக்கப்படுவதில்லை .

22.1500 மாணவர்களுக்கு மேல் கல்வி பயிலும் பள்ளிகளில் முழு நேர மருத்துவ சேவை வசதிகள் செய்யப்பட வில்லை.

23 மாணவர்கள் பயன் படுத்தும் கழிவறைகள் அந்தந்த  வகுப்பறை கட்டிடங்களில் இல்லாமல் தனியாக ஒதுக்கு புறமாக கட்டப்பட்டுள்ளது.

24.பல பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை.

26.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் Pre - Kg  வகுப்புகள் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நடத்தி வருகிறார்கள்.

27 தனியார் பள்ளிகள்( கட்டணம் வசூலிப்பதினை முறை படுத்துதல்) சட்டம் - 2009  மற்றும் கல்வி கட்டண நிர்ணய குழு நி‌ர்ண‌யி‌த்த கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

28.நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் ஸ்கூல் பேக் என விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு அதிக பட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன் அதற்கான உரிய பற்று சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

29. நகராட்சி, மாநகராட்சி, நகர ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மாவட்ட பள்ளி கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம், மாவட்ட செயல்துறை நடுவர்  வருமான வரித்துறை, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை , கல்வி கட்டண நிர்ணயக்குழுவினர் சட்ட விரோதமாக செயல் படும் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்  மற்றும் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மேற்காண் கடமை தவறிய அரசூழியர்கள் தான் தனியார் பள்ளி நிர்வாகிகள் சட்ட விரோதமாக செயல் பட முக்கிய காரணம்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து கலந்து கொள்ள வரும் சமூக  அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள். 

1.அரிமா ரா அரியலூர் சங்கர் LAACO மாநில தலைவர் 

2. மா. விவேகானந்தன்
LAACO  பொதுச் செயலாளர
நிர்வாக இயக்குநர்
விஷன் 20 20 மாரல் பவுண்டேசன் திருச்சி

3  செல்வராஜ்
மாநில பொதுச் செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு (FACT INDIA)
சென்னை

4.அஜய் பிரகாஷ் சௌராஸ்சியா
மதர்லேண்ட் நேசனல் சாரிட்டபிள் டிரஸ்ட் - கோவை

5. S. கிள்ளிவளவன்
சமூக ஆர்வலர் - சென்னை

6. O. இஸ்மாயில்
முக்கனி மனிதநேய அறக்கட்டளை - கோவை

7.அபு. இக்பால்
முதலுதவி சமூகநல அறக்கட்டளை 
பொள்ளாச்சி

8.A.S.அருணாச்சலம்
தலைவர்
வரி செலுத்துவோர் நல உரிமை சமூக பாதுகாப்பு சங்கம் புளியங்குடி

9 ஷேக் அலாவுதீன்
மாநிலச் செயலாளர்
MPM  டிரஸ்ட்
திருநெல்வேலி

10 விஜயகாந்த்
துணை ஒருங்கிணைப்பாளர் மக்கள் பாதை
வேலூர்

11.மணிகண்டன்
இளந்தளிர் பசுமை இயக்கம் - சேலம்

12 சீத. சதீஷ்குமார்
பசுமை தேசம் உழவர் இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் புதுக்கோட்டை

13.பாலச்சந்தர்
சாமானிய மக்கள் குரல் அமைப்பு சேலம்

14.P.V. கோபால்
பொதுச் செயலாளர்
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சங்கம் - கோவை

15.இரா நடராஜன்
மாநிலத் தலைவர்
லா - பவுண்டேசன் இந்தியா கோவை

16. செந்தில் குமார்
செயலாளர்
அரசியலமைப்புச் சட்ட விழிப்புணர்வு சங்கம் திருவண்ணாமலை

17.எம். ஜோசப் சேர்மன்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளை -கரூர்

18.Adv. நெடுஞ்செழியன்
மல்டிபிள் ஆக்சன் பார் சோசியல்  சோலிடரிட்டி (MAAS) - தஞ்சாவூர்

19.மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு பொள்ளாச்சி

20.ஞான பார்த்திபன்
தலைவர்
அகல் சாதனையாளர் சங்கம் கோவை

21.சதீஷ்குமார்
களம்  அறக்கட்டளை - அவிநாசி

22.ராஜூ பாரதி
ஒருங்கிணைப்பாளர்
மக்கள் நல்லாட்சி இயக்கம்
கடலூர்

23.முகமது யாசின்
செயலாளர்
நம்ம கோபி பவுண்டேசன்
கோவை.

