Saturday 30 March 2019

திருப்பூர் மாநகர காவல் பொது தகவல் அலுவலருக்கு சட்டப் பிரிவு 7 (1) இன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல் கோரும் மனு

மனுதாரர் :
N. செந்தில் குமார்
த/பெ நடராஜன்
18/421 MKP லே-அவுட்
சேயூர் ரோடு, சூளை
அவிநாசி -641 654
திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :
பொது தகவல் அலுவலர் அவர்கள்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005
மாநகர காவல் ஆணையர் அலுவலகம்
அம்மன் கல்யாண மண்டபம் அருகில்
சிறுபூலுவப்பட்டி ரோடு
திருப்பூர் -641 602

அய்யா,

பொருள் : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பார்வையில் காணும் புகார் மனு எனது உயிர்  வாழ்வாதாரம் ,சுதந்திரம் சம்மந்தப்பட்ட தகவல்  ஆகையினால் தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் சில தகவல்கள்  வழங்க கோருவது சம்பந்தமாக,

தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம் -2003 க்கு எதிராக என்னிடம் கூடுதல் வட்டி வசூலித்ததுடன் மேலும் கூடுதல் வட்டி கேட்டு எனது இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்றது குறித்து எதிர் மனுதாரர் :01 என்பவர் மீது திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை பெற்று விசாரணை செய்யாத காரணத்தினால் பார்வையில் காணும் புகார் கடிதத்தினை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.

இந்நிலையில் நான் குற்றம் சாட்டப்பட்ட இந்து முன்னனியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரினை திரும்ப பெற வேண்டும்.  சங்கர் கணேஷ் மீது கையை நீட்டினாலே கையை வெட்டுவேன் . போலீசை பற்றி பயப்பட மாட்டேன். .உன்னை தூக்குவதற்கு ரொம்ப நேரம் ஆகாது .கொலை செய்து விடுவதாக மற்றொரு இந்து முன்னனியை சேர்ந்த நித்யானந்தம் என்பவர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வருகிறார்.

பார்வையில்  காணும் புகாரின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் விபரங்கள்  எனது உயிர், வாழ்வாதாரம் ,சுதந்திரம் சம்பந்தப்பட்ட தகவல் உரிமை ஆகிய காரணத்தினால் இம்மனு கிடைக்கப்பெற்ற 48 மணி
நேரத்திற்குள் கீழ் காணும் சில தகவல்கள் வழங்க கோருகிறேன்.

நான் கோரிய தகவல் பெறும் முன்னர் கந்து வட்டி
கும்பலால் நான் படுகொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

பார்வை : மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154 (3) இன் கீழ் 12.03.2019 அன்று பதிவு அஞ்சலில் அனுப்பிய புகார் மனு நகல்.

1. பார்வையில் காணும் புகார் மனு தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேட்டின் அந்த பக்கத்தின் ஒளி நகல் ஒன்று வழங்கவும்.

2.இன்றைய தினம் வரையில் பார்வையில் காணும் எனது புகார் மனு சம்மந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகளின் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள்  வழங்கவும்.

3.மாநகர காவல் ஆணையர் அவர்களின் கவனத்திற்கு எனது புகார் மனு கொண்டு செல்லப்பட்டுள்ளதா?
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருப்பின் ஆணையர் அவர்கள் எனது புகார்  சம்மந்தமாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தால் அந்த உத்தரவின் ஒளி  நகல் ஒன்று வழங்கவும்.

4.பார்வையில் காணும் எனது புகார் மனு தற்பொழுது எந்த அதிகாரியிடம் உள்ளது.
அவரின் பெயர் பதவியின் பெயர் அலுவலக முகவரி தெரிவிக்கவும்.

5.பார்வையில் காணும் எனது புகார் சம்பந்தமாக விசாரணை அலுவலர் யாரேனும் நியமிக்கப்பட்டிருப்பின் அவரின் பெயர் பதவியின் பெயர் தொடர்பு எண் வழங்கவும்.

5 (அ) அவ்வாறு நியமிக்கப்பட்ட விசாரணை அலுவலர் விசாரணை செய்த இடம் யார் யாரை விசாரணை செய்தார். சாட்சிகளிடம் பெற்ற வாக்கு மூலங்களின் ஒளி நகல்கள் வழங்கவும்.

6.பார்வையில் காணும் புகார் மனு சம்மந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் ஒளி நகல் ஒன்று வழங்கவும்.

7.பார்வையில் காணும் எனது புகார் மனு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தாலோ அதற்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டப்பிரிவு 4(1) d .இன் கீழ் தெரிவிக்கவும்.

8.பார்வையில் காணும் எனது புகார் மனு மீது இன்றைய தினம் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லையெனில்  எப்போது நடவடிக்கை மேற்கொண்டு எதிர் மனுதாரரிடம் இருந்து எனது இருச்சக்கர வாகனத்தினை மீட்டு கொடுக்கப்படும் என்ற தகவல் வழங்கவும்.

9.பார்வையில் காணும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள எதிர் மனுதாரர்கள் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து புகார் கொடுக்க சென்ற பாதிக்கப்பட்ட என்னை மிரட்டிய கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல் வழங்கவும்.

மேற்காணும் தகவல்களை பெற ரூபாய் பத்துக்கான நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

நான் கோரிய தகவல்களில் ஏதேனும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் அதற்கான சட்டப்பிரிவு 6(3) இன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து தகவல்களையும் சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள்  வழங்கக்கோருகிறேன்.

இணைப்பு பக்கங்கள் :08

நாள் : 30.03.2019
இடம் : சேயூர்

மனுதாரர்

N.செந்தில் குமார்

No comments:

Post a Comment