Sunday 10 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0047 சட்ட விரோத ஆதார் மருத்துவமனை

ஊழல் ஒழிப்பு செய்தி ; LAACO :0047/2019 ;நாள் :15.03.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

நெஞ்சு பொறுக்குதில்லையே! 

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.
அய்யய்யோ!  இல்லீங்கோ!

ஆதார் மருத்துவமனையும் அறுபது மருத்துவர்களும்!

குற்றவாளிகளுக்கு சட்டமும் நீதியும் பாதுகாப்பு அளிக்கிறதா?

திருப்பூர் மாநகர காவல் துறையும் திருப்பூர் மாவட்ட நீதித்துறையும்
இந்திய மருத்துவ சங்கமும் இணைந்து தலைமை தாங்கி முன்னிலை வகித்து சட்ட விரோத மருத்துவமனை கட்டிடத்தினை திறந்து வைத்திருப்பது சரித்திரத்தின் ஆச்சரிய குறியீடு!

எச்சரிக்கை!
உண்மை சம்பவம்.

திருப்பூர் மாவட்டம் வடக்கு வட்டம் புஷ்பா தியேட்டர் அருகில் அவிநாசி பிரதான சாலையில்
100 படுக்கைகள் கொண்ட உலக தரம் வாய்ந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 60 மருத்துவர்கள் ஒன்றிணைந்து  இப்படி ஒரு சிறப்பு மிகுந்த மருத்துவமனையினை நிறுவி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த மாபெரும் கூட்டு முயற்சியினை வரவேற்கிறோம்.

சர்வதேச தரத்தில் இனி திருப்பூர் மக்களுக்கு சிகிச்சை கிடைக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதியோர்கள்  நடக்க முடியாதவர்களுக்கு வீட்டிலேயே வந்து ஹோம் ஹேர் சிகிச்சை வேறு அளிக்க இருக்கிறார்களாம்.

திருப்பூரில் சட்ட விரோதமாக கட்டப்பட்டதா?   ஆதார் பல்நோக்கு  சிறப்பு மருத்துவமனை கட்டிடம்!
ஆம்.

திருப்பூர் மாநகராட்சி கட்டிட அனுமதி பெற்றுள்ளார்களா?
ஆம்.

மாநகராட்சி வரைபட அனுமதி வழங்கப்பட்ட அளவுகளில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா?
இல்லை.

கட்டிடம் கட்ட அனுமதி பெற்றது தரை தளத்தில் மட்டும் 27×59.3= 1601சதுர அடி
அப்படியே ஐந்து தளத்திற்கும் அனுமதி பெற்றிருந்தால் கூட 1601×5= 8 ஆயிரத்து ஐந்து  சதுரடி தான்.

ஆனால் கட்டப்பட்டிருப்பதோ சுமார் 30 ஆயிரம் சதுர அடிக்கு மேல்.

தரை தளத்தில் மட்டும் கட்டிடத்தின் வலது புறத்தில் கொஞ்சம் காலி இடம்.

பின் பகுதியில் மனையின் கொஞ்சம் கோணலான பகுதியில்  பயன் படுத்த முடியாத  காலி இடம்.

அண்டர் கிரவுண்டு தரை தளத்துடன் கூடிய நான்கு தளம்  தார்சு கட்டிடம்.

ஐந்தாவது தளத்தில் சீட்டிலான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளம் முதல் ஐந்தாவது தளம் வரையில்  மனையின் மொத்த அளவில் நான்கு புறமும் ஒரு அடி காலி இடம் கூட இல்லாமல் முழுவதும் ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

கட்டிடத்தினை சுற்றிலும் தேவையானஅளவு காலி இடம் உள்ளதா?
வரை படத்திலும் அரசு ஆவணங்களிலும் உள்ளது .

ஆனால் நாம் நேரில் பார்த்தபோது இல்லை.

மருத்துவமனைக்குண்டான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா?
இல்லை.

தீ விபத்து ஏற்படும் காலங்களில் தீயணைப்பு வாகனம் கட்டிடத்தை சுற்றி வந்து தீயிணை அணைக்க முடியுமா?
முடியாது

தீ விபத்து மின் விபத்து உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ஊழியர்கள் மருத்துவமனை கட்டிடத்தினை சுற்றி வந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியுமா?
முடியாது.

100 படுக்கைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் தீ விபத்து காலங்களில் அவசர வழி வழியாக வெளியேற முடியுமா?
முடியாது.

80 அடி அகலம் கொண்ட அவிநாசி  பிரதான சாலையில் இருந்து ஏழு மீட்டர் காலி இடம் விட்டு மருத்துவ மனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா?
இல்லை.

கட்டிடம் கட்ட அல்லது மருத்துவமளை கட்டிடம் செயல்பட யாதொரு தடையும் இல்லை என தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையின் தடையின்மை சான்று  பெற்றிருப்பார்களா?
ஆம்.பெற்றிருக்க கூடும்.