24.மோகன்ராம்
தலைவர்
திருச்சி மாவட்ட மக்கள் நலச் சங்கம்

25.இளவரசன்
சுவீட் டிரஸ்ட்
அரியலூர்

26.பூமொழி
சமூக ஆர்வலர்
சேலம்

27.மதியழகன்
சமூக ஆர்வலர்
நாமக்கல்

28.பொ. செல்லப்பன்
பேக்ட் இந்தியா
நாமக்கல்

29.தெய்வ குமார்
சமூக ஆர்வலர் - ஸ்ரீரங்கம்

30.ஈஸ்வரன்
ஆனந்த கஸ்பா பவுண்டேசன் கோவை

31.D.பிரபாகரன்
அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் - கருமத்தம்பட்டி

32.P. அண்ணாத்துரை
மக்கள் சட்ட உரிமைகள் இயக்கம்
மதுரை 

33.M. சாய் குமரன் ஜி
சமூக ஆர்வலர்
திருப்பூர்

34.K. M. சுரேஷ்பாபு
டீசா - திருப்பூர்

35.S. காதர் பாட்சா
தலைவர்
கன்ஸ்யூமர்  கேர் அசோசியேசன் திருப்பூர்

36.பழ. ரகுபதி 
நேர்மை மக்கள் இயக்கம் - திருப்பூர்

37.S.சுந்தர பாண்டியன்
நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு - திருப்பூர்

38.பால் பாண்டியன்
கோயமுத்தூர் நுகர்வோர் சங்கம்

39.. A. அண்ணாதுரை
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு
பல்லடம்

40 காதர்மொய்தீன்
சமூக ஆர்வலர்
கன்னியாகுமரி

41.மனோஜ் குமார்
சமூக ஆர்வலர் - கோவை

42..சிவபாரதி
சமூக ஆர்வலர்
கரூர்

43.அங்கேரிபாளையம் நண்பர்கள் குழு - திருப்பூர்.

மேலும் தனியார் பள்ளிகளினால்  பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

திருப்பூர் மாநகரத்தில் மாநகர காவல் சட்டப்பிரிவு 41 அமுலில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

எனவே பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல்  அகிம்சை வழியில்  பாதிக்கப்பட்ட பெற்றோர் கள் மாணவர்களின் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி இலவசமாக கிடைத்திடவும், சட்ட விரோதமாக செயல்படும் தனியார் பள்ளிகளை கண்டித்தும் , அவர்களுக்கு துணை போகும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை கண்டித்தும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா? அல்லது மானிய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா? என்பதினை மத்திய மாநில அரசுகள் பொது மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை *சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " சார்பாக 14.07.2019 அன்று திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நடத்த  தீர்மானித்துள்ளோம்  என்பதினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இணைப்பு :
01.பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண் : 270 நகல்

02 28.07.2017 அன்று காவல்துறை வழங்கிய அனுமதி கடித ந. க. எண் :92/15 VPM PS/MIKE/2017

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
ஆ பழனிக்குமார்
சமூக ஆர்வலர்
5/419, வேலன் நகர்
அங்கேரிபாளையம்
திருப்பூர் - 641 603
உலாபேசி :97910 50513

நாள் :01.07.2019
இடம் : திருப்பூர்.

மனுதாரர்

நகல் தகவலுக்காக,
காவல் ஆணையர் அவர்கள்
திருப்பூர் மாநகரம்.