Friday 1 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0045 மயூரா கேக் கார்னர் MRP விட கூடுதல் கட்டணம் வசூல்!

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO/0045 /2019 ;நாள்;28.02.2019

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்!

குற்றவாளி யார்?

உரிமையாளர்
நியூ மயூரா கேக் கார்னர்
1/89 A எம்.ஆர்.காம்ப்ளக்ஸ்
கருமத்தம்பட்டி நால் ரோடு
கருமத்தம்பட்டி
கோவை மாவட்டம்

#எச்சரிக்கை!
இந்த பேக்கரிக்கு போகிறீர்களா கவனம் மக்களே!

குளிர்பானம் பாட்டிலுக்கு
இரண்டு ரூபாய் எடையளவு மற்றும் பொட்டல விதி சட்டத்திற்கு எதிராகவும் MRP அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட  கூடுதலாக. சட்ட விரோதமாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை!

கூடுதலாக வசூலிப்பது குறித்து கேட்டால் அப்படி தான் விற்பார்களாம்.

சர்வாதிகாரியை போல் செயல் படும் இவர்கள் யார்?

யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் வழங்கியது.?

நம்பி வரும் வாடிக்கையாளர்களை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி உணவு பொருட்களை சட்ட விரோதமாக கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழும்
இவனை போன்றவர்கள் சிறை சாலையில் இருக்க வேண்டியவர்களே !

இவர்கள் பிச்சைகாரர்களை விட மிகவும் கேவலமானவர்களே!

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் அனுப்பப்பட்டது

#புகார்மீது #விரைந்து #நடவடிக்கை?

நுகர்வோர் நலன்களை பாதுகாத்தார்களா
கோவை உணவு பாதுகாப்புத்துறையினர்?

#நமது #புகார் :

2/17, 21:15] nanjillaacot:
மனுதாரர் ;
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
159/12, A சரவண பவனம்
தியாகி குமரன் புதுக்காலனி
4 வேலம்பாளையம்
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

எதிர்மனுதாரர் :
உரிமையாளர்
மயூரா கேக் கார்னர்
எம்.ஆர்.காம்ப்ளக்ஸ்
கருமத்தம் பட்டி நால் ரோடு
கருமத்தம் பட்டி
கோவை மாவட்டம்
தொலைபேசி :0421 2336468

பெறுநர் :
வாட்ஸ்ஆப் புகார்
ஆணையர் அவர்கள்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
சென்னை.

அய்யா,

பொருள் ; உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்திற்கு எதிராக செயல் படுவதுடன் அதிகபட்ச விற்பனை விலையை விட குளிர்பானத்திற்கு கூடுதலாக இரண்டு ரூபாய் வசூலித்த எதிர்மனுதாரர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி  குற்றவிசாரணை முறை சட்டப்பிரிவு 2(ஈ) இன் கீழ் பொதுநல புகார் மனு

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51A (அ ) இன் கீழ் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்றி வரும் ஒரு இந்திய குடிமகன் ஆவேன்.

10.02.2019 அன்றைய தினம் நண்பர்களுடன் மேற்காண் எதிர் மனுதாரருடைய மயூரா கேக் கார்னர் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம்.

சாப்பிட்ட பொருட்களுக்கு பில் கேட்டு பெற்று கொண்டோம்.

பில் எண் குறிப்பிட வில்லை .
அதில் டீ 1 ₹ 10.00
பிஸ்கட் 1 ₹ 20.00
ஸ்பிரைட் 1 ₹ 16. 00
என ஆக மொத்தம் ₹46.00 ரூபாய் பெற்றனர்.

ஸ்பிரைட் MRP எவ்வளவு என கேட்டேன்.
விற்பனையாளர் தெரியாது எனக்கூறினார்.

MRP எவ்வளவு என தெரியாமல் எப்படி விற்பனை செய்கிறீர்கள் என்றேன்.
கூலிங் கூலிங் இல்லாமல் என கேட்டீர்களா என்றார்.

நான் கூல்டிரிங்ஸ் தான் கேட்டேன் என்றேன்.
அது உங்க தவறு என்கிறார்.

MRP ₹15 ரூபாய் என. மற்றொரு விற்பனையாளர்  ஒருவர் தெரிவித்தார்.

அப்படியானால் ₹1.00 ரூபாய் எப்படி அதிகம் வாங்குகிறீர்கள் என்றேன்.

கூலிங் சும்மா வராது
கரண்ட் பில் மாதம் ₹ 90 ஆயிரம் கட்டுகிறோம் .

