Friday 29 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0049 மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநர்!

ஊழல் ஒழிப்பு செய்தி ;LAACO /0049/2019 :நாள் ;29.03.2019

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்.

அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளர்
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்
கோவை போக்குவரத்து இணை ஆணையர்
திருப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்
ஆகியவர்களின் உடனடி கவனத்திற்கு.

அரசு பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை!

மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

பயணிகள் இறங்கி கொண்டிருக்கும் போது பேருந்தை இயக்கியதுடன் பெண் பயணியிடம் இறங்கி போடி என ஒருமையில் பேசி இருக்கிறார்.

கண்டு கொள்ளாத காவலூழியர்கள்!

சம்பவம் நடந்த இடம்
அவிநாசி புதிய பேருந்து நிலையம்
நாள் ;29.03.2019
நேரம் : இரவு சுமார் 10.30 மணி

திருப்பூர் விஜயாபுரத்தில் இருந்து அவிநாசி வந்த  அரசு பேருந்து.
வழி தட எண் : 4
பேருந்து பதிவு எண் :TN38 N 2514

திருப்பூரில் இருந்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கணவன் மனைவி இருமகள்கள் இரு  குழந்தைகள் குடும்பத்துடன்  அவிநாசி வந்துள்ளனர்.

அவிநாசி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற போது கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கணவனை கை பிடித்து அவர் மனைவி இறங்கி கொண்டிருக்கும் போதே பேருந்தை இயக்கியதால் கொஞ்ச தூரம் இருவரும் இழுத்து செல்லப்பட்டுள்ளனர் .

பேருந்தில் இருந்த அவரின் மகள் கூச்சல் போடவே பேருந்தை நிறுத்தி உள்ளார் .

ஏங்க இறங்குவதற்குள் வண்டிய எடுக்குறீங்க என அந்த பெண் கேட்ட போது இறங்கி போடி என திட்டி உள்ளார் பேருந்து ஒட்டுநர்.

அப்போது தான் அவர் மது போதையில் இருந்ததை மற்ற பயணிகள் கவனித்துள்ளனர்.

போடின்னா சொன்ன  பல்லை உடைத்து விடுவேன் என பாதிக்கப்பட்ட பெண் பயணி மது போதையில் இருந்த ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொஞ்சம் ஏமாந்திருந்தால் அவரது தந்தை பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி ஆகி இருப்பார் நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை என அந்த பெண் ஆவேசத்துடன் தெரிவிக்கிறார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது .

சம்பவத்தை நேரில் பார்த்த ஆனந்த் என்ற நண்பர் நம்மிடம் இது குறித்து தெரிவித்தார்.
வீடியோ எடுத்து அனுப்பும் படி தெரிவித்தோம்.

சம்பவம் நடந்ததை அறிந்த அப்பகுதி காவலூழியர்கள் வந்து பயணிகளின் கூட்டத்தினை கலைந்து போக செய்து  பேருந்தை அனுப்பி வைத்துள்ளனர்..

மது போதையில் ஓட்டுநர் இருக்கிறார் என தெரிந்தும் காவலூழியர்கள் பேருந்தை இயக்க எவ்வாறு அனுமதி அளித்தனர்.

மது போதையில் பேருந்தை இயக்கி விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு.?

காவலூழியர்கள் ஏன் கடமை தவறி விட்டனர்.

அரசு பேருந்து ஓட்டுநரே பணி நேரத்தில் மது அருந்தி பேருந்தை இயக்கி இருப்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பணி நீக்கம் செய்ய கோருகிறோம்.

பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருப்பதினை தெரிந்தும் பேருந்தை இயக்க அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட காவலூழியர்களையும் பணி நீக்கம் செய்யக்கோருகிறோம்.

இணைப்பு : காணொளி

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ....

No comments:

Post a Comment