சுகாதாரத்துறை உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளும் பெற்றிருப்பாகளா?
ஆம். பெற்றிருக்க கூடும்.

மாநகராட்சி பொறியாளர்களுக்கு கைமாறிய லஞ்சம் எவ்வளவு?
அவர்களை தான் கேட்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையர் எவ்வாறு அனுமதி வழங்கினார்?

வரை படத்தில் உன்ன படி கட்டிடம் கட்டத்தான் அனுமதி வழங்கி இருக்க கூடும். 

உள்ளுர் திட்ட குழுமத்தில் அனுமதி பெற்றிருப்பார்களா?
ஆம்./இல்லை.
அல்லது ஏதாவது ஒன்று.
பெற்றிருந்தால் அதுவும் சட்ட விரோதமே.

10.03.2019 அன்று இவ்வளவு விதிமுறை மீறல்களுடன் தெரிந்தே மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள் நோயாளிகளுக்கு  எந்த விதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லாத வகையிலும் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றுள்ளது.

இது சொர்க்கத்தின் திறப்பு விழா அல்ல!
மரண வாசலின்  திறப்பு விழா!

குற்றம் நடந்தது என்ன?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என சட்டத்தை பேணி காக்கும் தமிழக காவல் துறையின் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் IPS அவர்கள் சட்ட விரோதமாக கட்ட பட்ட மருத்துவமனை கட்டிட திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கியுள்ளார்.

இது திருப்பூர் மாநகர காவல் துறைக்கு பெருத்த அவமானம்.

இதன் மூலம் சட்ட விரோதமாக செயல் படுபவர்கள்  இனி துணிச்சலுடன் வீறு நடை போடுவார்கள்.

நீதியை நிலை நாட்டும் நீதி துறையில் திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றும்  முகம்மது ஜியாபுதீன் BL சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு முன்னிலை வகித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் சட்ட விரோதமான கட்டிடங்களை தடை செய்து வரும் நிலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிட த்தினை திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி முன்னிலையில் திறப்பு  விழா நடை பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஐ.எம்.ஏ முன்னால் தலைவர்  முருகநாதன் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள்  யார்? யார்

1.கட்டிட அனுமதி வழங்கி விட்டு அனுமதி பெற்ற அளவுகளில் கட்டிடம் கட்டப்படுகிறதா என்பதினை கண்காணிக்க தவறிய திருப்பூர் மாநகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் சிவக்குமார்.

திருப்பூரில் சட்ட விரோதமாக கட்டப்படும் கட்டிடங்கள் பெருக காரணம் மாநகராட்சி சட்டம் மற்றும் விதிகளை செயல் படுத்த தவறிய மாநகராட்சி நிர்வாகம்.

இதனால் தான் சிறந்த மாநகராட்சி விருது பெற்றுள்ளார்களா? 

ஒரு வீடு கட்ட அனுமதி வழங்கினாலே குறைந்த பட்சம் சுற்றிலும் ஐந்து அடி காலி இடம் விட்டு கட்ட சொல்லும் மாநகராட்சி
நிர்வாகம் இதனை ஏன் கண்டு கொள்ள வில்லை!

இவர்களுக்கு மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லை.

புகார் அளித்தால் மட்டும் மாநகராட்சி சட்டத்திற்கு எதிராக சட்ட  விரோதமாக  கட்டப்பட்ட கட்டிடத்திற்கும் அபராதம் விதித்து அனுமதி அளித்து விடுவார்கள்.

நமது குற்றச்சாட்டினை ஏற்று அனுமதி பெறாத கட்டிடங்களை இடித்து அப்புற படுத்துவார்களா?

2. திருப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர்!

இவர்கள் வரை படத்தினை பார்த்து தடையின்மை சான்று வழங்கி விடுகின்றனர்.

நிலைய அலுவலர் நேரில் ஆய்வுக்கு சென்று விதிமுறைகள் சரியாக கடை பிடிக்கப்பட்டுள்ளதாக பொய்யான ஆய்வறிக்கை வழங்கி விடுகின்றனர்.

எந்த விதமான விதி முறை மீறலாக இருந்தாலும் தடையின்மை சான்று வழங்கி விடுவார்கள்.

வாங்கிய லஞ்சத்திற்கு விசுவாசமாய் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் நேர்மையாக செயல் பட்டால் மட்டுமே சட்ட விரோதமாக எவனும் கட்டிடம் கட்ட மாட்டான்.

3.மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார்.

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்குவது சட்ட விரோதம் என உளவு துறையினர் ஏன் இவருக்கு தகவல் கொடுக்க வில்லை? அல்லது
தெரிந்தே தலைமை தாங்கினாரா?