அதனால் தான் கூடுதலாக வாங்குவதாக தெரிவித்தார்.

கோயம்புத்தூர் போய் கேட்டு பாருங்கள் எல்லோரும் கூடுதலாக தான் வாங்குகிறார்கள் என்றார் மற்றொரு விற்பனையாளர் .

கூடுதலாக பெறப்பட்ட பணம் திருப்பி கொடுக்க முடியாது என திட்ட வட்டமாக மறுத்து விட்டனர்.

அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட  விற்பனையாளர்கள்
அப்போது பணியில் இருந்தனர்.
அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

உரிமையாளர் யார் என தெரிய வில்லை.

வேடிக்கை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் ஒரு ரூபாய் தானே விட்டு விடுங்கள் என்றார்.
ஒரு ரூபாய் நீங்கள் தருகிறீர்களா என்றேன்.
நான் தருகிறேன் என்கிறார்.

மற்றொரு வாடிக்கையாளர்  டாஸ்மாக் சாராயக்கடையில் கோட்டர் பாட்டிலுக்கு  ₹10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறான் அவனிடம் போய் கேட்க வேண்டியது தானே என்கிறார்.

மற்றொரு வாடிக்கையாளர் நீங்கள் கேட்பது  100% சரி தான் என்ன செய்வது விடுங்கள் என்கிறார்.

சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து எந்த வாடிக்கையாளரும் கேள்வி கேட்பதில்லை.

மினி ஸ்பிரைட் பாட்டில் MRP ₹14.00 ரூபாய் தான்.
ஆனால் விற்பனையாளர் ₹15 ரூபாய் என பொய் சொல்லியதுடன் சட்ட விரோதமாக ₹2.00 ரூபாய் கூடுதலாக ₹16 ரூபாய் வசூலித்துள்ளார்.

குற்றசாட்டுகள் :

1.குளிர்பான பாட்டிலிற்கு அதிக பட்ச விற்பனை விலையை விட கூடுதலாக ₹2.00. ரூபாய் சட்ட விரோதமாக வசூலித்துள்ளார்கள்.

2.மயூரா கேக் கார்னர் என அச்சிடப்பட்டு விற்பனை செய்யும் பிரட் பாக்கெட்டுகளில் MRP குறிப்பிட படவில்லை.
லாட் எண் இல்லை..
சீல் வைக்கப்படாமல் ரப்பர் பைண்டு கொண்டு  கட்டப்பட்டுள்ளது.

3.பொட்டலங்களில் விற்பனை செய்யப்படும் எந்த ஒரு  உணவு பொருட்களில் Fssai விதிமுறைகள் ழுழுமையாக கடை பிடிக்க வில்லை.

4.வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்கள் தடை செய்யப்பட்ட செய்திதாள்களில் வழங்கப்படுகிறது.

5 .காலாவதியான பல வகையான உணவு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

#கோரிக்கை!

1 வாடிக்கையாளர் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் பணம் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாய் உணவு பொருட்கள் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டங்கள் ,பொட்டல விதி சட்டங்கள், எடையளவு சட்டங்கள் போன்ற எந்த சட்ட விதிகளையும் விதிமுறைகளயும் கடை பிடிக்காமல் உணவு  பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நிறுவனம் முழுவதும் சோதனை செய்து தரமற்ற காலாவதியான உணவு பொருட்களை  பறிமுதல் செய்து உரிமையாளர் மீது சட்ட நட வடிக்கை மேற்கொண்டு  நுகர்வோர்களை பாதுகாக்கக்கோருகிறோம்.

2. கூடுதலாக வசூலிக்கப்பட்ட ₹ 2.00 ரூபாயினை திரும்ப பெற்று வழங்க கோருகிறோம்.

3. தரமற்ற உணவு பொருட்களின் விற்பனை   மற்றும் முறைகேடுகளை கண்டு பிடிக்க மேற்காண் நிறுவன கண்காணிப்பு கேமராக்களை பரிசோதிக்க வேண்டுகிறேன்.

4. சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலித்ததுடன்  விற்பனையாளர்கள் அனைவரும் சேர்ந்து நுகர்வோராகிய என்னிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் கொடுத்துள்ளது*
*நீதி வேண்டி மாவட்ட குறைதீர்மன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெற உள்ளேன்.

இணைப்பு : எதிர் மனுதாரர் வழங்கிய பில்  மற்றும் நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  காணொளி

நாள் :17.02.2019
இடம் : திருப்பூர்.

#உணவு #பாதுகாப்புத் #துறையினரின்  #பதில்.

[2/18, 08:45] Food Sec Dept: வணக்கம்.
விலை தொடர்பாக
தொழிலாளர் நலத்துறை.
TN-LMCTS (legal metrology complaint tracking system) app-ஐ பதிவிறக்கம் செய்து விலை தொடர்பான புகார் பதிவிடவும்

மற்ற புகார் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்

What's app compliant no :86/feb general Cbe /18
attended by FSO madam. 18.02.2019.

Premises Address :
New Mayura cake Corner,
No:1/89A,Four Road, Karumattampatti,
Coimbatore.

Finding :

1.FBO have valid Fssai licence.( License No. 12417003000686:
Valid up to :26.04.2019).

2.Expiry and Damage Goods storage is not separate Place.

3.Food handlers are not wear gloves, head cap and apron.

4.Food  material purchase bill not maintain properly.

5.Some Bakery Product like Bread, Bun, Biscuits etc are sold with out proper label declaration at the time of inspection.

Advice given to FBO :

1.Fssai license placed to the prominent place.

2.To print the label declaration as per FSSA Rules and Regulations.
.
3.Raw materials should purchase from Fssai license and Registration holders only.

4.Food handlers should wear head cap, gloves and apron.

5.Advised them to serving foods on clean utensils and also avoid newspaper.

6.Plate and other using vessels washed with soap oil and running water properly.

7.Expired and damaged foods on clean utensils and also avoid newspaper.

8.Don't sale without or improper label declare prepacked food items.

9.Potable water is used for drinking purpose.

10.Inspection notice issued under sec 55 of FSSA and Lifted legal sample -wheat bread.

11.The premises will surveillance and inspect frequently.
.Do coimbatore.

வாட்ஸ்ஆப் புகார் எண் :86 /18.02.2019

*உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வில் கண்டு பிடித்தது என்ன*?

1.Fssai உரிமம் 26.04.2019 வரை உள்ளதாம்.

2.காலாவதி ஆன உடைந்து சேதமுற்ற உணவு பொருட்கள் தனியாக  வைக்க வில்லையாம்.

3.உணவு பொருட்கள் பரிமாறுபவர்கள் விற்பனை செய்பவர்கள் கையுறை ,தலையுறை, மேலங்கி அணிய வில்லையாம்.

4.உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான பொருட்கள் விலைக்கு வாங்கிய பில்கள் சரியாக பராமரிக்கப்பட வில்லையாம்.

5. பிரட், பன், பிஸ்கட் போன்ற பேக்கரி பொருட்களில் முழுமையான Fssai விபரங்கள் அடங்கிய லேபில் ஒட்டாமல் விற்பனை செய்கிறார்களாம்.

*பேக்கரி உரிமையாளருக்கு கூறிய அறிவுரை என்ன*?

1.Fssai உரிமம் நிரந்தரமாக ஒரு இடத்தில் இருக்க வேண்டுமாம்.

2.உணவு பொருட்கள் பொட்டலங்களில் Fssai விதிமுறைகள் படி லேபில் ஒட்ட வேண்டுமாம்.

3.,உணவு பொருட்கள் தயாரிக்கும் பொருட்கள் வாங்கும் போது Fssai உரிமம் மற்றும் பதிவு பெற்ற விற்பனையாளரிடம் மட்டும் தான் வாங்க வேண்டுமாம்.

4.உணவு பொருட்கள் பரிமாறுபவர்கள் கையுறை, தலையுறை, மேலங்கி அணிந்து தான் பரிமாற வேண்டுமாம்.

5. உணவு பொருட்களை சுத்தமான பாத்திரங்களில் தான் வழங்க வேண்டும். செய்திதாள்களில் வழங்குவதை தவிர்க்க வேண்டுமாம்.

6.தட்டு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சோப் ஆயில் கொண்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டுமாம்.

7.காலாவதியான மற்றும் உடைந்த சேதமான உணவு பொருட்களை சுத்தமான பாத்திரங்களில் பத்திரமாக வைக்க வேண்டுமாம் செய்திதாள்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேணடுமாம்.

8.பொட்டலம் செய்த உணவு பொருட்களில் முழுமையான லேபில் இல்லாத பொட்டலங்களை விற்பனை செய்யக்கூடாதாம்.

9.சுத்தீகரிக்கப்பட்ட நீரினை தான் குடிநீராக பயன் படுத்த வேண்டுமாம்.