அல்லது அரசியல் கட்சியின் நிர்பந்தமா?

அவர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

4.மாவட்ட கூடுதல் நீதிபதி முகம்மது ஜியா புதின்!

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு எப்படி முன்னிலை வகித்தார்.?

இவர் நீதியை குழி தோண்டி புதைத்து விட்டார்.அநீதிக்கு ஆதரவாக செயல் பட்டுள்ளார்.

இவருக்கு நீதிதுறையில் வேலை இல்லையா?

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தினை இடிக்க வழக்கு போட்டால் இடிக்க உத்தரவிடுவாரா?
அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.

5.ஐ.எம்.ஏ முன்னால் தலைவர் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இவருக்கு இந்திய மருத்துவ கவுன்சில்  மற்றும் விதி முறைகள் தெரியாமல் போனது ஏன்?

6.சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஆதார் மருத்துவமனையின் பங்குதாரர்களான மருத்துவர்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக சட்ட விரோதமாக மருத்துவமனை நடத்துபவர்களே!

இவர்களிடம் எப்படி நோயாளிகளின் பாதுகாப்பினை உறுதி படுத்த முடியும்.

ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்றாலும் கூட அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் குறை பாடுகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் மருத்துவரோ மருத்துவமனையோ எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது என உறுதி மொழி படிவத்தில் கையொப்பம் பெற்று தங்களை காப்பாற்றி கொள்கிறார்களே?

ஆதார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முழு அளவு பாதுகாப்பு உள்ளது என உறுதி மொழி வழங்க இவர்கள் தயாரா?

இவர்களுக்கு பணம்! பணம்! இதுவே குறிக்கோள்.

நமது குற்றச்சாட்டிற்கு பதில் அளிப்பார்களா?

7.மாவட்ட செயல் துறை நடுவராகிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் .K.S .பழனிச்சாமி

பாதுகாப்பில்லாத சட்ட விரோத கட்டிடம் என புகார் அளித்தால் செவிடன் காதில் ஊதிய சங்காய்
புகார் மனுக்கள் செயல் இழந்து கிடக்கும். இவரையே சுற்றி சுற்றி வரும்.முடிவில் கிடப்பில் போடப்படும்.

மாணவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் மாநகராட்சி அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டார்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் மூன்று.
1.லஞ்சம்!
2.லஞ்சம்!
3. லஞ்சம்! மட்டுமே?

கடமை தவறிய கேடு கெட்ட லஞ்சம் வாங்கும் அரசூழியர்கள் இருக்கும் வரையில் சட்ட விரோதமாக செயல் படுபவர்களை தடுக்க முடியாது.

ஆதார் மருத்துவமனை அறுபது மருத்துவர்களின் பங்களிப்புடன்  செயல் பட இருக்கிறது எனவும்,

தீபா எலும்பு முறிவு மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் செந்தில் குமாருக்கு சொந்தமானது எனவும்

ஓ.பி.எஸ் பினாமி எனவும்
மக்கள் பல் வேறு விதமாக பேசிக்கொள்கின்றனர்.

எது எப்படி இருப்பினும்
ஓ.பி.எஸ்ஸோ இ.பி.எஸ்ஸோ யாருடைய பினாமியாக இருந்தாலும் குற்றம் குற்றமே!

கோரிக்கை!
உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து சட்ட விரோதமாக செயல்  படுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஆதார் மருத்துவமனை கட்டிடத்திற்கு தடை விதித்து இவர்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை பாதுகாக்கக்கோருகிறோம்.

எந்த ஒரு குற்றமும்  நடைபெறும் முன்னர் அதனை தடுக்கும் கடமையும் பொறுப்பும்  நமக்கு இருப்பதினால்
பொது நலனில் அக்கறை கொண்டு இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 19 (1) அ இன் கீழ் இச்செய்தியினை பகிரங்கமாக  வெளியிடுகிறோம் .

திருப்பூர் வாழ் மக்களே கவனம்.
சட்ட விரோதமாக கட்டப்பட்ட  மருத்துவமனை கட்டிடம்.
உள் நோயாளிகளுக்கு பாதுகாப்பில்லை!
இதனை தடுக்க தவறிய கடமை தவறிய அரசூழியர்கள்!

பொது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறலாமா?  வேண்டாமா? என்பதினை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இணைப்பு :காணொளி மற்றும் வரைபடம் பத்திரிக்கை செய்தி.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ..........!!

1 comment:

  1. Are you looking for the solution to create a new account for Binance? If yes, grab all the required steps and procedures related to the account formation by the professionals who have vast knowledge and can deal with the errors in no time. To avail the services from the professionals you have to dial Binance customer support number and fix all your doubts or resolve all your queries in the fraction of time. You can avail the customer expert service throughout the year without any discontinuity.

    ReplyDelete