10.Fssa சட்டப்பிரிவு 55 இன் கீழ் ஆய்வு செய்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி விட்டு கோதுமை ரொட்டி ஒன்று பரிசோதனைக்காக எடுத்து சென்றார்களாம்.

11.குற்றம் சாட்டிய நிறுவனத்தை  இனி மேல் அடிக்கடி ஆய்வு செய்வார்களாம் .

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினரின் சோதனையும் அறிவுரையும் நம்மை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

ஆஹா!  அற்புதம்!
அருமை! சபாஷ்! வெரி குட்!

சட்ட விரோதமாக உணவு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பவனுக்கு  கோவையில் இருந்து கருமத்தம் பட்டி அரசு செலவில் வந்து ஆய்வு செய்து நல்ல பல மேலான அறிவுரைகளை கேட்காமலே வாரி  வழங்கி  தங்கள் கடமையினை மிகவும் சிறப்பாக செய்த கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் சரித்திரத்தின் ஆச்சரிய குறியீடு.

Fssai உரிமம் பெறும் போதே உணவு பாதுகாப்புத்துறையின் விதிமுறைகள் எவ்வாறு கடை பிடிக்க வேண்டும் என கடை உரிமையாளருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

ஆனால் தெரிந்திருந்தும் எந்த ஒரு விதிமுறைகளையும் கடை பிடிக்காமல் பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு சட்ட விரோதமாகவும் நுகர்வோர் நலனில் அக்கறை இல்லாமலும்  செயல் பட்டு வருபவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் அறிவுரை மட்டும் கூறி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

#நமது #கேள்விகள்?

1.எடையளவு மற்றும் பொட்டல விதி சட்டம் உணவு பாதுகாப்புச்சட்டங்கள் விதிமுறைகளை கடை பிடிக்காமல் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை ஏன் கைப்பற்றி அழிக்க வில்லை?

2.தனியாக வைத்து பராமரிக்காத காலாவதியான கெட்டு போன உணவு பொருட்களை ஏன் கைப்பற்றி அழிக்க வில்லை.

3.உணவு பொருட்களுக்கு பயன் படுத்தும் செய்திதாள்களை ஏன் கைப்பற்றி அழிக்க வில்லை?

4.அபராதம் ஏன் விதிக்க வில்லை?

5.சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வாடிக்கையாளர்களுக்கு ஏன் வழங்குவது இல்லை?

6.சோப் ஆயில் கொண்டு சுத்தமான நீரில் தட்டுகள் பாத்திரங்களை ஏன் கழுவுவதில்லை?

7.உணவு பொருட்கள் தயாரிக்க தரமான பொருட்களை ஏன் வாங்குவது இல்லை?

8.உணவு பொருட்கள் வாங்கும் பில்கள் ஏன் முறையாக பராமரிக்கப்பட வில்லை?

9.பில்லில் ஒரு முகவரி Fssai உரிமத்தில் ஒரு முகவரி ஏன்?

10. உணவு பொருட்கள் பறிமாறுபவர்கள் கையுறை தலையுறை மேலங்கி ஏன் அணிய வில்லை?

#செயல் #இழந்த #செயலி !

தொழிலாளர் நலத்துறையின் TN -LMCTS. (Legal Metrology Complaint Tracking System  ) செயலி  செயல் இழந்து கிடக்கிறது.

குளிர்பானத்திற்கு  நம்மிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட இரண்டு ரூபாயினை திரும்ப பெற சட்டப்படியான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப் பட்டு வருகிறது

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .....!!

2 comments:

  1. Are you facing errors and snags while using Binance on multiple devices like mobile, tablet etc.? To remove the hitches all at once with the required solutions dial Binance helpline number where you can always take result-oriented solutions from the team of talented personalities who is professional in resolving all the problems with their top-notch customer services. The team of experts is always there to assist you. Dial our toll free number and avail all the solutions and strategies that are required to fix the issue immediately.
    https://www.cryptophonesupport.com/exchange/binance/

    ReplyDelete
  2. Do you have problem with gemini Account? To get information related to your query or error you can always take aid from the skilled customer executives by dialing gemini customer service number which is active around the clock. You can also contact with your gemini customer care team, as per your convenience. You will be always happy after getting these services from the customer executives in no time. The professional’s team is there to assist you at every step and leave no opportunity to fix the doubts and problems in no time.
    https://www.cryptophonesupport.com/exchange/gemini/

    ReplyDelete